Sunday, March 13, 2016

இது தான் சிறுபான்மை பேசும் உரிமையா?.

என் மதத்தையும் என் தெய்வத்தையும் ஏற்று கொள்ளுங்கள் என்று வீடு வீடாக தெருவாக பிச்சை எடுப்பவர்களை பிச்சைகாரர்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது ? . இஸ்லாமியார்கள் இருக்கும் தெரு , வீடு என்று தெரிந்தால் அந்த பக்கம் இந்த கிருஸ்தவ மத மாற்றிகள் போக மாட்டார்கள். போனால் என்ன நடக்கும் என்பதை அறிவார்கள்.

என் வீடு ஏறி உன் கடவுளை என்னிடம் விற்க எந்த சட்டம் அனுமதி கொடுத்தது. இது தான் மத சுதந்திரமா? இது தான் சிறுபான்மை பேசும் உரிமையா?. சட்டத்ில் அனுமதி இல்லை. ஆனால் சட்டதின் மாட்சிமையை காக்க வேண்டிய ஆட்சியாளர்கள் சிறுபான்மை ஒட்டு வங்கியை குறித்து பயம் கொள்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம். அதை சிறுபான்மை மத மாற்றி கூட்டம் பயன் படுத்தி கொள்கிறார்கள்

இந்த நிகழ்வு ஊடகத்தில் வரும் போது. இப்படி குறிப்பட படும் " கிறிஸ்தவர்களை ஹிந்துக்கள் மிரட்டினார்கள்" . வழக்கம் போல் நம் ஹிந்துக்கள் அதை நம்புவார்கள். மௌனமாக கடந்து போவர்கள்.

இந்த நிகழ்வில் கூட , ஒரே ஒருத்தர்தான் தொடர்ந்து அவர்களை எதிர்க்கிறார். மற்ற ஹிந்துக்கள் வேடிக்கை பார்க்கிறர்கள். பல முறை இதே நிகழ்வை நானும் எதிர் கொண்டு உள்ளேன். சுற்றி உள்ள ஹிந்துக்கள் மௌனம் சாதிப்பார்கள்.

அடுத்த நாளே நம்மிடம் வந்து பெருமாள் கோவில் போய் வந்தேன், சிவன் கோவில் போய் வந்தேன் பிரசாதம் என்று நம்மிடம் கொடுப்பார்கள். எரிச்சலாய் வரும். "அட பாவி நேற்று உன் முன்னாடி தானே மத மாற்றி கூட்டம் நம் பெருமாளை விட்டு, இயேசுவை ஏற்க சொன்னது. வாய் திறந்து ஒரு வார்த்தை அவர்களை கேட்காமல், இன்று பெருமாள் பிரசாதம் தருகிறாய்".

ஹிந்து என்று மதம் இல்லாமல் போனால் , இங்கே எந்த பெருமாள் கோவிலும் , சிவன் கோவிலும் நிற்க போகிறது. எல்லாம் சர்ச்சுகள் ஆகவும் , மசுதியாகவும் மாறிப் போகும்.

இதை தடுக்க நாம் எந்த இயக்கத்திலும் இணைய தேவை இல்லை. நமது உறவுகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக நமது குழந்தைகளிடம், நமது வீட்டு பெண்களிடம். இதை சரியாக செய்தாலே போதும். எல்லாம் சரியாக தொடங்கும்.
-1:42

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...