Sunday, March 13, 2016

யுத்தம் நிற்பது என் எதிரே நிற்பவரை பொறுத்தே. அது என் கையில் இல்லை

ஒரு கிறிஸ்தவ நண்பர் என்னிடம் கேட்டார் எப்போது கிறிஸ்தவத்தை எதிர்ப்பதை நிறுத்துவாய் என்று .

என் பதில் இது தான், எப்போது கிறிஸ்தவ மத மாற்றிகள் மத மாற்றத்தை நிறுத்துகிறார்கள் என்பதை பொறுத்து தான் என் முடிவு.

ஹிந்து மதத்தின் சாதி சாயலை சொல்லி கொண்டு இனி கிறிஸ்தவம் இங்கே வேலை செய்ய முடியாது. ஆதிக்க சாதியின் செயல் என்னவென்று அவர்களை விட எனக்கு தெரியும். என் சாதி என்னவென்று கேட்டு விட்டு, சாதி பாகுபாடு காட்டிய மனிதர்களை நேரில் சந்தித்து இருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்ல. ஏன் எனில், இறை பாகுபாடு அற்றது. 63 நாயன்மார்களையும், ஆழ்வார்களின் வரலாறும் எனக்கு சொல்லிய ஒரே உண்மை இறைவன் அடியவருக்கு அடியவன். என்னை கோவிலுக்கு வெளியே இருந்து இறை ஆரதானை பண்ண சொன்னாலும், உள்ளே வந்து இறை ஆரதானை பண்ண சொன்னாலும், என் கோபம் என்னை தடுத்தவனை நோக்கி தான் பாயும்.

இறைவனை நோக்கி ஒரு போதும் பாயாது.

அதே நேரத்தில் கிறிஸ்தவம் கிறிஸ்தவத்தின் பெயரால் இந்த உலகத்தில் என்ன கோர தாண்டவம் ஆடி இருக்கிறது. இன்னும் என்னென்ன செய்ய காத்து இருக்கிறது என்பதையும் அறிவோம்.

சிலுவை போர்களையும், அதற்கு உத்திர விட்ட பெருமகனார் யார் என்பதையும், சிலுவை போர் வீர்கள் பொது மக்கள் மீது நடத்திய வெறியாட்டதையும் உங்கள் கிறிஸ்தவ வராலற்று பதிவாளர்களே நொந்து போய் எழுதி உள்ளார்கள்.

இறைமகனரை சிலுவையில் அறைந்த போதும், அன்பை மட்டும் இயம்பினர். சிலுவை போர்களை இறைமகனரா நடத்த சொன்னார்?

சாதியின் அழுக்கை எங்கள் ஹிந்து கடவுள்களின் மீது ஏற்றியது சரி என்றால், யூதர்களின் மீதான ரத்த வெறியாட்டதையும், கருப்ப நிற அடிமைகளை கூட்டம் கூட்டமாக கொன்ற, கிறிஸ்தவர்களின் பாவத்தை இறைமகனர் அல்லவா ஏற்க வேண்டும்.

உங்கள் கிறிஸ்தவ மத மாற்றிகள் படி, சாதி பிரிவினைக்காக எங்கள் ஹிந்து கடவுள்களை எங்கள் மக்கள் ஒதுக்க வேண்டும் என்றால், இறைமகனரையும் அல்லவா ஒதுக்க வேண்டும்.

அதுவே நியாயம்.செய்வீர்களா?

இயேசு மட்டும் கடவுள் என்று சொல்லி விட்டு, மாதவையும், அந்தோனியாருக்கும் , செபசிடினுக்கும் கோவில் கட்டி கும்பிட ஆரம்பித்த போதே, கிறிஸ்தவம் தனது தளத்தை இழுந்தது.

நீங்கள் ஏன் ஹிந்து மத கோவில்களை போன்று உங்கள் சர்ச்சுகளை கட்ட ஆரம்பித்து இருக்கிறர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். வரலாற்றை திரிக்க தானே. திட்டமிட்டு தான் தமிழ் பெயர்களை தவிர்த்து உங்கள் பெயர்களை western பெயரில் வைத்து கொண்டு இருக்கிறர்கள். தேர் திருவிழா, பூ மிதித்தல், பாத யாத்ரை போதல், காவி உடை அணிதல் எதற்காக. உங்கள் பைபிளை நீங்கள் வேதம் என்ற சொல்ல காரணம், எங்கள் வேதங்களை திருட தானே.

இன்னும் 100 வருடங்கள் கழித்து என்ன சொல்விர்கள் என்று எங்களுக்கு தெரியும். "இங்கே கிறித்தவம் ஹிந்து மதத்திற்கு முன்னரே வந்து விட்டது. பாருங்கள் எங்கள் பெயர்கள் கூட, எங்கள் ஊர்களின் பெயர்கள் கூட மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களின் பெயர்கள் போல உள்ளன. ஏசுவிற்காக தான் தஞ்சாவூர் கோவில் கட்டப்பட்டது. நாங்கள் மிகவும் தொன்மையானவர்கள்."

கற்பனை இல்லை. திருவள்ளவரை கிறிஸ்தவர் என்ற சொன்ன கூட்டம் அல்லவா நீங்கள்.

அடுத்த மதத்தின் வேர்களை திருடுவது தவறு என்று கேட்டால், மாறுபட்ட கலாசாரம் ஒன்றுடன் ஒன்று கலக்கிறது என்ற கதை வேறு.

நீங்கள் சொல்வதை போல் ஆரியரும், திராவிடரும் கலந்ததால், என்ன இங்கே மாறி போயிற்று. இன்னும் திராவிடர்களின் இயற்கை வழிபாடு இன்னும் நீடித்து இருக்கிறது. இன்னும் மெருகு ஏறி இருக்கிறது. இன்று வரை அதே சகிப்புத்தன்மை நீடித்து வந்து இருக்கிறது

நீங்கள் இங்கே கலந்ததால், என்ன நடந்தது, 1000 வருடம் கோவில்கள் இடிக்கப்பட்டு , உங்கள் சர்ச்கள்க்கு மட்டும் உங்கள் மக்கள் செல்ல வேண்டும் என்ற என்னத்தை தானே விதித்திர்கள். தனது மட்டும் உயரந்தது என்ற நீச தனமான சிந்தனையை தானே என் மக்களிடம் வளர்த்திர்கள்.

மயிலைப் கபாலி கோவிலின் ஆதியை பற்றி ஆரயாந்தால் அது எங்கே போய் முடியும் என்று எல்லோரும் அறிந்ததே. சகிப்புத்தன்மை காரணமாக தான் அமைதியாக் இருக்கிறோம்.

சாதி என் மதத்தின் பிரச்சினை, அதை நாங்கள் பார்த்து கொள்கின்றோம். முதலில் உங்கள் கிறிஸ்தவ மத மாற்றிகளை அடுத்து மதத்தை பார்த்து அச்சு அடிப்பதை நிறுத்த சொல்லுங்கள். சொந்தமாக யோசிக்க சொல்லுங்கள். யேசுவிற்கு மட்டும் சர்ச் கட்டி கும்பிட சொல்லுங்கள். ஒரே இறைவன் யார் என்று முதலில் முடிவு செய்யுங்கள். பின்பு மத வியாபாரத்தை ஆரம்பியுங்கள்.

சாதி பிரிவினையை பற்றி நம் ஹிந்துக்கள் குறிப்பிட்டாலும், ஹிந்துக்கள் தலை குனிய தான் வேண்டும். ஆனால் அடுத்த மதத்திற்கு அதை பற்றி சொல்ல எந்த உரிமை இல்லை.

என் பதிவு சில நல்ல கிறிஸ்தவ உள்ளங்களை புண்படுத்தி விடும் என்பதை அறிவேன். மன்னித்து கொள்ளுங்கள் ஆனால் நீங்கள் உங்கள் மத மாற்றிகளை தடுக்க முயல வில்லை என்றால், ஒற்றுமை என்பது மிக பெரிய கேள்வி குறியாகி விடும்.

சாதியையும், கிறிஸ்தவத்தை எதிர்ப்பது என் கடமை என கருதுகின்றேன். இரண்டிலும் இருந்து நம் தேசத்தை மீட்டு எடுத்தே ஆக வேண்டும்.

ஆகவே, எனது களம் காயவில்லை, துணைக்கு யாரையும் துதிக்க வில்லை இறைவனை தவிர.

எனக்கு தெரிந்த வழியில் கடைசி வரை எழுத்து களத்தில் யுத்தம் செய்து கொண்டு தான் இருப்பேன்.

யுத்தம் நிற்பது என் எதிரே நிற்பவரை பொறுத்தே. அது என் கையில் இல்லை..

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...