Saturday, January 23, 2016

ஆகம விதிகள்?

KT Raghavan கருத்தை ஆமோதிக்கிறேன். ஆகம விதிகள் கோவில்களில் உள்ள ஒன்று , இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கோவில்கள் திறக்க கூடாது என்று. சிறு வயதில் என் நினைவுக்கு எட்டிய வரை எந்த கோவிலும் ஆங்கில புத்தாண்டு அன்று இரவு கோவில்களை திறந்து வைத்து இருக்க வில்லை. ஆனால் இன்று பல கோவில்கள் திறக்கப்படுகின்றன. இது ஆகம விதி மிறல் இல்லையா?

பக்தர்களின் வசதிக்கு ஏற்ப என்று திருப்பதி கோவிலின் நடை சாத்தும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது எந்த ஆகம விதிகள் படி ?
கருவை சுமக்கும் தாயை போல், கருணையை சுரக்கும் கடவுளின் கருவறையில் குளிர் சாதன பெட்டிகளை அமைத்தது எந்த ஆகம விதிகள் படி?
உள் பிரகாரத்தை சுற்றுவதை கூட கம்பி கட்டி தடுத்து , பக்தர்களின் நம்பிக்கையை நசுக்குவது எந்த ஆகம விதிகள் படி?.

காசு கொடுத்தால் கருவறைக்குள் நுழைந்து நின்று தரிசிக்கலாம் என்று சொல்வது எந்த ஆகம விதிகள் படி.

அரசாங்கம் தான் காரணம் என்று சொல்லாதீர்கள். அன்று எல்லாம் இந்த விதிமீறல்களை ஏற்று கொண்டு, இன்று தங்களது அர்ச்சகர் பதவிக்கு ஆபத்து என்றவுடன் , ஆகம விதி மீறல் என்று பேசுவது என்ன விதத்தில் நியாயம்.
எந்த ஹிந்து கோவிலும் எல்லாருக்கும் பொதுவானது. அது எந்த சாதியினர் கோவில் என்றாலும். நிர்வாகம் வேண்டும் என்றால் அதை நிறுவியர்களிடம் விட்டுவிடலாம். ஆனால் எங்கும் நிறையும் இறை எல்லாருக்கும் பொதுவானது, அதை அந்த கோவிலின் விதிக்கு உட்பட்டு எவர் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.

ஆண்டாள் சூடி கொடுத்த மாலை வேண்டும் என்று சொன்ன இறை, மற்றவர்கள் மாலைகளை ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னது உண்டா?. ஆக அர்ச்சகரும் பூஜை செய்யலாம் , அர்ச்சகர் ஆக தகுதி உடையவரும் பூஜை செய்யலாம். அதை இறை ஏற்கும்.

ஆனால் இந்த குலத்தில், இந்த குடும்பத்தில் பிறந்தால் மட்டுமே பூஜை செய்யும் உரிமை என்ற சொல்வது , இறையை இழிவுப்படுத்தும் செயல். .
அது தான் ஆகம விதி என்றால் அது விதி இல்லை சதி. அதற்கு இறைவனை சாட்சி ஆக்காதீர்கள்.

எதுவாக இருந்தாலும் இந்த தேசத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. ஆக வேறு வழி இல்லை என்பதால் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

குழந்தைகளை கூட கொலைகாரர்களாக மாற்ற முடியுமா ?

இது எனக்கு அதிர்ச்சியான செய்தி இல்லை. ஐ.எஸ் சொந்த இன மக்களை கொன்றது, தனது பெண் இனத்தை சேர்ந்தவர்களை பாலியல் அடிமைகளாக வைத்து கொன்றது. இது எல்லாம் அறிந்து இருந்தும் இந்த சிறுமி அதில் சேர விரும்பி இருக்கிறாள். இது அறியாமல் செய்த பிழை அல்ல, அது கொடூரமே இல்லை என்று அவள் மனதில் பதிய வைக்க பட்டு இருக்கிறது..
 
குழந்தைகளை கூட கொலைகாரர்களாக மாற்ற முடியுமா ?
எது அவளை தூண்டியது? ஒரே தாத்ரி சம்பவத்தை
வைத்து இந்த தேசத்தை ஒரு காட்டு மிராண்டி தேசமாக காட்ட முயற்சி செய்த போலி மத சார்பின்மை வாதிகளும் , சிறுபான்மை மக்களும் யோசிக்க வேண்டும்.


ஐ.எஸ் இந்தியாவை அதன் எதிரி பட்டியலில் வைத்து இருக்கிறது. ஆனால் ஐ.எஸ் அனுதாபிகளாக பலர் இங்கே உருவெடுத்து கொண்டு இருக்கின்றனர். நம் தாய் தேசத்தை ஒருவன் அழிக்க வேண்டும் என்று சொன்னால் , அவன் நம்முடைய எதிரி எப்படி அவனிடம் நாம் அனுதாபம் கொள்வது.

தேச துரோகத்திற்கு இங்கே தோகை விரிக்கபடுகிறது.
ஆனால் பெரும்பான்மை சமூகம் அமைதி காக்கிறது, ஒரு சில பேர் செய்யும் செயலுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அதற்கு புரிகிறது. புரியும் அளவிற்கு பெரும்பான்மை மக்களிடம் ஒரு புரிதல் இருக்கிறது.
அந்த புரிதலின் பெயர் "பாரத பண்பாடு".

http://www.dinamalar.com/news_detail.asp?id=1413385

கோழைகள் உடனான யுத்தத்தில் பாரதம் தோற்று கொண்டு இருக்கிறது...

முற்று பெறப் போவதில்லை இத்தகைய முற்றுகை. இதற்கு முற்று புள்ளி வைக்க எவரும் இங்கே முயல போவதும் இல்லை. நான்கு நாட்களாக சண்டை நடக்கிறது ஆறு தீவிரவாதிகளை பிடிக்க. வல்லரசுகளின் வரிசையில் இடம் பிடிக்க மல்லு கட்டும் நம் தேசத்திற்கு இது மகத்தான பின்னடைவு. தொடர்ந்து தொல்லைகளை பெறும் தேசம் அதை எதிர் கொள்ள தனக்கான வலுவை இந்நேரம் பெற்று இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதற்கான துணிவும் தெளிவும் இல்லை.

ஒவ்வொரு முறையும் தாய் நாட்டை காக்கும் போராட்டத்தில் , அவளின் மகன்கள் தங்கள் உயிர்களை உதிர்க்கிறார்கள். வீட்டை காக்க பிறந்த பிள்ளைகளை நாட்டை காக்க அனுப்பியவர்கள் , அதற்கு பரிசாக அவர்களின் பிள்ளைகளை பிணமாக்கி சவ பெட்டியில் சர்வ மரியாதையுடன் அனுப்பி கொண்டு இருக்கின்றோம். இந்த தாய் தேசம் ஒவ்வொரு நாளும் விழிக்கும்போது, அதன் வீர பிள்ளைகளில் யாரவது ஒருவர் மீளா துயிலில் போகிறார். வல்லரசு பேசும் தேசம், வகுத்த இலக்கணம் இது தானா?

கார்கில் போர் கடந்த காலம் அல்ல, அது எதிர் காலத்தில் நடக்க போவதை சொல்லும் கதை. மோடியை நாவஸ் ஷெரிப் கட்டி தழுவிய போதே , எல்லாருக்கும் இங்கே தெரியும், இவர்கள் முதுகில் குத்த போகிறார்கள் என்று. இது உயர் அதிகாரர்களின் அலட்சியம் மட்டும் அல்ல, பாதுகாப்பு படைகளை நவீனபடுத்துதலை தாமதபடுத்தியால் தான் நமது இராணுவ வீரர்களை இழந்து கொண்டு இருக்கின்றோம்.

கட்டிடத்திலும் , காடுகளிலும் ஊடுருவி பார்க்கும் உளவு செயற் கோள்களை இந்த தேசம் இதுவரை பெற்று இருக்க வில்லை. புல்லட் ப்ரூப் கவசம் மார்பிற்கு மட்டும் என்று இன்னும் நாம் வைத்து கொண்டு இருக்கின்றோம். தீவிரவாதிகள் குறி பார்த்து முகத்திலும் கழுத்திலும் சுடுகிறார்கள். தலை கவசம் முக கவசம் இன்றி பாது காப்பு படைகள் பலவீனமாகி, நிற்கின்றன.

இந்த தேசத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. கொஞ்ச நாட்கள் கெடுபிடி செய்தார்கள். அப்புறம் அப்படியே விட்டு விட்டார்கள் கண் துடைப்புக்கு சோதனை செய்கிறார்கள் என்பதை கண் கூடாக பல முறை பார்த்து இருக்கின்றேன். யார் வேண்டும் என்றாலும் ரயில் நிலையத்தில் சுலபமாக எல்லா வழியிலும் நுழையலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையமும் பாதுகாப்பு அற்று தான் உள்ளது. யாரை போய் குற்றம் சொல்வது என்று தெரிய வில்லை.

எனது நண்பர் ஒருமுறை சொன்னார், எந்த திருவிழா நாட்களிலும் எந்த பொது போக்குவரத்தையும் உபயோக படுத்த முயலாதே , ஏன் எனில் தீவிரவாதிகளின் முதல் முற்றுகை பொது போக்குவரத்து தான். கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள். இந்த தேசத்தில் எந்த இடமும் பாதுகாப்பு இல்லை. நமக்கு பாதுகாப்பு அளிக்கும் வல்லமையை இந்த தேசத்தை ஆட்சி செய்தவர்களும் நடப்பு ஆட்சியாளர்களும் பெற வில்லை என்பதே உண்மை. பாதுகாப்பு படைகளே தொடர்ந்து பாதுகாப்பு இன்றி வீர மரணத்தை தழுவி கொண்டு இருக்கின்றன.

நேரிடையான யுத்தத்தில் நிலையான வெற்றியை பெற்ற நம் தாய் தேசம், கோழைகள் உடனான யுத்தத்தில் தோற்று கொண்டு இருக்கிறது...

http://tamil.oneindia.com/news/india/pathankot-attack-5-terrorists-killed-operation-still-on-says-nsg-243774.html

ஹிந்து மங்கைகளுக்கு எச்சரிக்கை.

இது நம் ஹிந்து பெண்களை பற்றி கவலை கொள்ள செய்ய வேண்டிய விஷயம். மால்டாவில் நடந்த வன்முறை பற்றி வரும் தகவல்கள் மிகவும் அச்சம் கொள்ள செய்பவையாக உள்ளன. கிட்ட தட்ட பிரிவினையின் போது, முகமது ஜிலி அன்னா கொடுத்த அழைப்பை ஏற்று , காபீர்கள் (ஹிந்துக்கள்) அற்ற தேசம் என்ற கருத்தை உள்வாங்கி , ஹிந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த பட்டது. ஹிந்துக்களை தங்கள் வீட்டில் மறைத்து வைத்து காக்க முற்பட்ட சில நல்ல முஸ்லிம்களும் கொல்ல பட்டனர் என்பது வரலாறு.

கருத்துக்கு எதிர் கருத்து தான் வர முடியும் தவிரே , கலவரம் வர தேவை இல்லை. அந்த கலவரத்திலும் குறிபிட்ட மத பெண்கள் குறி வைக்க படுகிறார்கள் என்பது சாதாரண நிகழ்வு இல்லை. 

கிட்டத்தட்ட அதே நிகழ்வு, லட்சகணக்கில் முஸ்லிம்கள் திரண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர் ஹிந்துக்களை குறி வைத்து. ஹிந்து பெண்களையும் அவர்கள் விட வில்லை. ஆளும் மம்தா பானர்ஜி அரசாங்கம் ஒட்டு வங்கி அரசியலுக்காக எதுவும் செய்ய வில்லை.

ஹிந்துக்களுக்காக பேசி வந்த பிஜேபி யும் மௌனமாகி விட்டது. தவறு முழுக்க முழுக்க ஹிந்துக்கள் உடையது, இதில் காங்கிரஸ் , முஸ்லிம்களையும் , மம்தாவையும் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தாத்ரி சம்பவத்தை தொடர்ந்து பதிந்த லட்சக்கணக்கான ஹிந்துக்கள் , மால்டா சம்பவத்தை பற்றி மருந்துக்கும் தொட வில்லை. உங்களுக்கு ஏன் புரிய வில்லை, மால்டாவில் நடந்த வன்முறைக்கு நடந்த மூல காரணம்
அவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான்.

சகிப்புத்தன்மை பற்றி ஹிந்துக்களுக்கு பாடம் எடுக்கும் போலி மதச்சார்பின்மை பேசும் ஹிந்துக்களே , அவர்கள் பெரும்பான்மை பெற்றால் , முதல் குறி நம் வீட்டு பெண்கள் என்பதை எப்படி மறந்து போனீர்கள்.
பாகிஸ்தானிலும் ,பங்களாதேஷ்லும், ஹிந்து பெண்கள் எவ்வாறு வேட்டையாட படுகின்றனர் என்பதை செய்தி தாள்களில் படித்து விட்டு , நல்ல வேளை நாம் இந்தியாவில் இருக்கின்றோம் நிம்மதி , என்று நினைத்தால் அதை விட வேறு முட்டாள் தனம் எதுவும் இல்லை.

காஷ்மீரிலும் , மேற்கு வங்காளத்திலும், மும்பையிலும், ஆம்பூர் கலவரத்திலும் அவர்கள் ஹிந்து பெண்களை குறி வைத்தனர் என்பது உண்மை.

ஹிந்துக்களை ஆதரிக்கும் கட்சியை பலபடுத்த வேண்டும் , அப்போது தான் அவர்கள் இந்த மாதிரி கலவரத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முடியும்.
ஹிந்து மதத்தை ஆதரிக்கும் கட்சியை ஆதரிப்பது நம் மத சார்பின்மைக்கு தீமை என்று நீங்கள் நினைத்தது, அந்த கட்சியை புறக்கணித்தால், நம் வீட்டு பெண்களை அவர்கள் தீண்டலில் இருந்து காக்க முடியாமல் போகும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மால்டா வன்முறை, அது வெறும் வன்முறை அல்ல, ஹிந்து மங்கைகளுக்கு , மேற்கு வங்காளத்தில் இருந்து விடபட்ட எச்சரிக்கை.

ஹிந்துக்கள் சரியான ஏமாளிகள்

ஹிந்துக்கள் சரியான ஏமாளிகள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம். உலகத்தின் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் தமிழகம் இடம் பெற்று இருக்கிறது. அந்த பெருமையை பெற்று தந்ததில் முக்கிய பங்கு வகித்தது தமிழக கோவில்கள்.

சரி அந்த கோவில்கள் யாருடையது, யார் எதற்காக அந்த கோவில்களை கட்டினார்கள். உயிரையும் உதிரத்தையும் கொடுத்து அந்த கோவில்களை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றி எதிர்கால தலைமுறைக்கு தந்தது யார்.

நன்றாக யோசித்து பாருங்கள். அடுத்தவன் மனைவியை கவர்ந்து அவளுக்காக கட்டிய கல்லறை சின்னம் , உலக புகழ் பெற்ற தாஜ்மகால், அது முகலாய கட்டிட கலைக்கு சான்று. கொள்ளை அடிப்பதற்கும் , சுதந்திர வீரர்களை தேடி தேடி கொலை செய்வதற்கும், வரி வசூல் செய்வதற்கும் ஆங்கிலேயன் , ரோடு போட்டான் , ஆங்கில அறிவு கற்பித்தான். ஆங்கிலேயர்கள் என்ற கிறிஸ்தவர்களால் தான் இந்தியா அறிவியல் அறிவு பெற்றது என்று தொடர்ந்து மறைமுகமாகவும் , வெளிப்படையாகவும் பிரச்சாரம் இன்று வரை செய்து வருகிறார்கள்

ஆனால் உலகத்தின் கவனத்தை ஈர்த்த நமது தமிழக கோவில்கள் மட்டும் தமிழர் கட்டியது. அதில் மறந்தும் ஹிந்துக்கள் கட்டிய கோவில்கள் என்ற சொல்வதில்லை. சில கட்சிகளை தவிர பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும், சாதி சங்க தலைவர்களும் மாற்று மத தலைவர்களும் எந்த விவாதத்தில் பங்கு கொண்டாலும் சொல்வது தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை. சரி வாதத்திற்கு வைத்து கொள்வோம், தமிழர்கள் வழிபட்ட இயற்கை தெய்வங்களை இன்றும் வழிபடுவது யார்.

அழகன் முருகன் எங்கள் தமிழ் அய்யனை, இன்றும் வழிபட்டு கொண்டு இருப்பது யார்? தமிழ் நிலங்களை பிரித்து ஒவ்வார் நிலத்திற்கும் ஒரு தெய்வம் வைத்து வழிபாடு செய்த வந்வர்களை பின்பற்றி இன்றும் வழிபாடு செய்பவர்கள் யார்?. தமிழ் நிலத்தின் திருமாலை , பெருமாளாக வழிபட்டு கொண்டு இருப்பதும் யார்.

தமிழர்கள் வழிபட்ட , வழிபட்டு கொண்டு இருக்கும் தெய்வங்களை தங்கள் மத மக்களிடம் சாத்தான்கள் என்று இன்றும் சொல்லி கொடுத்து கொண்டு இருப்பது யார். அவர்களும் தமிழர்கள் தானா ?

எல்லா மதமும் தன் சிறப்பை பேசலாம், ஹிந்து மதம் மட்டும் பேச கூடாது. தாத்ரி சம்பவத்திற்கும் ஹிந்துக்களுக்கும் தொடர்படுத்தி அயல் நாடு வாழ் இந்தியர்கள் அழுகை அறிவிப்பை வெளியிட்டு , சகிப்புத்தன்மை பற்றி ஹிந்துக்களுக்கு சரித்தர பாடம் எடுப்பார்கள்.

ஆனால் மால்டாவில் நடந்த வன்முறை மட்டும் பாவம் அவர்கள் நினைவில் இல்லை.

மௌனமாக எல்லாவற்றையும் சகித்து கொண்டு கடந்து போக பழக்கப்பட்ட ஹிந்துக்கள் முடிந்தால் , யூதர்கள் , பார்சிகள் வரலாற்றை அறிந்து வைத்து கொள்வது நல்லது. ஏன் எனில் ஹிந்துக்களின் எதிர்கால வரலாறும் அவர்களின் வரலாறும் வேறாக இருக்க போவதில்லை.

http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/places-to-visit.html?_r=2

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்துமா?

என்றாவது கண்டிப்பாக நிகழ போகும் இறுதி யுத்தத்தை தவிர்த்து பார்த்தால், இன்றைய சுழலில் அதிரடி வாய்ப்பு இல்லை. ஜனநாயக வழியில் ஆட்சி செய்யும் தேசத்துடன் யுத்தம் என்றால் , போர்கள் ஒரு வரை முறையில் தான் நடக்கும். ஆனால் மத பயங்கரவாதம் மகுடம் சூடி ஆட்சி செய்யும் தேசத்துடன் உடனான யுத்தத்தில் அது சாத்தியம் அன்று.

அணுகுண்டு வைத்து இருக்கும் அரக்கன் உடனான யுத்தத்தில் என்ன அணுகு முறையை இந்தியா எதிர்ப்பார்க்கும். அவர்கள் பிரயோகம் செய்தால் மறுமுறை அங்கே யுத்தம் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை. யுத்தத்தின் முடிவில் இந்தியா நிற்கும் , ஆனால் நாம் மீண்டு எழ பல வருடங்கள் ஆகும். இந்தியா அந்த விபரீத போரில் இறங்காது. 

வட கொரியா என்ன ரௌடி தனம் செய்தாலும், அமெரிக்கா இதுவரை அதனுடன் நேரடி யுத்தத்தில் இறங்க வில்லை. உலக வல்லரசுகள் அமெரிக்காவும், ரஷ்யாவும் இது வரை நேரடி போரில் இறங்க வில்லை. அணுகுண்டை பற்றிய பயம் தான் காரணம்.
.
பாகிஸ்தானை அடக்கும் வல்லமை உள்ள தேசம் இந்தியா என்று சீனா அறிந்து இருந்தது. அணுகுண்டு இல்லாத போரில் பாகிஸ்தான் நிர்மூலமாகி போனால் , இந்தியா தன் கவனம் முழுவதையும் சீனாவின் பக்கம் குவிக்கும் என்றும், தன் உடனான யுத்தத்தில் தோல்வி அடைந்த இந்தியா சந்தேகம் இல்லாமல் திருப்பி அடித்து பழி தீர்க்கும், அது மட்டும் அன்றி பொருளாதார வளர்ச்சியில் தன்னை மிஞ்சும் என்று அது கணித்தது.
அணுகுண்டை பற்றிய அறிவை சீனா பாகிஸ்தானுக்கு கற்பித்தது. நேரடி யுத்தத்தில் இருந்து பாகிஸ்தானை பாதுகாத்தது. ஒரே நோக்கம் , பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவிற்கு தொல்லை தர வேண்டும். சீனாவின் சாணக்கியம் சரியாக பலித்தது.

இந்தியாவிற்கு பின்வரும் வாய்ப்புகள் தான் உள்ளன.

1 ஒன்று இறுதி யுத்தத்தில் இறங்குவது.

2 தன்னையும் தன் மக்களையும் பாதுகாக்கும் தற்காப்பு யுத்தத்தில் தன்னை வலுப்படுத்தி கொள்வது.

3 உளவு போரில் இறங்குவது.

4 தேசத்தை ஹிந்து தேசமாக அறிவித்து, சாதிகளை தடை செய்து, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்து , அவர்கள் செய்யும் மத மாற்றத்தை கடுமையாக தடை செய்து, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும். திவீரவாதியாய் தியாகியாக சித்தரிக்கும் அனைவரையும் தீவீரவாத அமைப்பாக அறிவித்து அவர்களுக்கான விசாரணையை ராணுவ நீதிமன்றம் விசாரிக்க வழி செய்ய வேண்டும்.

5 தன் ஒட்டு மத மக்களை இஸ்லாத்திற்கு மாற சொல்லி , தன்னை இஸ்லாமிய தேசமாக அறிவிப்பது. இது பாகிஸ்தானை மகிழ்ச்சி கொள்ள செய்யும். பாகிஸ்தானின் இந்திய பகைமைக்கு பின் இருப்பது , அதன் உளவுத்துறை , அதன் உளவுத்துறையின் உள்ளத்தில் உலா வருவது அகண்ட இஸ்லாமிய பேரரசு பற்றிய கனவு . ஹிந்துக்கள் அதிகம் உள்ள இந்தியாவை வென்று இஸ்லாம் மயமாக்கல் என்பதே. போரே இல்லாமல் இந்தியா இஸ்லாமிய தேசம் ஆகிறது என்றால் அதற்கு மட்டற்ற மகிழ்ச்சி தான்.

ஆனால் இது சீனாவை அதிர்ச்சியுற செய்யும். அணுகுண்டு பலமும் , உலகத்தின் மூன்றாவது ராணுமும் இஸ்லாம் தேசத்திற்கு உட்பட்டால் , புத்த மதம் தழைத்து வரும், இலங்கையும், மியான்மரும், பூட்டானும் , நேபாளமும் , இந்திய இஸ்லாமிய பேரரசால விழுங்கப்படும். அதன் பிறகு சீனாவிற்கு என்ன நேரும் என்பதை சீனா தெளிவாக அறியும். வளர்த்த கடா மார்பில் பாயும்.
இது நகைசுவைக்காக சொல்லப்பட்டவை அல்ல, இப்படி பட்ட வாய்ப்புதான் இப்போது இந்தியாவிற்கு உள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1432847

ஒரு கொடிய மிருகம் மனிதன்

கோவையை சுற்றி கட்டப்பட் பல கல்லூரிகள், நான் படித்த கல்லூரி உட்பட மற்றும் பல தனியார் ஆசிரமங்கள் தான் இந்த நிலைமைக்கு காரணம். இறைவனின் பிள்ளைகள் என்று தங்களை அறிவித்த அதன் குருமார்களால் கட்டபட்ட கட்டிடங்கள்தான் யானை வழிப்பாதை பெரும் அளவில் அழிக்கபட காரணம். இறைவனின் மற்ற படைப்புகளுக்கு இன்னல்களை விளைவிக்கும் இந்த ஆசிரமங்கள் தான் நமக்கு நல் வாழ்க்கை பற்றி சொல்லி தருகின்றன

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்க்க ஆள் இல்லாமல் இயற்கையின் மற்ற உயிரினங்களை கொன்று ஒழித்து கொண்டு இருந்த உலகின் மிக பெரிய கொடிய விலங்காக இருந்த டைனோசர்களை இந்த மண்ணில் இருந்து நீக்க , இயற்கை இரங்கி. பிரளயத்தை உருவாக்கியது. எது வலுவாக இருந்ததோ அது வீழ்த்தப்பட்டது. மற்றவை தப்பியது. .இயற்கை தன்னை சமன்படுத்தி கொண்டது 

இன்று இயற்கையின் எல்லா படைப்புகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள ஒரே ஒரு கொடிய மிருகம் மனிதன். இயற்கை மீண்டும் இறங்கும்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1433626

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...