ஒரு சாதாராண கவுன்சிலரின் மகன், மகள், மருமகன், தம்பி, பெரியப்பா , சித்தப்பா என்று ஒரு குடும்பமே , கொள்ளை அடிப்பதும், அதிகாரதனமாக நடந்து கொள்வதும், அரச வாழ்க்கை வாழ்வதும் பார்த்து பழகி போன நமக்கு (நான் நேரிடையாக பார்த்து இருக்கின்றேன்) , தாய் தேசத்தின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் மோடியின் குடும்பம் இன்னும் சாதாரண நிலைமையில் இருப்பது நம்மால் கவனத்தில் கொள்ள முடியவில்லை. அரசு, தனியார், பல பன்னாட்டு அலுவலுகத்தில் கூட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருக்கும் நபர்களுக்கு எத்தனை சலுகைகள் கிடைக்கும் என்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம்.
ஆனால் இந்த மனிதரின் குடும்பம் , இன்னும் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மேற் கொண்டு உள்ளது. சோனியா காந்தி, தொடங்கி கருணாநிதி, ஜெயா, ராமதாஸ் ..வீரமணி முதல் வரை , இவர்கள் உறவுகள் ராஜ வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் மீது ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் குற்ற சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் மோடியை குறை கூறி கொண்டு இருந்த எதிர்கட்சிகள் மற்றும் ஊடகம் கூட , அவரின் உறவுகள் மீது இத்தகைய குற்ற சாட்டை இது வரை வைக்க முடிய வில்லை.
இத்தகைய மனிதரை தான் ஒரு கூட்டம் எப்போதும் இழிவுபடுத்தி கொண்டு இருக்கிறது. எனக்கு தெரிந்து எந்த ஊழல் வழக்கும் அவர் மீது இல்லை.
இத்தகைய மனிதரை தான் ஒரு கூட்டம் எப்போதும் இழிவுபடுத்தி கொண்டு இருக்கிறது. எனக்கு தெரிந்து எந்த ஊழல் வழக்கும் அவர் மீது இல்லை.
நிறைகள் அதிகம் உள்ள மனிதரை நிராகரிப்பது நேர்மையான செயல் அன்று. மோடி அப்படி பட்ட மனிதரில் ஒருவர். இத்தகைய மனிதரே நிர்வாகத்தில் இருப்பது நம் தாய் தேசத்திற்கு நிலைத்தன்மையை தரும் , அதன் மக்களுக்கு நிம்மதியை அளிக்கும்.