ஸ்ரீரடி
போக வேண்டும் என்று எனது தாயருக்கு நீண்ட நாட்களாக ஆசை. என்னிடம் சொல்ல
தயக்கம். ஏன் எனில் எனக்கு மகான்கள் மேல் மரியாதை உண்டே தவிர பக்தி
இருந்தது இல்லை. உலகில் அனைவரும் இறையின் பிள்ளைகள். இறையுடன் பேசுவதற்கு
இன்னோர் துணை எனக்கு தேவை இல்லை. என் குரல் அந்த இறையை எட்டும் என்பது என்
எண்ணம். அது மட்டும் அல்ல, குரு என்று ஒருவரை பற்றி கொள்ள சீடன் என்ற தகுதி
வேண்டும். சீடன் என்ற தகுதி ஒரு போதும் எனக்கு வரப் போவதில்லை. கட்டற்ற
என் மனம் கட்டளைகளை ஏற்கும் கண்ணியத்தில் இல்லை.
மற்றும் ஒரு காரணம், குறிப்பாக இந்த தேசம் அன்னியர் ஆட்சியில் அடிமை பட்டு சின்னாபின்னமாகி கொண்டு இருந்த போது, பல மகான்கள் இங்கே வாழ்ந்து வந்தனர். அற்புதங்கள் செய்தவர்கள் எவரும் என் தேசத்தை மீட்டு எடுக்கும் மீட்பராக இல்லாமல் இருந்தார்கள் என்பது இன்று வரை எனக்கு வேதனையாகவே இருக்கிறது.
என்னை பற்றி அறிந்த என் தாய் தயக்கத்துடன்
இருந்தார். நிலையற்ற வாழ்கையில் நாளை என்பதை பற்றிய நம்பிக்கை எனக்கு குறைய தொடங்க, சீக்கிரம் அம்மாவை அழைத்து சென்று விட வேண்டும் என்று முடிவு செய்து Anbudan Sharavanan அவர்களை தொடர்பு கொண்டு , பயணத்தை உறுதி(may4th, May5th, 2016) செய்து கொண்டேன். அப்பா கிராமத்தில் வேலை இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார்
என் தாயிற்கு வியாழக்கிழமை சாய் பாபாவை தரிசிக்க வேண்டும் என்பதே நோக்கம். புதன் வியாழன் இரண்டு நாளும் சாய் தரிசனம்.
புதன்கிழமை அதிகாலை 5.15 சென்னையில் இருந்து விமான பயணம். அம்மாவிற்கு முதல் முறை விமான பயணம். உள்ளே மிக ஆனந்தம் எனக்கு. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து எந்த பிள்ளைக்கும் , என் ஆனந்தம் புரியும். ஏழு மணி அளவில் புனேவை அடைந்தோம்.
அங்கே இருந்து சீரடி நோக்கி மினி பேருந்தில் பயணம். போகும் வழியில் அஷ்ட விநாயகா கோவிலில் ஒன்றான மகாகணபதி கோவிலில் தரிசனம். சுயம்பில் உருவான கணபதி என்று சரவணன் அவர்கள் கோவில் வரலாறு பற்றி சொல்கிறார். சுயம்பு லிங்கம் பற்றி அறிந்து இருந்த எனக்கு சுயம்பு கணபதி என்ற ஆச்சரியத்துடன் உள்ளே நுழைந்தோம்.
மத்திம அளவு உடைய கோவில். முழு முதற் கடவுள் முன்பு முதல் தரிசனம், தாய் தந்தையர் தான் உலகம் என்று சொல்லி ஞானப்பழத்தை பெற்று , மற்ற பிள்ளைகளுக்கு யாரை முதலில் வழிபட வேண்டும் என்று சொன்ன பிள்ளை அல்லவா இவர். சுற்றி வந்தால் சிறிய சிவலிங்கம் அதன் அருகே அர்ச்சகர். “இன்று பிரதோஷம்” என்று உற்சாகமாக தாய் சென்று வழிபட்டார். நம் தோஷங்களை தொலைக்கும் தெய்வத்திற்கு முன் நாம் நிற்கும்போது “நாம்” தொலைந்து போகின்றோம். தாய் போலாம் என்று சொன்னதால் “நாம்” உயிர் பெற்று , ஆலயத்தை விட்டு வெளி வந்தோம்.
அங்கிருந்து மீண்டும் பயணம். நடு வழியில் “SMILE STONE” என்ற உணவகத்தில் காலை உணவு. இட்லியும் தோசையுமாக வயிறு நிரம்பகிறது. சரவணன் “எதை பற்றியும் கவலை கொள்ளாமல் , என்ன வேண்டுமோ விரும்பி வாங்கி சாப்பிடுங்கள்” என்று விருந்தோம்பல் செய்து கொண்டே இருக்கிறார்.
உச்சி பொழுதில் தங்கும் விடுதி அடைந்தோம். நல்ல உணவுக்கு பிறகு , நானும் சரவணன் அவர்களும் தரிசனத்திற்கான அடையாள சீட்டை பெற்று வந்தோம். மாலை நான்கு மணி அளவிற்கு சாய் தரிசனம் என்பதால் சிறிது ஒய்வு எடுத்து கொண்ட பிறகு, கோவிலை அடைந்தோம். ஒரு 1.5 கிலோமீட்டர் தொலைவில் கோவில்.
சுற்றி கூடாரங்கள் வைத்து வெயில் தெரியாமல் வைத்து இருக்கிறார்கள் கோவிலை சுற்றி. மொபைல் கேமரா எதுவும் அனுமதி இல்லை என்பதால் எல்லாவற்றையும் விடுதியில் வைத்து விட்டோம்.
முதலில் சமாதி மந்திர். உள்ளே நுழைந்தால் சிறிய சிறிய சுற்றுகளை கடந்து பாபாவின் தரிசனம். பாபா உக்காந்து கொண்டு இருக்கிறார். தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயிர் உள்ள ஒரு பெரியவர் அமர்ந்து இருப்பது போல் பிரமை ஏற்படுகிறது.
என்ன ஒரு கனிவான முகம். மெல்ல தடுமாற்றம் பரவுகிறது நம்மிடம். செய்த பிழைகள் நம் கண் முன் வந்து நம்மை செயல் இழக்க செய்கின்றன. உண்மை அவரின் முகம் வழியாக நம் உள்ளத்தில் ஊடுருவி பொய்யான நம் மனதை உடைக்கிறது. “பாபா பாபா” என்ற பல உதடுகள் அலறுவதை உணர முடிகிறது. நாம் தூரத்தில் நிற்கும்போதே , நம்மை உணர செய்கிறார் என்பதை விழிக்குள் வதைபடும் விழிநீர் உணர்த்துகிறது.
அருகாமையில் நெருங்க நெருங்க மனம் நிலை பெறுகிறது, பாபாவின் கண்கள் நமக்கு பின் வருபவரை நோக்கி பயணிக்கிறது. “என் அருகாமையில் நீ வந்து விட்டாய் அல்லவா இனி பயம் இல்லை உனக்கு, நான் அடுத்த பக்தனிடம் செல்கின்றேன்” என்பது போல் எனக்கு பட்டது. பாபாவின் முன் வணங்கி விட்டு அவரை பார்த்து கொண்டே வெளியேறினால் , மீண்டும் அவரின் கண்களிடம் அடிமையாகின்றோம். மெல்ல விடுவித்து கொண்டு வெளி வந்தோம்.
சாய் அமர்ந்து அருள் செய்த வேப்ப மரத்தடிக்கு சரவணன் அழைத்து சென்றார். எப்போதாவது விழும் வேப்ப மர இலையை எடுப்பதற்கு என்று ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கிறது. சுற்றி வந்து விழுந்து வணங்கி வெளி வந்தோம்.
அதன் பின் சாய் உபயோகபடுத்திய பொருட்களை காண அழைத்து சென்றார். சாயின் பூத உடலை வைத்து இருந்த படுக்கையை காணும்போது ஒரு வித சோகம் பற்றி கொள்கிறது.
பின்பு சாயின் விபூதி பெற்று கொள்ள சென்றோம், ஒரு சிறிய சுண்டு விரல் அளவு உள்ள பொட்டலம் தருகிறார்கள். ஒன்றுக்கு மேல் தர மறுக்கிறார்கள். மக்கள் மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பெற்று கொள்கிறார்கள். நானும் சில முறை மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று பெற்று கொண்டேன்.
அங்கே இருந்து சாய் ஆரத்தி எடுக்கும் இடத்திற்கு ஆழைத்து சென்றார் சரவணன். துளசி மாட அளவில் தத்தாரேயர் கோவில். ஒவ்வொருமுறை ஆரத்தி எடுத்து முடிந்த பின்பு சாய் இங்கே சுற்றி வரும் பழக்கம் வைத்து இருந்தார். சமீபத்தில் குழந்தை வரம் வேண்டி ஒரு பெண்மணியும் அவரது அம்மாவும் சுற்றிய போது, சாய் அவர்கள் பின் தென்பட்டதாகவும் , சிறிது காலத்தில் அந்த பெண்மணிக்கு குழந்தை பிறந்தாதகவும் சொன்ன போது, மனம் அதிர்ந்தது.
அறிவுக்கு என்று அவதரித்த தத்தாரேரை சுற்றும் போது, சாயும் வருகிறார் என்பது செய்தி , கொஞ்சம் யோசித்து பார்த்தால் பரம் ஆத்மாவை ஜீவ ஆத்மா சுற்றுகிறது போலும்.
அடுத்து அணையா விளக்கு தரிசித்தோம்.
வெளி வந்து துவாரகாமாய் நோக்கி போனோம். இது சாயி பாபா ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்கி உறங்கிய இடம் என்று சரவணன் விளக்கமளித்தார். ஒரு மசூதி போல் இருக்கிறது. ஒரு அடுப்பு எப்போதும் எரிந்து கொண்டு இருக்கிறது , பாபா பயன்படுத்திய கல்லால் ஆன இருக்கையை வைத்து இருக்கிறார்கள்.
மௌனமான இடமாக இருக்கிறது. சிறிது நேரம் அமர்ந்தால் சில்லென்று மனம் குளிர்கிறது. “என்னிடம் இருந்து என்னை காப்பாற்ற சொல்லி தாருங்கள் , உங்களுக்கு கிடைத்த தெளிவு எனக்கும் கிடைக்க உதவி செய்யுங்கள்” என்று மனம் அந்த மகானிடம் மன்றாடுகிறது.
துவாரகாமாய் அருகே சாவடி என்று ஒன்று இருக்கிறது. அங்கே பாபா தங்கும் பழக்கம் உண்டு என்றார் சரவணன். ஆண்கள்/பெண்கள் என்று தனியாக உள்ளே சென்று பார்க்கும்படி வைத்து இருக்கிறார்கள்.
அதனை தொடர்ந்து , பாபாவின் நண்பர் அதுல் பாபா இருந்த இடத்திற்கு அழைத்து சென்றார். இவர்தான் பாபாவிற்கு குர்ஆன் வாசித்து காண்பிப்பார் எனவும் , பாபா உயிருடன் இருக்கும் போதே இவர் தான் ஆரத்தி காண்பித்தார் எனவும் சரவணன் மூலம் அறிகின்றோம். மகான்களின் தோழர்களும் இங்கே மகான்களாக கொள்ளப்படுவது இயல்பு.
எல்லாம் முடிந்து வெளியே வந்தோம். ஒரு ஓரமாக அமர்ந்து அம்மா பாபா சுய சரிதை படிக்கத் தொடங்க, என்ன செய்வது என்று புரியாமல் கோவில் எதிரே அமர்ந்து கொண்டேன். உற்று பார்த்தல் எங்கே நோக்கினாலும் பாபாவை பற்றிய செய்திகள். காலங்கள் கடந்தும் ஸ்ரீடியை பாபா இயக்கி கொண்டு இருக்கிறார். அவரை மையம் வைத்தே சீரடி சுழல்கிறது. வழக்கம் போல் இஸ்லாமியர்களை விட ஹிந்துக்கள் அதிகம் தென்படுகின்றார்.
அன்று இரவு நல்ல உணவிற்கு பிறகு நல்ல உறக்கம். அடுத்த நாள் மீண்டும் காலை பாபா தரிசனம். அம்மாவிற்கு வியாழக்கிழமை தரிசனம் என்பதால் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் பாபாவின் முன் நிற்கும்போது அதே பயம், அதே தடுமாற்றம் எனக்கு. வெளி வந்து மீண்டும் புதன்கிழமை சுற்றிய அதே முறையில் மீண்டும் ஒரு தரிசனம்.
அங்கே இருந்து தங்கும் விடுதி வந்து உணவருந்தி விட்டு கிளம்பினோம். சனிஷிக்னாபூர் கோவிலை நோக்கி பயணம். போகும் வழியில் கரும்பு சாறு பருகினோம். சீரடியில் இருந்து நாப்பது கிலோ மீட்டர் உள்ள கோவில். வீடுகளில் கதவு கிடையாது என்ற சரவணன் விளக்கம் அளித்து கொண்டு இருந்தார். அப்படிதான் இருந்தன. ஆனால் இது மெல்ல வியாபார தளம் என்று ஆகி கொண்டு இருக்கிறது. வெளியூரில் இருந்து மக்கள் வருகின்றனர் என்பதால் சில வீடுகளில் கதவுகள் தென்படுகின்றன போலும்.
சனி மீது இப்போது நேரிடையாக எண்ணெய் ஊற்றும் வழக்கம் இல்லை. ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்ற வேண்டும், அது சனி பகவானின் மேல் ஊற்றும். அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயர் சொல்லி ஊற்றி வந்தார். இந்த சனி சுயம்பு லிங்கம் என்று சொல்கிறார்கள். ஒரு பெரிய கருமை நிற கல்.
சங்கரனின் பெயர் பெற்ற சனி பகவான் சங்கடங்களை தீர்த்து கொண்டு இருக்கிறார். அங்கே இருந்து மீண்டும் கிளம்பி புனே விமான நிலையத்திற்கு பயணம். போகும் வழியில் “SMILE STONE” உணவகத்தில் சிறிது தேநீர் அருந்தி விட்டு பயணத்தை தொடர்ந்தோம்..
இரவு 8.30 மணி அளவில் புனேவை அடைந்தோம். ஸ்ரீ கிருஷ்ணா உணவகத்தில் இரவு உணவை சரவணன் அளித்தார். அங்கே இருந்து புனே விமான நிலையத்தை அடைந்தால, விமானம் ஒரு மணி நேரம் தாமதம்.
Anbudan Sharavanan அவர்களுக்கு நன்றி சொன்னேன். உண்மையில் இது நல்ல தெய்விக பயணமாக அமைந்தற்கு பாபாவின் கருணை மட்டும் அல்ல, இவரும் ஒரு காரணம். எந்த இடத்திலும் முக சுளிப்பு இல்லை. நட்பான உரையாடல்கள், திட்டமிட்ட செயலாக்கம். தெளிவான விளக்கம் தருதல். மிக சிறப்பாக பயணத்தை அமைத்து கொடுத்தார்.
இரவு ஒன்றரை மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அடைந்தோம். வீட்டிற்கு உள்ளே நுழையும்போது, வருட வருடம் இனி சாய் கோவிலுக்கு போய் வர வேண்டும் என்ற எண்ணமும் சேர்த்தே மனதினுள்
நுழைந்தது.