சில சமயம் சில பேரின் பேச்சு வேதனையை கொடுக்கிறது. எனது நண்பர்கள் சிலர், இன்னும் 50 வருடங்களில் இந்தியா என்ற தேசம் இருக்காது. பல கூறுகளாக சிதறிப் போகும் என்ற கருத்தை சொல்கின்றனர். இந்த தேசம் என்ன விதமான அவநம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் சொந்த தேசம் சிதறிப் போகும் என்பது எந்த குடிமகனுக்கும் வலியை உருவாக்கும் செய்தி. இந்தியா என்ற உருவமைப்பின் மீது அவர்கள் நம்பிக்கை அற்று இருப்பதாக எனக்குப் படுகிறது. எந்த வித சலனம் இன்றி அவர்கள் சொல்லும் போது, உள்ளம் உடைந்து போனது.
இந்தியா உடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசுகிறார்களா அல்லது, யதார்தமாக உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறர்களா.
அறிய முடிய வில்லை என்னால்.
நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது, எனது சமூகவியல் ஆசிரியர் இதே மாதிரியான கருத்தை எடுத்து உரைத்தார். அதை பெருமையாக எனது தந்தையிடம் சொல்லிய போது கடும்கோபம் கொண்டார். நமது வீடு சிதறி போகும் நீ சொல்வாயானால் , நீ எப்படி எனக்கு நல்ல மகனாக முடியம் என்றார். புத்தியில் அப்பொழுது தான் உறைத்தது.
சொந்த தேசம் சிதறி போகும் என்று நான் சொன்னால், நான் எப்படி நல்ல குடிமகனாக இருக்க முடியும்.
இணைத்தது வேண்டுமானால் ஆங்கிலயேனாக இருக்கலாம். இணைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே இணைப்பு சாத்தியம். சுதந்திரம் அடைந்த போது 90 சதவிதம் பேர் இந்த தேசத்தினுள் அங்கம் ஆகி. இந்தியா என்ற வடிவம் எடுத்தனர். மதத்தின் பெயரால் மகுடி ஊதியவர்கள் மட்டுமே பாகிஸ்தான் என்று பிரிந்து நின்றனர்.
வெள்ளையனை எதிர்த்து போராடிய நமது சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த தேசத்தின் ஒவ்வரு மண்ணிலும் இருந்து உதித்தனர். அத்ததைய வரலாறு உங்கள் கண்ணில் பட வில்லையா. வட நாட்டில் உதித்தாலும் , தென்னகத்தின் வீடுகள் தோறும் தங்கள் பிள்ளைகளை பகத்சிங் என்று சொல்லி உரம் ஈட்டிய நம் முன்னோர்கள் பற்றி அறிந்து உள்ளிர்களா? வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் , இந்த மண்ணின் மைந்தர்கள் மறைந்து உள்ளனர். இதில் யாரை நாங்கள் பிரித்து படிப்பது.
காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்த வரை, தேசியம் என்ற சொல்லை எப்பொழுதும் முன் எடுத்து , எல்லா மக்களையும் தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்தார். நல்ல தலைவனை தோற்கடித்து , நடிகர்களை எப்போது நாம் கொண்டாட ஆரம்பித்தாமோ ,அன்றே தேசியம் என்று சொல் வலுவிழந்தது.
அது தேசத்தின் குற்றமா?. இல்லை நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்காமல் போன மக்களின் குற்றம்.
அதற்கு பிரிவு தான் பரிகாரம் என்பதா. அபத்தமாக இருக்கிறது.
தமிழ் நாட்டு நச்சு சக்திகளாக விளங்கும் திராவிட கட்சிகள் முன் எடுத்து சென்ற விஷயம்தான் நாட்டை பிரிப்பது. அவர்களை போய் நாம் பின்பற்றலாமா.
உண்மையில் இவர்களின் அடுத்த தலைமுறை பற்றி கவலை எழுகிறது. இந்த சிந்தனையை அடுத்து தலைமுறைக்கும் அவர்கள் எடுத்து சென்றால் , ஒன்றுபட்ட இந்தியா என்ற பொருள் மீது அவர்களுக்கு என்ன விதமான அர்த்தம் கொள்வார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. வல்லரசு ஆகி வாழும் நாட்களில் இவர்கள் வழி தவறி போய் விடுவார்களோ என்ற எண்ணம் எழுகிறது?
தேசப்பற்று என்பது நம் ஆத்மார்த்த ஆன்மாவை தட்டி எழுப்புவது. அறியாமல் தயவு செய்து பேசாதிர்கள்.
இந்த தேசத்தின் வரலாறை முழுதாக அறிந்து கொள்ளுங்கள். வெளி நாட்டுகாரன் இந்திய பிரிந்து போகும் என்று சொன்னால் , அதை மறுதலித்து , பிரியாமல் இருப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.
இங்கே எல்லா விதமான எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருக்கிறது. கசப்பு உணர்வை களைய முயற்சி செய்யுங்கள். நீங்களும் இந்த பரந்த இந்திய பேரரசின் அங்கம் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
கூடி வாழ்ந்தால் தான் கோடி நன்மை என்று புரிந்து கொள்ளுங்கள்!!
நமது பாரத தாய் ஏற்கனவே நொடிந்து போய் நிற்கின்றாள்.
அவளை ஒன்றாக கூடி, எங்கள் கைகளை இணைத்து கயிறாக்கி ,வெற்றி மங்கையாக்கி தேரில் ஏற்றி பவனி வர முயறச்சிகின்றோம்!!
உங்கள் கைகளை நீங்கள் தர விரும்ப வில்லை என்றால் , கவலை இல்லை.
ஆனால் அவள் தேரை இழுக்க, இணைந்து இருக்கும் எங்கள் கைகளை நீங்கள் வெட்ட முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் ?
No comments:
Post a Comment