ஈசனை நினையாது எந்த நிமிடங்களும் என் வாழ்கையில் நகர்ந்ததே இல்லை. பாசம் காட்டும் தாய்மார்கள் நிறைந்த கூட்டத்தில், பிள்ளை தன் தாயை சரியாக தேடி ஓடி கட்டி கொள்வது போல், ஆலயம் முழுவதும் எத்தனை தெய்வம் சூழ்ந்து நின்றாலும், மனம் ஈசனையே தேடி அவன் கால்களை கட்டி கொள்ளவே விரும்புகிறது. மற்ற தெய்வத்தின் மீது எனக்கு எந்த மனக்குறையும் எனக்கில்லை. எந்த தேசத்தில் வீற்று இருந்தாலும், சலனமற்றே சங்கரன் காட்சி தருகின்றான், சலனமற்று இருப்பது சவம் என்கிறரர்கள, இல்லை அது சிவம் என்கிறார்கள், எது எப்படி போயினும் எது சலனமற்றதோ , எதை அறிவது சாத்தியம் அற்றதோ , எது எல்லா சர்வ காலத்திலும் சஞ்சரித்து கொண்டு இருப்பதோ , அதன் முன் நிற்கும் போது சஞ்சலங்கள் வருகின்றன. எத்தனை சங்கடம் வந்தாலும் உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் என்னிடம் அறுபட கூடாது என் ஐயனே என்று வழக்கமான வேண்டுதல் வருகையில் பிள்ளையை பற்றிய சிந்தனை வருகிறது. எனக்கு துணையாக வந்தது போல், என் பிள்ளைக்கும் துணையாக வா என் ஐயனே, எந்த நிலையிலும் என் மகனை மறுத்து விடாதே என்று பலமான வேண்டுகோள் வருகிறது. வேண்டி கொண்டு இருக்கும் போது, கையில் சிறிது பிரசாதம் தந்து விட்டு போகிறார் ஒரு பெண்மணி. எனக்கும் மட்டும் கொடுக்க வில்ல, அங்கே இருந்தவர்களுக்கு அவர் கொடுத்து கொண்டு போனார். ஆனால் எனக்கு அது என் ஐயன் கொடுத்தது. அப்படி தான் என்னை போன்றவர்களுக்கு தோன்றும். கண்ணில் ஜலம் கட்டியது, அந்த இடத்தை விட்டு நகரலாம் என்றால், திருநீறு எடுத்து கொள்ள வேண்டும்.
இந்திய கோவில்களில் நாமலே திருநீறு எடுத்து கொள்ளலாம், இங்கே போன முறை நானே தட்டில் இருந்து எடுத்த போது , நாங்கள் தருகிறோம், யாரும் தட்டில் கை வைக்காதீர்கள் என்று சொன்னதால். அங்கே வேலையில் இருந்து ஒரு அர்ச்சகரிடம் வேண்டினேன். பைரவர் பூசை முடிந்து தருகின்றேன் என்றார். சரி என்று ஒரமாக ஈசனுக்கு நேராக கண்ணை மூடி உக்காந்து கொண்டு இருந்தால், மொத்த வாழ்க்கையும் நிழற்படமாக உள்ளே ஓடியது, ஈசன் என்ற பெயர் மட்டும் உள்ளே பதியாமால் போய் இருந்தால், தயங்கி தயங்கி தடுமாறி தவித்த என் வாழக்கை தறிகெட்டு ஓடி இருக்கும். தடுமாறி தளர்ந்து இருந்த போது, தில்லைநாதன் என் தாயுமானான். உதவி உதவி என்று உள்ளம் ஊமையாக விழுந்து உழன்றிய போது என் உள்ளம் கவர் கள்வனாக உள்ளே நுழைந்தான். மரித்து கொண்டு இருந்த மனம் மலர்ந்தது. சிந்தனைக்குள் சிவன் வந்த போது சித்தம் தெளிந்தது. சிற்றின்பம் எல்லாம் சிதைந்து போய், அவனே பேரின்பமாக எனக்கு தெரிந்தான். நீ மட்டும் வராமல் போய் இருந்தால் ஈசனே நான் என்னவாகி போய் இருப்பேன் என்று யோசிக்கவே எனக்கு அச்சமாக இருக்கிறது.
இந்த வாழ்வு என் பெற்றோர் ஆசியிலும் , உன் கருணையிலும் மட்டும் நிகழந்தது, பெற்றவர்க்கு பொறுப்பான பிள்ளையாக இருக்கின்றேன் பிள்ளையாக என்னால் செய்ய முடிந்ததை செய்து கொண்டு உள்ளேன், நீ நல்ல பிள்ளை என்று தழுவி கொள்கிறார்கள். , ஆனால் உனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, என் தாய் தந்தையர் என்னை கட்டி கொள்வதை போல், என்னை நீ கட்டி கொள்ள மாட்டாயா, என்னை உன் பக்தன் என்று கொள்ள மாட்டாய. உன்னை நேராக காண வேண்டும், அத்தனை நாயன்மார்கள் உன்னை கண்டு இருக்கிறார்கள், என்னால் முடிய வில்லை , உன் அருகாமை எப்போதும் உணர்கின்றேன், ஆனால் உன்னை அறிவதும் அடைவதும் எனக்கு கை கூட வில்லை, என்ன் செய்தால் என்னை ஏற்று கொள்வாய் ஈசனே , நான் மட்டும் தான் இப்படி புலம்புகின்றேனா, இல்லை உன் பக்தர்கள் எல்லாரும் இப்படி தான் உள்ளே அலறுகிறார்களா என்று தெரிய வில்லையே. விடை தெரியாத இந்த வினாவானது, விழிஇமையில் விழிநீராக விடை பெற்றது. நெற்றியில் யாரோ கைப்பட, திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தால், அர்ச்சகர் நெற்றியில் தீருநீறு வைத்து, “we cannot reach/wake him, he is untouchable by anyone, but if you touch his heart, he will come for you, I do not know what is your problem , but your tears make him listen, whatever you pray, he will listen, do not worry ” என்று சொன்னார். அவரை கை எடுத்து கும்பிட்டு விட்டு, திருநீறை நெற்றி நிறைய அள்ளி பூசி கொண்டேன் , காரில் ஈசனை பற்றிய பாடல்கள் போட்டு கொண்டு வீட்டிற்கு திரும்பி வர மனம் அமைதியானது.