அருமையான கேள்வி. தமிழில் பேச தெரியும், ஆனால் படிக்கச் தெரியாது என்று எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சொல்லி திரியும் தமிழ் சமுதாய மக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒளி பதிவு.
என்னை நோக்கியும் ஒரு சகோதரி கேள்விக்கணை எய்தார். உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துகள் எவ்வளவு என்று? தவறான பதிலை தந்தேன். குற்ற உணர்ச்சியால் குறுகிப் போனேன். தவறை திருத்தி கொண்டேன்.
என்னை கேள்வி கேட்ட அந்த மாதரசி , தமிழில் நன்கு உரைத்தாலும், தமிழில் படிப்பது தனக்கு மிக சிரமம் என்று எந்த குற்ற உணர்ச்சி இல்லாமல் புன்னகையோடு சொன்னார். இன்று வரை அதே நிலை இருக்கிறது.
எழுத்து நின்று போனால், பேசுவது பின்பு எதன் அடிப்படையில்?
நான் தமிழில் பதிவுகளை பதிய தொடங்கிய பின்பு, மகிழ்ச்சி அடைந்தவர் மிக சிலரே. சில பேர் என்னை தங்கள் முக பக்கத்தில் இருந்து என்னுடைய பதிவுகள் தெரியமால் இருக்கும் மாதிரி தங்கள் முக பக்கத்தின் அமைப்பில் மாற்றம் செய்து கொண்டனர்.
தவறில்லை. வேற்று மொழி பேசுபவர் அவ்வாறு செய்யலாம். ஆனால் தமிழை தாய் மொழியாக கொண்டவர் அவ்வாறு செய்து விட்டு, அதை என்னிடமே தெரிவித்தார். காரணம் கேட்ட போது, தமிழில் பதிவுகள் போடுகின்றேன் என்று ஏதோ நான் குற்றம் செய்து விட்டது போல பேசினார். உனக்கும் எனக்கும் பொதுவான தாய் மொழியில் அல்லவா பதிவுகளை பதிவு செய்கின்றேன். நான் என்ன இலத்தின் மொழியிலா பதிவுகளை பதிவு செய்கின்றேன்? என்று வினவிய போது , படிப்பது சிரமாக உள்ளது என்று சிரித்துக் கொண்டே சொன்னார் .
தலையில் அடித்துக் கொண்டேன். இவர்களை என்ன சொல்வது?
ஆங்கிலம் சரியாக பேச, எழுத வரவில்லை என்று குற்ற உணர்ச்சிக் கொண்டு தலை குனியும் தமிழர்கள். சொந்த தாய் மொழியை படிக்கச் பேச தெரிய வில்லை என்று எந்த வெக்கம் இல்லாமல் , துணிச்சலாக உரைப்பது , எதன் அடிப்படையில்?.
ஆங்கிலம் தெரிந்த கொள்ள முயல்வது, பொருளாதரத்தை உயர்த்த செய்யும்!! உண்மை, மறுப்பதற்கில்லை.
ஆனால் தாயை போன்ற தாய்மொழியையும் , தராசு கடை போல
எடை போட்டு , பொருளாதாரரீதியாக பயன் உண்டோ என்று எண்ணி பார்க்கும் மனிதர்களை என்ன சொல்லி அழைப்பது?
எடை போட்டு , பொருளாதாரரீதியாக பயன் உண்டோ என்று எண்ணி பார்க்கும் மனிதர்களை என்ன சொல்லி அழைப்பது?
தாயுக்கும் விலை உண்டோ?
தாயை அறியாத குழந்தை உலகில் உண்டோ.?
தாயை அறியாத குழந்தை உலகில் உண்டோ.?
No comments:
Post a Comment