
மற்றும் ஒரு மறு மொழி, "இயேசு தமிழ் கடவுள், ஆதாரம் பைபிள். தமிழ் எப்ப வந்தது இயேசு பிறக்கும் முன்னரே, பைபிள் எப்ப வநதது இயேசு வந்த பின்னர்"
ஏன்பா நான் சரியா தானே பேசுறேன்:)
"
நண்பரே. 2000 முன் வந்த கிறிஸ்தவத்தை வைத்து கொண்டு, அதற்கு முன்னே இருந்து வந்த பெருமை வாய்ந்த தமிழ் மக்களை அவமான படுத்தாதீர்கள். பைபிள் உங்களுக்கு புனித நூல், எனக்கு அல்ல. அதை நினைவில் வையுங்கள். உங்கள் நம்பிக்கை அதில் இருந்தால் உங்களோடு வைத்து கொள்ளுங்கள். அது வரலாற்று ஆதாரம் என்ற யார் நம்புகிறார்களோ அவர்களிடம் போய் உங்கள் கதைகளை கூறுங்கள். பைபிளை வைத்து கொண்டு பேசும் உங்களிடம் நான் ஏன் விவாதம் செய்ய வேண்டும். பைபிளை நீங்கள் நம்புங்கள் , நாங்கள் நம்ப தேவை இல்லை. பைபிளில் உள்ள முரண்பாடுகளை சுட்டி காட்டி ஆயிரம் புத்தகம் வந்து உள்ளது. அதை என்னாலும் காட்ட முடியும். ஆனால் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை காயபடுத்தும் என்ற நாகரீகம் கருதி அமைதியாக உள்ளோம்.
அதில் எழுதி இருப்பது உங்களுக்கு தான் ஆதாரம். அதை வரலாற்று ஆதாரம் என்று நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். எங்கோ ஒரு ஐரோப்பிய தேசத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை நீங்கள் வரலாறு ஆதாரம் என்று நம்பினால் நம்பி கொள்ளுங்கள். அதே ஐரோப்பிய மண்ணில் யூத இனத்தில் “பைபிள் ஒரு போலி, ஏசுவே ஒரு கற்பனை’ என்று சொல்லி புத்தகம் வந்து இருக்கிறது . அதை நான் சான்று என்று நான் சொன்னால் ஏற்று கொள்வீரா. என் வேலை பைபிளை மறுப்பது ஏற்பது அல்ல. கிறிஸ்து தமிழர் என்று நம்பினால் நம்பி கொள்ளுங்கள். என்னை பொறுத்த வரை அவர் தமிழரல்ல. அவர் தமிழராக இருந்தாலும் எனக்கு அதை பற்றி ஒரு அக்கறையும் இல்லை. அவர் வேறு தேசத்தில் வாழ்ந்த சித்தர்.
என் தமிழ் மண்ணில் கிறிஸ்துவிற்கு முற்ப்பட்ட எழுதிய புத்தகத்தை பற்றி தான் நான் நம்புவேன். கி.மு என்று நான் சொல்ல வந்தது , கிறிஸ்தவிற்கு முற்பட்ட காலங்களை. கிறிஸ்துவிற்கு முன் , கிறிஸ்துவிற்கு பின் என்ற காலத்தின் வேறுபாட்டை நான் அறியாமல் இல்லை. உங்களை மாதிரி ஆயிரம் பேரை பார்த்து இருக்கின்றேன். "சார் நான் கிறிஸ்தவன் அல்ல, ஆனால் ஒரு புத்தகம் படித்தேன் சார் , அதை பற்றி பகிர்ந்து கொள்ள வந்தேன் , சரி என்ன புத்தகம் என்று கேட்டால் , பைபிள் சார்" என்று ஆரம்பித்த மத வியாபாரிகளை பார்த்து இருக்கின்றேன். சங்க தமிழ் பாடல்கள் எதுவும் இயேசுவின் பெயரை குறிப்பிட்டது இல்லை.
உலகில் உயரந்தது எல்லாவற்றையும் கிறிஸ்தவர்கள் களவாடி அது கிறிஸ்துவிற்கு சொந்தமானது என்று கதை விடும் வீடியோ நிறைய உண்டு. களவாடி தான் கிறித்துவிற்கு பெருமை சேர்க்க வேண்டுமா. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் கிறிஸ்து என்ற பெயர் வந்ததது. அதற்கு முன்னரே தமிழ் வந்து விட்டது என்று சொன்னால், தமிழரின் கடவுள் இயேசு என்று அடித்து விடுகீர்கள். உங்கள் போப் ஆண்டவரே மயக்கம் போட்டு விடுவார் நீங்கள் சொல்லும் கதைகளை கேட்டு. இயேசு தான் தமிழ் கடவுள் என்று கதை கட்டுவதன் மூலம், “மக்களே பார்த்தீரா, இயேசு தான் தமிழ் கடவுள் , இவரை மட்டும் வணங்குங்கள்" என்று, தனதே உயர்ந்தது என்ற நீச சிந்தனையை எம் மக்களிடம் வளர்க்க தானே.
நான் என் தமிழ் மண்ணின் பெருமைக்காக பேசுகின்றேன், நீங்கள் கிறிஸ்துவின் பெருமைக்காக பேசி கொண்டு உள்ளீர்கள். ஆதாரம் என்று சொல்லி காட்டி பேசுவது பைபிள், ஆனால் நான் எங்கே மத மாற்ற முயன்றேன் என்று நாடகமாடி கொண்டு உள்ளீர்கள்
பேரை கூட தமிழ் பெயரில் வைத்து கொள்ள முடியாத நீங்கள் எனக்கு கிறிஸ்து ஒரு தமிழர் என்று கதை சொல்ல வந்தீரோ. கொடுமை. உங்களுடன் பேசுவதே வீண் வேலை.
எந்த தமிழ் ஆன்மிக பாடல்கள் இயேசுவின் பெயரை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறது. மறைமுகமாக இயேசுவை சொல்கிறது அல்லது வேறு பெயரில் சொல்கிறது அல்லது இது எல்லாம் இயேசுவை தான் குறிப்பிடுகிறது, என்று கதை சொல்லாதீர். அப்புறம் நாங்களும் சொல்வோம், இயேசு அடிக்கடி சொல்வாரே “என் தந்தையை நம்பு” , அந்த தந்தை வேறு யாரும் அல்ல எங்கள் சிவபெருமான் தான்.
இந்த பதிவுக்கு நீங்கள் என்ன மறுமொழி போட்டாலும் எனக்கு கவலை இல்லை. எங்கள் தமிழ் மண்ணை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது, எப்போது பைபிளை உள்ளே கொண்டு வந்தீரோ அப்போதே நிறைய பேருக்கு நீங்கள் யார் என்று விளங்கி இருக்கும்.
நலமாக வாழுங்கள். நன்றி
No comments:
Post a Comment