Tuesday, October 14, 2014

பிபிசியின் பொய்!!

உண்மையில் அதிர்ந்து போனேன்,இந்த ஒளிபதிவை கண்ட பிறகு. ஒன்று பிபிசியின் பொய், இரண்டாவது, கலவரத்தால் கொல்லப்பட்ட மக்களின் கண்ணிர் கதைகள். சீக்கியர்களுக்கு எதிரான 1984 வருடம் நடை பெற்ற கலவரத்தின் பின்னணியை அறிய பிபிசியில் பணி புரியும் ஒரு சீக்கிய சமுதாயத்தின் பெண் நிருபர் இந்திய வருகிறார்.
ஒரு பக்கம் சீக்கியர்கள் அனுபவித்த கொடுமையை படம் பிடித்து சொன்னாலும், வழக்கம் போல தனது கீழ்த்தரமான சிந்தனையை பிபிசி இதில் சொல்கிறது. இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது, நமது பிரதமரை சீக்கியர்கள் கொன்று விட்டதாக ஹிந்துக்கள் சொல்லி வெறி ஏற்றுவதாக குறிப்பிடுகிறார்கள். நான் அறிந்த வரை இந்திராகாந்தி எந்த நிலையிலும் ஹிந்து மத பிரதமராக எந்த ஊடங்களிலும் இது வரை குறிப்படபட்டதில்லை.
சாமர்த்தியமாக பிபிசி, இந்த சொல்லை சேர்க்கிறது. முக்கியமான விஷயம், காங்கிரஸின் கொலை தாண்டவத்தை பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்தியாவின் உச்ச நிதிமன்றத்தில் , இந்த கலவரத்தை பற்றி சொல்லும் போது, ஹிந்துக்கள் இந்த கொலையை பண்ணியதாக ஒரு இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் பிபிசி ஹிந்து மதத்தை ஒரு கொலைக்கார மதமாக உருவாக்கி சொல்கிறது.
அடுத்த அபத்தமான விசயம், பொற்கோவில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி, அதில் இருந்த தீவிரவாதிகளிடம் இருந்த கோவிலை மீட்டு எடுத்த , நமது ராணுவ தளபதியிடம் ஒரு முட்டாள் தனமான கேள்வியை பிபிசீயின் பெண் நிருபர் முன் வைக்கிறார்.
புனித கோவிலில் தாக்குதல் தொடுப்பது தவறான விசயம் என்றும், அப்பாவிகள் கொல்லபடுவார்கள் என்று தெரிந்து இருந்தும் , தர்மப்படி தவறான விசயத்தை ஏன் செய்திர்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார்..
நமது தளபதி, மிக நிதானமாக , ஆனால் தெளிவான பதிலை சொல்கிறறர். புனித கோவிலுக்குள் AK 47 யையும் , கையெறி குண்டுகளையும் வைத்து இருந்தது எந்த தர்ம படி சரி? சரணடைய மறுத்து முதல் தாக்குதலை தொடுத்தது யார்? முதல் தாக்குதல் , எதிர் தாக்குதலை அதிகபடுத்தி கோவிலினுள் இருந்த அப்பாவிகளின் உயிர்களை உதிர செய்யும் என்றும் அறிந்து இருந்தும், தாக்குதலை தொடரந்தது எதன் அடிப்படையில் என்று எதிர் கேள்வி எழுப்பினார்.
பெண்கள் மன்னிக்கவும். அந்த பிபிசீயின் ........... பெண் நிருபர், நமது தளபதியை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுவதை போல கேள்வியை எழுப்புகிறார்.
கடைசி வரை காங்கிரஸின் கொலைக்கார கைகளை சொல்லாமலே , பிபிசி தன்னை கறைபடுத்திக் கொள்கிறது. தீவிரவாதிகளை , தியாகிகளாக சொல்லாமல் சொல்கிறது
மேற்கு உலகம், காலம் காலமாக, நமது ஆதி மதத்தையும், நமது மக்களையும் இழிவாக சித்தரிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளன.
அவர்கள் மொழி அற்று இருந்த காலத்தில் , நாம் நாடுமைத்து, அதில் சங்கம் அமைத்து , கவிப்பாடி களைத்து இருந்தோம். ஆனால் அவைகள் ஏடுகளுடன் நின்று விட்டன.
நம்மை பற்றி என்ன விதமாக வரலாறு பதிவு செய்கிறது என்பது முக்கியம். வரலாறு தவறி போனால் , நமது எதிர்காலம் இருண்டு போய் விடும்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...