உண்மையில் மிக வருத்தமாக இருக்கிறது. அறிவை ஆயுதமாக கொள்வதற்கு அறிவின் ஆலயமான பள்ளிக்கு சென்றவர்களை, மூடத்தனத்தை ஆயுதமாக கொண்ட ஒரு மிருக கூட்டம் வேட்டையாடி இருக்கிறது. . நடந்தது மன்னிக்க முடியாத குற்றம். குழந்தைகளை பறிகொடுத்து விட்டு, ஆவேசமாக மீடியாக்களிடம் பேசி கொண்டு இருந்து பெற்றவர்களை யாரால ஆறுதல் படுத்த முடியும் என்று தெரியவில்லை.
எப்படி தலிபான் , இந்த செயலை செய்ய முடிந்தது என்று யோசித்தால் அதன் பின்னே பாகிஸ்தான் ராணுவும், மதமும் இருந்தது என்பது உண்மை.
பாரத தேசத்தில் இதே மாதிரியான பல நிகழ்வுகளை பாகிஸ்தான் இராணுவம் நடத்தியது என்பது எல்லோரும் அறிந்தது. பாகிஸ்தான் மக்களுக்கும் தெரியும். என் தாய் தேசம் இந்த வலியை பல காலமாக தாங்கி கொண்டு உள்ளது. இன்று நம்மில் யாருக்கும் இது சந்தோஷமான செய்தி இல்லை. யார் வீட்டு குழந்தைகள் ஆனால் என்ன, குற்றமற்ற குழந்தைகளை குதறும் வெறிநாய்ளை கண்டால் , அடித்து கொல்லும் மன நிலை எல்லோரிடமும் வர வேண்டும்.
இந்திய பேரரசை அழிப்பதற்கு என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு, மத அடிப்படை வாதிகளை ஊக்குவித்து , இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் நேரிடையான போரில் வெல்ல முடியமால் , இந்திய பேரரசின் குடிமக்களை பேடித்தனமான , குண்டு வைத்து கொன்ற பாகிஸ்தான் இராணுவம், தன் வீட்டு குழந்தைகளை , அதே போன்ற பேடித்தனமான தாக்குதலில் பறி கொடுத்து உள்ளது.
இதில் இருந்து பாகிஸ்தான் இராணுவம் பாடம் படிக்குமா என்றால் , இல்லை என்பதே உண்மை. பெற்ற குழந்தைகளையும் , பெற்ற தாயையும் விட , இறைவனே பெரியவன் என்பதை மத கருத்தாக வைத்து கொண்டு செயல் படும் பாகிஸ்தான் அரசின் அதிகார பூர்வமான தீவீரவாத இயக்கமான பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து அறிவை எதிர் பார்க்க முடியாது.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. இங்கே பாகிஸ்தான் இராணுவத்தின் ஊழ்வினை அவர்கள் வீட்டு குழந்தைகளின் வழியாக உதிரமாக ஓடி இருக்கிறது.
.
இறைவனின் நிழலில் இளைப்பாறும் அந்த இளம் தளிர்களுக்கு , இறைவன் இறை சாந்தத்தை தரட்டும். வன்முறை இல்லா வளம் இந்த உலகம் எங்கும் பரவட்டும்!!
இறைவனின் நிழலில் இளைப்பாறும் அந்த இளம் தளிர்களுக்கு , இறைவன் இறை சாந்தத்தை தரட்டும். வன்முறை இல்லா வளம் இந்த உலகம் எங்கும் பரவட்டும்!!
http://tamil.oneindia.com/news/international/peshawar-attack-132-children-among-141-killed-7-taliban-gunmen-dead-217146.html
No comments:
Post a Comment