274 பாடல் பெற்ற சிவதலங்களின் 2-வது சுற்றின் 9-வது பகுதி.(நிறைவுற்றது)
சிறிது நேரம் கண் அயர்ந்து விட்டு, மாலை அங்கிருந்த கை பம்பில் முகம் , கால் கழுவி விட்டு மாலை மங்க தொடங்க, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் நோக்கி புறப்பட்டேன்.
போகும் வழியில் மரணித்து கிடக்கும் வெள்ளாறு வருகிறது. ஆறுகள் நம் நாகரிகத்தின் உச்சத்தை சொல்பவை. சேலை உடுத்திய ஆற்று மங்கையை , துகிலுரித்து எறிந்த துச்சாதனன் கூட்டமாய் மனித கூட்டம். திரளபதியின் துகில் தொட்ட கௌரவ கூட்டம் குல நாசம் அடைந்தது. இயற்கையின் மகளை துகிலுரித்த மனித குலத்திற்கு என்ன கேடு நேர போகிறதோ என்ற அச்சத்துடன் வெள்ளாறை கடந்து கோவில் அடைந்தேன்.
பெண்ணாடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் கோவில் அமைந்து உள்ளதால் , மக்களின் வருகை நன்றாக உள்ளது. கோவிலும் நல்ல நிலையில் உள்ளது. நாவுக்கரசர் உடல் மீது ஈசன் திரிசூல, ரிஷப முத்திரை பதித்த தலம், 63 நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பர் நாயனார் சிவனடியாருக்கு பாத பூஜை செய்ய மறுத்த மனைவியின் கையை வெட்டிய தலம், சம்பந்தர் வாழ்ந்த தலம் என பல சிறப்பு பெற்றது.
அண்டத்தின் அதிபதி அலட்டிக்கொள்ளாமல் அமர்ந்து இருக்கிறது. கருவறைக்குள் இருப்பவன் காலத்தை கடந்து நிற்பதும், எல்லா பிறவிகளிலும் ஈசனே நம்மை தொடர்ந்து வருவதும் மெல்ல புரிகிறது. தாய், தந்தை. மனைவி, பிள்ளை என்ற எல்லா உறவுகளும் உடம்பின் மிச்சமாகி நிற்க, ஈசன் மட்டுமே உயிரை தொடர்கின்றான். உடல் தீர்ந்து போக, உறவுகள் அறுந்து போகும், ஆனால் ஈசன் ஒருவன் மட்டுமே கடைசி வரை நம்மில் நிற்கும் உறவு.
கோவில் நம்மை மிரட்டுகிறது. புலித்தோல் போர்த்திய நடராஜரை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. ஈசனை நான்கு பக்கம் நின்று பார்க்கும் அமைப்பு உடைய கோவில். எப்பக்கம் நின்று பார்த்தாலும், அப்பன் நம்மை ஈர்கின்றான். இந்த கோவிலில் மேலே தனியாக ஒரு சிவலிங்கம் உள்ளது. சோழ மன்னனுக்கு , மேட்டு பகுதியில் இருந்து ஈசன் காட்சி அளித்த பகுதி இது. கீழ் இறங்கி சுற்றி வந்தால் , ஈசனின் மற்ற கோலங்கள் பார்க்க முடிகிறது. ஈசன் என்ற முகமே நம்மை கிறங்கடிக்க , மற்ற கோலங்கள் பற்றி தனியாக சொல்ல தேவை இல்லை. மீண்டும் ஒரு முறை கோவில் சுற்றி விடை பெற்று, திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் அடைந்தேன்.
கோவில் அமைதியாக உள்ளது. கோவில் வாசல் அருகே ஒரு சிறு கூட்டம் கேரம் விளையாடி கொண்டு இருந்தார்கள். சிறு குழந்தைகள் கூட்டம் ஒன்று உள்ளே, தனக்கு தெரிந்த வழியில் ஈசனை தரிசித்து கொண்டு இருந்தனர். குழந்தைகள் நிலம் பட விழுந்து இறையை வணங்குவது ஒரு தனி அழகு. சிந்தனைகள் சிதறி சிறு பிள்ளைகள் பின் ஓட எத்தனிக்க, அர்ச்சகர் வருகையால் அறக்கொடியோன்(ஈசன்) மேல் நம் விழிகள் விழுகிறது. விழியில் பாய்ந்தோடி ஈசன், நம் உதிரத்தில் கலக்கின்றான்.
அந்தமும் ஆதியும் இல்லாததது , ஜோதி ரூபமாய் தெரிகிறது. சம்பந்தர்க்கு முத்து சிவகை கொடுக்க சொன்னவர் அல்லவா இவர். சுற்றி வந்தால் ஆலயம் சுத்தமாக உள்ளது. தாயரையும் தரிசித்து விடை பெற்றேன்.
பயண திட்டப்படி இன்னும் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மட்டும் பார்க்க வேண்டி இருந்தது. இரவு 9 மணிக்குள் அந்த கோவிலை பார்த்துவிட்டு , நடுஜமாத்தில் சென்னை வந்தடைய திட்டம்.
திட உணவு எடுத்து கொள்ளாத காரணத்தினால், பசி வயிற்றை கிள்ளியது. ஜெயாவின் கைதால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. திருவட்டத்துறையில் திரும்பி கொண்டு இருந்த போது, வண்டியும் ஒரு இடத்தில சட்டு என்று நின்று போனது. அதி வேகத்தில் வண்டியை விரட்டியதால் , என்ஜின் வெப்பம் தாங்காமல் அணைந்து போனது.
தண்ணீர் யாரிடமாவது கேட்கலாம் என்று, சுற்றி பார்க்கையில், ஒரு கோவில் தென்பட்டது. தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில்-திருமாறன் பாடி என்ற பெயர் பலகை மின்னியது.
பாடல் பெறாத தலம். கோவில் உள்ளே நுழைந்தால், கையில் சக்கரை பொங்கல் தருகிறார்கள். பசி அடங்கியது, கோவில் பற்றி விசாரித்தால், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் நோக்கி வந்த சம்பந்தர் இங்கே தங்கிய போது, அம்மை உணவு கொடுத்த இடம் இது. அவள் பெயர் அன்னபூரணி.
ஈசன் திருவட்டதுரை அந்தணர்களை அழைத்து சம்பந்தர் தன்னை பார்க்க வருவதாகவும் , அவரை எதிர் கொண்டு அழைத்து வருமாறும் பணித்தார். சம்பந்தருக்கு முத்து சிவிகையும் , முத்து கொண்டையும் அருளினார்.
ஈசன் சம்பந்தர் உடன் வந்த கூட்டத்தின் தாகம் தணிக்க, தண்டால் அடித்து நீர் வருவித்தார். கோவில் வரலாறு கேட்டவுடன் நம்மை அறியாமல் கண்ணிற் வருகிறது, வண்டி இங்கே அணைய வில்லை என்றால் , இந்த கோவில் படி தொட்டு இருக்க மாட்டேன்.
ஈசனின் கருணை. வண்டியை அணைத்து என்னை அரவணைத்த அண்ணலே என்ற கேவல் உள்ளே வந்தது. சின்ன கோவில். அழகாய் உள்ளது. அப்பனும் அம்மையும் அழகில் நம்மை வியக்க வைக்கிறார்கள். அதுவும் அம்பாள், அவள் முகம் பார்த்தல் , எந்த வித துன்பமும் பறந்து போகும். அழகா அது, அசந்து போவீர்கள் அவள் அழகை கண்டு. தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, சிறிது என்ஜின் மேல் ஊற்றி வெப்பத்தை அணைக்க வண்டி புறப்பட்டது.
பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழி இருளில் மூழ்கி கிடக்கிறது. கொஞ்சம் கவனமாக வண்டியை செலுத்த வேண்டிய நிலைமை.
ஒரு வழியாக கோவில் சென்று அடைந்தேன். பெரிய கோவில். தல வரலாறு சொல்ல ஒரு தனிபதிவு தேவை. சுந்தரரக்கு ஈசன் பொற்காசுகள் கொடுத்து அதை மணி முத்தாறு நதியில் போடு, பின் திருவாரூர் குளத்தில் எடுத்து கொள் என்று சொன்ன தலம், விநாயகருக்கு இரண்டாவது படை வீடு இது. குரு நமசிவயருக்கு அம்மை பசி தீர்த்த இடம்.
ஆலயம் அகலமாய் உள்ளது. நல்ல கூட்டம். அடியாருக்கு அன்பன் அமுதத்தை அள்ளி அருளாய் வீசுகின்றான். பருகத்தான் நமக்கு பிறவி போத வில்லை. என்ன புண்ணியம் செய்ததோ பூக்கள். ஈசன் அங்கம் எங்கும் தொட்டு தழுவி மயங்கி சரிந்து , பிதற்றுகின்றன. பூக்களின் பிதற்றல் கருவறை எங்கும் மணமாய் பரவி நாசிகளில் நுழைந்து நம்மையும் மயக்குகின்றன.
உன்னை காண்பதை தவிர வேறு என்ன வேலை என்று மனம் கூக்குரல் இடுகிறது. மெல்ல பின்னடைந்து , கோவில் சுற்றி வந்தேன். விசாலமான கோவில். முடிந்தவரை நன்றாக வைத்து இருக்கிறார்கள். மக்கள் சந்தோசமாய் வந்து போகிறார்கள். கோவில் பெரும் சிறப்புடன் வாழ்கிறது.
ஈசன் முன் விழுந்து வணங்கி விட்டு, வெளி வந்த போது, இரவு 9 மணி.
சிறிது உணவு எடுத்துக்கொண்டு விருத்தாசலம் –உளுந்தூர்பேட்டை சாலையை பிடித்தால். மிக சரியான இருட்டு. உளுந்தூர்பேட்டை –சென்னை நெடுஞ்சாலையை தொடும் வரை விளக்கு இல்லை. மிக கவனமான பயணம். வழியில் கைக்காட்டி லிப்ட் கேட்கிறார்கள். ஏற்கனவே கோவிலில் விருத்தாசலம் கோவிலில் விருத்தாசலம் –உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள வழிப்பறி பற்றி சொல்லி இருந்ததால், மிக வேகமாக அவர்களை கடந்து வந்து விட்டேன்.
உளுந்தூர்பேட்டை –சென்னை சாலையை தொட்டு , சென்னையை வந்து அடையும்போது இரவு 1.30 மணி, திருவான்மியூர் கோவில் வந்த அடைந்து , வெளி நின்று ஈசனிடம் அழைத்து போனதற்கு நன்றி சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தேன்.