Tuesday, October 14, 2014

கன்னியாகுமரியில் மட்டும் காங்கிரஸ் லட்சம் ஓட்டுக்களை பெற்றது எப்படி?

அன்பர் ஒருவர், நீங்கள் சுட்டிக் காட்டிய மாதிரி, கன்னியாகுமரியில் மட்டும் காங்கிரஸ் லட்சம் ஓட்டுக்களை பெற்றது எப்படி?. இது எனக்கு மட்டும் அல்ல, தமிழ் நாட்டில் பல பேருக்கு தெரியும். கூப்பிடும் தூரத்தில் கடல். கடலில் தினமும் இலங்கையால் தாக்கப்படும் மீனவர்கள் ,சற்று தொலைவில் அமைந்த இலங்கையில் கொல்லப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகள். தினமும் பார்க்கும் இலங்கை அகதிகள். எதையுமே கண்டு கொள்ளாத காங்கிரஸ் ,தமிழ் இனத்தை அழித்து நின்ற இலங்கைக்கு ஏவல் வேலை பார்த்தது.
நம்மை வந்து அடையும் முன் கன்னியாகுமரிக்கு தான் நம் தமிழ் இனத்தின் கண்ணிர் வந்து அடையும். உண்மையில் சொல்ல போனால் தமிழ் நாட்டின் மற்ற இடங்களை விட காங்கிரஸ் இங்கே 100 ஓட்டுக்களுக்கும் குறைவாக பெற்று இருக்க வேண்டும். ஆனால் 2,44,244 ஓட்டுக்கள் வாங்கி உள்ளது.
எப்படி இது?. தமிழ் நாட்டில் எங்குமே சாத்தியம் அற்ற விஷயம் காங்கிரஸ்க்கு கன்னியாகுமரியில் மட்டும் சாத்தியபட்டு உள்ளது. அதிர்ச்சியாக உள்ளது அல்லவா?. கன்னியாகுமரியில் தமிழர்களே இல்லையா? இல்லை வசந்த குமாரின் வசீகரத்தில் வாக்குகள் விழுந்த விட்டனவா?
இத்தாலியின் இராஜமாத கன்னியாகுமரியில் மட்டும் தனது கருணை பார்வையை காட்டியது ஏன். தமிழ் நாட்டில் எங்குமே மேடை ஏறாத ராஜமாதா கன்னியாகுமரியில் மட்டும் நிலை கொண்டது ஏன்? உண்மையில் மற்ற இடங்களில் கடை போட்டால் , கடையே சூறையாடபடும். ஆனால் கன்னியாகுமரி மட்டும் காங்கிரஸ்க்கு கருணை பார்வை காட்டும். ஏன் எனில் கிறிஸ்தவ மதம் அங்கே கணிசமான செல்வாக்கு பெற்றது. மொத்த கிறிஸ்தவர்களும் காங்கிரஸ்க்கு வாக்கு அளிப்பார்கள் என்ற அபாரமான நம்பிக்கை.
இதை நான் சொல்ல வில்லை. தமிழகத்தின் பிரபலமான இதழ்கள் வெளிப்படையாக எழுதின.எல்லா கருத்துக் கணிப்புகளும் இப்படி எழுதின "இந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவை கிறிஸ்துவ மக்களின் வாக்குகள்தான். அவை பி.ஜே.பி-க்கு பெரும்பாலும் போகாது. அந்த வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்று வசந்தகுமார் துடியாய்த் துடிக்கிறார். இருந்தாலும் போட்டியில் இருக்கும் மற்றக் கட்சிகள் அந்த வாக்குகளைப் பங்குபோடுகின்றன"
எல்லா இடத்திலும் ஆயிரத்தில் தடுமாறிய காங்கிரஸ், இரண்டு லட்சம் ஓட்டுக்கள் எளிதாக பெற்றது கன்னியாகுமரியில் மட்டும். எனக்கு மட்டும் அல்ல, எல்லா தமிழர்களும் எதிர்பார்த்து இருந்தது காங்கிரஸ் டெபாசிட் இழந்த செய்தியை பற்றி. பிஜேபியின் வெற்றி அல்ல. ADMK இல்லை DMK வெற்றி பற்றி இருந்தால் கூட கவலை இல்லை.
தீக்குள் தன்னை சுட்டு, தமிழ் இனத்தின் அழிவை சுட்டிக் காட்டிய தமிழனின் கதறல் கன்னியாகுமரியில் மட்டும் கேட்காமல் போனதற்கான காரணம் என்ன. மதம் அந்த குரலை மறித்து விட்டதா?
துடைத்து எறியப்பட வேண்டிய கட்சிக்கு , தண்ணிர் ஊற்றி முளைக்க வைத்தது மதம் என்றால்,இங்கே தமிழன் என்ற சொல்லப்படுவர்கள் யார்?
தமிழ் கொடி பிடித்த கட்சிகள் , கன்னியாகுமரியில் காங்கிரஸ் பெற்ற இரண்டு லட்சம் வாக்குகளை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏனோ?. விடை எல்லாருக்கும் தெரியும். நாங்களும் நாகரிகம் கருதி அதை பற்றி பேசுவதில்லை.
இனி பொன் ராதாகிருஷ்ணன் பலத்த விமர்சனத்திற்கு ஆளாவர். இனிமேல் தமிழ் இனம் பற்றி அங்கு கரிசனம் எழும். என்ன செய்தது மத்திய அரசு என்ற கேள்வி வரும்.
மதம் பண்ண துரோகம் மறைக்கப்பட்டு, தமிழ் இனம் பற்றி விசும்பல்கள் கேட்கும் மீண்டும் காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் வரும் வரை!!.
ஏன் எனில் இனி மத்திய அரசு பிஜேபி அரசு அல்லவா.
இனி நடக்க போகும் அந்த நாடகங்களையும் இந்த நாடு பார்க்கும். நம் மீதும் கோபம் கொள்வார்கள். என்ன செய்வது வேறு வழி இல்லை

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...