Sunday, March 13, 2016

வினை தீர்ப்பவர் விநாயகர், இந்த முறை வினையை விதைத்தது திமுக

வீட்டில் உள்ளவர்களை இவர்கள் சொல்லும் பகுத்தறிவு பக்கம் திருப்ப முடியாத பகுத்தறிவு வீரர்கள் , நாட்டை பகுத்தறிவு பக்கம் திருப்புகிறார்களாம்.

உங்கள் பகுத்தறிவு உங்கள் வீட்டிலே எடுபடவில்லை. நீங்கள் எல்லாம் தலைவராகி எண்ணத்தை சாதிக்க போகிறிர்கள்.

தலைவன் என்பவன், எல்லா மக்களையும் அரவணைத்து தழைக்க செய்பவன். தலைவன் என்ற சொல்லின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியாது.

பெரும்பான்மை மக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது கூட அபத்தம் என்ற கீழ்த்தரமான சிந்தனையை இவர்கள் எப்படி பெற்றார்கள்?

இவ்வளவு பயந்து கொண்டு உடனடியாக வாபஸ் பெறுகிறார்கள். யாரை கண்டு பயம்?

கொஞ்சம் உற்று நோக்கினால், பதில் மாற்று மதத்தவர்கள்.
மாற்று மதத்தவர்களின் அடிப்படை , ஹிந்து மதத்தை மறுத்தல். நம் கடவுள்களை சாத்தான் என்று சொல்லுதல்.

ஹிந்து மதத்தை மறுத்தால் தான், ஹிந்து மக்களை தனது மதத்திற்கு இழுக்க முடியும். அவர்கள் சிறுபான்மை ஆனதால், மிக வெளிபடையாக செய்ய முடியாது.

சிறுபான்மையருக்கு குரல் கொடுக்கும் தலைவர்கள் தமிழகத்தில் பலர் உண்டு. ஆனால் குரல் கொடுக்கும் தலைவர்கள் ஹிந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், குறைந்த பட்சம் எந்த மதமானாலும் அதற்கு மதிப்பை தருபவர்கள்.

ஆகவே இந்த தலைவர்கள் அவர்களுக்கு சரிப்பட்டு வர மாட்டார்கள். மாற்று மதத்தவர்களின் ஒரே அடிப்படை ஹிந்து மதத்தை மறுத்தல். அதை செய்ய கூடிய ஒரே இயக்கம் திமுக.
அதனால் திமுக பின் அணிவகுத்து நிற்கிறார்கள்
.
திமுக ஹிந்து மதத்தை இழிவு படுத்த .இன்னும் மிக தீவிரமாக திமுக பக்கம் செல்லுகிறார்கள். இதை உணர்ந்த திமுக இன்னும் ஹிந்து மதத்தை வேகமாக மறுக்க, மாற்று மதத்தினர் , கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனார். எவ்வளவு ஊழல் செய்யட்டும் கவலை இல்லை , எங்கள் ஆதரவு திமுகவிற்கு தான் !!

எங்கே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால , மாற்று மதத்தினர் நம்மை விட்டு விலகுவார்கள் என்ற பயம் தான் மிக அவசரமாக மறுப்பை வெளியிட காரணம்..

இது தான் உண்மை. என்னதான் பூசி மறைத்தாலும் , இதுதான் நிதர்சனம்.

உண்மையில் சொல்ல போனால். திமுக வின் இந்த செயல் , இந்திய அரசியல் அமைப்பின் விதிகளுக்கு எதிரானது. எல்லா மக்களையும் சமமாக நடத்து என்று சொல்வது நமது அரசியல் அமைப்பு சட்டம்.

வினை தீர்ப்பவர் விநாயகர், இந்த முறை வினையை விதைத்தது திமுக, வினையின் பலனை அந்த விதி முடிவு செய்யட்டும்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...