Sunday, March 13, 2016

என் இந்திய தேசத்தின் இயலாமை, என் இமை வழியே வழிகிறது!.


எப்போது  இந்த பாடலை காண நேரும்போது, சொல்ல முடியாத ஒரு ஆதங்கம் மனதில் படர்கிறது.

சிறுவயதில் இருந்து நான் அடிக்கடிகேள்விப்பட்ட இரண்டு செய்திகள்.

1.தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்
2.பாகிஸ்தானின் அத்து மீறல்.

இரண்டும் இது வரை நின்றதில்லை. எப்போது நிற்கும் என்று யாரும் அறிய மாட்டார்கள்.

ஆயிரம் காரணம் இருக்கட்டும். ஆனால் பொருளீட்ட போன கணவனும், மகனும், தந்தையும் , உயிரோடு திரும்புவார்களா என்று ஒரு மங்கை மலங்க மலங்க விழித்து கொண்டு நின்றாள் , அவர்கள் வாழும் இடம் பெயர் தேசமா?

என் அடுத்த தலைமுறையும் இந்த அழுகையை காணுமோ எனறு பதட்டமாய் இருக்கிறது.

என் தேசத்தில் குறைந்த பட்சம் எல்லா மக்களும் எதாவது ஒரு பொருளை வாங்க முண்டியடித்து கொண்டு இருக்கும்போது, என் தேசத்தில் ஒரு பிரிவு மக்கள், உயிரற்ற தங்கள் மீனவர்களின் உடலையாவது வாங்க முடியுமோ அலைந்து கொண்டு இருக்கும் அவலத்தை எங்கே போய் செல்வது.

என் இந்திய தேசத்தின் இயலாமை, என் இமை வழியே வழிகிறது!.

இறைவனாவது இரங்குவான் என்று தெரியும். ஆனால் எப்போது என்று தெரியவில்லை.


No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...