Thursday, December 25, 2014

கிறிஸ்தவ நண்பரின் மனைவி என் மீது கோபம்

எனது மத மாற்றம் பற்றிய பதிவை கண்டு ஒரு கிறிஸ்தவ நண்பர் மிகவும் வருத்தப்பட்டார். அவரின் மனைவி என் மீது கோபம் கொண்டு உள்ளார் என்று தெரிவித்தார். என்னுடனான நட்பை துண்டிக்கும் படி அவரின் மனைவி அவரை வலியுறுத்தினார் என்று கவலை தெரிவித்தார்.
ஹிந்து மதத்தை தவிர மற்ற மதங்கள் கோழைகள் என்று குறிப்பிட்டது தன்னை மிகவும் காயப்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தார். நான் இதுவரை இறைமகனாரை பற்றியோ, நபியை பற்றியோ எனது எந்த பதிவிலும் இதுவரை இழிவாக எழுத வில்லை. அப்படி எழுதி இருந்தால் அவர்கள் வருத்தப்படலாம்.
எல்லா மதங்களும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் மிக பெரிய தவறுகளை செய்து இருக்கிறது. ஹிந்து மதம் நடந்த தவறுகளை ஒப்பு கொண்டு உள்ளது. இதுவரை நான் அறிந்த வேற்று மதத்தினர் ஒருவர் கூட , ஆமாம் எங்கள் மதத்திலும் தவறுகள் இருந்தது என்று இதுவரை சொன்னதே கிடையாது. ஹிந்து மதத்தில் இடைச் செருகலாக வந்த பிறப்பை வைத்து நிகழ்ந்த தீண்டாமை பற்றி கவலைப்பட்ட வேற்று மதத்தினர் தான் அதிகம்.
உங்களுக்கு ஏன் அந்த கவலை. உங்கள் மதத்திலே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்போது , ஏன் எங்கள் மதத்தை பற்றி பேசுகிறீர்கள். சாதி பிரிவனை வைத்து இருக்கீர்கள், வேறு வேறு பிரிவாய் பிரிந்து நிற்கீர்கள், பல பேருக்கு உருவ சிலை வைத்து வழிபாடு செய்கீர்கள். தமிழகத்தில் மன்னர்கள் காலம் தொட்டு வழங்கபட்ட தமிழ் பெயர்களை , உங்கள் ஆங்கிலே பெயர்களை கொண்டு அழித்து கொண்டு இருக்கீர்கள்.
கோவிலுக்கு செல்லும் எங்கள் மக்கள், உங்கள் சர்ச்சிற்கும் வந்து இறைமகனரை வழிபட்டு எங்கும் நிறையும் இறை என்ற தத்துவத்தை , சகோதரா தனமாக சொல்ல முற்படும் போது, அந்த கள்ளம் கபடம் அற்ற எங்கள் ஹிந்து மக்களை உங்கள் மதத்திற்கு மாற்ற உங்கள் சர்ச்சுகள் சதி செய்து முயற்சி செய்து கொண்டு இருப்பது
உங்களுக்கு தவறாக தெரியவில்லையா.?
எல்லா இடத்திலும் இறைவனை கண்ட மக்களை , உங்கள் மதத்திற்கு மாற்றி, சர்ச்சில் மட்டும் இறைவன் இருப்பான் என்று குறுகிய மனப்பான்மையை பதிய செய்கீர்கள். நமது தமிழ் மன்னர்களின் வரலாறு சுவடுகளை சுமந்து நிற்கும் கோவில்கள் அருகிலே சர்ச் கட்டி, மக்களை மதம் மாற்றி, மெல்ல அந்த கோவிலுக்கு மக்கள் வருகையை தடுத்து, அந்த கோவில்களை கொல்கீர்கள். நமது சரித்திரதை சவ குழியில் தள்ளி கொண்டு உள்ளீர்கள். இது எத்தனை மக்களை காயபடுத்தி இருக்கும். எங்கள் வலி உங்களுக்கு என்றாவது புரிந்தது உண்டா?
இயேசு ஒருவரே கடவுள் என்று , ராமரையும், சிவனையும், இழிவுபடுத்தி பதிவு போடும், உங்கள் மத மக்களை என்றாவது கடிந்தது உண்டா?
ஹிந்து மதம் எப்போதும் அடுத்த மதத்தை பற்றி கவலை பட்டது இல்லை. நீங்கள் ஹிந்து மதத்தை பற்றி பேசுவதானால் தான், உங்களை பற்றி நாங்கள் பதிவு போட வேண்டி இருக்கிறது. உங்கள் மதங்கள் எங்கள் மதத்தை பற்றி விமர்சனம் செய்கிறது, அதை முதலில் தடுங்கள், பின்பு எங்களிடம் வாருங்கள்.
மனசாட்சியின் படி யோசியுங்கள். உங்களுக்கே தெளிவு பிறக்கும்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...