
ஒரு அன்பருக்கு எழுதிய மறுமொழி"
David David நண்பரே, இன்னும் எத்தனை நாட்கள் ஆரியன் திராவிட கதை சொல்லி நம் மக்களை ஏமாற்றுதல் நடைபெறும். ஆரியன் அந்நியன் என்று வைத்து கொண்டால் , கிறிஸ்தவமும் , இஸ்லாமும் அந்நியம் அல்லவா ?. என் பெயர் சுகந்தன், என் பெயர் சொன்னாலே நான் தமிழன் என்று அறியப்படும் . உங்கள் பெயர் டேவிட், இது தமிழ் பெயரா? நீங்கள் தமிழரல்ல என்று சொல்ல வருவது என் நோக்கம் அல்ல.
ஆனால் ஐரோப்பவிலும் , அரபு நாட்டிலும் வைத்து கொண்டு இருக்கும் பெயரை இங்கே நாம் ஏன் வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஆதி ஆதியாக வந்து தமிழ் ஊர்களின் பெயர்களை இங்கே வெஸ்டன் பெயரில் மாற்றி கொண்டு இருப்பது கிறிஸ்தவமும் , இஸ்லாமும் தானே.
நீங்கள் சொல்லும் ஆரியன் , என் குல தெய்வத்தை மதித்தான். என் முன்னோர்கள் வழிபட்ட மரபை மதிக்கின்றான். ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் என் பாட்டன் முப்பட்டான் வழிபட்ட எங்கள் குல தெய்வங்களை சாத்தான் என்று இழிவுபடுத்துகிறது.
உங்களால் ஆரியன் என்று சொல்லப்படும் கூட்டம் என் ஆன்ம நம்பிக்கையை அழிக்க வில்லை,அரவணைத்தது. ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும், எங்கள் கோவில்களை அழிக்க துடிக்கின்றன.
என் குல தெய்வ கோவிலில் நாங்கள் தான் முதன்மையானவர்கள் , எந்த உயர் குடியும் உரிமை கொண்டாட முடியாது. அழைத்தால் எல்லா உயர் குடியும் வந்து , எங்கள் குல தெய்வத்திற்கு படைக்கப்பட்ட உணவை அருந்தி போகும். ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் , அது சாத்தானுக்கு படைக்கப்பட உணவு என்று மறுக்கும்.
இன்னொன்றும் நினைவில் வையுங்கள், ஆரியன் வந்து பல நூறு ஆண்டுகள் கழித்து தான் கிறிஸ்தவமும், இஸ்லாமும் உள்ளே நுழைந்தது. எப்படி பார்த்தாலும் அவர்கள் சீனியர்கள்.
நான் கீழ் சாதி அல்லது மேல் சாதி என்பது பிரச்சினை அல்ல, அப்படி வந்தால் அதை எதிர் கொள்ள நான் தயார். அதற்கு என்று என் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொடுக்க தயாராக இல்லை. நெற்றி நிறைய எங்கள் தமிழ் பெண்கள் அணியும் குங்குமதை தவறு என்று சொல்லியது ஆரியன் அல்ல. அந்நிய மதங்களான கிறிஸ்தவமும், இஸ்லாம தான் தவறு என்று சொல்கிறது. மாட்டை தெய்வம் என்று எம் தமிழ் இனம் கொண்டாடுகிறது. அதை வெட்டி திங்க ஒரு கூட்டம் துடிக்கிறது , அவர்களை எப்படி தமிழர் என்று ஏற்பது.
உலகின் மூத்த இனம் எம் தமிழ் இனம் , என் அடையாளம் தமிழ். கிறிஸ்தவமும், இஸ்லாதிற்கும் முற்பட்ட நாகரிகம் எங்கள் தமிழரக்கு சொந்தமானது. அதற்கு வரலாற்று சான்றுகள் எங்கள் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள்.
கிறிஸ்தவமும், இஸ்லாமும் உள்ளே நுழைந்த எந்த தேசத்தின் ஆதி கலாச்சாரம் நிலைத்து நின்றது இல்லை. ஏன் எனில் இந்த இரு மதங்களின் குணம் அப்படி பட்டது. இதை நான் சொல்ல வில்லை. உலகத்தின் வரலாறு சொல்கிறது.
நானும் தி க வை நம்பினேன். சாதி மறுத்தல் என்பது எல்லா சாதியையும் மறுத்தல் ,கடவுள் மறுப்பு என்பது எல்லா கடவுளையும் மறுத்தல். அப்படி இவர்கள் இல்லை. ஹிந்து மதத்தை மட்டும் குறி வைத்து அடிக்கிறார்கள், அதன் ஊடே தமிழர்கள் நம்பிக்கையும் சேர்த்து அடிக்கிறார்கள். அதனால் தான் தி க வை விமர்சித்தால் பல சிறுபான்மை அன்பர்கள் ஓடி வந்து தி க விற்காக வாதம் செய்கிறார்கள்.
எந்த ஹிந்துவும் மனு தர்மம் படித்து வைத்து கொண்டு சாதி பார்க்க வில்லை.
நான் ஹிந்து இல்லை என்று சொன்னால் வருத்தம் இல்லை. ஆனால் நான் எந்த சாதியாக இருந்தாலும் , நான் தமிழன். அதை அழிக்க ஆரியன் முயல வில்லை. கிறிஸ்தவமும் இஸ்லாம்மும் விரும்புகின்றன. அது தான் பிரச்சினை
No comments:
Post a Comment