Monday, August 31, 2015

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம்.
ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்கிறது. இயேசுவை பற்றி இன்னோர் பரிணாமத்தில் சொல்கிறது. புண்ணிய பூமியான பாரத தேசம் , ஆன்மிகத்தின் மையப்புள்ளியாக தொன்று தொட்டு எப்போதும் இருந்து வருகிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

ஐரோப்பாவை சேர்ந்த மக்களுக்கு ஆன்மிக பிச்சை போட்ட அட்சய பாத்திரமாக நமது பாரத தேசம் விளங்கி இருக்கிறது.

ஆண்டவனால் அனுப்பப்பட்ட இறைவனின் பிள்ளைக்கும் இந்த தேசமே ஆன்மிக பள்ளியாக இருந்து, அவதாரங்களுக்கு ஆண்டவன் யார் என்று அறிவித்து இருக்கிறது.

ஆங்கிலத்தில் கவர் ஸ்டோரி ஆக சில வலைதளங்களில் இதை படித்து உள்ளேன். தாய் தமிழில் இன்று தான்  விரிவாக இப்போது தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

புத்தருக்கும் , யேசுவுக்கும் , கிருஷ்ணருக்கும் உள்ள பல ஒற்றுமைகளை இந்த நூல் பைபிள் கதைகள் வைத்தே வெளிபடுத்துகிறது.

யாராக இருந்தாலும், இயேசுவை சிலுவையில் அறையப்படும் அந்த காட்சிகளை கண்டால் , நம்மை அறியாமல் கண்களில் இருந்து கண்ணிற் வந்து விடும்.

சக மனிதன் கொடூரமாக கொல்லபட்டால் , எந்த இதயமும் கண்ணிற் வடிக்கும். கிறிஸ்தவம் உளவியல் ரீதியாக இதை நன்கு பயன்படுத்தி கொள்கிறது என்று ஒருமுறை நண்பர் சொன்னார்.

கிராமங்களில் இயேசு சிலுவையில் அறையப்படும் காட்சிகளை காட்டி , அந்த மக்கள் மன ரீதியாக இரக்கத்தின் விளிம்பில் இருக்கும்போது, மிக சுலபமாக அந்த மக்களிடம் இயேசுவை விற்று விடுவார்கள் என்று சொன்னார்.

உண்மை தான் , என்ன தான் கிறிஸ்தவ மத மாற்றிகளின் மீது எனக்கு கோபம் இருந்தாலும் , கிறிஸ்துவின் மீது இன்று வரை எனக்கு துவசேம் வராமல் இருக்க , இயேசுவின் சிலுவை காட்சிகள் தான் காரணம் என்று நினைக்கிறேன்.

இந்த புத்தகம் அவரின் உயிர்த்தெழுதல் பற்றி வேறு கதை சொல்கிறது, அதற்கு பைபிள் வார்த்தைகளை கடன் வாங்கி புதிய அர்த்தம் சொல்கிறது. மத்தேயு எழுதிய நற்செய்தி, மாற்கு எழுதிய நற்செய்தி,லூக்கா எழுதிய நற்செய்தி, யோவான் எழுதிய நற்செய்தி போன்ற பைபிளின் நூல்களில் காணப்படும் முரண்பாடுகளை கோடிட்டு காட்டுகிறது.

இது எல்லா மதங்களின் நூல்களில் காணப்படும் பொதுவான விஷயம்தான்.
ஆனால் கிறிஸ்தவத்தின் அடித்தளமான உயிர்த்தெழுதல் பற்றி இருக்கும் முரண்களை நூல் ஆசிரியர் சுட்டி காட்டுவது கிறிஸ்தவத்தின் அடித்தளத்தை அசைக்கும் முயற்சியாக தெரிகிறது.

இயேசு உயிர் தப்பித்து இந்தியா வந்து வாழ்ந்தார் என்பதை புத்த மத நூல்ளில் இருந்து வரலாற்று ஆதாரமாக காட்டுகிறார். உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் விஷயம். இறைவனின் பிள்ளை இந்தியாவில் இருந்தார் என்பது.

இந்த நூல் இயேசுவை எந்த இடத்திலும் மறுக்க வில்லை. மறைக்க வில்லை. உண்மையில் அவரின் அற்புதங்களை ஒத்து கொள்கிறது. ஆனால் இயேசுவின் அற்புதங்கள் , இந்தியாவில் இருந்து பெறப்பட்டது என்றும், அவரின் ஆன்மாவை தொட்ட ஆன்மிகம் , புத்த மதத்தில் இருந்தும், ஹிந்து மதத்தில் இருந்தும் வந்தது என்று சொல்கிறது.

கிறிஸ்தவ மத மாற்றிகள் நம்ப மாட்டார்கள். வேளாங்கன்னியில் அயல்நாட்டு அன்னை காட்சி கொடுத்தது என்றால் கண்ணை மூடி கொண்டு நம்புவார்கள் அதே சமயத்தில் சமயபுரத்திலும், பவானி கூடு துறையிலும் உள்ள எங்கள் அம்மன்கள் அயல்நாட்டை சேர்ந்த ஆங்கிலே அதிகாரிகளுக்கு அற்புதங்களை காட்டியதால், அந்த ஆங்கிலே அதிகாரிகள் நன்றி கடனாக அந்த கோவில்களுக்கு செய்த அறப்பணிகள் வரலாற்று பட்டயமாக இன்றும் பதிந்து உள்ளது என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். இன்று வரை எனக்கு இவர்களின் நம்பிக்கை பற்றி விசித்திரமாக இருக்கிறது.

ஒரு ஹிந்து வேளாங்கன்னியையும், சமயபுரத்தியையும் நம்புவான். எங்கும் நிறைவது இறை என்பதில் பெரு நம்பிக்கை கொண்டவன் அவன். அதனாலே அவன், ஹிந்து மத தெய்வங்களின் அவதார தலங்களை தவிர்த்து , இஸ்லாமியரளும், கிறிஸ்தவர்களாலும் ஆக்கிரமிக்க பட்ட எந்த ஹிந்து கோவிலையும் திரும்ப பெற நினைப்பது இல்லை.

எங்களுக்கு வேளாங்கன்னி கோவில் எதுவாக இருந்தது என்றும், பரங்கி மலை எந்த முனிவரின் வாழ்விடமாக இருந்தது என்றும் தெரியும். மீண்டும் அந்த இடங்களை ஹிந்துக்கள் கேட்காமல் இருக்க காரணம், அந்த இடங்கள் இன்று மற்ற மத நம்பிக்கையாளர்களின் ஆன்மிக இடமாக உள்ளது.

“ஆன்மிகத்தை எந்த ஆண்டவர் சொன்னால் என்ன , கோவில் இருந்த இடத்தில மீண்டும் கோவில் தானே வைத்து உள்ளனர் , நல்லது!! எப்படியோ அந்த இடம் புனிதமாக உள்ளது” என்ற ஆன்மிக அடிப்படையில் தான் ஹிந்துக்கள் கேட்பதில்லை என்பதை மற்ற மதங்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்பதே வேதனையான விஷயம்.

புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான் , நூல் ஆசிரியர் இப்படி சொல்கிறார்,

“சர்சுகள் இயேசுவின் உலக மக்களுக்கான நற்செய்தியை , இயேசுவை பற்றிய நற்ச்செய்தியாக மாற்றி , இயேசுவை ஒரு வியாபார பொருள் ஆக்கியது தான்”
சத்தியமான வரிகள்!!

https://www.facebook.com/photo.php?fbid=799662790099940&set=gm.801675569895546&type=1&theater

 

Sunday, August 23, 2015

அப்துல் கலாம்!!

இந்திய தேசம் மௌனமான அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது. மெல்லிய வலி எல்லோர் உள் மனதினுள் பாய்ந்து இருக்கிறது. இந்தியாவிற்கான வல்லமை வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்டது என்று அயல் நாட்டு அடிமைகள் கூவிய போது, இல்லை உள் நாட்டிலே அதற்கு உரம் இருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தியவர்.

தாய்நாட்டையும் தாய் தமிழையும் உளமார நேசித்தவர். உலகத்தில் இந்தியாவின் இருப்பானது , அதன் இளைய சமுதாயத்தை பொறுத்து அமையும் என்பதை புரிந்து கொண்டு, எண்பது வயதிலும் இருபதை , இந்தியாவை நோக்கி இழுத்து கொண்டு இருந்தவர். 

எப்போதுதாவது பூக்கும் அதிசய மலர்களை போல் இந்த தேசத்தில பூத்தவர். அப்துல் கலாம்கள் அழிவதும் இல்லை, இனி தோன்றுவதும் இல்லை.
அணுவை பிளந்து கொண்டே போக முடியுமே தவிர அழிக்க முடியாது.
அக்னி குஞ்சொன்று, விண்ணுலகை எட்ட தன் சிறகை விரித்தது.

Rest In Peace Sir

யாருடன் யாரை ஒப்பிடுவது?

பெருவாரியான என் தேசத்து மக்கள் கலாமை தங்கள் ஆதர்ச நாயகனாக கருதி கொண்டாடி வருகின்றனர். ஆனால் கலாமை சேர்ந்த சமுதாய மக்கள் சிலர், கலாமிற்கும் தீவிரவாதியான யாகுப்க்கும் சேர்த்து மௌன அஞ்சலி செய்து கொண்டு வருகின்றனர். இதை விட பெரிய அவமரியாதையை கலாமிற்கு யாரும் செய்து விட முடியாது

யாருடன் யாரை ஒப்பிடுவது? மனித நேயம் பேசிய மகாத்மா எங்கே, மரணத்தை மாற்று மதத்தவருக்கு வழங்கிய மரண வியாபாரி எங்கே?
எந்த சமுதாயத்தின் மேல் வன்முறை முத்திரை விழுந்ததோ , அந்த சமுதாயத்தில் இருந்து முத்தாய் எழுந்த அப்துல் கலாமை , கேவலமான யாகுபின் மரணத்துடன் ஒப்பிடு செய்து எழுதி கொண்டு உள்ளீர்கள்.

இந்தியா என்ற இந்த தேசத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே முடிவானது என்பதை ஏற்று கொண்ட எங்கள் மக்கள் வாழும் நேரத்தில் , ஏன் இந்த பிரிவினர் மட்டும் உச்ச நீதிமன்றத்தால் தீவிரவாதி என்ற தீர்ப்பு எழுதப்பட்ட பின்னரும் யாகுப்கிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

ஏன் என்றால் அவர்களுக்கு இறுதி தீர்ப்பு தரும் வல்லமையை அவர்கள் ஆண்டவன் மட்டுமே பெற்று இருக்கிறார். இந்தியாவின் நீதித்துறையை அவர்கள் ஏன் மதிக்க வேண்டும்?. வாழும் தேசத்தை மதிக்க வேண்டும் என்று எங்கேயாவது அவர்கள் புனித புத்தகத்தில் எழுதி வைக்க பட்டதா என்ன?. அவர்கள் மத கொள்கை படி, மாற்று மதத்தினரை கொல்ல வேண்டும், உலகத்தின் பார்வையில் அவர்கள் தீவிரவாதிகள் என்றாலும் , இவர்கள் பார்வையில் அவர்கள் தியாகிகள், நிராபரதிகள்.

இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்கு இந்தியாவில் வாழ வேண்டும். எங்கே அவர்கள் மத சட்டங்கள் ஆட்சி அரியணையில் வீற்று இருக்கிறதோ அங்கே போய் அடைக்கலம் ஆக வேண்டியது தானே. அல்லாவின் கருணையை எதிர்பார்த்து இருந்தவர்கள் , ஏன் குடியரசு மாளிகைக்கு கருணை மனுவை அனுப்பி வைத்து கொண்டு இருந்தீர்கள்?

நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் , நாங்களா இவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்தோம். எவன் குண்டு வைத்தானோ அவனே சொல்லிக் கொண்டான். நாங்கள் இஸ்லாமிற்கு ஆக செய்தோம் என்று. நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்களை புறந்தள்ளி விட்டிர்களா? இல்லை, அவர்களை கொண்டாடி மகிழ்ந்தீர்கள். மத தியாகிகள் என்று மகுடம் சூட்டினீர்கள்.

கோவை குண்டு வெடிப்பின் மூளையாக செயல்பட்ட மதனியாயை , இஸ்லாமிய சமுகம் எவ்வாறு முன்னிலைபடுத்தி கொண்டாடி மகிழ்ந்தது என்பதை நீங்கள் மறந்து இருக்கலாம், நாங்கள் மறக்க வில்லை.

கலாம் இந்தியர் என்ற உணர்வோடு வாழ்ந்தார். மாற்று மத கோவில் என்றாலும் சற்றும் தயங்காமல் , தரிசனம் செய்து விட்டு வந்தார். அல்லாவை ஹிந்துக்கள் ஆலயத்திலும் அடையாளம் காண முடியும் என்பதை உணர்த்தினார். இறைவன் எல்லை அற்றவன், எல்லாம் அற்றவன் , எங்கும் நிறைபவன் என்பதை உணர்ந்த உத்தமர் கலாம்.

யாகுப் , இந்தியாவை எதிர்த்தார்.மாற்று மத மக்கள் கொல்லப்பட போகிறார்கள் என்று தெரிந்த பின்பும், துணிந்தே அந்த துச்ச செயலுக்கு துணை நின்றார். விமர்சனம் வந்த பிறகே , தன்னால் வீழ்ந்தவர்களுக்கு ,வருத்தம் தெரிவித்தார்.

மதத்தை பின் தள்ளி , மக்களையும் , மண்ணையும் நேசித்தவர் மக்கள் ஜனாதிபதி.

மக்களையும், மண்ணையும் புறந்தள்ளி, மதத்தை நேசித்தவன் யாகுப்.
உங்களை தூண்டி விட்டு கொண்டு இருக்கும் நாத்திக நயவஞ்சக கூட்டம் உங்களை நல்வழிப்படுத்தி கொண்டு இருக்கிறது என்று இன்னுமா நம்பி கொண்டு இருக்கீர்கள்?

என் தேசத்து மக்களை காதலித்தவருக்கும், என் தேசத்து மக்களின் கழுத்தை அறுத்தவனக்கும் , ஒன்றாக நீங்கள் வருத்தம் தெரிவித்த போதே, நீங்கள் வாழும் தேசத்தை விட்டு வழி தவறி விட்டிர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

உங்களை கூடிய சீக்கிரம் இந்த தேசம் ஒட்டு மொத்தமாக விலக்க போகிறது என்பதை நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்

சேலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழி!!

சேலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழி மிகுந்த வலியை கொடுக்கிறது. திருநள்ளாரில் இருந்து திருவண்ணாமலை செல்ல எத்தனித்த என்னை, திருநள்ளார் கோவிலில் முடித்த உடன் வீடு தான் செல்ல வேண்டும் என்று கோவிலில் இருந்தவர்கள் சொல்லி விட , தந்தையும் அவ்வாறே செய் என்று சொல்லிவிட , சேலம் வீட்டிற்கு வந்து விட்டு , அன்று இரவே திருவண்ணாமலை நோக்கி கிளம்பினேன்.

வாகனத்தில் செல்ல தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், பேருந்தில் பயணித்தேன். ஊத்தங்கரை வரை சாலைகள் சரியாக தான் உள்ளன. அதற்கு பிறகு அது சாலைகள் இல்லை, சவக்குழிகள். எப்படி தான் மக்கள் இந்த வழியில் பயணத்தை மேற் கொள்கிறார்கள் என்று கவலையாக இருந்தது.
உடம்பும் மொத்தமும் வலி. பெரியவர்கள் தடுமாறி போனார்கள். குழந்தைகள் பேருந்தின் ஒவ்வார் அதிர்விற்கும் அதிர்ந்து அழுதது.

எந்த தனியார் பேருந்தும் அந்த சாலையில் வருவதில்லை. சாலைகள் போடாத அரசாங்கத்தை திட்டுவதா அல்லது எப்படியும் அரசாங்க பேருந்து இந்த வழியில் வரும் என இந்த சாலைகள் ஓரத்தில் காத்து கொண்டு இருக்கும் மக்களின் நம்பிக்கையை பொய் என்று ஆக்கமால், மிகவும் சிரமத்திற்கு இடையில் பேருந்தை இயக்கம் ஓட்டுனரை பாராட்டுவதா என்று புரிய வில்லை.

தட்டு தடுமாறி தவழந்த பேருந்து ,.செங்கத்திற்கு சற்று முன்பாக தொடர முடியாமல் நின்று போனது இரண்டு பனிரெண்டு மணியளவில். நடத்துனர் பின்னாடி வந்த இன்னோர் பேருந்தின் நடத்துனருடன் பேசி எங்களை அதில் ஏற்றி விட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி விட்டு, கொட்டும் மழை, வயல்காடு மாதிரி இடத்தில பேருந்தில் வெளிச்சம் இல்லாமல், நின்று போன பேருந்துடன் என்ன பண்ண போகிறார்கள் என்ற புரியாமல் திருவண்ணாமலை பயணித்தேன்.

இரவு 1.30 மணி அளவில் கோவில் அருகே இறக்கி விட பட்டோம்.
கிரிவலம் முடிந்து இரண்டு நாட்கள் கழிந்த பிறகும், இரவில் கிரிவலம் அதுவும் மழையில் போய் கொண்டு இருக்கிறார்கள். நெஞ்சத்தை கிள்ளியவனின் கோவில் வாசலில் நெடுண்சாடையாக விழுந்து எழுந்தேன்.

விடுதி எடுத்து உறங்கினேன். அடி முடி காண முடியாதவன் எனக்கு அனுப்பிய பரிசிற்கு என் முடியை காணிக்கையாக கொடுத்து வந்தேன்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னை பயணமும் மோசமாக உள்ளது. திண்டிவனம் வருவதற்குள் நாம் திண்டாடி போகின்றோம்.

ஒருமுறை நமது முதலமைச்சர் இந்த வழியில் பயணித்தால் , நமது மக்கள் எவ்வளவு பொறுமைசாலிகள் என்று புரிந்து கொள்வர்.

 பின்பு அவர் மாநிலத்தை நடத்துவதில் திறமைசாலியா என மக்கள் புரிந்து கொள்வார்கள்.

எனக்கு ஒரு சந்தேகம்!!.

எனக்கு ஒரு சந்தேகம்!!. காந்தியை கொன்ற கோட்சே, காந்தியை கொல்லுவதற்கு முன்பே ஆர் ஸ் ஸ் விட்டு வெளியேறி விட்டார். காந்தியை கொல்லும் போது, அவர் எந்த இயக்கத்திலும் இல்லை. ஆனால் கோட்சே ஆ ர் ஸ் ஸ் காரர் , அவர் வெளியேறி விட்டால் என்ன ஆர் ஸ் ஸ் ன் சித்தாந்தம் படி தான் அவர் கொலை செய்தார். ஆ ர் ஸ் சை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள் தொலைக் காட்சி விவாத்தின் போது.

ஒரு வாதத்திற்கு இதை சரி என்ற வைத்து கொண்டால், இதை அப்படியே இஸ்லாமிய தீவீரவாதிகளுக்கு பொறுத்தி பார்த்தால், எதை தடை செய்ய வேண்டும். குண்டு வைப்பவன் நல்ல இஸ்லாமியர் இல்லை. சரி!. ஆனால் அவன் எந்த சித்தாந்தத்தின் படி மாற்று மத மக்களை குண்டு வைத்து கொல்கின்றான். ஜிகாத் என்ற சித்தாந்ததப்படி. அதை சொல்வது அவர்களின் புனித நூல். அப்படி என்றால் இவர்கள் புனித நூலை அல்லவா தடை செய்ய வேண்டும்?

இதை ஒத்து கொள்வார்களா? நடுநிலை பேசும் கூட்டம்.

ஜிகாத் என்றால் "உன் மனதோடு போர் தொடுத்து அதை வென்று எடு" என்று படித்ததாக நினைவு.

ஆக சித்தாந்தம் எவ்வளவு தெளிவாக வரையறுக்கப்பட்டாலும் , அதை சொல்லி தருபவர் மற்றும் அதை புரிந்து கொள்பவரை பொறுத்தே அதன் நடைமுறை செயல்பாடுகள் இருக்கும்.

இந்தியாவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடுக்கு எதிராக ஆர் ஸ் ஸ் ஸ் நிற்பதால் தான் அதை ஒழித்து விட வேண்டும் என்று பேசுகிறார்கள்.
பல கோடி இந்திய இதயங்களில் நிறைந்த அப்துல் கலாமிற்கு பல ஹிந்து இயக்கங்கள் போஸ்டர் அடித்து கண்ணீர் அஞ்சிலி செலுத்தி கொண்டு இருந்த போது, ஒரு தீவிரவாதியின் மரணத்திற்கு கண்ணிற் அஞ்சிலி செலுத்தியது எந்த கூட்டங்கள்?

சிறுபான்மை ஆதரவாக இருக்கும் நடுநிலை ஹிந்துக்கள் கூட உங்கள் செயலால் அச்சம் அடைந்தனர் என்பது நிதர்சமான உண்மை.

எங்களால் உங்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே எங்களுக்கு அறிவிக்க போகிறீர்கள்.......

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் நடந்த கலவரம்

சாதி மற்றும் ஒருமுறை தனது சதுரங்க விளையாட்டை நடத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் நடந்த நிகழ்வை நியாயபடுத்தி சிலரின் பதிவுகளை காண்கின்றேன். இதில் உச்சபட்சம் மாற்று மதத்தவரையும் குற்றம் சொல்லி பதிவுகள் வருகின்றன. அவர்கள் தான் தூண்டி விட்டார்கள் என்று. என்ன அபத்தம் இது. இந்த விசயத்தில் நம்மிடம் குறை உள்ளது. அதை விடுத்து மற்றவர் மேல் பழி சொல்வது தகாது.
எங்கே இருந்து வந்தது சாதி. சாமிக்கும் சாதி உண்டோ?.

காலம் காலமாய் தங்களுக்கு ஏவல் செய்து கொண்டு இருந்த கூட்டம், இன்று கால் மேல் போட்டு அமர்ந்தால் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது. என் வீட்டில் வேலை செய்தவன் தானே இன்று எப்படி போகின்றான் பார் என்று இன்றும் பேசி கொண்டு உள்ள கூட்டம் இன்னும் இருக்கிறது.

என்னை கீழ்சாதி என்று மட்டும் தட்டி என் வம்சத்தை ஆளுமை செய்தாய் அல்லவா, உன் பெண்ணை காதல் செய்து, என் வம்சத்தை உன் பெண் மூலம் ஆளுமை செய்ய வைக்கின்றேன் என்று பேசி திரியும் கூட்டம் ஒருபுறம்.

யார் ஆதிக்க சாதிகள்?

வன்னியர்கள் , தேவர்கள் , முத்தரையர்கள், கவுண்டர்கள், நாயக்கர்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இவர்கள் எதன் அடிப்படையில் ஆதிக்க சாதிகள். யார் பட்டயம் எழுதிக் கொடுத்தது?

ஆதிக்க சாதிகள் என்பதாலே இவர்கள் எல்லாரும் குற்றம் புரிந்தவர்கள், கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது.

கீழ் சாதி என்பதாலே எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது.
எல்லா சாதியிலும் நல்லவர்களும் உள்ளனர், கெட்டவர்களும் உள்ளனர்.
இரண்டு பக்கமும் உண்மையும் , குற்றமும், வெறுப்பும் அன்புமும் சேர்ந்தே இருக்கிறது.

சாதி இந்த தேசத்தை பிடித்த சாபக்கேடு. எந்த மதத்தில் இருந்து எந்த மதம் நோக்கி பாய்ந்தாலும் சாதி இன்னும் சாக்கடையாகவே ஓடி மக்களை துரத்தி கொண்டு உள்ளது.

சக மனிதனை சாதி எனும் கள் குடித்து, சவக்குழியில் சரித்து விட்டதை, தங்களது வீர தீர சரித்தரமாக பேசிக் கொண்டு திரியும் தரித்தரங்களுக்கு , சில சாதி தலைவர்கள் தந்திரங்களை சொல்லி கொடுத்து திரிகின்றனர்.

63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் கதைகளும் இறைக்கு சாதி இல்லை என்று அறிவிக்கிறது. பின்பு சாதியை உலகிற்கு யார் அனுப்பியது.

நாத்திகர்கள் மனு நீதி புத்தகம் என்று சொல்கிறார்கள். எந்த ஆதிக்க சாதியின் வீட்டில் மனு நீதி வைத்து படித்து கொண்டு உள்ளார்கள். அது மிகைபடுத்தப்பட்ட உளறல். ஆனால் அதை உதாசீனம் செய்ய முடியாது.

சாதியை ஹிந்து மதம் அறிவிக்க வில்லை. ஹிந்து மதத்திற்கு சாதி அறிவிக்க பட்டது அன்று ஆளுமை செய்தவர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக. பின்பு வந்த தலைமுறை அதை தளைக்க வைத்தது.

எப்போதே புதைக்கப்பட்டு இருக்க வேண்டிய சாதிக்கு, இன்று சாதி தலைவர்கள், தனி சங்கம் அமைத்து கொடுக்க, சாதி இன்று சர்வ வல்லமை உடைய சர்வாதிகாரியாய் சளைக்காமல் எல்லா காலத்திலும் கால் ஊன்றி நிற்கிறது.

சாதி பல பேரை நாதி அற்றவர் ஆக்கி இருக்கிறது. முப்பது வருடங்கள் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டி சேர்த்த வீட்டை ,ஒரு மணி நேரத்தில் எரித்து உடைத்து போட்டார்கள் என்று மூதாட்டி சொல்லி அழும் போது, மனம் எல்லாம் வலிக்கிறது, பற்றி எரிகிறது.

ஒவ்வொரு முறையும் சாதியை பற்றி பதிவிடும் போது, ஒரு ஹிந்துவாக என் மனம் நாணம் கொள்கிறது.

மாற்று மதத்தவருடன் எந்த விவாத்திலும் சளைக்காமல் பேசிக் கொண்டு இருக்கும்போது, சாதியை பற்றிய குறிப்புக்கள் சொல்லப்படும் போது, ஒரு நொடி மனம் சோர்வடைந்து போகிறது.

இனபேதமும், நிற பேதமும் அடிப்படையாக கொண்ட அந்த மதங்கள் நம்மை சொல்ல அருகதை அற்றவர்கள் என்றாலும் , நாம் வெட்கி தலை குனிய வேண்டும்.

நியாயமான குற்ற சாட்டை யார் சொன்னாலும் , நாம் நாணி கொள்ள தான் வேண்டும்.

ஹிந்து மத தலைவர்கள் அங்கே தலையிட்டு , இவர்களை சரி செய்ய வேண்டும். சரியான இழப்பிடு பெற்று தர வேண்டும். மற்றும் ஒரு முறை நடக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டும்.

எப்போதும் பேதம் அற்ற இறைவனுடனான போரில், சாத்தான் வெவ்வேறு முகம் காட்டும், பின்பு தோற்றோடி போகும்.

இன்று சாதி என்னும் சாத்தனின் உடனான யுத்தத்தில், எல்லாருக்கும் பொதுவான இறை தோற்கடிக்கப்பட்டு , எரிக்கப்பட்டு இருக்கிறது.

மீண்டும் அந்த குற்றமற்ற, எந்த பேதம் அற்ற இறை யுத்தத்தில் இறங்கும்!!

அன்று நாம் சாதி எனும் சாத்தனின் பக்கம் நின்று வாள் வீச போகிறோமா , இல்லை இறையின் பக்கம் நிற்க போகிறோமா?

http://www.bbc.com/tamil/india/2015/08/150816_templecar_burnt

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...