முண்டசுபட்டி திரைப்படம்- நகைச்சுவையை அள்ளி தெளித்து இருக்கிறார்கள். நல்ல முயற்சி. ஆனால், கிராம மக்கள் என்றால் மூட நம்பிக்கை உள்ளவர்கள் என்று தன்னை பகுத்தறிவு ஆகா உள்ளவனாக காட்ட இயக்குனர் முயற்சி செய்து உள்ளார்.
ஹிந்து மக்கள் வேற்று கிரகத்தில் வந்து விழுந்த கல்லை கடவுள் என்று வழிபட்டு கொண்டு இருகின்றனர், என்ற கருத்தை முன் வைக்கும் போது, அவரின் நோக்கத்தை பற்றி சந்தேகம் ஏழுகிறது. ஹிந்து மக்களின் பழம்பெரும் நம்பிக்கையான குலதெய்வ வழிபாட்டை கிண்டல் செய்வது போல இவர் படம் எடுப்பது எதன் அடிப்படையில். கிராமத்தில் வழிபடும் எங்கள் தெய்வங்கள் எல்லாம் கல்லா?
புகைப்படம் எடுப்பதால் ஆயுசு குறையும் என்பது மூட நம்பிக்கை என்று சொல்கிறார். நானும் ஒத்துக் கொள்கின்றேன். ஆனால் எனக்கு அது மூட நம்பிக்கையாக பட வில்லை. அந்த மக்களின் பயம் என்றே எனக்குபடுகிறது. ப்ளாஷ்கு(FLASH) முன் தலைமுறையை கொண்ட புகைப்பட கருவிகள் , மிக அதிக படியான பிரகாசத்தை உருவாக்க மாக்னிசியம் பவுடரை கொட்டி அதை பற்றி வைப்பார்கள்.பற்ற வைத்த சில நொடிகள் வரை அதன் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும் அந்த வெளிச்சத்தில் தான் ஆரம்பகாலத்தில் புகைப்படம் எடுத்தார்கள். அது தான் கேமராவின் ப்ளாஸ்சாக இருந்தது.
ஆனால் அதிகபடியான மாக்னிசியம் மாரடைப்பு, சிறுநீரக கோளாறு , மூச்சு திணறல். போன்ற பிரச்சினைகளை எற்படுத்தி , மரணத்திற்கு வலி வகுக்கும் என்று மருத்துவம் சொல்கிறது. இதை பற்றி நம் முன்னோர்கள யார் மூலமாக அறிந்திருக்க வாயுப்பு உண்டு. பொத்தம் பொதுவாக மரணம் வரும் என்று சொல்லியது இன்றும் பழக்கத்தில் உள்ளதாக இருந்து இருக்கலாம்
இன்று கூட பிளாஷ் வைத்து கை குழந்தைகளை படம் எடுக்காதிர்கள் என்று மருத்துவம் சொல்கிறது. குழந்தையின் விழித்திரை பாதிக்கப்படும் என்ற அபாயம் உள்ளதால், அதை சொல்கிறார்கள்.
நாம் எப்படி நம் முன்னோர்களை புரிந்து கொள்ள முயற்ச்சிகின்றோம் என்பதில் இருந்து தான் நமது அறிவியல் தொடங்குகிறது.
அது அறிவியல் மட்டும் அல்ல, நமது அறமும் ஆகும்.
No comments:
Post a Comment