Tuesday, October 14, 2014

தொடர்ந்து சூறையாடபட்டு, கொல்லப்படும் சிறு பெண்களின் கற்பு

தொடர்ந்து சூறையாடபட்டு, கொல்லப்படும் சிறு பெண்களின் கற்பு பற்றிய செய்திகளும், தேசத்திற்காக இன்னுயிர் தந்தவர்களின் குடும்பங்கள் இழப்பிடிற்காக அரசு அலுவலங்களில் அலையும் அவல காட்சிகளும் (Times now) , இந்த தேசம் வல்லரசு ஆகும் என்ற கற்பனையை கலைத்து போடுகிறது.
வல்லரசு என்ற வார்த்தையே வார்த்தை ஜாலம் என்று தோன்றுகிறது. வல்லவர்களால் வல்லுறவு செய்யபடும், மங்கையரை மறந்து விட்டு இந்த தேசம் , தன்னை பேரரசு சொல்லுமானால் , மனிதர்கள் பேரில் மிருகங்கள் ஆட்சி செய்யும் தேசம்.
நாட்டிற்காக உயிரை தந்தவர்களை உதறிவிட்டு , நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் தலையில் தூக்கி நாம் கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
படித்த பெண் சூறையாடபட்டாள் பொங்கும் தேசம், படிப்பறிவு இல்லா பெண்கள் சூறையாடபட்டாள், பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறது.
கொடி நாள் அன்று ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு, நடிகனின் படத்திற்கு 500 ரூபாய் கொடுத்து படம் பார்க்க செல்லும் நாம் இருக்கும் வரை , இந்த தேசம் வல்லரசு என்ன நல்லரசு என்று கூட உருமாற முடியாது.
இங்கே எது முக்கிய பிரச்சினை என்று நமக்கு புரிய வில்லை.
பெண்கள் உடல் மீது காட்டபடும் பாலியல் வன்முறைகள் மற்றும் உடலை உதிர்த்து உயிரை தந்தவர்களின் உறவுகள் மீது காட்டப்படும் உதாசீனம், இது தொடர்ந்து கொண்டு இருக்கும் என்றால், இந்த தேசம் மண்ணோடு மண்ணாக போகட்டும்!!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...