Saturday, February 25, 2017

ஒரு மறக்கப்பட்ட பேரரசு-விஜய நகரம்-அத்தியாயம் 1


ஒரு மறக்கப்பட்ட பேரரசு
விஜய நகரம்

A Forgotten Empire: Vijayanagar)


இந்திய வரலாறுக்கு
ஒரு பங்களிப்பு
மூல நூல்
ஆங்கிலத்தில்

ROBERT SEWELL

தமிழாக்கம்
சுகந்தன் ராஜமாணிக்கம்

(ஆங்கில நூலை தழுவி தமிழில் மொழி மாற்றி எழுதப்பட்டது)


ஆங்கிலத்தில் படிக்க ://www.gutenberg.org/ebooks/3310



சுகந்தன்- “பொது தளத்தில் உள்ள நூல் என்பதால் எந்த வணிக ரீதியான எண்ணம் இல்லாமல், தென் இந்திய மக்களுக்கு விஜய நகர அரசின் வரலாற்றை உணர்த்த , இதை என் குறைந்த பட்ச ஆங்கில அறிவை வைத்து தமிழில் மொழி பெயர்த்து உள்ளேன்.  ராபர்ட் அவர்களின் உழைப்பு அசாத்தியமானது. தொகுப்புகளை ஆவணபடுத்த என்ன தொல்லைகள் பொறுத்தார் என்பதை அவர் மட்டும் அறிவார். ஆனால் நமக்கு ஒரு பேரரசை பரிசளித்து விட்டு போய் இருக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்து எழுத வில்லை, ஆங்கில வார்த்தைகள் சொல்லும் அர்த்தத்தின் அளவின் வளமையை ஒட்டி தான், வார்த்தைகளை என் நடையில் வடித்து இருக்கின்றேன். அத்தியாங்கள் மட்டும் தான் மொழி பெயர்த்து உள்ளேன். மொழி பெயர்ப்பில் உள்ள வரலாறு சொல்லும் நிகழ்வுகள் பற்றிய நிறைகள் எல்லாம் ROBERT அவர்களை சாரும், மொழி பெயர்ப்பில் உள்ள குறைகள் எல்லாம் என்னை சாரும். பதிப்புரிமை பற்றிய மாறுபட்ட கருத்து  இருந்தால் தெரிவிக்கவும் suganthan.mech@gmail.com."

அத்தியாயம் 1

அறிமுகம் 



Introductory remarks – Sources of information – Sketch of history of Southern India down to A.D. 1336 – A Hindu bulwark against Muhammadan conquest – The opening date, as given by Nuniz, wrong – ”Togao Mamede” or Muhammad Taghlaq of Delhi – His career and character.

கி.பி 1336 ஆண்டு, இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்ட் ஆட்சி புரிந்த காலத்தில், இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வு, தென் இந்தியாவின் அரசியல் நிலைமையை உடனடியாக மாற்றி அமைத்தது. அந்த தேதியில் இருந்து பண்டைய வரலாறுகள் பரண் மேல் ஏற்றப்பட்டு, ஒரு புதுமையான வரலாறு துளிர்த்தது. பழைய சகாப்தத்தில் இருந்து ஒரு புது சகாப்தத்திற்கு உலகம் பயணிக்க தொடங்கியது

வீறு கொண்ட எழுந்த விஜயநகர அரசிற்கான அடித்தளம் தான் அது. கி.பி 1336 ஆண்டுக்கு முன், தென் இந்தியா முழுவதும் தொன்மை மிக்க ஹிந்து அரசுகளின் ஆதிக்கத்தில் இருந்தது. அந்த ஹிந்து அரசுகளின் ஆதி கால வரலாறு யாராலும் அறியப்பட வில்லை. ஆனால் 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட புத்த அரசாணைகளில், மதுரையில் அரசாண்ட பாண்டியர்கள் பற்றியும், தஞ்சாவூரில் அரசாண்ட சோழர்கள் மற்றும் சில அரசுகளை பற்றியும் குறிப்புகள் உள்ளன.

விஜயநகர அரசு முளைத்து எழுந்த போது, கடந்த காலத்தில் இருந்த அரசுகள் கடந்த காலத்தில் கரைந்து போயின. தக்காணத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்த எல்லா அரசுகளும் விஜயநகர முடியாட்சியின் கீழ் வந்தது. இதில் அதிசயப்பட ஒன்றும் இல்லை. ஹிந்துக்கள் நிறைந்த இந்தியா முழுவதையும் இஸ்லாமிய அரசின் கீழ் கொண்டு வர தொடரப்பட்ட தொடர் முயற்சியின் விளைவாக, விஜயநகர அரசின் எழுச்சி இயல்பாக நிகழ்ந்தது. அச்சமூட்ட கூடிய முகமதிய படையெடுப்பாளர்கள், கிருஷ்ணா நதி எல்லையை அடைந்த போது, அதற்கு அப்பால் தென்னகத்தில் உள்ள இந்து அரசுகள் அவசரமாக ஒன்று கூடி புதிய குடையின் கீழ் வந்தன. இஸ்லாமிய அரசுகளால் இன்னல்களை சந்தித்து வந்த அவர்களுக்கு, பாதுகாப்பு பற்றிய நம்பிக்கையை அது அளித்தது. சிதைக்கப்பட்ட பல அரசுகள் காணாமல் போன நேரத்தில், விஜயநகர அரசர்கள் தான் தென்னகத்தின் ரட்சர்களாக இரண்டரை நூற்றாண்டுகளாக இருந்து வந்தனர்.

ஆனால் இன்று வரை, விஜயநகர பேரரசை பற்றி இந்தியாவில் அரிதாகதான் நினைவில் வைத்து உள்ளனர். ஒரு காலத்தில் இது அற்புதமான தலை நகரமாகவும், வடக்கு வரை அதன் ஆட்சி எல்லைகள் நிறுவப்பட்டு, வெற்றி திரு நகரம் என்ற பட்டத்தை தாங்கி பளபளத்தது. அந்த பெருமை மிகு நகரத்தில் இன்று மிச்சம் இருப்பது என்னவோ சில சிதறிய சிதில்கள் தான். அந்த இடிபாடுகள் ஒரு காலத்தில், இறைவனுடைய கோவில்களாகவும், கோட்டைகளாகவும், மிக பெரிய அரண்களை உடைய மதில்களாகவும் அமைந்து அந்த நகரத்தை அரவணைத்து காத்தது. கால போக்கில் இந்த நகரத்தை பற்றிய பெயரும் கூட இந்திய மக்களின் மனதில் இருந்து மறைந்தே போய் இருந்தன. உலகத்தின் உச்சம் தொட்ட ஒரு நகரின் எச்சங்கள் ஹம்பி எனும் சிறிய கிராமத்தின் அருகே இன்றும் சிதறி கிடக்கின்றன.

விஜயநகர அரச காலத்தில், அது ஆஸ்திரியா என்ற நாட்டை விட மிக பெரிய பேரரசாக இருந்தது. விஜய நகரத்தின் பெரிய அளவையும், செல்வ செழிப்புடன் கூடிய சிறப்பான வளமையையும், வலிமையையும் கண்டு, அதை அப்போது இருந்த எந்த மேற்கத்திய நாட்டின் தலைநகரத்துடன் ஒப்பிடுதல் செய்ய முடியுமா என்று பதினைந்தாம் மற்றும் பதினாறாவது நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து விஜயநகரத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய பார்வையாளர்கள் பதிவு செய்து உள்ளார்கள். இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் போர்த்துகீசியர்கள் தங்கள் கடல் வணிகத்தை பாதுகாக்க நடத்த மேற்கொண்ட போரட்டங்கள், 1565 விஜய நகர அரசு வீழ்த்தப்பட்ட பிறகு முடிவுக்கு வந்தது. அது போர்த்துகீசியர்களின் கோவாவின் செழுமைக்கு முற்று புள்ளி வைத்தது. அது மீண்டும் மீளவே இல்லை. அதில் இருந்து விஜய நகர அரசின் முக்கியத்துவம் என்ன என்பதை அறியலாம்.

மிக பெரிய நில பரப்பை ஆட்சி செய்த விஜய நகர் அரசர்களின் வாழ்வியல் நிகழ்வுகள் பற்றிய வரலாற்று அறிவு எங்களுக்கு மிக சிறிய அளவில் இருந்தாலும், அப்போது விஜயம் செய்த ஐரோப்பிய பயணிகள் எழுதிய ஒழுங்கு அற்ற, சிதறிய குறிப்புகளில் இருந்தும் தரவுகள் தொகுக்கபட்டது. கொஞ்சம் தரவுகள் மத்தியகால வரலாற்றாசிரியர்கள் Barros, Couto, and Correa, அவர்களின் குறிப்புகளில் இருந்து பெறப்பட்டது. தங்கள் ஐரோப்பிய மக்களுக்கு, ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை பற்றி அவர்கள் தங்கள் எழுத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தனர். கொஞ்சம் தரவுகள், தங்கள் இஸ்லாமிய மன்னர்களை பற்றி எழுதிய இஸ்லாமிய எழுத்தாளர்களின் நாள் குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டன. கொஞ்சம் தரவுகள், ஹிந்து கோவில்களின் கல்வெட்டில் இருந்தும், ஹிந்து நிறுவனங்களின் ஆவணத்தில் இருந்தும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பத்திரத்திலும் இருந்தும் பெறப்பட்டது, அது எப்போதாவது கிடைக்கும் பேர்களையும், நாட்களையும் விட அதிக தகவல்களை தந்தது.

இந்த நூலின் கடைசியில் மொழி பெயர்க்கப்பட்ட, இரண்டு ஆவண குறிப்புகள், பதினாறாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் விஜய நகரம் பற்றிய படிப்பையும், அதற்கு பின் தழைத்து ஓங்கிய சாம்ராஜ்ஜியத்தை பற்றிய விசாலமான அறிவை தருகிறது. மற்றபடி அந்த ஆவண குறிப்புகளை அறிமுகம் செய்வதற்கு, மற்ற தரவுகளில் இருந்து குறிப்புக்கள் என்னால் எடுக்கப்பட்டு, கோர்வையாக கோர்க்கப்பட்டு, விஜய நகரத்தின் வரலாறு ஒரு வடிவமைப்பிற்குள் வரையறை செய்யப்பட்டது. இதை அடித்தளமாக கொண்டு விஜய நகர பேரரசின் வரலாற்றை வரிசை படுத்தி வாசிக்கலாம்.

இந்த நூல் ஒருவேளை, ரசிக்க தரமற்ற தாகவும், கலங்கிய திரவியமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாதகவும் இருக்கலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், இது தான் முதல் முயற்சி. இதுவரை தென் இந்தியாவின், வரலாற்றை எந்த எழுத்தாளர்களவாது முழுதும் தொகுத்து இருப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இது உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பித்தல் போன்றது. ஆனால் அந்த உலர்ந்த எலும்புகள் தானாக இணைந்து, தொகுக்க பட வேண்டும். அதில் என் வேலையானது குறைந்த பட்சம் அந்த எலும்புகளின் முக்கிய அமைப்பை கூட்டமைக்க முயற்சி செய்தல் போன்றது.

விஜய நகரத்தை பற்றி அறியும் முன், குறைந்த பட்சம் நாம் பதினான்காம் நூற்றாண்டின் முதல் பாதியில், தென் இந்திய துணை கண்டத்தில் இருந்த அரசுகளை பற்றி சிறதளவு பார்ப்போம். அவர்களில் மதுரையில் இருந்து அரசாண்ட பாண்டியரும், தஞ்சையில் இருந்து அரசாண்ட சோழரும் மிக முக்கியமானவர்கள்.

1001 வது வருடம், இந்தியாவின் வடமேற்கு எல்லையில் இருந்து முகமதியர்களின் பெரும் தலைவனான கஜினியின் தலைமையில் கீழ் இந்தியாவில் ஊடுருவல் நடந்தது. முதலில் பஞ்சாபின் சமவெளியிலும், பிறகு முல்தானிலும், பிறகு மற்ற இடங்களுக்கும் படை எடுத்தான். ஒவ்வொரு முறையும், மேலும் மேலும் பல இடங்களுக்கு, முன்னேற்றி செல்வதும், பின்பு பின்னதைவதும் என்பதை வாடிக்கையாக கொண்டான். 1021வருடம் கலிங்காவில் இருந்தான், 1023 முன்னேறி கத்தியவார் வந்தான், ஆனால் ஒரு பொழுதும் இந்தியாவில் அரசமைக்க அவன் முயற்சி செய்ய வில்லை. அவனது படை எடுப்பு கொள்ளையடித்தல் என்ற கொள்கையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் தொடர்ந்த நிகழ்ந்த பல படை எடுப்புகளின் பிரதி பலனாக, அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில், டெல்லியின் ஆளுமையை இஸ்லாமியர்கள் கைப்பற்றி உறுதியாக அமர்ந்தார்கள். அன்றைய கால கட்டத்தில் வரிசையாக வந்த போர்களினால் வட இந்தியா முழுவதும் வதைப்பட்டது.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமியர்கள் தென் இந்தியா பக்கம் தன் பார்வையை திருப்பினார்கள். 1293 ஆம் ஆண்டில், தில்லி ராஜாவின் மருமகன், ஆலா-உத்-தின் கில்ஜி, ஹிந்து ராஜ்ஜியம் தேவகிரியை கைப்பற்றினான். நான்கு வருடம் கழித்து, குஜராத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டது. 1303 ஆம் ஆண்டில் வாரங்கலை (இன்றைய தெலுங்கனாவின் பகுதி ) பலவீன படுத்த முயற்சிகள் மேற் கொள்ள பட்டன. 1306 இல் தேவகிரி மீது மீண்டும் புதிய தாக்குதல் நடத்தப்பட்டது. முகமதியர்களால் பெரிதும் கொண்டாட பட்ட மாலிக்காஃபூர் என்ற தளபதியின் கீழ் 1309 ஒரு பெரும்படை கிளம்பி தக்காணத்தையும், வாரங்களையும் வாரி போட்டு கொண்டது. ஹோய்சாலார்களின் பழைய தலை நகரமான துவரசமுத்திரம் 1310 ஆண்டு துவம்சம் செய்யப்பட்டது., அதை தொடர்ந்து மலபார் கடற்கரை சென்று பல மசூதிகள் கட்டி, பெரும் செல்வத்துடன் தன் மன்னரிடம் திரும்பி சென்றான். 1312 ஆண்டு மீண்டும் ஒரு புதிய போர்கள் நடந்தன. ஆறு வருடங்கள் கழித்து அந்த மனித தன்மை அற்ற செயல் தேவகிரியில் நடந்தது. தேவகிரியின் இளவரசனான ஹரிபால் தேவனை உயிரோடு தோலுரித்து, அவன் தலையை வெட்டி, ஹரிபால் தேவனின் சொந்த ஊரின் அரண்மனை கதவில் தொங்க விட்டார்கள். 1323 ஆம் ஆண்டில், வாரங்கல் முழுதும் விழுந்தது.

1330 வருடம் பிறக்கும்போது, விந்திய மலையில் இருந்து வட இந்திய முழுவதும், கடுமையான முஸ்லிம்களின் ஆட்சியில் கீழ் வந்து இருந்தது, அவர்களின் வீச்சு தக்காணத்தையும் தாண்டி பரவியது. தென் இந்தியா முழுவதும், வட இந்தியாவிற்கு ஏற்பட்ட கதி தமக்கும் வருமோ என்று கலங்கி தவித்தது. கிருஷ்ணா நதியின் தெற்கு பக்கம் ஹிந்து அரசுகளின் ஆதிக்கத்தில் இருந்து வந்தன. ஆனால் வடக்கே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தாக்கி கொண்டு இருந்த இஸ்லாமிய அரசுகளின் தொடர் தாக்குதல்களினால், பழைய ஹிந்து சாம்ராஜ்யங்கள் களைத்து போய் கிடந்தன. 1325 தில்லியில் முஹம்மது பின் துக்ளக்கின் ஆட்சி காலங்கள், தெற்கின் நிலைமையை சிக்கலாக்கியது. முஹம்மது பின் துக்ளக்கின் சகிப்பின்மை, பேராசை, முரட்டுத்தனம் பற்றிய செய்திகள், இந்திய துணை கண்டம் முழுவதும் பரவி, ஒரு அசாதாரண நிலையை உருவாக்கி இருந்தன.

முடிவே இல்லாத இந்த முகமதியர்களின் தாக்குதல்களை, முறியடித்து வைக்க எல்லாருக்கும் ஒரு முன்னணி அணி தேவை பட்டது. ஹிந்து ராஜ்யங்களின் அழிவையும், ஹிந்து மதத்தின் அழிவையும், ஹிந்து கோவில்களின் அழிவையும், ஹிந்து மக்களின் நகரத்தின் அழிவையும், பாரம்பரிய ஹிந்து அரசு குடும்பத்தின் அழிவையும் தடுக்க வேண்டியது மிக அவசியமானது என்ற கருத்து வலுப்பட்டது. தங்கள் பிரியத்துக்குரிய பாரம்பரிய விஷயங்கள் வீழ்ச்சியில் தள்ளாடி கொண்டு இருப்பதாக தென் இந்தியாவிற்கு தோன்றியது.

எல்லாரும் எதிர்பார்த்தது சட்டென்று ஒரு நாள் நிகழ்ந்தது. ஆம், 1344 வருடம் முகமதியர்கள் பேரலைகள் தடுக்கப்பட்டன. உள்ளே நுழையாதவாறு கடினமாக மறிக்கபட்டன. அன்றிலிருந்து 250 வருடம் தொடர்ந்து தென் இந்தியா காக்கப்பட்டது

அந்த மறிப்பை சில குட்டி ஹிந்து அரசுகள் கூட்டமைத்து செய்தன. இரண்டு பெரிய ஹிந்து பேரரசுகள் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில், மிச்சம் இருந்தது அனுகொண்டியில் (Anegondi) இருந்த சிறிய ஹிந்து அரசு மட்டுமே. ஆக நம்பிக்கை என்பதே சிறு நிழலாக தான் தென்பட்டது. ஆனால் அனுகொண்டியில் எழுப்பட்ட சுவர்கள், விஜய நகர பேரரசை வளர்த்து மக்களுக்கான நம்பிக்கையை நிர்ணயபடுத்தியது. தென் இந்தியா இந்த அரசர்களுக்கு தன்னை சமர்பித்தது.

இந்திய வரைபடத்தில் மும்பையில் இருந்து, சென்னைக்கு ஒரு நேர்கோடு வரைந்து, அதில் பயணித்தால், பாதி வழி முழுவதும் துங்கபத்ரா ஆற்றை காணலாம். மைசூரில் வடக்கு நோக்கி பாயும் இரண்டு நீரோடைகள், பரந்த வடக்கில் பாய்ந்து, கிழக்கில் கிருஷ்ணாவில் இணைகிறது. இது கர்னூலில் இருந்து அதிக தொலைவில் இல்லை. இதற்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்த, பாறைகள் நிறைந்த காட்டுப்பகுதியை துங்கபுத்திரா வெட்டி கொண்டு பாய்கிறது. இது பெல்லாரியின் வட மேற்கில் இருந்து நாப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்tது இருக்கிறது. இன்றைய வடக்கின் ரயில் பாதைகள் அங்கிருந்து பயணித்து தார்வாருக்கு போகிறது. 

ஆற்றின் வட கரையில் 1330 வருடம் அமைந்த இருந்த சிறு நகரத்தின் பெயர் அனுகோண்டி. இதை பூர்விகமாக கொண்டு அரசு குடும்பங்கள், பக்கத்தில் உள்ள சிறிய பிரதேசங்களை ஆண்டு கொண்டு வந்தன. அவர்கள் பக்கத்தில் உள்ள மலைகளில் இருந்து கிரானைட் கற்களை கொண்டு, ஒரு மிக வலுவான கோட்டையை, சிறிய ஆற்றின் மீது அமைத்து இருந்தனர். ஆழமற்ற அதன் இடத்தில் இருந்து, பல தூர கிலோமீட்டர் நீளத்திற்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் ஓடி கொண்டு இருந்தது. வெள்ள காலங்களில் சீறிய நீர், ஆற்று படுகையில் பாய்ந்து அபாயகரமாக வழிந்து ஓடியது. அனுகொண்டியின் தலைவர்கள் பற்றி சிறிதளவே தரவுகள் இருந்தாலும், அவர்கள் ஹொய்சள அரசுக்கு எதிராக இருந்ததாக தெரிகிறது. இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ், 1350 கி.பி.-க்கு முற்பட்ட ஏழு நூறு ஆண்டுகளில் இருந்தே அனுகோண்டி குடும்பம் அரசாளும் உரிமை பெற்று இருந்தாக சொல்கிறார்.

போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் அவர்களின் தரவுகள் மிக தெளிவாக எவ்வாறு விஜயநகர அரசர்கள் ஆட்சி அதிகாரம் பெற்றார்கள், பின்னாளில் மிக வலிமையானவர்களாக மாறினார்கள் என்று பதிவு செய்கிறது. இது தரும் விவரங்கள் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் சம காலத்தில் இருந்த கல்வெட்டு மற்றும் பிற பதிவுகளுடன் இவை ஒத்து போகின்றன. பெர்னோ நுனுஸ் தரவுகள் படி, 1336 சிறிது காலத்திற்கு முன் முஹம்மது துக்ளக், குஜராத்தை சீரழித்து விட்டு, தன் படைகளுடன் தக்காணின் பாலாகாட்டின் வழியாக கடந்து அனுகோண்டியை கைப்பற்றி, அதன் தலைவரையும், அவர்கள் குடும்பத்தையும் கொன்றான். 

ஆனால் அதை தொடர்ந்து ஆள்வதில் சிக்கல் ஏற்படவே, அனுகொண்டியின் பழைய அமைச்சர் ஒருவரை ஆளுமையில் அமர்த்துகின்றான். அவர்தான் ஹரி ஹரி தேவ ராயர் என்று போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் என்று குறிப்பிடுகிறார். ஹரி ஹரி தேவ ராயர் தன் ஆன்மிக குருவான மாதவ் அவர்களின் துணையுடன் புத்திசாலித்தனமாக, அனுகொண்டிக்கு எதிராக அமைந்த ஆற்றின் மறு கரையில் விஜய நகர அரசை அமைத்தார். ஆறு அரசிற்கும், கொள்ளை அடிக்கும் முஸ்லிம் கூட்டத்திற்கும் நடுவில் அமைந்து, முன் எப்போதும் இல்லாத பாதுகாப்பு வளையத்தை மக்களுக்கு அளித்தது. அவருக்கு அடுத்து முப்பது வருடங்கள் புக்கர் ஆட்சி செய்தார்., அவருக்கு பின் அவர் மகன் ஹரிஹர தேவ 2 ஆட்சி செய்தார். ஹரி ஹரி தேவ ராயரும், புக்க தேவ ராயரும் சகோதரர்கள் என்பதும், இவர்களுக்கு பின் புக்கரின் மகன் ஹரிஹர தேவ 2 ஆட்சிக்கு வநததும், சரித்தர உண்மைகள். 

ஆரம்ப கால விஜய கால மன்னர்களின் வெற்றி அசாத்தியமானது. இபன் பட்டுட என்ற மத்திய கால இஸ்லாமிய பயணியின் தரவுகளும், இந்தியாவின் மேற்கு கரையோரத்தில் இருந்த இஸ்லாமிய அரசுகள், ஹரி ஹரி தேவராயரின் ஆளுமைக்கு உட்பட்டு தான் இருந்தன என குறிப்பிடுகிறது. அவருக்கு நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வந்த அப்துர் ரசாக் என்ற பாரசீக தூதர், விஜய நகர அரசர் தான் “ தென் இந்தியா முழுமைக்கும் தலைவராக இருந்தார் என்றும், எல்லா தென் இந்திய கடல்களின் மேலும், தக்காண் முதல் கன்னியாகுமரி வரை அவரின் ஆளுமை பாய்ந்தது என்றும்., இலங்கை போன்ற நாடுகள் அவரின் அதிகாரத்தில் இருந்தது என்றும், அவரின் படையில் 11 லட்சம் வீரர்கள் இருந்தார்கள் எனவும் குறிப்பிடுகிறார். 

இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் தரவுகள் படி 1378 கி.பி முற்பட்ட காலத்தில் கூட, ராயர்களின் விஜயநகரம் மிக பெரிய வளத்தையும், பலத்தையும் எல்லையையும் கொண்டு, பாமினி சுல்தான்களை விட சிறப்புற இருந்தது. 

தென் இந்தியாவின் பழைய அரசுகள், விஜயநகர ஆளுமையை ஏற்றன. இஸ்லாமியர்கள் பற்றிய அச்சமே விஜய நகரத்தின் தலைமையை அவர்கள் முழுதாக ஏற்பதற்கு காரணமாக இருந்து இருக்க கூடும். இப்படிதான் ஒரு சிறு அரசாக வளர்ந்து மெல்ல விரிவடைந்து, ஒரு பேரரசாக விஜய நகரம் எழுந்தது. உள்நாட்டு யுத்தத்தினாலும், இஸ்லாமிய அரசர்களை எதிர்த்தும் நடந்த கலகத்தாலும், இஸ்லாமிய அரசுகள் தளர்ந்து இருந்த நிலைமையும், விஜய நகர அரசின் வளர்ச்சிக்கு சாதகமாக இருந்தன. 

கொடுங்கோன்மையில் கோலோச்சிய முஹம்மது பின் துக்ளக்கின் அரசுக்கு எதிராக 1347 தக்காணம் வெகுண்டு எழுந்ததின் விளைவாக, பாமினி சுல்தான்களின் அரசு ஏற்பட்டது. 

போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் பின்வருமாறு எழுதுகிறார். 

“1230 இந்த பகுதிகள் காம்பாய பேரரசால் ஆளபட்டான. தில்லி அரசுகள் தொடந்து படை எடுத்து, காம்பிய அரசுடன் வெகு காலம் போரிட்டு, அவர்களை வீழ்த்தி குஜராத்தின் மன்னன் ஆனார்கள். பிறகு பலாகாடின் வழியாக விஜய நகரத்தின் மீது ஆளுமை செலுத்த முயன்றான். இது 1300களின் தொடக்கமாக இருக்கலாம். இந்த அரசன் தோகோ மமத் என்ற பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றான் 

போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் தனது போர்த்துகீசிய அரசனுக்கு மேலும் குறிப்புகள் எழுதுகிறார்.

“இந்த தில்லி அரசனை மூர் என்றும் சொல்கிறார்கள், தோகோ மமத் என்றும் அழைக்கிறார்கள். இந்துக்கள் மத்தியில் இவர் ஒரு துறவி போல் நடந்து கொள்கிறார். அவர் கடவுளிடம் ஆரதானை செய்த போது, நாலு கைகள், நாலு கைககள் உடையது காட்சி அளித்தது என்றும், ஒவ்வொரு முறை இவர் பிராத்தனை பண்ணும் போது சொர்க்கத்தில் இருந்து ரோஜா இவரிடம் விழும் என்ற பேசி கொள்கிறார்கள். அவர் ஒரு மிக பெரிய வெற்றி வீரன், பல தேசங்களை தன் ஆளுமைக்கு உட்படுத்தினார் என்றும், வேற்று தேச அரசர்களை அடக்கி, கொன்று, தோலுரித்து, அந்த அரசர்களின் தோலை தைத்து உடையாக அணிந்தார். அதனால் “ராஜாக்களின் தோல்கள் அணிந்த ஆண்டவன்” என்று பொருள் கொண்டு பட்ட பெயர்கள் அழைக்கப்பட்டன. 

அவர் பெயரில் உள்ள எழுத்துக்கள் பதினெட்டு என்றாலும், ஆனால் அவரின் சொந்த கணக்கு படி அது இருபத்தி நான்கு, அதை பற்றியும் கதைகள் உண்டு. அவர் உண்மையில் செய்த பல விசயங்களை விட இந்த கதைகள் மிக சுவாரஸ்யமான ஒன்று. உதாரணத்திற்கு, எதற்கு எல்லாம் அவர் தனது படைகளை உபயோக படுதினார் என்பது பற்றிய கதை. ஒரு முறை அவர் உடை மாற்றி கொண்டு இருந்த போது, ஒரு சூரிய ஒளி கீற்று, மூடிய ஜன்னல் வழியாக இவர் கண் மீது பட்டு எரிச்சல் படுத்த, அதற்கு காரணமானவர்களை தண்டிக்காமல் விட மாட்டேன் என்று கத்த ஆரம்பித்தார். அனைத்து மந்திரிகளும், அவரை சமாதான படுத்த முயன்றனர். சூரியன் தான் அதை செய்தது, அதை கொல்வதோ, காயப்படுத்தவதோ சாத்தியம் இல்லை என்று சொல்லி பார்த்தார்கள். எதையும் கேக்காமல், படையை திரட்டி போனான், அவரின் பெரும் படையால் எழுந்து தூசி சூரியனை மறைக்க, சூரியனை காணாது கண்டு, அது அஞ்சி ஓடி ஒளிந்து விட்டது என்று சொல்லி. தன் படையை திருப்பி அழைத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான். 

இன்னோர் மிதமிஞ்சிய கதை, இலங்கையில் தங்கம் இறைந்து கிடக்கிறது, அந்த தேசத்தின் வீடுகளில் வைரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன, சொர்க்கத்தில் இருந்து தேவதைகள் பாடிக் கொண்டும் நடனமாடி கொண்டும் உள்ளன என்ற கேள்விப்பட்டு, அங்கே செல்ல முயன்றான். போதிய அளவு கப்பல் இல்லாததால், கடலை தாண்ட முடியாமல், பணியாளர்களை வைத்து கற்களை வைத்து கடலை நிரப்பி தாண்டி போனான். திரும்பும்போது கடல் பாறைகளை அரித்து விட்டதால், இரண்டு கப்பல் மூலம் பொன் எடுத்து நாடு திரும்பினான். அதற்கு பிறகு அவன் அந்த கடல் பாலம் பக்கம் போக வில்லை. இது இன்றளவும் இருக்கிறது, புனித தலமாக கொண்டாடப் படுகிறது. இது மாதிரி இரண்டாயிரம் கதைகள் சொல்ல படுகின்றன. கடவுளின் அருளில் மீண்டும் சந்தித்தால் உங்களுக்கு இதை விட சிறப்பான கதைகள் சொல்கின்றேன்”

இது வரை கிடைத்த தரவுகள் படி, இத்தகைய குறிப்புகள் 1325 to 1351 தில்லியில் ஆட்சி புரிந்த முஹம்மது பின் துக்ளக்கை தான் குறிக்கின்றன. இவரின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 

போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் தரவுகள் படி “தோகோ மமத் குஜராத்தை வெல்கின்றான். பெங்கால் உடன் போர் புரிகின்றான். பாரீசகத்துடன் எல்லை பிரச்சினை இருக்கிறது. முஹம்மது பின் துக்ளக்கின் ஆரம்ப ஆட்சி காலத்தில், பாரீசக முகலாயர்கள் பஞ்சாப் மீது படை எடுத்து, தில்லி வரை முன்னேற, தில்லி அரசன், அவர்களிடம் பெரும் செல்வம் கொடுத்து சமதானமாகி போனான். இப்போது பெங்காலை பார்ப்போம். முஹம்மது பின் துக்ளக் ஆட்சி காலத்திற்கு முன், பெங்கால் தில்லிக்கு கட்டுப்பட்டும், பின்னர் திமிறியும், கடைசியில் அடங்கியது. 

முஹம்மது பின் துக்ளக் ஆட்சி காலத்தில், ஜியாஸ் உதின் பகதூர் என்பவனால் பெங்கால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. பெங்காலுக்கு அரச பிரதிநிதியாக போனவன், தானே அரசனாக முயன்றான். தன்னை பகதூர் ஷா என்று அழைத்துக் கொண்டான், தன் பெயரில் நாணயங்கள் வெளியிட தொடங்கினான்., இரண்டு வருடம் கழித்து தன்னை சுதந்திர அரசன் என்று அறிவித்தான். 1333 வருடம் பெங்காலுக்கு என்று தன் பேரில் நாணயங்களை வெளியிட்டு விட்டு, பெங்கால் மீது துக்ளக் பாய்ந்தான். அவனை உயிருடன் பிடித்து தோல் உரித்து கொன்றான். அவன் தோலை வைக்கோல் வைத்து பாடம் செய்து, அவன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளுக்கு அனுப்பி, ஆளுநர்களுக்கு எச்சரிக்கை செய்தான்.” 

ஆக போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் குஜராத் பற்றிய தனது பதிவுகளில் சிறிது பிழை செய்தார். அதாவது துக்ளக் கண்டிப்பாக குஜராத் போனான், ஆனால் 1347ல் தான் சென்றான். முதலில் செய்தது, தக்கானை வீழ்த்தியது. 

இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் தரவுகள் படி, துவார சமுத்திர, மலபார், அனுகோண்டி, வாரங்கால், எல்லாம் தில்லியின் ஆளுகைக்கு உட்பட்டன. குஜ்ராத்தையும் அவன் விட வில்லை. இப்போது போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ் தரவை திருத்தி படித்தால், தக்காணத்தை அடித்து விட்டு, அனுகொண்டி (விஜய நகரம் அப்போது அமைக்க பட வில்லை) நோக்கி போய் அதையும் சீரழித்து விட்டு, குஜராத்தையும் அவன் அடித்தான். முகமது பின் துக்ளக்கின் வரலாறு இப்படித்தான் இருந்திருக்கும்.

அவனை பற்றிய மிதமிஞ்சி கதைகள் சொல்லபட்டாலும், அவனை பற்றிய விமர்சிக்கும் எழுத்தாளர்கள் கூட ஒத்து கொள்ளும் விஷயம் உண்டு. 

இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் தரவுகள் படி, அவன் கலைகள் விசயத்தில் தாரளமாக நடந்து கொண்டான். மருத்துவமனைகள் கட்டினான். விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் தான சத்திரங்கள் அமைத்தான். அவன் காலத்தில் அவன் தான் மிக சிறந்த முகலாய இளவசரன். அவன் வைத்தியம், தர்க்கம், வானியல், கணிதம் போன்றவற்றில் புலமை பெற்று இருந்தான். 

கிரீஸ் தத்துவங்கள் மற்றும் சுருக்க கோட்பாடு (சுருக்க கோட்பாடு என்பது அறிவியல் ரீதியாக கோட்பாடுகள் சொல்ல பட்டாலும், அதை நிருபிக்க இயலாது) பற்றிய அறிவையும் பெற்று இருந்தான். இஸ்லாத்தை மிக கடுமையாக பின்பற்றினான் ஆனால் இத்தகைய வியக்கத்தக்க குணங்கள் அவன் பெற்று இருந்தாலும், மக்கள் மீது அவன் கருணை இல்லாமல் இருந்தான். அவன் தண்டனைகள் கொடூரமாக மட்டும் அல்ல, அநியாயமாகவும் இருந்தன. அவன் சிறிதளவும் தயக்கம் இன்றி, மனிதர்கள் மீது வன்முறை நிகழ்த்தி, அதில் ஒரு இன்பம் பெற்று, மேலும் பல துன்பங்களை மனிதர்களுக்கு அளித்தான். எல்லா வாரத்திலும் யாராவது ஒருவருக்கு மரண தண்டை அளித்து கொண்டு இருந்தான், தண்டனை பெற்றவர்கள் மத குரு மார்களாகவும், அல்லது அவனது செயலாளராகவும் இருக்கலாம்.

துக்ளக் தனது விருப்பத்திற்கு எதிராக சிறிதளவு எதிர்ப்பு தென் பட்டாலும், கோபத்தின் உச்சிக்கு சென்று விடுவதும், அதன் தொடர்ச்சியாக பைத்திய கார நிலைக்கு அடைந்து முரட்டு சுபாவத்தை வெளிப்படுதுதல் அவனது இயல்பாக இருந்தது. தொலை நோக்கு திட்டங்கள் பற்றி செலவு செய்தாலும், அது சமசீர் அற்ற அவன் பார்வையால் பாழானது. ஒரே நாளில் ஐந்து லட்சம் வாரகன்கள் செலவு செய்ய பட்டது. தன்னை எதிர்த்த முகலாய மன்னர்களை, தன் படை கொண்டு எதிர்ப்பதை விட்டு விட்டு, பணம் கொடுத்து சமாளித்தான். அதன் பிறகு பெர்சிய மீது படை எடுக்க மிகப்பெரிய படையை உருவாக்கினான். இஸ்லாமிய எழுத்தாளர் பிரிஷ்டாஹ் கூற்றின் படி 370,000 வீரர்கள் கொண்ட படை. ஆனால் சரி வர சம்பளம் தர படாதால், அந்த படை கலைந்து பொய், கொள்ளை அடித்தது. சீனாவை வெல்ல 100,000 கொண்ட படை அனுப்ப பட்டது. ஆனால் முக்கால் படை ஹிமாலயத்தில் பரிதாபமாக அழிந்து போனது, தப்பி பிழைத்து வந்த வீரர்களை, கோபம் கொண்டு துக்ளக் கொன்றான். 

அவன் தேய்ந்து வரும் தன் நாட்டின் நாணய மதிப்பை நிலை நிறுத்த, தங்கத்திற்கு பதில் செம்பு நாணயங்களை வெளியிட, அது எதிர்மறையாக அவனின் வர்த்தகத்தை பாழாக்கியது. கஜானாவை நிரப்ப தாங்க முடியாத வரி சுமை விவசாயிகள் மேல் ஏற்றபட்டது, அது விவசாயத்தை அழித்தது. நிலத்தை விட்டு விட்டு, மக்கள் கொள்ளையடிக்க தொடங்கினர், விவசாய நிலத்தில் வேலை செய்ய ஆள் இல்லாமல் போனது. மிகுந்த பட்டினி மற்றும் துன்பத்தில் இருந்த மக்கள் எல்லாவற்றையும் கொள்ளை அடிக்க தொடங்கினர். அவர்களை பூண்டோடு துக்ளக் அழித்தார். ஒழுங்கற்ற வரி முறைக்கு மக்கள் அடிபணிய மறுத்தார்கள். சினமுற்ற துக்ளக் தனது படைகளை வட்ட வடிவில் அனுப்பி, அந்த மக்கள் வாழும் இடங்களை சூழ்ந்து கொண்டு, மக்களை வேட்டையாடி கொன்றான். 

இந்த கொடூரத்தை பொழுதுபோக்கு என்ற மாதிரி மாதிரி திரும்ப திரும்ப செய்தான். இதன் பகுதியாக கானுஜ் (#Kannauj#- இன்றைய உத்திர பிரதேசத்தில் இது Kanyakubja என்று அழைக்கப்படுகிறது ) என்ற ஹிந்து மக்கள் உள்ள நகரத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். இந்த உச்ச கட்ட படுகொலைகள், ஹிந்துக்கள் மீதான பயங்கரத்தின் எல்லையை தாண்டியது. தேவகிரியில் இருந்து திரும்பும் போது, அவன் ஒரு பல்லை இழந்தான். அதை புதைக்க ஒரு அற்புதமான கல்லறையை கட்டினான். அது இன்றும் பீகாரில் இருக்கிறது.

எல்லாவற்றையும் விட டெல்லி குடி மக்களை அவன் துன்புறுத்திய விதம் தான் இருப்பதிலே அவனுடைய மனிதாபிமானம் அற்ற செயல்களின் உச்சத்தை அடைந்தது. தேவகிரி கோட்டையை தௌலாதபாத் என்று பெயர் மாற்றம் செய்து, தனது தலைநகரை டெல்லியில் இருந்து அங்கே மாற்றினான். அது டெல்லியில் இருந்து 600 மைல் தொலைவில் இருந்தது.எல்லா டெல்லி வாசிகளும், தேவகிரி நோக்கி பயணிக்க உத்தரவு இடப்பட்டது, பயணத்தின் வழியில் உள்ள சாலைகளில், வளர்ந்த மரங்களை நட உத்தரவு இடப்பட்டது, மிரட்டலுக்கு பயந்து போய், அந்த துரதிருஷ்டவசமான மக்கள் நகர, பாதி வழியிலே ஆயிரக்கணக்கான பெண்கள்,குழந்தைகள், மற்றும் வயதான நபர்கள் இறந்தனர். 

இது திகில் காட்சிகளை நேரடி சாட்சியாக இருந்தது பார்த்த இபின் படுடா, அதை இப்படி விளக்கி உள்ளார்

“சுல்தான் டெல்லியில் உள்ள அனைத்து மக்களில் வெளியேற உத்தரவிட்டார், யாரவது சிலர் தாமதம் செய்தாலோ அல்லது வசிப்பிடத்தில் காணப்பட்டலோ அல்லது தெருக்களில் காணப்பட்டலோ கடுமையான தண்டனை பெற்றனர். எல்லாரும் பயந்து கிளம்பினர். ஆனால் துகள்கின் ஊழியர்கள் ஒரு படுக்கையில் கிடந்த குருட்டு மனிததனை கண்டுபிடித்தனர். அவரை தேவகிரி நோக்கி அனுப்ப சொன்னான். அந்த மனிதரின் கால்களை, கற்களை எதிரியின் மீது எரியும் ஒருவகை இயந்திரத்தின் பின் கட்டி, பத்து நாட்கள் தொலைவில் உள்ள தேவகிரி நோக்கி இழுத்து போனார்கள். பாதி வழியில் அந்த மனிதரின் கால் மூட்டு மட்டும் பிய்ந்து வந்து விட, அந்த கால்கள் மட்டும் தேவகிரியை அடைந்தது. அந்த மனிதர் தேவகிரியில் எந்த இடத்தில் வசிக்க வேண்டுமோ அங்கே அந்த கால்கள் எறியப்பட்டன. நான் தில்லிக்குள் நுழைந்த போது அது கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல் இருந்தது”

அவனின் மிக பெரிய சர்வாதிகார குணத்திற்கு சான்றாக, அவன் மீண்டும் மக்களை தில்லிக்கு மாறி போக சொன்ன விசயத்தை கொள்ளலாம். தலைநகர் மீண்டும் தில்லியானது. மக்கள் மீண்டும் முயற்சி செய்து திரும்பினர், ஆனால் குறைந்த அளவே மக்கள் டெல்லியை அடைய முடிந்தது. 

இபின் படுடா தரவுகள் படி, தனது அரண்மனையின் மாடத்தில் இருந்து, சலனமற்ற முகத்துடன், காலியாக கிடக்கும் நகரத்தை பார்த்து துக்ளக் சொல்கிறார் ”இப்போது தான் என் இதயம் நிம்மதியாகவும், அமைதியாகவும் உள்ளது” 

இபின் படுடா துக்ளக்கின் அரசவையில் உறுப்பினராக இருந்தார், அதனால் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அவனை பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார். அதை பின்வருமாறு சொல்கிறார் 

“முஹம்மது மற்ற ஆண்களை விட கொடையளிக்கின்றார். அதே நேரத்தில் ரத்தம் சிந்தப்படுவதையும் நேசிக்கிறார். அவர் அரண்மனை வாசலில் எப்போதும், பரிசு பெற்று பக்கிரிகள் பணக்கார் ஆக மாறுவதையும், அல்லது யாரவது ஒருவர் மரண தண்டனை பெறுவதையும் காணலாம். அவருடைய பெருந்தன்மை, வீரம், ஆகிய பண்புகளை வைத்தும், குற்றவாளிகளிடம் கொடுமையாக நடக்கும் வன்முறை குணங்களை வைத்தும், மக்கள் மத்தியில் அவர் பிரபலம் பெற்றுள்ளார். இதை எல்லாம் தவிர்த்து, அவர் மத சடங்குகள் செய்யும் போது, அமைதியான மனிதராகவும், எல்லாரையும் போல் சாதாரண மனிதராக அரசன் என்ற கர்வம் இல்லாமல் நடந்து கொள்கிறார். தீவிரமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார். தண்டனை செலுத்தும் அதிகாரத்தில் தாரளமாக நடந்து கொள்கிறார். மிகவும் அரிதாகதான், அவரின் அரண்மனை வாசல், தண்டிக்கபட்டவரின் உடல் இல்லாமல் காட்சி அளிக்கும். பல பேர்கள் கொல்லபடுவதையும், அவர்கள் உடல்கள் அங்கேயே கிடப்பதையும் அடிக்கடி பார்த்து இருக்கின்றேன் ஒரு நாள் நான் அவரது அரண்மனைக்கு சென்ற போது, என் குதிரை தடுமாறியது, என்னவென்று பார்த்தால், எனக்கு முன்பாக தரையில் ஒரு வெள்ளை குவியல் இருந்தது, அதை பற்றி என் கூட பயணம் செய்தவரிடம் விசாரித்த போது, அது ஒரு மனிதனின் உடற்பகுதி என்றும், ஒன்று அல்லது மூன்று துண்டுகளாக வெட்டி வைத்து இருக்கிறார்கள் என்றும் சொன்னார். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நபர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அவர்களின் கைகள், கழுத்து, கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு கட்டி இழுத்து வரப்படுகின்றனர். அதில் சில பேர் கொல்லப்பட்டனர், சிலர் சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது நன்கு அடிக்கபட்டனர்”

இந்த மாதிரி தொண்டுகள், தாராள குணம், தீவர மத நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன், பிற மனிதர்களின் உயிரை எடுக்கும் ரத்த வெறி கொண்டு இருந்தான். மிக விசித்திரமான படைப்பாக இருந்தான். ஹிந்து மத நம்பிக்கைகளை கடுமையாக வெறுத்தான். அவனை கிட்டத்தட்ட ஏதாவது ஒரு மனித சக்திக்கு அப்பாற்பட்ட, அரக்கத்தனமான, அதே நேரத்தில் ஒரு புனிதமாக கொள்ளப்பட வேண்டிய இதயம், அல்லது ஒரு துறவி என்று, எல்லாம் கலந்த ஒரு பிசாசாக தான் கணக்கில் கொள்ள வேண்டும். அவனது இறப்புக்கு பிறகு, பல நூற்றாண்டுகள் கடந்தும் அவனை பற்றிய கதைகளை வைத்து தான், அவனை பற்றிய ஒரு உருவாக்கத்தை நம்மால் செய்ய முடியும். அவனுடைய பெயர் எப்போது எல்லாம் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடபடுகிறதோ, அதில் சில அசாதாரண கதைகள் எப்போதும் இணைக்கப்பட்டு இருக்கும்.

எனவே போர்த்துகீசிய பெர்னோ நுனுஸ், தரவுகள் சரியாக இருந்தாலும், ஒரு நூற்றாண்டாடிற்கு முற்பட்டதாக அவரது ஆரம்ப வாக்கியம் இருந்தது, அவருடைய “தோகோ மமத்” என்ற அரசன், முகமது பின் துக்ளக் என்ற அரசனாக தான் இருக்க முடியும், வேறு யாரும் இருக்க முடியாது. அப்படித்தான் இனி மேல் கருதப்பட்ட வேண்டும். 

எனக்கும் ஈசனை பற்றி அறிதல் நிகழ்ந்தது ஒரு சிவராத்திரி அன்று தான்

எல்லாருக்கும் நிகழ்வதை போல் எனக்கும் ஈசனை பற்றி அறிதல் நிகழ்ந்தது ஒரு சிவாராத்திரி அன்று தான். அன்று புரிந்த விஷயம் என்னுள் பிடிபட பல வருடம் ஆனது வேறு கதை. கோவையில் உள்ள பேரூர் பட்டிஸ்வரர் கோவிலை அறிந்தது தான் , கல்லூரி காலத்தில் நான் செய்த ஒரே நல்ல விஷயம். உக்கடத்தில் இருந்து கோவைப்புதூருக்கு ஒரு குறுக்கு வழியில் போலாம் என்று சொன்னதால், குறுக்கு வழி என்று அன்று தேடி போனது, என் வாழ்க்கையின் மிக பெரிய வழியை உணர வைத்த பேரூர் கோவிலுக்கு கூட்டி கொண்டு போனது.
கூட்டம் கலைந்த மத்திய நேரம் என்பது தான் என் நினைவு. வெயிலுக்கு சிறிது நேரம் இளைப்பாறலாம் என்ற எண்ணம், ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட கோவில் என்பதால் அறியும் ஆவல். ஆனால் என் அறிவுக்கு அறியவே முடியாத ஒருவனின் ஆலயம் அது என்று அப்போது என்னால் அறிய முடிய வில்லை. நாத்திக கருத்துகள் அதிகம் என் நினைவை நிறைத்து இருந்த பருவம். ஆனால் சிறு வயதில் இருந்த அம்மாவால் அதிகம் முறை திருவண்ணாமலைக்கு அழைத்து செல்லப்பட்டதால் , ஈசன் மீது ஒரு பற்று இருந்தது. அது மட்டும் அன்றி தெய்வம் என்று எனக்கு அறிமுகபடுத்த எல்லா தெய்வத்திலும் , ஈசன் மட்டும் தனியாக இருந்தான். இவன் கட்டுப்பாடு அற்றவன், எந்த நியதியும் அவனுக்கு இல்லை, உன்னை அறிந்தால் அவனை அறியலாம் என்று சொல்ல பட்டு இருந்தது. மேலும் காமத்தை கருவறுத்த கடவுள் என்று காட்டப்பட்டு இருந்தார். காமம் ்கலைத்தல் என்பதே வெறும் கனவாக தான் இருக்க முடியும் என்ற கருத்துகள் நான் கொண்டு இருந்த விடலை காலம் அது.

 எப்போது கோவில் போனாலும் விநாயகரை வணங்கி விட்டு ஈசன் நோக்கி போவது வழக்கம். வெளியே சிறு கூட்டம் இருந்தது, கருவறை உள்ளே போனால், பொன்னேர் மேனியன் பொழிந்து கொண்டு இருந்தான். கல்லூரி மாணவ பருவத்தில் மங்கையின் அழகை கண்டு மயங்கி தவித்து பழகிய என் மனதிற்கு , அன்று தான் மற்றும் ஒரு அழகு ஒன்று அவனியில் உள்ளது என்றுஅறிவிக்கப்பட்டது. அழகு என்ற வார்த்தையே அதிர்ந்து போய் பார்க்கும் அளவில் , ஆதி யோகி அமர்ந்து இருந்தான். அன்று ஏன் அழுதேன் என்று இன்று வரை நினைவு இல்லை. கண் மூடி கண்கள் குளமாகி கரைந்து போனது . கண் திறந்த ஈசனை பார்த்து விட்டு திரும்பிய போது, எதிரே ஒரு அழகிய மங்கை ஒருத்தி என்னை பார்த்து கொண்டு இருந்தாள். ஈசன் அந்த நிமிடமே என்னுள் இருந்து மறைந்தான்.

ஏன் அந்த பெண் என்னை பார்த்தாள் என்றே என்பு த்தி யோசித்து நின்றது. கருவறை முன் கண்ணிற் வந்தால் . கன்னியர் நம் பால் கவரப்படுவர் என்று என் கள்ள மனம் கற்பித்தது. ஒரு சுற்று சும்மா சுற்றி விட்டு, மீண்டும் கருவறை போனேன், கண்ணிற் வரும் கன்னியர் என் பால் கவரபடுவார் என்பதற்காக.  கண்ணிற் வரும் என்று நின்றால் , கண்ணிரும் வர வில்லை, கடவுளும் வர வில்லை , போன முறை பார்த்த அந்த கன்னி தான் கண்ணுக்குள் வந்தாள், கடவுள் கலைந்து போனார். கருவறைக்குள் வருபவரை வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு, வெளியே வந்தேன்.

எங்கே அந்த பெண் போனாள் என்று கேள்வியுடன் கோவில் பிரகாரம் சுற்றி தேடி வந்தால் , “இந்த கோவில் உள்ளே இருப்பது எல்லாம் , நாம் அறிந்த உயிர் வடிவங்கள், ஆனால் இதற்கு எதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளே ஒன்று இருக்கிறது, அது தான் லிங்கம்” என்று நடராஜர் சன்னிதியில் யாரோ ஒருவர் யாருக்கோ சத்தமாக சொல்லி கொண்டு இருந்தார். அந்த நிமிடம் தான் மனம் திரும்பியது என இன்று வரை நம்புகின்றேன். சொன்னவர் பற்றிய அறிய ஆவல் வர வில்லை, சொல்லபட்டதை பற்றி அறிய ஆவல் வந்தது.

இந்த முறை ஒவ்வொன்றாக நின்று பார்த்து கொண்டு போனேன், சத்தமாக கேட்டது சத்தியம் தான் என்று மீண்டும் கருவறையில் காலடி வைத்து போது புரிந்தது. எதற்கும் சம்பந்தமே இல்லாமல் கருவறையில் லிங்கம் மட்டுமே. கண் இல்லை, காது இல்லை, கால் இல்லை, கை இல்லை, வாய் இல்லை. வியப்பும் வினாவும் உள்ளே விரவி, விடையாக விழி நீர் வந்தது. அது ஒரு ஆனந்த தருணம். அறிவிற்கு அப்பாற்பட்ட ஈசனை அறிந்து கொள்ளும் முதல் அரிச்சுவடி அங்கே தான் அந்த ஆலயத்தில் தான் எனக்கு அருளப்பட்டது.
கூட்டம் மெல்ல வர ஈசனை சுமந்து கொண்டு கோவில் விட்டு வெளியே வந்தேன். என் பைக் அருகே உள்ள கடையில் அந்த பெண் அவர் தந்தையுடன் நின்று கொண்டு இருந்தார். அட இந்த பெண்ணா என்று மந்தியாகி மீண்டும் மனம் துள்ளியது. ஓர விழி பார்வை பார்த்து அவர் பரவசப்படுத்தினார். கோவில் படி தாண்டியதும் இவ்வாறு பரமனை மறந்து போதல் அடிக்கடி நிகழ்ந்தது. வெளியே போனால் ஈசன் என்னை விடுத்து வெளியேறுகின்றான் என்று அறிந்து கொண்டு, கோவில் மூடும் வரை காத்து இருந்து வெளியேறி போனது இன்னும் நினைவில் இருக்கிறது.

கல்லூரியில் செய்த சிறு பிள்ளைத்தனம் கல்லூரி முடியும் வரை நிற்கவே இல்லை. இன்று யோசித்தாலும் சிரிப்பாக இருக்கிறது.
அது ஒரு கடுமையான போராட்டம், காயம் பட்டும் காயப்படுத்தியும் காலம் கடந்தது. பேசும் முன்னும், செய்த செயல் முன்னும், நின்று யோசிக்க தோன்ற வில்லை, ஆனால் ஈசன் முன் நின்ற போது யோசிக்க வைத்தது, குற்றமற குருபரன் முன் நிற்க்கும் போது , கள்ள புத்தி குறுகுறுதத்து, கூனி குறுகி வெளி ஏறியது.

என்னிடம் இருந்த கலையாத காமத்தையும் , காதலையும் ஈசன் கழுவில் ஏற்றினான்.
பழுது பட்ட இயந்திரத்தை சரி செய்ய , அடிக்கடி தொழிற்கூடத்திற்கு எடுத்து செல்வதை போல, மாசுபட்ட என் மனதை மீளாக்கம் செய்ய அடிக்கடி கோவில் நோக்கி போனேன்.
அதற்கு பல வருடம் கழித்து பலன் கிடைத்தது, ஆனால் அதற்கு முதல் படியை கொடுத்தது பட்டிஸ்வரர் ஆலயமும் அந்த சிவராத்திரி நாளும் தான்.
அனைவர்க்கும் இனிய மகா சிவாராத்திரி வாழ்த்துக்கள்

Saturday, February 18, 2017

போய் வாருங்கள் சசிகலா

போய் வாருங்கள் சசி. உங்கள் எதிரி யார் என்று உங்களுக்குள் வினவி கொள்ளுங்கள், உங்கள் விழி "பிம்பத்தில்" நீங்களே விடையாகி தெரிவீர்கள்.
சிறு நரி ஒரு போதும் சிங்கமாகாது என்பதை சிறை இனி சொல்லும்.
சதி செய்தார் சசி என சரித்தரம் இகலும்.
எம்ஜிரையும் ஜெயா வையும் வரலாறு "வாழ்ந்தவர்கள்" என்று சொல்லும்.
உங்களை "வீழ்ந்தவர்" என்று சொல்லும்.

விண்வெளியில் மீண்டும் ஒரு வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது

"Isro's PSLV successfully places a record 104 satellites into polar sun synchronous orbit"
விண்வெளியில் மீண்டும் ஒரு வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. அற்புதம் , ஆனால் இது இந்தியாவிற்கு ஆச்சரியத்தக்க விஷயம் அல்ல. அண்டத்தை பற்றிய இந்தியாவின் அறிவானது இந்தியாவின் ஆன்மாவில் இருந்து வந்து இருக்கிறது. அறிவியலும் ஆன்மிகமும் இந்த தேசத்திற்கு புதிது அல்ல. அதை பற்றிய கதைகள் பாரத தேசத்தின் பாதை முழுதும் பயணித்து வந்து இருக்கிறது.
மேலை நாடுகளின் செயற்கை கோள்கள் சென்று பார்க்கும் முன்னரே, இந்தியா தன் ஆன்மிக அறிவால் அதை பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே அறிந்து வைத்து இருந்தது.
இஸ்ரோவின் ராக்கெட் சுமந்து சென்றது செயற்கை கோள்களை அல்ல, அது இந்தியர்களின் செயற்திறன் பற்றிய நம்பிக்கையை.
கீழை தேசம் என்று ஒரு காலத்தில் மற்ற மேலை தேசத்தால் பேசப்பட்ட தேசம், மேலை தேசத்தின் செயற்கை கோள்களை மேல் எடுத்து கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.
இது யாருக்கும் சளைத்த தேசம் அல்ல, இது சாதனைகள் புரியும் தேசம்.
இந்தியாவின் இஸ்ரோ ஒரு சரித்தரத்தை செதுக்கி இருக்கிறது. இன்னும் செதுக்கும்....
"Isro's PSLV successfully places a record 104 satellites into polar sun synchronous orbit. Satellites include India's earth observation satellite Cartosat-2series and 101 foreign nano satellites from the US, Israel, UAE, Netherlands, Kazakhstan and Switzerland."
Isro's workhorse PSLV will carry a record 104 satellites in a single mission today from the space centre at Sriharikota Andhra Pradesh.
TIMESOFINDIA.INDIATIMES.COM

புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன், தந்தி டிவி- பாண்டே.

புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன், தந்தி டிவி- பாண்டே. இவர்கள் எல்லாருமே மிக தெளிவாக ஒரு அரசியல் சார்பு நிலையில் இருந்து பேசுபவர்கள். ஆனால் பாண்டே மட்டும் அதிக அளவில் விமர்சனம் செய்யபடுகிறார். நன்றாக கவனியுங்கள் , திராவிட கூட்டமும், பகுத்தறிவு கூட்டமும் , சிறுபான்மையில் பெரும்பான்மை கூட்டமும், பாண்டேவை தான் அதிக அளவில் குறி வைத்து விமர்சனம் செய்வார்கள். ஏன் என்றால் மற்றவர்கள் இடது சாரி சிந்தனையாளர்கள். மிக தெளிவாக ஹிந்து மதம், அதை ஆதரிப்பவர்கள், அதை ஆதரிக்கும் கட்சியை தான் இவர்கள் விவாதத்தில் கடுமையாக தாக்குவார்கள். பதில் சொன்னாலும் விடாமல் பல குறுக்கு கேள்விகளை கேட்பார்கள். ஆனால் திராவிட கூட்டதையும் , பகுத்தறிவு கூட்டத்தையும் சிறுபான்மை கூட்டத்தையும் , விவாதத்தில் ஒரு போதும் எதிர் கேள்வி கேக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு பதில் சொன்னால் உடனே ஏற்று கொள்வார்கள், குறுக்கு கேள்விகள் வராது.
ஆனால் முதன் முதலாக பாண்டே தான் திராவிட கூட்டதையும் , பகுத்தறிவு கூட்டத்தையும் சிறுபான்மை கூட்டத்தையும் எதிர் கேள்வி கேட்டார். பதில் சொன்னாலும் விடாமல் குறுக்கு கேள்விகள் கேட்டார். ஹிந்து கடவுள்களை விவாத்தில் மட்டம் தட்டும் போது கடுமையாக அதை எதிர்த்தார். மற்ற மத கடவுள்களை விமர்சிப்பதையும் அவர் எதிர்த்தார் என்பதும் கவனிக்க வேண்டியது. அது இவர்களால் ஜீரணிக்க முடிய வில்லை. ஏன் என்றால் இடது சாரி தத்துவத்திற்கு எதிராக எழும் குரலை ஊடகம் இது வரை அனுமதித்து இல்லை. ஜனநாயகத்தில் இடது சாரி குரலும், வலது சாரி குரலும் ஒலிக்க வேண்டும். அது தான் சம உரிமை. பாண்டே, தான் கடவுளை நம்புவன் என்பதை மறுக்காமல் ஒத்து கொண்டார்.
சசிகலாவை ஆதரிக்கும் மனியனிடம் அவர் கேட்ட எதிர் கேள்வி அளவிற்கு கூட வேறு எந்த புதிய தலைமுறை- கார்த்திகை செல்வன், நியூஸ் 7 – நெல்சன் சேவியர் , செந்தில், சத்யம் டிவி – அரவிந்தாக்க்ஷன், நியூஸ் 18- குணசேகரன் கேக்க வில்லை. மாறாக ஆளநர் ஏன் தாமதப்படுத்துகிறார் என்ற குறுக்கு கேள்வியைத்தான் அவர்கள் விடாமல் திருப்பி திருப்பி கேட்டு கொண்டு இருநதார்கள். மக்கள் சசிகலாவை விரும்ப வில்லை என்று தெளிவாக தெரிந்து இருந்தும், அதை பற்றி அழுத்தி பேச யாரும் தயாரக இல்லை.
இடது சாரி கூட்டம் எப்போதும் தன் கொள்கையை ஒட்டி தான் மக்கள் எண்ணத்தை திசை திருப்ப முயலும். அதை தான் இப்போதும் இந்த இடதுசாரி ஊடக குழு சசிகலா விஷ்யத்தில் செய்து கொண்டு இருக்கிறது.
LikeShow more reactions
Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...