அடுத்த மத மாற்ற திட்டத்திற்கு அடி போட்டு விட்டார்கள். எனது உறவுகள் இருந்த ஊர் இது. என்னுடைய நினைவுக்கு எட்டிய வரையில் B பள்ளிபட்டி என்றே அழைக்கப்பட்டது. எங்கே இருந்து "லூர்துபுரம்" வந்தது?. தர்மபுரி மக்களே உஷாராக இருங்கள். இப்பொழுது "பள்ளிபட்டி லூர்துபுரம்" என்ற ஊர் , இன்னும் சற்று காலத்தில் பள்ளிபட்டி மறைந்து போய் வெறும் "லூர்துபுரம்" என்றே அழைக்கப்பட போகிறது.
இந்த pdf யை பாருங்கள், நான் தேடிய வரை "B. பள்ளிபட்டி லூர்துபுரம்"என்று அரசால் எங்குமே குறிபிட படவில்லை.
இதுதான் இவர்களின் திட்டம், தாங்கள் அந்த பகுதியில் சிறுபான்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த ஊரின் ஆதி பெயரோடு தங்கள் கிறிஸ்தவத்தின் western பெயரை இணைத்து விடுவார்கள். தங்கள் மக்களிடம் அப்படியே குறிபிட்ட சொல்வார்கள். எப்போது தாங்கள் அங்கே பெரும்பான்மை அடைகிறார்களோ , அப்போது அந்த ஊரின் இயல்பான ஆதி தமிழ் பெயரை அழித்து விட்டு, கிறிஸ்தவத்தின் இருப்பை குறிக்கும் வெஸ்டேர்ன் பெயரை வைத்து விடுவுர்கள்.
இப்படியாக உருவாக்கி , இன்னும் பத்து தலைமுறை கழித்து பார்த்தால், இங்கே எல்லா ஊர்களும் western பெயரோடு இருக்கும். பிறகு என்ன கிறிஸ்தவம் தான் இந்த தேசத்தின் ஆதி மதம் என்றும் சொல்ல கூடும். அதற்கு ஆதாரமாக ஊரின் பெயரையும், தங்கள் மக்களின் பெயரையும் காட்டுவார்கள். எல்லாரும் அப்போது பிரிட்டோ, டேவிட், ஜான், என்ற பெயரில் இருப்பார்கள். ஒரு தமிழ் பெயரும் இருக்காது.
புதிதாக ஒரு இடத்தை உருவாக்கி எந்த பெயரை வேண்டும் என்றாலும் வைத்து கொள்ளுங்கள். எங்களுக்கு எந்த வித வருத்தமும் இல்லை. அதற்கு western பெயர் தான் வைப்போம் என்றால் உங்கள் தமிழ் பற்று கண்டு நாங்கள் வேதனை தான் கொள்ள முடியம்.
ஆனால் ஏற்கனவே காலம் காலமாக தமிழ் பெயரை தாங்கிய ஊர்களை மாற்ற நினைப்பது கண்டிக்க தக்கது.
எந்த தமிழ் அமைப்புகளும் இதை பற்றி பேச பயபடுகின்றன. தமிழனின் கலாசார மிச்சங்களை தாங்கி நிற்பதில் ஒரு ஊரின் பெயர்கள் மிக பெரிய பங்களிப்பை செய்கின்றன. தமிழரின் வரலாற்று தகவல்களை தேடும்போது , ஊரின் பெயர்கள் உதவி செய்கின்றன. அந்த ஊரின் பெயரை அழிக்கும் போது, அந்த ஊர்க்கும், வரலாற்றுக்கும் தொடர்பும் இயல்பாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.
மொத்தத்தில் மதத்தின் பெயரால் தமிழை அழிக்க போகிறார்கள். அதற்கு முதல் படி தமிழ் பெயரை தாங்கிய ஊர்கள் . நாமும் சிறுபான்மையிரின் உரிமை என்ற பெயரில் அதை மௌனமாக ஏற்றுக் கொள்ள போகிறோம்.
அது மட்டும் அல்ல, பல அழகிய தமிழ் பெயர்கள் சூடிய ஊர்கள் இனி western பெயரில் திகழ போகும் அபாயமும் உள்ளது. தமிழ் காலசாரம் , பண்பாடும், இனி மெல்ல சாக இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருக்க போகிறது.
குறிப்பு: மேரி மாத கண் திறந்தது என்பது அவர்கள் நம்பிக்கை!! எனக்கு அதை பற்றி எந்த முரண்பாடும் இல்லை.
No comments:
Post a Comment