"எனது இந்தியா"- S.ராமகிருஷ்ணன்-விகடன் பதிப்பகம்.
புதிய புத்தங்களை எப்போதும் படிக்க சொல்லி ஊக்குவிக்கும், தந்தை இந்த புத்தகத்தை படிக்க சொன்னார். புத்தகம் நல்ல நண்பன். அறியப்படாத பல வரலாற்று தகவல்கள் இதில் பதியப்பட்டு உள்ளன. வரலாற்றை வார்த்தையில் கொண்டு வருவது எளிது அல்ல. வரிக்கு வரிக்கு சான்றுகளை தேடி அலைந்து , அதை தொகுத்து தருவது ஒரு கலை. அதை சிறப்பாக ஆசிரியர் செய்து உள்ளார்.
சிற்சில குறைபாடு இருந்தாலும், இந்த தாய் தேசம் உயர்வானது என்பதில் பெரு நம்பிக்கை கொள்வர்களை இந்த புத்தகம் கண்டிப்பாக ஈர்க்கும்.
சூரியன் மறையாத நாடு , என்ற பெருமை பேசி திரிந்த இங்கிலாந்து என்ற தேசம், இந்தியர்கள் போட்ட பிச்சை காசில் எவ்வாறு வாழ்ந்தது என்பதை கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் சொல்கிறது.
இந்திய பழங்குடியினரை ஆங்கிலேயர்கள் கொன்றது ஆகட்டும், சென்னையில் உள்ள ஜஸ் ஹவுஸ் ஆகட்டும் , ஒரு பக்கம் நம்மை கோபபடுத்தி, மறுபக்கம் நம்மின் அறிவின் வாசல்களை திறந்து சரித்திரத்தை காண வைக்கிறார்.
அதே நேரத்தில் தீண்டாமை என்பது எப்படி செல்லரித்து கிடந்தது என்பதையும் சுட்டிக் காட்ட தவற வில்லை.
நம் தேசத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது வீண் வேலை என்று நம்மில் பலர் நினைக்க தொடங்கி உள்ளனர். அது தவறு.
சரித்திரம் எப்பொதும் நமக்கு பல சவால்களை விட்டு செல்கிறது.
நாம் சரியாய் இருந்து நாட்களையும், தவறாய் இருந்த நாட்களையும் நம்மிடம் நினைவுபடுத்தி , நிகழ் காலத்தில் நம்மை வழி நடத்தி , எதிர் காலத்தில் நாம் நிலைத்து நிற்பதற்கு வழி சொல்லும் குருவாய் அமைகிறது.
நாம் சரியாய் இருந்து நாட்களையும், தவறாய் இருந்த நாட்களையும் நம்மிடம் நினைவுபடுத்தி , நிகழ் காலத்தில் நம்மை வழி நடத்தி , எதிர் காலத்தில் நாம் நிலைத்து நிற்பதற்கு வழி சொல்லும் குருவாய் அமைகிறது.
கடந்த காலத்தில் இந்தியா என்ற என் தாய் தேசம் , கடந்து வந்த பாதைகளில் இருந்த கொடூரத்தை படிக்கும் போது, எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து , மீண்டும் இந்த உலக அரங்கில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் பாரதத்தை காணும்போது , உள்ளம் நம்மை அறியாமல் "எனது இந்தியா" என்று உவகை கொண்டு கூக்குரல் கொள்கிறது என்பதே படித்து முடித்து பின்பு மனதில் எழும் உணர்வு.
முடிந்தால் வாங்கி படித்து பாருங்கள்!!
No comments:
Post a Comment