Thursday, December 25, 2014

ஹிந்து மதத்தின் மீது விஷத்தை கக்கும் ஆனந்த விகடன்

எப்போதும் ஹிந்து மதத்தின் மீது விஷத்தை கக்கும் ananda vikatan - ஆனந்த விகடன்  வழக்கம் போல்  இந்த முறையும் கக்கி உள்ளது. அமைதியாக இருக்கும் தமிழகத்தில் என்னமோ ஹிந்து மத அமைப்பால் மட்டும் தான் ஊறு வந்தது போல் எழுதி இருக்கிறது. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பும, மண்டைக்காடு கலவரமும் விகடன் குழுமத்திற்கு மறந்து விட்டது போலும், தொடர்ச்சியாக ஹிந்து மத அமைப்பின் தலைவர்கள் கொல்ல பட்டதும் என்ன உட் கட்சி சண்டையிலா?

ராஜராஜ சோழன் என்ன விகடன் வீட்டு சொத்தா அல்லது தமிழ் தேசிய அமைப்பின் சொத்தா?,  தமிழ் மன்னனுக்கு விழா எடுக்க ஒருவருக்கும் துப்பில்லை , ஆர் ஸ் ஸ் எடுத்தால் , அவர்கள் எடுத்த நோக்கத்தை கொச்சைபடுத்தி எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

தருண் விஜய் ஆட்சியில் இல்லாத போதே , தமிழ் மொழியின் பெருமை பற்றி பேசிக் கொண்டு இருந்தார். என்னமோ இப்பொழுது தான் பேசுவது போல் விகடன் எழுதிக் கொண்டு உள்ளது.

எங்கோ எடுத்த படத்திற்கு, இங்கே உள்ள அமெரிக்க தூதரகத்தை , இஸ்லாமிய அமைப்புகள் தாக்கிய போது, அதை கண்டித்த தினமணி பத்திரிகை மிரட்டப்பட்டது. விகடன் மௌனம் சாதித்தது. எங்கே போனது வீரம்.

ஆர் ஸ் ஸ் -ன் ஊர்வலத்தை நீதிமன்றம் அனுமதித்த பிறகும்,காவல் துறை தடுத்தது தவறு அல்லவா, விகடன் ஒரு வார்த்தை கூட தவறு என்று எழுத வில்லை. அப்பொதும் மௌனம்.

எப்பொதும் ஹிந்து மதத்தையும், அதன் அமைப்புகளையும் விமர்சிப்பது   என்றால் , விகடனிற்கு வீரம் வந்து விடும்.

ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கும் , இஸ்லாமியவிற்கும் இதனால் வரை மாறிக் கொண்டு இருந்தது என்பது தானாக நடைபெற்ற செயல் போலவும், மற்ற மதங்களில் இருந்து ஹிந்து மதம் திரும்புதல் , கட்டாய படுத்த நிகழ்வு போல் விகடன் எழுதுகிறது.

சுனாமியின் மீது நடைபெற்ற மத மாற்ற முயற்சிகள் எதுவும் விகடனுக்கு தெரியாது போலும்.

தவறு என்றால் யார் செய்தாலும் தவறு தான். விகடனுக்கு ஹிந்து மதம் மட்டும் தவறு செய்யும் என்று முடிவு செய்து கொண்டு உள்ளது போலும்.

இவ்வளவு துவேஷம் ஹிந்து மதத்தின் மீது வைத்து இருக்கும் , விகடன் எதற்காக Sakthi Vikatan  நடத்துகிறது.  வியாபாரம் செய்ய ஹிந்துக்கள் வேண்டும் அல்லவா.

இந்த விசயத்தில் @குமுதம் ஜோதிடம் - Kumudam Jothidam எப்பொதும் ஹிந்து மதத்திற்கு ஆதரவாக உள்ளது. எந்த மதம் தவறு செய்தாலும் தவறு என்று சொல்கிறது. மத மாற்றத்தை எதிர்த்து எழுதுகிறது.

சிறு வயது முதல் விகடன் படித்து வந்து இருக்கின்றேன். ஆனால் கடந்த சில வருடங்களாக விகடன் ஹிந்து மதம் என்றாலே தவறான எண்ணம் வரும் படி எழுதி கொண்டு உள்ளது. விமர்சனம் தவறு இல்லை. ஆனால் தொடர்ந்து ஒரு மதத்தையும் , அதன் அமைப்புகளையும் மட்டும் குறி வைத்து விமர்சனம் செய்து கொண்டு இருந்தால, இவர்களின் நோக்கம் பற்றி சந்தேகம் எழுகிறது.

ஹிந்துக்கள் தான் முடிவ செய்ய வேண்டும், எந்த இதழுக்கு நாம் ஆதரவு தர வேண்டும் என்று. நம்முடைய ஆதரவில் ஆன்மிக இதழ் நடத்தி வருமானம் சேர்த்து கொண்டு , எப்போதும் நம் மதத்தையும் , நம் மதத்திற்கு துணை நிற்கும் அமைப்புகளை மட்டும் எப்போதும் விமர்சித்து கொண்டு இருக்கும் இதழுக்கு ஆதரவு அளிப்பதா , அல்லது யார் தவறு செய்தாலும் தவறு என்று சொல்லும் இதழுக்கு ஆதரவு அளிப்பதா?

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102037

கிறிஸ்தவ நண்பரின் மனைவி என் மீது கோபம்

எனது மத மாற்றம் பற்றிய பதிவை கண்டு ஒரு கிறிஸ்தவ நண்பர் மிகவும் வருத்தப்பட்டார். அவரின் மனைவி என் மீது கோபம் கொண்டு உள்ளார் என்று தெரிவித்தார். என்னுடனான நட்பை துண்டிக்கும் படி அவரின் மனைவி அவரை வலியுறுத்தினார் என்று கவலை தெரிவித்தார்.
ஹிந்து மதத்தை தவிர மற்ற மதங்கள் கோழைகள் என்று குறிப்பிட்டது தன்னை மிகவும் காயப்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்தார். நான் இதுவரை இறைமகனாரை பற்றியோ, நபியை பற்றியோ எனது எந்த பதிவிலும் இதுவரை இழிவாக எழுத வில்லை. அப்படி எழுதி இருந்தால் அவர்கள் வருத்தப்படலாம்.
எல்லா மதங்களும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் மிக பெரிய தவறுகளை செய்து இருக்கிறது. ஹிந்து மதம் நடந்த தவறுகளை ஒப்பு கொண்டு உள்ளது. இதுவரை நான் அறிந்த வேற்று மதத்தினர் ஒருவர் கூட , ஆமாம் எங்கள் மதத்திலும் தவறுகள் இருந்தது என்று இதுவரை சொன்னதே கிடையாது. ஹிந்து மதத்தில் இடைச் செருகலாக வந்த பிறப்பை வைத்து நிகழ்ந்த தீண்டாமை பற்றி கவலைப்பட்ட வேற்று மதத்தினர் தான் அதிகம்.
உங்களுக்கு ஏன் அந்த கவலை. உங்கள் மதத்திலே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்போது , ஏன் எங்கள் மதத்தை பற்றி பேசுகிறீர்கள். சாதி பிரிவனை வைத்து இருக்கீர்கள், வேறு வேறு பிரிவாய் பிரிந்து நிற்கீர்கள், பல பேருக்கு உருவ சிலை வைத்து வழிபாடு செய்கீர்கள். தமிழகத்தில் மன்னர்கள் காலம் தொட்டு வழங்கபட்ட தமிழ் பெயர்களை , உங்கள் ஆங்கிலே பெயர்களை கொண்டு அழித்து கொண்டு இருக்கீர்கள்.
கோவிலுக்கு செல்லும் எங்கள் மக்கள், உங்கள் சர்ச்சிற்கும் வந்து இறைமகனரை வழிபட்டு எங்கும் நிறையும் இறை என்ற தத்துவத்தை , சகோதரா தனமாக சொல்ல முற்படும் போது, அந்த கள்ளம் கபடம் அற்ற எங்கள் ஹிந்து மக்களை உங்கள் மதத்திற்கு மாற்ற உங்கள் சர்ச்சுகள் சதி செய்து முயற்சி செய்து கொண்டு இருப்பது
உங்களுக்கு தவறாக தெரியவில்லையா.?
எல்லா இடத்திலும் இறைவனை கண்ட மக்களை , உங்கள் மதத்திற்கு மாற்றி, சர்ச்சில் மட்டும் இறைவன் இருப்பான் என்று குறுகிய மனப்பான்மையை பதிய செய்கீர்கள். நமது தமிழ் மன்னர்களின் வரலாறு சுவடுகளை சுமந்து நிற்கும் கோவில்கள் அருகிலே சர்ச் கட்டி, மக்களை மதம் மாற்றி, மெல்ல அந்த கோவிலுக்கு மக்கள் வருகையை தடுத்து, அந்த கோவில்களை கொல்கீர்கள். நமது சரித்திரதை சவ குழியில் தள்ளி கொண்டு உள்ளீர்கள். இது எத்தனை மக்களை காயபடுத்தி இருக்கும். எங்கள் வலி உங்களுக்கு என்றாவது புரிந்தது உண்டா?
இயேசு ஒருவரே கடவுள் என்று , ராமரையும், சிவனையும், இழிவுபடுத்தி பதிவு போடும், உங்கள் மத மக்களை என்றாவது கடிந்தது உண்டா?
ஹிந்து மதம் எப்போதும் அடுத்த மதத்தை பற்றி கவலை பட்டது இல்லை. நீங்கள் ஹிந்து மதத்தை பற்றி பேசுவதானால் தான், உங்களை பற்றி நாங்கள் பதிவு போட வேண்டி இருக்கிறது. உங்கள் மதங்கள் எங்கள் மதத்தை பற்றி விமர்சனம் செய்கிறது, அதை முதலில் தடுங்கள், பின்பு எங்களிடம் வாருங்கள்.
மனசாட்சியின் படி யோசியுங்கள். உங்களுக்கே தெளிவு பிறக்கும்.

பெஷாவர் பள்ளியில் 141 பேரை வெறித்தனமாகக் கொன்ற நிகழ்வு

உண்மையில் மிக வருத்தமாக இருக்கிறது. அறிவை ஆயுதமாக கொள்வதற்கு அறிவின் ஆலயமான பள்ளிக்கு சென்றவர்களை, மூடத்தனத்தை ஆயுதமாக கொண்ட ஒரு மிருக கூட்டம் வேட்டையாடி இருக்கிறது. . நடந்தது மன்னிக்க முடியாத குற்றம். குழந்தைகளை பறிகொடுத்து விட்டு, ஆவேசமாக மீடியாக்களிடம் பேசி கொண்டு இருந்து பெற்றவர்களை யாரால ஆறுதல் படுத்த முடியும் என்று தெரியவில்லை.
எப்படி தலிபான் , இந்த செயலை செய்ய முடிந்தது என்று யோசித்தால் அதன் பின்னே பாகிஸ்தான் ராணுவும், மதமும் இருந்தது என்பது உண்மை.
பாரத தேசத்தில் இதே மாதிரியான பல நிகழ்வுகளை பாகிஸ்தான் இராணுவம் நடத்தியது என்பது எல்லோரும் அறிந்தது. பாகிஸ்தான் மக்களுக்கும் தெரியும். என் தாய் தேசம் இந்த வலியை பல காலமாக தாங்கி கொண்டு உள்ளது. இன்று நம்மில் யாருக்கும் இது சந்தோஷமான செய்தி இல்லை. யார் வீட்டு குழந்தைகள் ஆனால் என்ன, குற்றமற்ற குழந்தைகளை குதறும் வெறிநாய்ளை கண்டால் , அடித்து கொல்லும் மன நிலை எல்லோரிடமும் வர வேண்டும்.
இந்திய பேரரசை அழிப்பதற்கு என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு, மத அடிப்படை வாதிகளை ஊக்குவித்து , இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் நேரிடையான போரில் வெல்ல முடியமால் , இந்திய பேரரசின் குடிமக்களை பேடித்தனமான , குண்டு வைத்து கொன்ற பாகிஸ்தான் இராணுவம், தன் வீட்டு குழந்தைகளை , அதே போன்ற பேடித்தனமான தாக்குதலில் பறி கொடுத்து உள்ளது.
இதில் இருந்து பாகிஸ்தான் இராணுவம் பாடம் படிக்குமா என்றால் , இல்லை என்பதே உண்மை. பெற்ற குழந்தைகளையும் , பெற்ற தாயையும் விட , இறைவனே பெரியவன் என்பதை மத கருத்தாக வைத்து கொண்டு செயல் படும் பாகிஸ்தான் அரசின் அதிகார பூர்வமான தீவீரவாத இயக்கமான பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து அறிவை எதிர் பார்க்க முடியாது.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. இங்கே பாகிஸ்தான் இராணுவத்தின் ஊழ்வினை அவர்கள் வீட்டு குழந்தைகளின் வழியாக உதிரமாக ஓடி இருக்கிறது.
.
இறைவனின் நிழலில் இளைப்பாறும் அந்த இளம் தளிர்களுக்கு , இறைவன் இறை சாந்தத்தை தரட்டும். வன்முறை இல்லா வளம் இந்த உலகம் எங்கும் பரவட்டும்!!

http://tamil.oneindia.com/news/international/peshawar-attack-132-children-among-141-killed-7-taliban-gunmen-dead-217146.html

கிறிஸ்துமஸ் அன்று பிஜேபி வாஜ்பாயின் நல்லாட்சி தினம்

முதலில் கிறிஸ்துமஸ் அன்று பிஜேபி வாஜ்பாயின் நல்லாட்சி  தினத்தை கொண்டாட நினைத்தது முதல் தவறு. என்னை பொறுத்தவரை இது தேவை இல்லாத ஒன்று. கண்டிப்பாக இது கிறிஸ்தவர்கள் மனதில் அச்சத்தையும், ஆத்திரத்தையும் எழுப்பி இருக்கும் என்பது புரிந்து கொள்ள கூடிய ஒன்று.

கிருஸ்துமஸ் தினத்தை விவாத பொருள் ஆக்குவது மிக மிக கண்டனத்திற்கு உரியது.

அவர்கள் புனிதமாக கருதும் ஒரு தினத்தை சர்ச்சை உள்ளாக்கவது மிக தவறு. இது கண்டிப்பாக தவிர்க்க பட்டு இருக்க வேண்டும். இயேசு அந்த தேதியில் தான் பிறந்தாரா என்று சில முக நூல் அன்பர்கள் ஆராய்ச்சியில் இறங்குவது தேவை அற்றது. அவர்கள் நம்புகிறார்கள் , நாம் அதை மதிக்க கற்று கொள்ள வேண்டும்.

நம்மிடம் வந்து எந்த கிறிஸ்தவ மத மாற்றியாவது , இயேசுவை விற்க முயன்றால் , அப்போது அதை பார்த்து கொள்ளலாம்.

இது ஒரு புறம் இருக்க, எப்போதும் பிஜேபி யின் மீது மண் வாரி தூற்றும்  சில பத்திரிகைகள் , கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுமுறை ரத்து என்ற கதையை கிளப்பி விட்டது. ஆனால் மத்திய அரசின் சுற்றறிக்கை மிக தெளிவாக விடுமுறை ரத்து என்று சொல்ல வில்லை. குழந்தைகள் கட்டாயமாக வர வேண்டும் என்றும் சொல்ல வில்லை.

இஸ்லாத்தை விட மத மாற்றத்தில் மிக மிக தீவீரமாக இருக்கும் கிறிஸ்தவ மத மாற்றிகள் இந்த மாதிரி விஷயத்தை கண்டிப்பாக கிறிஸ்தவர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைப்பார்கள். எப்போதும் சர்ச் என்ன சொல்கிறதோ அதன் படி வாக்கு அளிக்க நினைக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு , சர்ச் என்ன சொல்லும் என்று மிக தெளிவாக தெரியும்.

அதன் பாதிப்பு அடுத்த  தேர்தலில் மிக தெளிவாக தெரியும். கன்னியாகுமரியில் காங்கிரஸ் எப்போதும் பெரும் வாக்குகள் பெறும்,வரும் தேர்தலில் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை கூடும்.  பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

http://tamil.oneindia.com/news/india/smriti-irani-slams-media-report-says-christmas-is-holiday-217026.html

"எனது இந்தியா"- S.ராமகிருஷ்ணன்-விகடன் பதிப்பகம்-புத்தகம்

"எனது இந்தியா"- S.ராமகிருஷ்ணன்-விகடன் பதிப்பகம்.
புதிய புத்தங்களை எப்போதும் படிக்க சொல்லி ஊக்குவிக்கும், தந்தை இந்த புத்தகத்தை படிக்க சொன்னார். புத்தகம் நல்ல நண்பன். அறியப்படாத பல வரலாற்று தகவல்கள் இதில் பதியப்பட்டு உள்ளன. வரலாற்றை வார்த்தையில் கொண்டு வருவது எளிது அல்ல. வரிக்கு வரிக்கு சான்றுகளை தேடி அலைந்து , அதை தொகுத்து தருவது ஒரு கலை. அதை சிறப்பாக ஆசிரியர் செய்து உள்ளார்.
சிற்சில குறைபாடு இருந்தாலும், இந்த தாய் தேசம் உயர்வானது என்பதில் பெரு நம்பிக்கை கொள்வர்களை இந்த புத்தகம் கண்டிப்பாக ஈர்க்கும்.
சூரியன் மறையாத நாடு , என்ற பெருமை பேசி திரிந்த இங்கிலாந்து என்ற தேசம், இந்தியர்கள் போட்ட பிச்சை காசில் எவ்வாறு வாழ்ந்தது என்பதை கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் சொல்கிறது.
இந்திய பழங்குடியினரை ஆங்கிலேயர்கள் கொன்றது ஆகட்டும், சென்னையில் உள்ள ஜஸ் ஹவுஸ் ஆகட்டும் , ஒரு பக்கம் நம்மை கோபபடுத்தி, மறுபக்கம் நம்மின் அறிவின் வாசல்களை திறந்து சரித்திரத்தை காண வைக்கிறார்.
அதே நேரத்தில் தீண்டாமை என்பது எப்படி செல்லரித்து கிடந்தது என்பதையும் சுட்டிக் காட்ட தவற வில்லை.
நம் தேசத்தின் வரலாற்றை அறிந்து கொள்வது வீண் வேலை என்று நம்மில் பலர் நினைக்க தொடங்கி உள்ளனர். அது தவறு.
சரித்திரம் எப்பொதும் நமக்கு பல சவால்களை விட்டு செல்கிறது.
நாம் சரியாய் இருந்து நாட்களையும், தவறாய் இருந்த நாட்களையும் நம்மிடம் நினைவுபடுத்தி , நிகழ் காலத்தில் நம்மை வழி நடத்தி , எதிர் காலத்தில் நாம் நிலைத்து நிற்பதற்கு வழி சொல்லும் குருவாய் அமைகிறது.
கடந்த காலத்தில் இந்தியா என்ற என் தாய் தேசம் , கடந்து வந்த பாதைகளில் இருந்த கொடூரத்தை படிக்கும் போது, எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து , மீண்டும் இந்த உலக அரங்கில் கம்பீரமாய் எழுந்து நிற்கும் பாரதத்தை காணும்போது , உள்ளம் நம்மை அறியாமல் "எனது இந்தியா" என்று உவகை கொண்டு கூக்குரல் கொள்கிறது என்பதே படித்து முடித்து பின்பு மனதில் எழும் உணர்வு.
முடிந்தால் வாங்கி படித்து பாருங்கள்!!

சில கிராமத்தில் இஸ்லாம் பெரும்பான்மை பெற்றால்?

இதை தான் நான் திரும்ப திரும்ப சொல்வது. இங்கே சில கிராமத்தில் இஸ்லாம் பெரும்பான்மை பெற்றாலே, ஹிந்துக்களுக்கு இந்த கதி என்றால், இந்த தேசத்தில் இவர்கள் பெரும்பான்மை பெற்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
நல்ல இஸ்லாமியர்கள் இருப்பார்கள் , அடிப்படைவாதிகளை தடுப்பார்கள், நம்மை காப்பார்கள் என்பது , ஒரு வகையில் உண்மையில் என்றாலும், மதம் என்ற முன்னுரிமை வரும் போது, பெரும்பாலும் அவர்கள் ஊமையாகி விடுவார்கள் , அல்லது ஊமையாக்க படுவார்கள் என்பதே இந்த தேசத்தின் ரத்த வரலாற்றில் இருந்து நாம் அறிந்த பாடம்.
இந்த தேசத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மை தகர்க்க படும் என்றால், அத்தோடு பாரதம் என்ற தேசம் புதைக்கப்பட்டு விடும் . ஒரு மணி நேரத்திற்கு மட்டும் தீபவாளி கொண்டாட அனுமதி அளிக்கும் அரபு தேசம் போன்ற நிலையில் நாம் வாழ நேரிடும். சொல்லப் போனால் அதுவும் கூட இருக்காது
ஒரு மணி நேரத்திற்கு அரபு நாடுகள் இன்று இந்துக்கள் பண்டிகையை கொண்டாட அனுமதிக்க காரணம் , தாய் தேசமான பாரதம் ஹிந்து மக்களை பெரும்பான்மை கொண்டது, அவர்கள் வர்த்தகம் நலன் கருதி அரபு தேசங்கள் இன்று பெருந்தன்மை காட்டுகிறது.
தாய் தேசத்தில் ஹிந்துக்களின் பெரும்பான்மை வீழ்த்தப்பட்டால், உலகில் எந்த இடத்திலும் ஹிந்துக்களுக்கு என்று பேச ஆள் இருக்காது.
ஒற்றை குழந்தை என ஹிந்துக்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் கட்டுப்பாட்டிற்கு துணை நிற்க, இன்னோர் மதமோ , மக்கள் தொகை பெருக்கத்தின் மூலம் அதிரடியாக பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இது எல்லாம் ஒரு பிரச்சினையா என்று நாம் யோசித்தால், எதிர்காலத்தில் நம் பேரன்களும், பேத்திகளும் , வாழ்வதற்கு அவர்களுக்கு என்று ஒரு தேசம் இருக்காது. இஸ்லாமை ஆளுமை மதமாக கொண்ட எந்த தேசத்திலும் எந்த கால கட்டத்திலும் , பிற மதங்களின் மக்கள் ஜீவித்து வாழ்ந்ததாக எந்த கடந்த கால, நிகழ் கால வரலாறும் இல்லை என்பதே காலம் நமக்கு சுட்டி காட்டும் உண்மை.
நட்பாய் இருப்போம் தவறு இல்லை, ஆனால் நம்முடைய நடுநிலை நம்மை நடு வீதியில் நிறுத்தி விட போகிறதா என்பதை நம் நினைவில் நிறுத்த வேண்டும்.
நாடு இன்றி அலைந்த யூதர்களின் வலிகளை எழுதிய வரலாற்றின் பேனா அடுத்த இனத்தின் பெயரை எழுதக் காத்து கொண்டு இருக்கிறது,
அது ஹிந்து என்று எழுதி விடாமல் தடுக்கும் வல்லமையை நம் ஹிந்துக்கள் பெற்று இருக்கோமா என்பதே என் வினா?

மத மாற்றத்தை பற்றி முதல் முறை கிறிஸ்தவ மத மாற்றிகள் . இஸ்லாமிய மத மாற்றிகள் கவலை படுகிறார்கள்

உண்மையில் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. மத மாற்றத்தை பற்றி முதல் முறை கிறிஸ்தவ மத மாற்றிகள் . இஸ்லாமிய மத மாற்றிகள் கவலை படுகிறார்கள். அதற்கு என்று எல்லா மீடியாக்களும் விவாதம் நடத்து கிறார்கள். மத மாற்றத்தை தடுக்க வேண்டும், ஆனால் கட்டாய மத மாற்றம் தடுக்க சட்டம் கொண்டு வர கூடாது. என்ன கதை இது?. ஹிந்துக்கள் மற்ற மதத்திற்கு மாற்றப்படும் போது, வராத கவலை , இன்று மட்டும் எப்படி வந்தது.
இமயம் டிவியிலும் சரி, சன் டிவியிலும், தந்தி டிவியிலும், கேப்டன் டிவியிலும், நியூஸ் x டிவியிலும் பேசிய அரபிய ஆபிரகாம அடிமை கூட்டம், தீண்டாமை என்றஅடிமை முறையின் ஒரே காரணத்தினால் தான் மத மாற்றம் நடந்தது என்று வாய் கூசாமல் சொல்லி கொண்டு இருந்தார்கள்.
ஹிந்து மதம் தைரியமாக சொன்னது, தீண்டாமை என்ற இடை செருகலை , ஹிந்து மதம் ஏற்று கொள்ள வில்லை. அதன் பாதிப்பு சமுகத்தில் இருந்தது, அது களையப்பட வேண்டும் என்று சொன்னது. தவறை தவறு என்று ஒத்துக்கொண்ட ஒரே மதம் ஹிந்து மதம்.
மற்ற மதங்கள் கோழைகள். சமகாலத்தில் இஸ்லாமிய தேசத்தை வன்முறை மூலம் உருவாக்கி கொண்டு இருக்கும் ஒரு அமைப்பு , பெண்களை அடிமைகளாக பிடித்து விற்பனை செய்ததை கண்டு உலகமே அதிர்ந்தது. இந்திய கோவில்களை கொள்ளை அடித்து திருடி , மக்களை கொன்று , அதில் அரபியாவில் தன் வயிறு வளர்த்த வளர்த்த மதம் , இன்று தன்னை அன்பு மதம் என்று சொல்கிறது. ஜீசயா என்று ஹிந்துக்கள் மீது மட்டும் அதிக வரி விதித்த வரலாறு பதிய பட்டு இருக்கிறது. தன் இறைவனை விற்பனை செய்ய மனிதர்களின் வயிற்றில் அடித்த மத கூட்டம் அல்லவா நீங்கள்.
இதை நான் சொல்ல வில்லை, கூகிள் அடித்துப் பாருங்கள். பல இஸ்லாமிய வரலாற்று ஆராயச்சியாளர்களே, இவர்கள் மதத்தின் பெயரால் இந்தியாவில் ஹிந்துக்கள் மீது நடத்திய கோர தாண்டவத்தை பற்றி வருத்த பட்டு பதிவு செய்து உள்ளார்கள்.
கிறிஸ்தவ மதம், கருப்பு நிறத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, இலட்சகணக்கான அடிமைகளை கொடுமைப்படுத்தி கொன்றது. சர்வ வல்லமை பொருந்திய கிறிஸ்தவர்களின் போப் ஆண்டவர்களால் கூட , கருப்பு நிற அடிமைகள் மீதான தாக்குதல்களையும், யூதர்களின் மீதான கொலை வெறியாட்டதையும் தடுத்து நிறுத்த முடியாமல் போனது ஏன்.
கறுப்பர்களுக்கு என்று தனி சர்ச் , கருப்பு இயேசு , (black jesus) என்று வரலாற்றில் கிறிஸ்தவத்தின் வெள்ளை நிற மக்கள் காட்டிய கொடூர தனம் பதிந்து இருப்பது மறந்து விட்டதா? இந்தியாவில் கருணை முகம் காட்டும் கிறிஸ்தவம் , ஆப்ரிக்கா நாடுகளில் கொடூரமான முகம் காட்டியது எதனால்?
இமயம் டிவியில் பேசிய ஒரு இழிபிறப்பு , கிறித்தவர்கள் இந்தியாவில் வந்ததால் தான் கல்வி வந்தது , மருத்தவம் வந்தது. அட ஆபிரகாம அடிமையே , என் முன்னோர்களிடம் கொள்ளை அடித்து, பிடுங்கி தின்ற காசில் , இங்கிலாந்து என்ற தேசம் வயிறு வளர்த்தது. ஆங்கிலயேன் கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக, அவனே ஆளட்டும் என்று, என் பாட்டன், முப்பாட்டன் குருதி சிந்தி சுதந்திர போராட்டம் நடத்தி கொண்டு இருந்த போது, விலகி இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருந்து விட்டு , இன்று அவனுக்கு மீண்டும் பல்லக்கு தூக்கி திரிகிறாய்? வெக்கமாக இல்லை உனக்கு?
இதனால் தான் பல கிறிஸ்தவ பள்ளிகள் , ஆங்கிலேயனால் தான் வாழ்வு வந்தது என்று சொல்லி கொடுக்கிறது. என் வீரர்களை கொன்ற ஒரு அரக்கர்களை , நீயும் அவனும் ஒரே மதம் என்ற காரணத்தினால் புகழ்ந்து கொண்டு இருக்கிறாய் என்று எங்களுக்கு தெரியாதா?. ஆங்கிலேயன் அடிமை படுத்திய எந்த தேசமும் , அவனை புகழந்து பேசுவது இல்லை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மிசநரிகளின் பள்ளிகள் மட்டும் புகழ்கின்றன, அதில் படித்து வந்து கூட்டம் மட்டும் தான் புகழ்ந்து கொண்டு இருக்கிறது.
சொந்த தேசத்தை சூறையாடி, அதன் பெரு மக்களை கொன்று , கொள்ளை அடித்த கூட்டத்தை நீ புகழ்கிறாய் என்றால், நீ எல்லாம் இந்த தேசத்தின் குடிமகன்?. உன்னை தாங்கும் என் தேசம் , உண்மையில் பரிதாபதக்கு உரியது .
உன் கூட்டம் சுதந்திரக்காக ரத்தம் சிந்தி இருந்தால், வலி என்னவென்று புரிந்து இருக்கும். எங்கள் மக்கள் சிந்திய ரத்தத்தில் குளித்த கூட்டம் அல்லவா அவர்கள்.
ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய எனது இந்தியா என்ற புத்தகத்தை படித்து பார், உன் கிறிஸ்தவ ஆங்கிலயர்கள் , கல்வியிலும், மருத்தவத்திலும் செய்த மோசடி தெரியும். சித்த மருத்தவத்தை ஆங்கிலேயன் ஏன் ஒழித்தான?. ஏன் எனில் இயேசுவின் அற்புதங்களை விட எங்கள் சித்தர்கள் செய்த காட்டிய அற்புதங்களை எங்கள் மக்கள் அறிய கூடாது என்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முடிவு செய்ததால்தான், சித்த மருத்தவம் இந்தியாவில் ஒழிக்கபட்டது.
நாடு பிடிக்க வந்த கூட்டம், தன் ஆளுமை வசதிக்காக ஆங்கிலத்தை கற்பித்தது. என்னவோ பிராந்திய மொழிகளை கற்பித்த கொடுத்த மாதிரி எத்தனை நாட்கள் இங்கே கதை விட்டு கொண்டு இருப்பீர்கள். திருட வந்தவன் , திருடுவதற்கு வசதியாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசி மயக்கினான். இதில் எங்கே சேவை , கருணை இருக்கிறது?. திருடனை புகழும் நீ எல்லாம் ஒரு பிறவி?
தெரிந்தோ தெரியாமல் , ஆக்ராவில் நடந்த மத மாற்றத்தை எதிர்த்து தேன் கூட்டில் கை வைத்து விட்டார்கள் மத மாற்றிகள்.
பெரும்பான்மை மக்களை எத்தனை காலம் உங்கள் நடிப்பில் ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள்?.
இறைவனை விற்று பிழைப்பு நடத்தும் அவசியம் ஹிந்து மதத்திற்கு என்றுமே இருந்தது இல்லை.
கட்டாய மத மாற்ற தடை சட்டம் வேண்டாம் , என்று ஹிந்து மதம் சொல்ல வில்லை. இஸ்லாமிய , கிறிஸ்தவ மத மாற்றிகள் தான் அய்யோ வேண்டாம் என்று அலறுகிறார்கள். கெஞ்சுகிறார்கள்.
ஏன் என்று ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியாதா என்ன?

Wednesday, December 10, 2014

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 6-பகுதி!!(நிறைவுற்றது)

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 6-பகுதி!!(நிறைவுற்றது)
அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். இறைவனை மறந்த மக்களை தண்டிக்க ஈசன் வெளிப்பட்ட தலம், சம்பந்தர் ஈசனை இங்கே காண வரும்போது , ஈசன் ஜடாமுடி கோலம் கொண்டு காட்சி அளித்த தலம். சிறிய கிராமம் இது. போகும் வழியில் பள்ளி சிறுவர்கள் கை காட்டி அழைத்து செல்ல வேண்டுகின்றனர்.
நான் போய் சேர்ந்த நேரம் மதியம் 1 மணி. கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்ட போது , அவர்களே ஆள் அனுப்பி கோவில் நிர்வாகத்திற்கு தகவல் சொல்லி அனுப்பினர். சிவலிங்கம் என்ற அன்பர் வந்தார். கோவில் திறந்தார். சிறிய கோவில். கண்டிப்பாக நிதி உதவி தேவைப்படும் கோவில். அர்ச்சகர் வெளியே போய் உள்ளார் என்று தெரிவித்தார்.
மிக பொறுமையாக ஈசன் பற்றி சொல்லுகிறார். ஈசன் அவர் வாழ்க்கையில் நடத்திய திருவிளையாடல்கள் பற்றி பேசுகிறார். சித்தருக்கு எல்லாம் சித்தன் இந்த சிவலிங்கத்தை சிறை பிடித்து உள்ளான் போலும். ஈசன் மீது பித்தாய் உள்ளார்.
தீப மேனியனுக்கு தீபம் காட்டுகிறார். யோகி இங்கே மலர்ந்து இருக்கிறது. யார் வந்து பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் எனக்கென்ன என்று அமர்ந்து இருக்கிறது. கருவறையில் இருந்து கல்லறை வரை வரப்போகும் கடவுள் இது. குற்றமற்ற இறை முன் நிற்கும்போது செய்த தவறுகள் நம்மை உயிரோடு கூறுப் போடுகின்றன. வெக்கம் நம்மை நெக்கி தள்ளி ஈசனை விடுத்து வெளியேற்றுகிறது.
சுற்றி வந்தால், சம்பந்தர் நடன கோலம் காட்டுகிறார். ஈசன் ஜடாமுடியுடன் காட்சி கொடுத்தது கண்டு , சம்பந்தர் பாடிக் கொண்டே ஆடினார் என்பதை அவர் நடன கோல சிற்பம் சொல்கிறது. கோவிலுக்கு சில அன்பர்கள் சிறிய உதவிகள் செய்து கொண்டு இருக்கின்றனர் என்பதை கோயிலில் குவிக்கப்பட்டு உள்ள மண் குவியல்கள் சொல்கின்றன.
அம்மை தனித்த சந்நிதியில் நிற்கின்றாள். அப்பன் பித்தன். சித்தன், யோகி. யோகியின் பாகம் உடையாள் வேறு எப்படி நிற்பாள். இல்லை என்று சொல்லை மறுப்பவரின் இல்லாள் , ஏழ்மை காட்டுகின்றாள். அவளின் வெறுமை கடுமையாக நம்மை சுட, தொழுதுவிட்டு வெளியேறினேன்.
சம்பந்தர் சொர்ணகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் போது, இருட்டி விட வழி தடுமாறி நிற்க, இந்த அம்மை எதிரே போய் அழைத்து வந்து இருக்கின்றாள். அவள் அழைத்த இடம் எதலவாடி என்று இன்றும் அழைக்கபடுகிறது.
அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் விழுப்புரம். என் பயண திட்டத்தின் கடைசி கோவில். மூன்று மணி அளவில் கோவில் அடைந்தேன். நடை சாத்தப் பட்டு இருந்தது. ஈசனை தோழராக பெற்ற சுந்தரர் அவதரித்த தலம். சுக்கிரனை ஈசன் விழுங்கி விட, எங்கே ஈசன் தன்னை ஜீரணம் செய்து விடுவார் என்று பயந்து , சிவத்தியானத்தில் சுக்கிரன் அமர , பல காலம் கழித்து ஈசன் அவரை வெளி எடுத்து நவக்கிரக பதவி கொடுத்த தலம். கருடன் , விஸ்ணு வழிபட்ட தலம்.
பெரிய கோவில். நல்ல நிலையில் உள்ளது. தென்னகத்தின் இறைவன் இங்கே கோவில் கொண்டுள்ளான். நம்பிக்கை என்பதை என் நெஞ்சில் விதைத்தவன் , இங்கே நடு நாயகமாக நிற்கின்றான் . நம்மை பார்த்து சிரிக்கின்றான். என்ன முறையான வாழ்க்கை பயணத்தில் நான் பயணிக்கின்றேன் என்பதும், ஏன் ஈசனே திரும்ப திரும்ப என் நினவை வழி மறுக்கின்றான் என்பது இன்று வரை புரிபட வில்லை.
கல்லுக்குள் அமர்ந்து, காலத்தின் கணவான் ,நம்மை கனிவாய் பார்க்கின்றான் என்பதை , உள்ளுக்குள் இருக்கும் உள்ளத்தை உலுக்கி, விழியை கழுவும் விழிநீர் நமக்கு உணர்த்துகிறது.
தாய் தனி கோலம் கொண்டு ஆள்கிறாள். உலகத்தின் அற்புதம் , அழகாய் உருவெடுத்து நமக்கு முன் அன்னையாக நிற்க, நாம் அவளுக்கு பிள்ளை ஆகின்றோம். தந்தையை எப்போதும் என் நினைவில் நிறுத்து என் தாயே என்ற தவிப்பாய் வேண்டுதல் வருகிறது
.
அன்னையின் அண்ணன் , உள்ளே தனி கோவில் கொண்டு உள்ளார். அவருக்கு பெயர் வரதராஜ பெருமாள். வாழ்வியல் தத்துவம் சொன்ன இறை இங்கே வீற்று இருக்கிறது. அர்ச்சகர் காலில் வலி இருந்தாலும், பரந்தாமானுக்கு சேவித்து வருகிறார்.
கோவில் சில குண்டர்களால் விளையாட்டு மைதானமாக பயன்படும் அவலத்தையும் நேரில் கண்டு உள்ளேன். அதை பற்றி தனி பதிவு பதிந்து உள்ளேன்.
ஈசனிடம் விடை பெற்று , அங்கிருந்து பரிகல் நரசிம்மர் கோவில் சென்று அடைந்தேன். பரிகாசுரன் என்ற அசுரனை கொல்ல இறை வெளிப்பட்ட தலம். எதிரிகள் அழிந்து போக வேண்டும் என்று பல அரசியல் வாதிகள் வந்து வழிபடும் தலம். நான் போகும் போது கூட ஒரு அரசியல் வாதி வந்து போனார்.
உக்கிரம் காட்டிய நரசிம்மர் , துணைவியுடன் உள்ளமர்ந்து உள்ளார். "எங்கும் நிறையும் இறை" என்ற வார்த்தையை உண்மையாக்க , இறை கொண்ட வடிவம் நரசிம்மம். வரிசையில் நிற்கும்போது அர்ச்சகர் ஒருவர் நரசிம்மரின் வரலாறு சொல்கிறார்.
"தவறாய் யோசிக்க சொல்லும் நிலையற்ற மனதை வென்று எடுக்க உதவுங்கள்" என் பெருமானே என்ற கோரிக்கையை வைத்தேன். ஆலயம் சுற்றி வந்தேன். செழிப்பான கோவில். பஞ்சுமுக அமைப்பு கொண்ட விளக்கின் வடிவமாக பெருமாளை வெளி பிரகாரத்தில் வைத்து உள்ளார்கள். பேருண்மையை கொண்டவன் இவன். அண்டத்தை வாயில் காட்டியவன், இங்கே பெருமாள் என்று முகம் காட்டுகின்றான்.
பணிந்து விட்டு வெளியே வந்தேன். கோவில் விடுத்து வீடு செல்ல வேண்டிய நேரம். இறையை சுற்றிய நினைவுகள் இனிதே நிறைந்து நிற்க, இன்பமாய் இரு சக்கர வாகனத்தை சென்னை நோக்கி செலுத்தி, இரவு பத்தரை மணி அளவில் , திருவான்மியூர் வந்து அடைந்து, ஈசனுக்கு நன்றி சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.













Tuesday, December 9, 2014

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 4-பகுதி!!

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 4-பகுதி!!
அதிகாலை எழுந்து , பயணித்து , திருவெண்ணெய் நல்லூர் அடைந்தேன். அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம். ஊர் அமைதியாக இருந்தது. கோவில் அருகே இருந்த கடையில் இருந்து சிவசுப்ரபதம் தவழ்ந்து கொண்டு இருந்தது.
முதியவராக வந்த ஈசன், சுந்தரரை திருமண பந்தத்தில் இருந்து தடுத்து , தனக்கு அடிமை என்ற நிரூபிக்க, வழக்கு தொடுத்து வாதாடிய தலம்.தாருகாவனத்து முனிவர்கள் அகந்தை அழிந்து , தவம் புரிந்த தலம். அர்ச்சுனன் வழிபட்ட தலம். எவன் வேதங்களின் நாயகனோ , அவனை சுந்தரர் பித்தன் என்று முதன் முதலில் அழைத்த தலம்.
கோவில் உள்ளே நுழைந்தும், இடப்பக்கம் ஈசனுக்கும் , சுந்தரர்க்கும் , வழக்கு நடைபெற்ற மண்டபம் உள்ளது. ஈசனின் பாதங்கள் நெடும்நேரம் பதிய பெற்ற இடம். ஈசனின் திரு உருவத்தை இங்கே பதிந்து உள்ளார்கள். சுந்தரரை வாதம் செய்து அடிமையாக கொண்டவன், வழக்கின்றி ,ஒரு வார்த்தை இன்றி, நம்மை அடிமையாக கைக் கொள்ளும் விந்தையயை என்ன வென்று சொல்வது.
வெளி வந்து கோவில் உள்ளே போனால், கோவில் பிரமாண்டமாக இருக்கிறது. சுந்தரர்க்கு தன்னை அறிவித்த ஈசன், இந்த கருவறையில் தான் மறைந்தான். நற்றுணைநாதன் நம்மை நோக்கி நலமாய் என்று கேட்கின்றான். உலகின் மொத்த அழகும் இங்கே ஈசனிடம் அடைக்கலமாகி அவனுக்கு அரணாய் நிற்கிறது. ஈசனை விட்டு, மங்கையரின் அழகு கண்டு மயங்கி தவித்த காலங்கள், மனதிற்குள் ஒளிர்கின்றன.
பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மலர்கள் ஈசனின் தலையில் இருந்து அவர் பாதம் நோக்கி பணிகின்றன. “அல்லல் என் செய்யும், அறுவினை என் செய்யும், தொல்லை வல்வினை தொன்தான் என் செய்யும், தில்லை மாநகர் சிற்றம்பலமாக்கு” என்ற பாடல் வரிகள் நம்மை அறியாமல் நமக்குள் வருகின்றன.
கருவறை உள்ளே, முதியவர் வேடம் பூண்டு வந்த ஈசன் , அணிந்த மிதியடிகள் வைத்து உள்ளனர்.
யாருடைய பாதங்கள், நமது பாவங்களை கழுவி விடுமோ, அவரின் பாதங்களை சுமந்த பாத ரட்சைகள் நம் கண் முன்னே. தொட்டு தழுவ முடியவில்லை நம்மால், தலை மீது வைத்து கூத்தாட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மீண்டும் மீண்டும் அதை பார்த்து விட்டு, கோவில் சுற்றி வந்தேன். நன்றாக வைத்து இருக்கிறார்கள்.
தாயார் பச்சை பட்டு உடுத்தி, நம்மை பரவச படுத்துகின்றாள். ஈசனின், சரி பாதி, தனி உருவம் கொண்டு, தனிமையில் தன்மையாக நிற்கின்றாள். தாயை தொழுது விட்டு, வெளியேறினேன்.அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், இடையாறு, விழுப்புரம். ஈசன் , அம்மைக்கு, சிவ ரகசியம் சொன்னதை மறைந்து இருந்து கேட்ட சுகபிரம்ம முனிவர், சாபம் பெற்று , மானிட பிறவி கண்டு, ஈசனை வழிபட்டு பாவ விமோசனம் பெற்ற தலம்.
நான் சென்ற நேரம் கோவில் நடை திறக்க வில்லை. 7.30 மணி ஆன பிறகும் நடை திறக்கும் அறிகுறி இல்லை. இத்தனைக்கும் அர்ச்சகர் வீடு மிக மிக அருகில் உள்ளது. அர்ச்சகர் வீட்டின் வெளியே மிக ஏழ்மை நிலையில் இருந்த இரண்டு பேர் காத்து கொண்டு இருந்தனர். காலை 5.30 மணி அளவில் இருந்து காத்து கொண்டு இருப்பதாக சொன்னதும் மனம் கனத்து போனது. அர்ச்சகர் வீட்டின் கதவை தட்டி திறக்க தயங்கிய காரணம் என்ன வென்று நான் தனியாக குறிப்பிட தேவை இல்லை.
நான் கதவை தட்டி , கோவில் திறக்க வேண்டினேன். இளம் வயது அர்ச்சகர் வந்தார், தந்தை வெளியே சென்று இருப்பதாகவும், இது கிராமம், இப்படி தான் இருக்கும் என்று சொன்னார். இது வரை சென்று வந்த கோவில்களில் , இந்த கோவிலில் தான் இப்படி ஒரு வாசகம் கேட்டேன். கிராமம் என்றால் இறைவனுக்கு நேரம் தவறாத பூஜை தேவை இல்லையா. கோவில் மிக சுமாராக இருக்கிறது. வருமானம் பெரிய அளவில் இல்லை.
பெரிய அலங்காரம் எதுவும் இன்றி அருளப்பன்(ஈசன்) அமர்ந்து உள்ளான். கால சக்கரத்தின் அச்சாணி எவரோ , அவரின் ஆலயத்தின் நிலை நம் முகத்தில் அறைகிறது. முக்காலம் அறிந்த ஒன்று நம் முன்னே நிற்கிறது என்பது மூளையில் உறைக்க, எக்காலம் வந்தாலும், உன்னை மறவாத மனமே வேண்டும் என் ஈசனே என்ற பீறிடல் உள்ளே எழுகிறது. மரணத்தை தழுவும்போது என் ஐயனே நீயே வந்து என்னை தழுவ வேண்டும், உன் பேர் சொல்லி தான் உயிர் உடலை துறக்க வேண்டும் என்ற வேண்டுதல் வருகிறது.
தாயை கண்டால், தவிப்பாய் வருகிறது. ஆடை மட்டும் அணிந்த அரசி இவள். கணவன் நிலை கண்டு கலங்கி நிற்கும் மனைவியாக நிற்பது போல் உள்ளது. கவலை கொண்டவள் முகத்தில் , மைந்தனக்கான கனிவை உற்று நோக்கினால் அறிய முடிகிறது. சுற்றி வந்தால், சுகம்பிரம்ம முனிவர் சுகமாய் அமர்ந்து உள்ளார். என்னால் முடிந்த உதவி அளித்துவிட்டு வெளியே வந்தேன்.


Wednesday, December 3, 2014

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 5-பகுதி!!

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 5-பகுதி!!
இடையாறில் இருந்து திரு கோவிலூர் செல்லும் வழிகள் மோசமாய் இருக்கிறது. இரு சக்கர வாகனத்தின் கியரை மாற்றி மாற்றி உபயோக படுத்தியதால், கைகள் தளர்கின்றன. எப்படியோ திருக்கோவிலூர் அடைந்தேன். தமிழ் மன்னர்களின் சரித்திரம் பேசும்போது , இந்த ஊர் கண்டிப்பாக குறிப்பிடபடும்.
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம். அந்தகாசூரனை சிவபெருமான் வதம் செய்த திருத்தலம். வாஸ்து பிறந்தது இத்தலத்தில் என்கிறார்கள். சுக்கிரன் சாபம் நீங்க பெற்ற தலம். கோவில் உள்ளே நுழைந்தால், வீடு கட்ட செங்கற்களை வைத்து யாகம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அந்தகம் என்றால் இருள், அதை அழித்தவன் இந்த ஈசன் என்று அர்ச்சகர் கோவில் வரலாறு சொல்கிறார். இருளை அழித்தவன் இவன் என்று அங்கே இருக்கும் விளக்குகள் வழி சொல்கிறது. இருளாய் கிடக்கும் மனம் , ஆடும்நாதனை காண்கையில் கதிரவனாய் மலர்கிறது. தாயார் தனியாக கோவில் கொண்டு உள்ளார். கலைகளின் அரசி களையாக உள்ளாள்.
விடைபெற்று, அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் போகும் வழியில், கபிலர் குன்று வருகிறது. பாரியின் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோயிலூர் ஆண்ட தெய்வீக மன்னனுக்கு அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த பின்பு, பாரியின் மறைவு தாங்கமால் கபிலர் உயிர் நீத்த இடம் இது.
நட்பின் நினைவு சின்னம். பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது. ஒருவர் மட்டும் மேலே ஏறும் அமைப்பு உள்ள கோவில். சிறிய லிங்கம் உள்ளே வைத்து இருக்கிறார்கள்.
அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் விழுப்புரம், பிற சமயதவாரால், கோவில் அடைக்கப்பட்டு இருக்க, சம்பந்தரால் மீட்கப்பட்ட தலம். விஸ்ணு மகாபலியை கொன்ற பாவத்தை ஈசன் நீக்கிய தலம்.
திருஞானசம்பந்தர் இங்கு வந்து ஈசனை வணங்கி பதிகம் பாடிவிட்டு திருவண்ணாமலை செல்ல முயற்சித்து முடியாமல் போனதால், இக்கோயிலிலேயே அண்ணாமலையாரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் இங்கிருந்தே தூரத்தில் தெரிந்த திருவண்ணாமலையாரை குறித்து பதிகம் பாடினார்.
சம்பந்தர் திருவண்ணாமலையாரை வணங்கி பதிகம் பாடிய இடத்தில் ஒரு பீடத்தின் மேல் அவரது இரு பாதங்களும் இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் திருவண்ணாமலையை முழுவதுமாக பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். அழகான கோவில்.சுற்றி அகழி போல் உள்ளது. சிறு குன்றின் மேல் உள்ளது. நான் சென்ற பொது கருவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது.
இரும்பு கதவின் ஊடே ஈசன் தெரிகின்றான். கருவறை முன் மண்டபத்தில் அமைந்தால், சுகமாய் காற்று தழுவுகிறது. நிதியுதவி தேவைப்படும் கோவில். கோவில் கூட்டும் பெண்மணியிடம் பேசினால், சம்பளம் எதுவும் பெரிதாக இல்லை. ஆனால், சாமியை எப்படி இப்படியே விடுவது. அர்ச்சகர் கோவிலை பிரபல படுத்த முயன்று கொண்டு இருக்கிறார்.
நான் முடிந்த வரை கோவில் சுத்தபடுத்த முயல்கின்றேன் என்றார். கோவில் உண்மையில் தூயமையாக உள்ளது. குழந்தைகள் உள்ள தாய், ஈசனையும் குழந்தையாக கருதுகிறார். இவர்கள் தான் உண்மையில் ஹிந்து மதத்தின் சொத்து.இவருக்கு நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் கருவறை மண்டபம் வந்தேன்.
அர்ச்சகர் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். உள் பிரகாரம் சுற்றி வந்தேன், கிட்டத்தட்ட முப்பது முறை சுற்றி வந்தேன். இரண்டரை மணி நேரம் யாரும் வர வில்லை. தூக்கம் கண்ணை கட்டி கொண்டு வந்தது. திருவண்ணாமலை போகும் முன் ரமணர் இங்கே வந்து வழிபட்டார்.
கண் மூடி அமர்ந்த அவரின் உருவ சிலை அருகே போய் அமர்ந்தேன். எது ரமணரை இழுத்தது, திருவண்ணாமலைக்கு. வீடு விட்டு கோவில் பார்க்க வந்தாலும், மீண்டும் வீட்டிற்கு திரும்ப செல்லும் நினைப்பு நம்மை செலுத்தி கொண்டு இருக்கிறது. என்ன செய்தால் எல்லாவற்றையும் உதறும் அந்த தைரியம் எனக்கு வரும் என்ற தெரியவில்லை.
கோவில் கோவில் போனாலும் ஈசனை முழுதும் அறிய முடியவில்லை இன்னும் என்னால்.. ஈசனை எப்படி அறிந்து கொள்வது என் சொல்லி கொடுங்கள் ரமணரே என்ற வேண்டிக்கொண்டு இருக்கும்போதே உறங்கி போனேன். ரமணரை நினைத்து கொண்டு இருந்தால், கனவில் சம்பந்தர் வருகிறார். ஏதோ ஏதோ கோவிலுக்குள் செய்து கொண்டு இருப்பதாக கனவிற்குள் வருகிறது.
ஈசன் கல்லாய் நிற்க, தாயார் transformer படம் போல் உயிர் பெற்று குழுந்தை சம்பந்தருடன் கோவில் சுற்றி விளையாடுவது போல கனவு போய் கொண்டு இருக்க, தலை மேல் ஒரு அடி பலமாக விழுந்த உணர்வு பெற்று, கண் விழித்தால், குழந்தை ஒன்று என் தலையில் தட்டி கொண்டு இருந்தது.
மீண்டும் தட்ட முயல , அந்த குழந்தையின் தாய் பிடித்து கொண்டாள். கோவில் பார்க்க வந்த தம்பதி போலும். சரியான சுட்டி குழந்தை அது. ரமணர் சிலையை போய் கட்டி கொள்வதும், ஒரே கொண்டாட்டம் தான் அதற்கு. அவர்கள் போன சிறிது நேரம் கழித்து அர்ச்சகர் வந்தார்.
கருவறை திறந்தார். என் காவலனை காட்டினார். “தடுமாறும் புத்தி, கோவில் கதவு தாண்டியதும், பள்ளத்தில் விழுகிறது, அதை தடுக்கும் வழி தெரியவில்லை எனக்கு, பஞ்ச பூதங்களை ஆள்பவனே, என் ஐம்புலன்களையும் அடக்கி ஆள எனக்கு சொல்லி தருவாயா என்ற வேண்டுதல் விடுத்தேன்
பதில் சொல்லாமல், பூக்கள் கொண்டு ஈசன் நமக்கு புன்னகை செய்ய, நம் மனமோ ஈசன் முன் உயிரோடு புதைகின்றது. சிரமப்பட்டு வெளி வந்து , கோவில் சுற்றி விடை பெற்றேன்.
















Thursday, November 27, 2014

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 4-பகுதி!!

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 4-பகுதி!!
அதிகாலை எழுந்து , பயணித்து , திருவெண்ணெய் நல்லூர் அடைந்தேன். அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம். ஊர் அமைதியாக இருந்தது. கோவில் அருகே இருந்த கடையில் இருந்து சிவசுப்ரபதம் தவழ்ந்து கொண்டு இருந்தது.
முதியவராக வந்த ஈசன், சுந்தரரை திருமண பந்தத்தில் இருந்து தடுத்து , தனக்கு அடிமை என்ற நிரூபிக்க, வழக்கு தொடுத்து வாதாடிய தலம்.தாருகாவனத்து முனிவர்கள் அகந்தை அழிந்து , தவம் புரிந்த தலம். அர்ச்சுனன் வழிபட்ட தலம். எவன் வேதங்களின் நாயகனோ , அவனை சுந்தரர் பித்தன் என்று முதன் முதலில் அழைத்த தலம்.
கோவில் உள்ளே நுழைந்தும், இடப்பக்கம் ஈசனுக்கும் , சுந்தரர்க்கும் , வழக்கு நடைபெற்ற மண்டபம் உள்ளது. ஈசனின் பாதங்கள் நெடும்நேரம் பதிய பெற்ற இடம். ஈசனின் திரு உருவத்தை இங்கே பதிந்து உள்ளார்கள். சுந்தரரை வாதம் செய்து அடிமையாக கொண்டவன், வழக்கின்றி ,ஒரு வார்த்தை இன்றி, நம்மை அடிமையாக கைக் கொள்ளும் விந்தையயை என்ன வென்று சொல்வது.
வெளி வந்து கோவில் உள்ளே போனால், கோவில் பிரமாண்டமாக இருக்கிறது. சுந்தரர்க்கு தன்னை அறிவித்த ஈசன், இந்த கருவறையில் தான் மறைந்தான். நற்றுணைநாதன் நம்மை நோக்கி நலமாய் என்று கேட்கின்றான். உலகின் மொத்த அழகும் இங்கே ஈசனிடம் அடைக்கலமாகி அவனுக்கு அரணாய் நிற்கிறது. ஈசனை விட்டு, மங்கையரின் அழகு கண்டு மயங்கி தவித்த காலங்கள், மனதிற்குள் ஒளிர்கின்றன.
பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மலர்கள் ஈசனின் தலையில் இருந்து அவர் பாதம் நோக்கி பணிகின்றன. “அல்லல் என் செய்யும், அறுவினை என் செய்யும், தொல்லை வல்வினை தொன்தான் என் செய்யும், தில்லை மாநகர் சிற்றம்பலமாக்கு” என்ற பாடல் வரிகள் நம்மை அறியாமல் நமக்குள் வருகின்றன.
கருவறை உள்ளே, முதியவர் வேடம் பூண்டு வந்த ஈசன் , அணிந்த மிதியடிகள் வைத்து உள்ளனர்.
யாருடைய பாதங்கள், நமது பாவங்களை கழுவி விடுமோ, அவரின் பாதங்களை சுமந்த பாத ரட்சைகள் நம் கண் முன்னே. தொட்டு தழுவ முடியவில்லை நம்மால், தலை மீது வைத்து கூத்தாட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மீண்டும் மீண்டும் அதை பார்த்து விட்டு, கோவில் சுற்றி வந்தேன். நன்றாக வைத்து இருக்கிறார்கள்.
தாயார் பச்சை பட்டு உடுத்தி, நம்மை பரவச படுத்துகின்றாள். ஈசனின், சரி பாதி, தனி உருவம் கொண்டு, தனிமையில் தன்மையாக நிற்கின்றாள். தாயை தொழுது விட்டு, வெளியேறினேன்.அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், இடையாறு, விழுப்புரம். ஈசன் , அம்மைக்கு, சிவ ரகசியம் சொன்னதை மறைந்து இருந்து கேட்ட சுகபிரம்ம முனிவர், சாபம் பெற்று , மானிட பிறவி கண்டு, ஈசனை வழிபட்டு பாவ விமோசனம் பெற்ற தலம்.
நான் சென்ற நேரம் கோவில் நடை திறக்க வில்லை. 7.30 மணி ஆன பிறகும் நடை திறக்கும் அறிகுறி இல்லை. இத்தனைக்கும் அர்ச்சகர் வீடு மிக மிக அருகில் உள்ளது. அர்ச்சகர் வீட்டின் வெளியே மிக ஏழ்மை நிலையில் இருந்த இரண்டு பேர் காத்து கொண்டு இருந்தனர். காலை 5.30 மணி அளவில் இருந்து காத்து கொண்டு இருப்பதாக சொன்னதும் மனம் கனத்து போனது. அர்ச்சகர் வீட்டின் கதவை தட்டி திறக்க தயங்கிய காரணம் என்ன வென்று நான் தனியாக குறிப்பிட தேவை இல்லை.
நான் கதவை தட்டி , கோவில் திறக்க வேண்டினேன். இளம் வயது அர்ச்சகர் வந்தார், தந்தை வெளியே சென்று இருப்பதாகவும், இது கிராமம், இப்படி தான் இருக்கும் என்று சொன்னார். இது வரை சென்று வந்த கோவில்களில் , இந்த கோவிலில் தான் இப்படி ஒரு வாசகம் கேட்டேன். கிராமம் என்றால் இறைவனுக்கு நேரம் தவறாத பூஜை தேவை இல்லையா. கோவில் மிக சுமாராக இருக்கிறது. வருமானம் பெரிய அளவில் இல்லை.
பெரிய அலங்காரம் எதுவும் இன்றி அருளப்பன்(ஈசன்) அமர்ந்து உள்ளான். கால சக்கரத்தின் அச்சாணி எவரோ , அவரின் ஆலயத்தின் நிலை நம் முகத்தில் அறைகிறது. முக்காலம் அறிந்த ஒன்று நம் முன்னே நிற்கிறது என்பது மூளையில் உறைக்க, எக்காலம் வந்தாலும், உன்னை மறவாத மனமே வேண்டும் என் ஈசனே என்ற பீறிடல் உள்ளே எழுகிறது. மரணத்தை தழுவும்போது என் ஐயனே நீயே வந்து என்னை தழுவ வேண்டும், உன் பேர் சொல்லி தான் உயிர் உடலை துறக்க வேண்டும் என்ற வேண்டுதல் வருகிறது.
தாயை கண்டால், தவிப்பாய் வருகிறது. ஆடை மட்டும் அணிந்த அரசி இவள். கணவன் நிலை கண்டு கலங்கி நிற்கும் மனைவியாக நிற்பது போல் உள்ளது. கவலை கொண்டவள் முகத்தில் , மைந்தனக்கான கனிவை உற்று நோக்கினால் அறிய முடிகிறது. சுற்றி வந்தால், சுகம்பிரம்ம முனிவர் சுகமாய் அமர்ந்து உள்ளார். என்னால் முடிந்த உதவி அளித்துவிட்டு வெளியே வந்தேன்.
குறிப்பு: ஈசனின் பாத ரட்சைகள் அனைவரும் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் புகைப்படம் எடுத்து பதிவு செய்தேன். கோவில் நிர்வாகத்திற்கு அது தவறு என்ற பட்டால், அதை நீக்கி விடுகின்றேன்.











Wednesday, November 26, 2014

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 3-பகுதி!!

 அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். திருவக்கரை வக்கிர காளியம்மன் கோவில் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். உள்ளே நுழைந்தவுடன் காளி எதிர்படுகிறாள். அச்சமுட்டும் உருவம், சிறிது நிதானித்து பார்த்தால், அனபானவாளாக தெரிகின்றாள். அவளை வணங்கி விட்டு, ஈசன் நோக்கி போனேன்.
ஈசன் மும்முகத்தில் காட்சி அளிப்பது இங்கே மட்டுமே. அலங்கார பிரியன் அரசனின் தோரணையில் அமர்ந்து இருக்கின்றான். சூரியன் கண்டு மலரும் தாமரை போல், ஈசனை பருகி, தீபங்கள் மலர்ந்து மிளிர்கின்றன. நல்ல நிலையில் உள்ள கோவில். குண்டலினி சித்தரின் ஜீவ சமாதி ஈசனை ஒட்டி உள்ளது. நீங்கள் அறிந்த ஈசனை எனக்கு அறிவிக்க மாட்டிர்களா சித்தரே , என்று அவரிடம் வேண்டி கொண்டு வெளியே வந்தேன்.
அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். தட்சனின் யாகத்திற்கு சென்று ஈசனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பாவம் நீங்க வந்து வழிபட்டு மீண்டும் உருவம் பெற்ற தலம். என் பாவ கணக்கு ஒரு கோவிலுடன் முடிய கூடிய விஷயம் அன்று என்று எனக்கு தெரியும். சுமாரான நிலையில் உள்ள கோவில். யாரும் இல்லை கோவிலில். வழக்கம் போல் ஈசன் தனித்து நிற்கின்றான். காலத்தின் கணக்கு நாம் கண் முன்னே நிற்கிறது.
என்ன வேண்டுவது என்று தெரிய வில்லை. பேரின்பம் என் கண் முன்னே நிற்கும்போது , வேறு எதை கேட்பது ஈசனிடம். ஈசா என்ற வார்த்தை மட்டும் உள்ளே உலவி கொண்டு இருக்க, மௌனமாய் கோவில் விட்டு வெளியேறினேன்.
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். பசுக்கள் , கொம்பு வேண்டி ஈசனை வழிபட்ட தலம் மற்றும் ராமர் வழிபட்ட தலம். இரவு ஏழு மணியளவில் கோவிலை அடைந்தேன். பெரிய கோவில். அனல்விழியனை (ஈசன்) கண்டால் மனம் ஆடி போகிறது. கோவில் வரலாறு சொல்லி அர்ச்சகர் நகர்ந்து போகிறார்.
மீண்டும் ஒரு தனிமை தவம் ஈசனுடன். வேண்ட நினைத்தாலும் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வேண்டுதல் நின்று போய் விட்டது என்று புரிகிறது. வில்வ மாலை அணிந்தவன் , நம்மை வில் எய்தாமலே வீழ்த்துகின்றான். தாயை தேடினால் , தாய் கோவிலில் இல்லை. கலவரமாகி , அர்ச்சகரிடம் கேட்டால், பிருகு முனிவர் ஈசனை மட்டும் வணங்கியதால் , அம்மை கோபித்து கொண்டு எதிரே தனி கோவில் கொண்டு உள்ளாள் என்றார்.
வெளிவந்து பார்த்தால், தனி கோபுரம் கொண்டு, தனி கோவிலில் நிற்கின்றாள் அம்மை. எப்படி கவனிக்காமல் விட்டோம் என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தால், நிலவு இறங்கி வந்து கோவிலில் நிற்பது போன்று ஒரு குளுமை கோவிலுக்குள். ஈசனிடம் இருந்து சந்திரன் இடம் மாறி தாயிடம் நிற்கின்றான் போலும், அன்பு இங்கே அபிராமியாக நம்மை அள்ளுகிறது.
இரவு 8 மணியை நெருங்க, இனிமேல் மற்ற கோவில்கள் திறந்து இருக்க வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் கொண்டு , திருவெண்ணெய் நல்லூரில் தங்கும் விடுதி தேடி கொள்ளலாம் என்று பயணித்தேன். 
வழியில் கிரமாம் என்று ஊரை தாண்டும் போது, நாய் ஒன்று வேகமாக குறுக்கே ஓடியது. தடுமாறி போய், கீழே விழ வேண்டிய நிலையை சமாளித்து , வண்டியை ஓரத்தில் நிறுத்தினேன்.
வண்டியை நிறுத்திய இடத்தில் இடபக்க சந்தில் ஒரு கோவில் கோபுரம் தென்பட்டது. என்ன கோவில் என்ற யோசனையுடன் சென்றால் , அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் என்ற பலகையை கண்டவுடன் தூக்கி வாரி போட்டது எனக்கு. என் பயண திட்டத்தில் பார்க்க வேண்டிய பாடல் பெற்ற தலம் இது.
உண்மையில் அபிராமேஸ்வரர் திருக்கோயில் பார்த்து முடித்த உடன், இடையாறு அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், பின்பு திருவெண்ணெய் நல்லூர், பின்பு அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் என்பது என் பயண திட்டம். எப்படி பயண திட்டத்தை மாற்றிக் கொண்டேன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
கோவில் நடை திறந்து இருந்தது , இரவு 8.45 மணி. வெளி ஊரில் இருந்து வந்த பக்தர்கள் திருவெண்ணெய் நல்லூர் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள், அவர்கள் வந்து பூஜை செய்வதற்கு வசதியாக கோவில் நடை அடைக்காமல் உள்ளோம், இல்லை 7.30இல் இருந்து 8 மணிக்குள் கோவில் அடைத்து விடுவோம் என்று கோவில் துப்பரவாளர் சொன்னார்.
உற்சாகமாக உள்ளே சென்றேன். ஈசனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம், அதிசய மலரை பறிக்க நினைத்த மன்னன், ஈசன் மீது அம்பு விட்ட தலம். என் ஈசனின் கருணை, பல கோவில்களில் கருவறை முன் தனியாக நிற்கும் பேறு கிடைத்து கொண்டு வருகிறது எனக்கு.
அழுகை தானாக வருகிறது ஈசனை கண்ட உடன். சித்தர்களும், யோகிகளும் , ஏன் ஈசனையே நாடுகின்றனர் என்பது ஈசன் முன் நிற்கும்போது உணர்த்தபடுகின்றது நமக்கு. கருவறையில் பிறந்த நாம், இன்னோர் கருவறை முன் வந்து நிற்கின்றோம். இங்கே தாயுக்கும், தாயுமானவன் கருவறையில் நிற்கின்றான். கருவறை நமக்கு இன்னோர் தாயின் வீடாக அறிவிக்க படுகிறது.
கவலைகள் நம்மிடம் இருந்து கழற்றி எறியப்படுகிறது. பாதுகாப்பு என்ற சொல்லின் அர்த்தம் இங்கே பலமாக நம்மால் உணரப்படுகிறது. கோவில் சுற்றி வெளியே வந்தால், நம் பைக்கின் முன் குறுக்கே பாய்ந்த, நாயார் நிற்கிறார் வாலை ஆட்டிக்கொண்டு. நன்றி சொல்லிவிட்டு , திருவெண்ணெய் நல்லூர் கோவில் நோக்கி பறந்தேன்.
நான் சென்ற போது, திருவெண்ணெய் நல்லூர் கோவில், நடை அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு தங்கும் விடுதி எதுவும் இல்லை. திருக்கோவிலூர் செல்லலாம் என்று நினைத்தால் , மிக மோசமான சாலைகள் , இரவில் பயணிப்பது சரியான செயல் அன்று என்று அங்குள்ளவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
சில அன்பர்கள் தங்கள் வீட்டில் தங்கும் படி ஆதரவு காட்டினார்கள். நன்றி சொல்லி விட்டு, வேறு வழி இல்லாமல், மீண்டும் விழுப்புரம் வந்து ,விடுதி எடுத்து நன்றாக அயர்ந்தேன்.





!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 2-பகுதி!!

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 2-பகுதி!!
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு. சம்பந்தரை கொல்ல சமணர்கள் அனுப்பிய பாம்பை , ஈசன் பாம்பாட்டியாக வந்து பிடித்து சம்பந்தரை காத்த தலம். ஆண் பனை மரங்கள் ஈசனின் அருளால் பெண் பனை மரங்களாக குலை தள்ளிய அதிசயம் நடை பெற்ற தலம். மிக நல்ல நிலையில் உள்ள கோவில். எந்த குறையும் இல்லாமல் ஈசன் நிற்கின்றான்.
வெள்ளை வேட்டி அணிந்து வெள்ளிச்வரன் அருள்கின்றான். கலியுகத்தின் எட்டாத இறை, இங்கே நமக்கு கிட்ட நிற்கிறது. வாழ்வின் அர்த்தம் ஈசன் முன் நிற்கும்போது விளங்குகிறது. வாழ்வின் வழித்தடம் எங்கும், என் வழித்துணையாய் வா என் அப்பனே என்று வேண்டி கொண்டு கோவில் விடுத்து வெளி வந்தேன்.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். திண்டிவனம்-பாண்டிச்சேரி சாலையில் உள்ளது. கடுமையான மழை, இருசக்கர வாகனத்துடன் சேர்த்து என்னை அள்ளியது. ஈசன் முகம் பார்க்க வேண்டும் என்று எண்ணமே இருந்ததால் , நிற்காமல் பயணத்தை தொடர்ந்தேன். ஆனால் ஈசன் இங்கு முகம் காட்ட மறுத்தான். கோவில் அர்ச்சகர் வெளி ஊர் சென்று விட்டார்.
வீட்டில் விசாரித்ததில், சரியான தகவல் இல்லை. வெளி ஊரில் இருந்து கோவில் பார்க்க வந்துள்ளோம் என்று சொன்ன பிறகும், அர்ச்சகர் வீடு அலட்சியமாக இருந்ததாக பட்டது எனக்கு. எப்போது அவர் திரும்பி வருவார் என்று உறுதியாக அவர்களால் சொல்ல முடியவில்லை. பின்பு தினமலரில் குறிக்கப்பட்ட நம்பரை தொடர்பு கொண்டேன். கோவில் சம்பந்தப்பட்டவர் போலும், மிகவும் பொறுமையாக கோவிலை பற்றி தகவல் சொன்னார். அர்ச்சகர் நம்பர் தந்தார்.
அர்ச்சகர் நம்பரை தொடர்பு கொண்ட போது, வெளியூரில் இருப்பதாகவும் , நாளை தான் வருவேன் என்றும் பதமாக பேசினார். வேறு அர்ச்சகர், நாளை வந்து பூஜை செய்வதாக சொன்னார். அந்த அர்ச்சகரின் நம்பர் கேட்டதற்கு , பல வித காரணத்தை சொல்லி மறுத்துவிட்டார். யாரும் வந்து பூஜை செய்ய போவதில்லை என்பதை அவர் நம்பர் தர மறுத்ததில் இருந்து புரிந்து கொண்டேன்.
ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் கோவிலில் வெளி நின்று ஈசனை வணங்கி விட்டு, நாளை உனக்கு அந்த ஒரு கால பூஜையும் நடக்காதா என்ற வேதனையுடன் அடுத்த கோவில் நோக்கி சென்றேன்.
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். சாளுக்கிய மன்னனுக்கு ஈசன் மானாக வெளிப்பட்டு அருள் செய்த தலம். நான் சென்ற மதிய பொழுது, கோவில் நடை திறந்து இருந்தது. ஈசன் அமைந்த பகுதி பூட்டப்பட்டு இருந்தது. அருகில் தான் அர்ச்சகர் வீடு என்பதால், அர்ச்சகரை ஈசன் முகம் காட்டும் படி வேண்டினேன். இளவயது ஒத்த அர்ச்சகர் வந்து ஈசனை காட்டினார்.
மானாக வந்தவன், ஒயிலாக நிற்கின்றான். வேதங்களின் அதிபதி, முன் நிற்கும்போது வெளித்தொடர்புகள் மெல்ல அறுகின்றன. கற்பனைக்கு எட்டாதவன் காலடி பற்றி, மனம் கண்ணீரில் கரைகிறது. இன்னும் எத்தனை நாட்கள் என் ஈசனே, உன் திருவடி நிழலில் நிரந்தரமாய் இளைப்பாற என்ற கேள்வியுடன் விடைபெற்றேன்.
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். இந்த கோவில் செல்லும்போது நடை சாத்தி இருந்தது. அங்கிருந்த குளத்தின் அருகே அமர்ந்து இருந்தேன். கடுவெளி சித்தரக்காக , ஈசன் சினந்து அரசனையும் , மக்களையும் தண்டித்த தலம், பார்வதி தாயார் அசுரர்களை கொன்ற பழி நீங்க தன் மன்னவனை வழிபட்ட தலம்.
கோபம் கொண்டு மூன்றாய் வெடித்து சிதறிய லிங்கத்தை , செப்பு பட்டயத்தில் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறார்கள். போருக்கு கிளம்பும் போர் படை கவசம் கொண்டு ஈசன் நிற்பதாக தோன்றியது எனக்கு. முதல் கள பலியாக என்னை ஏற்றுக் கொண்டு, என் பிறவிக்கு ஒரு முற்று புள்ளி வை என் ஈசனே என்று மனம் வேண்டுகிறது.
மங்கி போன மனம், மாசற்ற சோதி முன் , உடல் பிடித்து நிற்க கூட முடியாமல் முடங்குகிறது. சுற்றி சுற்றி வந்து நின்றாலும் , சிறுகதையாக முடியாமல் , நெடும்கதையாக ஈசனை தொடரும் பயணம், நெடும் தூரமாக நீள்கிறது. பயணம் இன்னும் தொடரும்......





கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...