Thursday, December 25, 2014

கிறிஸ்துமஸ் அன்று பிஜேபி வாஜ்பாயின் நல்லாட்சி தினம்

முதலில் கிறிஸ்துமஸ் அன்று பிஜேபி வாஜ்பாயின் நல்லாட்சி  தினத்தை கொண்டாட நினைத்தது முதல் தவறு. என்னை பொறுத்தவரை இது தேவை இல்லாத ஒன்று. கண்டிப்பாக இது கிறிஸ்தவர்கள் மனதில் அச்சத்தையும், ஆத்திரத்தையும் எழுப்பி இருக்கும் என்பது புரிந்து கொள்ள கூடிய ஒன்று.

கிருஸ்துமஸ் தினத்தை விவாத பொருள் ஆக்குவது மிக மிக கண்டனத்திற்கு உரியது.

அவர்கள் புனிதமாக கருதும் ஒரு தினத்தை சர்ச்சை உள்ளாக்கவது மிக தவறு. இது கண்டிப்பாக தவிர்க்க பட்டு இருக்க வேண்டும். இயேசு அந்த தேதியில் தான் பிறந்தாரா என்று சில முக நூல் அன்பர்கள் ஆராய்ச்சியில் இறங்குவது தேவை அற்றது. அவர்கள் நம்புகிறார்கள் , நாம் அதை மதிக்க கற்று கொள்ள வேண்டும்.

நம்மிடம் வந்து எந்த கிறிஸ்தவ மத மாற்றியாவது , இயேசுவை விற்க முயன்றால் , அப்போது அதை பார்த்து கொள்ளலாம்.

இது ஒரு புறம் இருக்க, எப்போதும் பிஜேபி யின் மீது மண் வாரி தூற்றும்  சில பத்திரிகைகள் , கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுமுறை ரத்து என்ற கதையை கிளப்பி விட்டது. ஆனால் மத்திய அரசின் சுற்றறிக்கை மிக தெளிவாக விடுமுறை ரத்து என்று சொல்ல வில்லை. குழந்தைகள் கட்டாயமாக வர வேண்டும் என்றும் சொல்ல வில்லை.

இஸ்லாத்தை விட மத மாற்றத்தில் மிக மிக தீவீரமாக இருக்கும் கிறிஸ்தவ மத மாற்றிகள் இந்த மாதிரி விஷயத்தை கண்டிப்பாக கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைப்பார்கள். எப்போதும் சர்ச் என்ன சொல்கிறதோ அதன் படி வாக்கு அளிக்க நினைக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு , சர்ச் என்ன சொல்லும் என்று மிக தெளிவாக தெரியும்.

அதன் பாதிப்பு அடுத்த  தேர்தலில் மிக தெளிவாக தெரியும். கன்னியாகுமரியில் காங்கிரஸ் எப்போதும் பெரும் வாக்குகள் பெறும்,வரும் தேர்தலில் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை கூடும்.  பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

http://tamil.oneindia.com/news/india/smriti-irani-slams-media-report-says-christmas-is-holiday-217026.html

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...