Tuesday, October 14, 2014

Tamil Hindu இதழ் எப்போதும் இந்தத் தேசத்தின் மனநிலைக்கு எதிராகவே இருக்கும்

Tamil Hindu இதழ் எப்போதும் இந்தத் தேசத்தின் மனநிலைக்கு எதிராகவே இருக்கும்.
காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டும் , அடித்து விரட்ட பட்டும் காஷ்மீரில் இருந்து வெளியேற்ற பட்டார்கள் என்பது அழுத்தமான வரலாறு. Tamil Hindu அதை குறிப்பிடும் போது எப்படி குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்று கவனியுங்கள். "1990-ல் வெளியேற்றப் பட்டதாகக் "கருதப்படும்", அதாவது அப்படி ஒரு பொதுவான கருத்து உள்ளது என்று சித்தரித்து, வரலாறை மறைக்க முயல்கிறார்கள். கருதப்படும் என்று சொல்லி நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்து கிறார்கள்
அடுத்து "ஆசாத் காஷ்மீ ரில் தான் தீவிரவாத அமைப்புகள் இயங்குகின்றன என்று பல ஆதாரத்துடன் , நமது தேசமும், பல உலக நாடுகளின் அமைப்புகளும் சொன்ன பிறகும், அதை பற்றி இவர்கள் குறிப்பிடுவது "பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் "கூறப்படுகிறது".
கூறப்படுகிறது என்று சொல்வதன் மூலம் , நம் தேசம் வைக்கும் குற்றசாட்டை இவர்கள் பலவீன படுத்து முயல்கிறார்கள்.
பொதுவாக பார்க்கும் போது , மிக சாதரணமாக தெரியும். ஆனால் தமிழ் மட்டும் வார்த்தைகளின் வீரியத்தை தாங்கி வரும். இங்கே இவர்கள் சாதாரணமான வார்த்தைகளை அசாதாரணமான சம்பவங்களுக்கு வைத்து துன்பியல் நிகழ்வை துச்சமாக நம்மை எண்ண வைக்கிறார்கள்
இந்த பத்திரிகையும் இந்த தேசத்தில் இருக்கிறது என்பது நமது தலைஎழுத்து.
----------------------------------------------------------------------
தமிழ்ஹிண்டுவில் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் பற்றி 
இத்துடன் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 1990-ல் வெளியேற்றப் பட்டதாகக் "கருதப்படும்" அதன் பூர்வ குடிகளான காஷ்மீரப் பண்டிட்களை மீண்டும் அங்கு குடியேற்ற மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரலாறு
ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதி யில் அமைந்துள்ள பெரும் பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள இப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.
முசாபராபாத்தை தலைநகராக கொண்ட இந்தப் பகுதியில் நமது நாட்டின் சட்டமன்றத் தொகுதி அளவில் 49 தொகுதிகள் அமைந் துள்ளன. இதன்மூலமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இங்கு தனியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. இருப்பினும் அவை பாகிஸ்தான் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை பாகிஸ்தானில் ‘ஆசாத் காஷ்மீர் (சுதந்திரம் பெற்ற காஷ்மீர்)’ என அழைக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் "கூறப்படுகிறது"

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...