Sunday, January 29, 2017

இஸ்லாமிய பெண்மணிக்கு , ப்ரிகிட்டே கப்ரியல் என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் அளித்த மறுமொழி.

பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் நல்லவர்கள் தானே என்று கேட்ட ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு , ப்ரிகிட்டே கப்ரியல் என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர் அளித்த மறுமொழி.
ஒளிப்பதிவின் 1.22 வினாடிகளில் இருந்து 3.25 வினாடிகளில் அவர் அளித்த மறு மொழியை மொழி பெயர்த்து உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் மீள் பதிவு செய்யுங்கள்.
‘”1.2 பில்லியன் இஸ்லாமியர்கள் இந்த உலகத்தில் உள்ளனர். அவர்கள் எல்லாம் மோசமானவர்கள் இல்லை என்பதை நான் ஒத்து கொள்கின்றேன் . பெரும்பாலான மக்கள் அமைதியை தான் விரும்புகின்றனர். உலகத்தில் உள்ள அணைத்து உளவுத்துறைகளின் படி அடிபடைவதிகள் 15% to 25% தான் உள்ளார்கள் . மீதி 75% மக்கள் நல்லவர்கள் என்பது தான் பொருள்.
அந்த 15% to 25% % மக்களை நீங்கள் கணக்கில் எடுத்தால், கிட்டத்தட்ட 118 ல் இருந்து , 300 மில்லியன் மக்கள், மேற்கத்திய மனித குலத்தை அழிப்பதற்காக ,தங்களை முழு நேரம் அர்ப்பணித்து கொண்டு உள்ளார்கள். அது அமரிக்காவை விட பெரிய எண்ணிக்கை. அந்த 15% to 25% பற்றி நாங்கள் ஏன் கவலை பட வேண்டும். ஏன் எனில் அவர்கள் மக்களை கொல்கிறார்கள். தலையை வெட்டுகிறார்கள்.
வரலாற்றில் எல்லா நிகழ்வுகளையும் படித்து பார்த்தால், ஜெர்மானியர்களில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். ஆனால் நாஜிக்கள் என்ற கூட்டம் , தன் கொள்கையால் 60 மில்லியன் மக்களை கொன்றனர். 14 மில்லியன் மக்கள் நச்சு கூடாரங்களில் கொல்லப்பட்டனர். 6 மில்லயன் யூதர்கள் கொல்லப்பட்டனர். பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
ரஷ்யாவில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். ஆனால் ரஷ்யர்கள் 20 மில்லியன் மக்களை கொன்றனர். பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
சீனாவில் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். இருந்தாலும் சீனர்களால் 70 மில்லியன் மக்களை கொல்ல முடிந்தது. பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
ஜப்பானை எடுத்து கொண்டால் பெரும்பான்மையானவர்கள் நல்லவர்கள். இரண்டாம் உலக போரில் தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பான் கிட்டத்தட்ட 12 மில்லயன் மக்களை கொன்றது. பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை.
2.3 மில்லியன் அரபு முஸ்லிம்கள் வசிக்கும் அமெரிக்காவில், செப்டம்பர் 11த் தேதி, வெறும் 19 அடிப்படைவாதிகள் அமெரிக்காவை மண்டி இட வைத்தது. உலக வர்த்தக மையத்தை தரை மட்டம் ஆக்கியது, பெண்டகனை தாக்கியது 3000 மக்களை கொன்றது. பெரும்பான்மை நல்லவர்கள் என்று வார்த்தை இங்கே பொருந்த வில்லை”
என்னை பொறுத்தவரை இது ஒரு வகையில் சரியான மறுமொழி . தீவிரவாதிகள் பற்றி பேசும் போது, சம்பந்தமே இல்லாமல் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் நல்லவர்கள் என்று வாதத்தை கொண்டு வந்து தீவிரவாதிகளை மறை முகமாக தப்ப விடுவது பெரும்பான்மை நல்ல முஸ்லிம்கள் தான். அதை அவர்கள் உணர மாட்டார்கள் . ஏன் எனில் உலகத்தின் மற்ற மதங்களை அவர்கள் விமர்சனம் செய்ய அல்லா அவர்களுக்கு அனுமதி அளித்து உள்ளார், ஆனால் இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்ய மற்றவருக்கு அனுமதி இல்லை. அப்படி யாரவது செய்தால் அவர்களை கொன்று விட வேண்டும். நல்ல நியாயம் .
Finally! For years all we hear is that Islam has been 'hijacked' and that most Muslims are peac

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...