Sunday, March 13, 2016

ஈசன் வந்தான்

ஒரு வயதான தம்பதி எனக்கு நன்கு தெரிந்தவர், நான் எனது சிவலயாதிற்கான பதிவில் தீபம் போடாதீர்கள் என்று சொன்னதற்கு மிகவும் வருத்தப்பட்டார். இறைவனிடம் சிந்தனை குவிய வேண்டும் என்ற எண்ணத்திற்காக நான் அப்படி தெரிவித்தேன்.

சில பேர் எவ்வளவு மாறுபட்ட சூழ்நிலைகள் அமைந்தாலும் , இறைவன் முன் நிற்கும் போது, இறையை உணர்கிறார்கள். நான் அந்த ரகத்தில் இல்லை. அந்த பக்குவம் எப்போதும் எனக்கு இருந்து வந்தது இல்லை.
என் மனம் சலனதிற்கு மிக விரைவில் இரையாக கூடியது.

தீபத்தை கையில் ஏந்தி இறைவன் முன் நிற்கும்போது, என் கவனம் இறையில் இருந்து தீபத்தில் வழிகிறது. நெய் சிந்தி விடுமா என்ற எண்ணம் வருகிறது, இல்லை தீபம் அணைந்து விடுமா என்ற பதற்றம் வருகிறது. அர்ச்சனைக்கு கொடுக்கப்படும் தேங்காய் எவ்வாறு வரும் என்று மனம் தடுமாறுகிறது. மிக சரியாக நான் கொடுத்த அர்ச்சனை பை என்னிடம் வருகிறதா என்று கண்கள் நோட்டம் விடுகிறது. வெளியே விட்ட காலணிகள் களவாடபடுமா என்று கலக்கம் வருகிறது.

பக்குவம் அற்ற மனம் எப்போதும் இப்படித்தான் பிறழந்து கொண்டு இருக்கும்.
எங்கும் நிறையை எங்கும் வழிபடலாம் என்றாலும், ஈசன் முன் நிற்கும் தருணமே என்னை எப்போதும் தாங்கிப் பிடிக்கிறது. இன்று வரை என்னை என் வாழ்க்கை தடத்தில் , வழிநடத்திக் கொண்டு இருக்கிறது.

தன்னம்பிக்கை தானாக சில பேருக்கு வரும். அந்த கூட்டத்தில் நான் இல்லை. தன்னம்பிக்கை அற்ற எனது மனம் தலைவனுக்காக தவித்தது. தந்தை தோள் கொடுத்தாலும், தாய் அரவணைத்தாலும் எழுந்து நிற்க மட்டும் முடிந்தது. நடத்திக் கொண்டு போக மனதோடு ஒருவர் வர வேண்டும் அல்லவா. அங்கே ஈசன் வந்தான்.

ஆன்ம பலமற்ற மனம், ஆண்டவனின் அருகாமையை அறிந்தவுடன், அதிர்ந்தது. உள்ளத்திற்கு உதவி வந்தது என்று உவகை கொண்டது.

பிடி அற்று தவித்த மனம், பிறைசூடன் உள்ளே நுழைந்ததும், தடி ஊன்றி மீண்டும் தரணியில் நின்றது.

சூழ்நிலைகள் என்னை சிதறடிக்க செய்யும் என்று தெரிந்த பின், முடிந்தவரை என்னை சுற்றி நல் சூழ்நிலைகளை உருவாக்க முயன்றேன். அதில் ஒரு பகுதி தான் கோவிலுக்கு வெறுமனே செல்வது. அர்ச்சன்னை , தீபம் தவிர்ப்பது, அதுவும் அதிகாலை செல்வது. அலைபேசியை அணைத்து விடுவது, காலணிகளை கூட வீட்டில் விட்டு செல்வது.

எந்த வெளிச்சிந்தனை இன்றி, இப்போது எல்லாம், ஈசன் முன் அகம் மட்டும் நிற்கிறது. அதற்கு நானே உருவாக்கி கொண்ட சூழ்நிலைகள் சிறப்பாய் வருகிறது.

மற்றபடி குடும்பத்துடன் செல்லும் போது, குறிப்பாக மனைவியுடன் செல்லும் போது, இதை செய்யாதிர்கள்!!

செய்தால் விளைவுக்கு இறைவனும் பொறுப்பல்ல, இதை எழுதிய நானும் பொறுப்பல்ல!!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...