Sunday, March 13, 2016

ஒரு வேண்டுகோள்!!!

ஒரு வேண்டுகோள்!!!

எனது முக நூல் பதிவுகளுக்கு கருத்துக்களை பகிரும் போது, அது ஒரு வரம்புக்கு உட்பட்டு இருப்பது நல்லது. வார்த்தைகள் வலிமையாக இருக்கலாம் இன்றி, அது விரசமான வார்த்தைகளாக இருக்க கூடாது. யாரோ நம் மதத்தை பற்றி விரசமான வார்த்தைகளை உபயோக படுத்தினார்கள் என்பதற்காக , நாமும் அந்த செயலில் இறங்குவது நமக்கு மதிப்பை தராது. அவர்களும், இவர்களும் ஒரே மாதிரி என்ற பிம்பம் ஏற்பட்டு விட்டால், நாம் என்ன நல்ல கருத்துக்கள் சொன்னாலும் அதை படிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

உங்கள கோபம் நியாயமானது. ஒரு விதி செய்யக்கூடியது. ஆனால், தவறான வார்த்தைகள் நமக்கு தோல்வியை பெற்று தரும் என்று புரிந்து கொள்ளுங்கள். நமது சகதோரிகள் கூட நம் பதிவை பகிர்ந்து கொள்ள சங்கடபடுவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இதற்கு பிறகும், அந்த மாதிரி வார்த்தைகளை என் பதிவுக்கு போடபட்டால் , கண்டிப்பாக அதை நீக்கி விடுவேன். என் மேல் யாரும் வருத்தம் கொள்ளாதீர்கள்.

எனக்கும், கோபம், வருத்தம், ஆத்திரம் வரும். வெல்ல முடியாத வார்த்தைகளுடன் விவாதம் செய்து, வீதியில் வீழ்வதை விட, மெளனத்திடம் மண்டி இட்டு விடலாம் என்பதில் நம்பிக்கை உடையவன் நான்.

திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்களின், பதிவுகளும், கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் அழகும், எனக்கு உந்து சக்தி தந்தவை. அவரிடம் இருந்து தான் நிறைய விசயங்கள் கற்றுக் கொண்டேன்.

நாகரிகத்தின் செயலை நமது வார்த்தை நடையில் கூட நடத்தி காட்ட முடியும்.

தயவு செய்து முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...