என் தேசத்தின் பிறந்த நாள். பல உயிர்கள் தன்னை பலிதானம் கொடுத்து பெற்று தந்த சுதந்திரம். சிறு வயதில் என்னை பொறுத்தவரை ஒரு நாள் விடுமுறை பெற்று தரும் தினம் சுதந்திர தின நாள். அதற்கு மேல் அதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. அதை பற்றி புரிதலும் இல்லை.
ஆனால் நிகழ்வுகள் மனதில் பதியும் வயதில், சுதந்திர தின நாள் அன்று டி டி தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் தேசிய கீதம் இசைக்கும் போது , என் தந்தை எழுந்து நின்று மரியாதை தந்த போது தான் , தேசம் என்ற சொல்லின் பொருள் புரிந்தது.இன்று வரை அவர் தொடர்கிறார்.
டிவியில் தேசிய கீதம் இசைக்கபட்டதற்கு , ஏன் என் தந்தை எழுந்து நின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. நாடகத்தனமாக பட்டது அப்போது. என் நண்பர்கள சிலரின் தந்தைகளும் அவ்வாறே செய்ததாக அறிந்த போது, கொஞ்சமாக கொஞ்சமாக தெளிவு பிறந்தது.
இது நாடகமல்ல , ஒரு சராசரி சாதாரண இந்திய குடிமகன்கள் . தங்களது நாட்டின் மேல் உள்ள பற்றை காட்டும் தருணம் இது என்று உள்ளம் நெகிழ்ந்தது.
மெல்ல சுதந்திர போராட்ட வரலாறுகளை படிக்க படிக்க பரவசம் அடைய நேரிட்டது. பல சுதந்திர வீரர்களின் குருதி வழிந்தோடி , பெரு வெள்ளமாய் பாய்ந்து சுதந்திர தாகத்தை தீர்த்தது. இது புண்ணிய பூமி என்று புரிகிறது.
சில சங்கடகளை இந்த தேசத்தில் சந்தித்தாலும், இதுவே என் தேசம்!!
விமர்சனங்கள் இருந்தாலும் இந்த தாய்நாடே என்னை வளர்த்தது!!
உலகின் மற்ற இடங்களில் இறைவன் இறங்கிய இடம் மிக குறைவு. ஒருமுறை வந்த இறைதூதர்கள் திரும்பி வரவே இல்லை.
ஆனால் அதற்கு மாற்றாக இங்கே இறை மீண்டும் மீண்டும் இறங்கி வந்துள்ளது.
எவ்வளவு பிரியம் இந்த தேசத்தின் மேல் இறைக்கு!!
இறை ஒரு தேசத்தை கொண்டாடுகிறது என்றால் , அந்த தேசம் எவ்வளவு மகிமை பெற்றதாக இருக்க வேண்டும்.
இன்னும் சொல்லும் போனால் , நான் வணங்கும் இறைகூட , என் தாய் திருநாட்டின் முன் ஒரு படி கீழ்தான்.
என்னை தாங்கும் இறைவனின் , இருப்பிடத்தையும் சேர்த்து தாங்கி நிற்பது இந்த தாய் மண் அல்லவா!!. ஆக இறைவனை விட என் தேசமே முதலானது, எப்போதும் எங்களுக்கு முதன்மையானது.
சில தேச விரோத சக்திகள் சொல்வது போல , ஆங்கிலயேன் உருவாக்கியது இந்தியா என்றால், ஆங்கிலயேன் சென்ற பிறகு மீண்டும் உடைந்த இருக்க வேண்டும். சேர வேண்டும் எண்ணம் இருந்தால் மட்டும் இணைப்பு சாத்தியம்.
மீண்டும் உடைக்க வேண்டும் என்ற எண்ணம் சில பேர்க்கு இருக்கிறது.
மீண்டும் ஒரு சுதந்திர போர் வரும் என்று தோன்றுகிறது. ஆமாம் இம்முறையும் குருதி வழிந்தோடி பாயும்!!
ஆனால் இம்முறை குருதியை சிந்த போவது, இந்த தேசத்தை நேசிப்பவர்களின் குருதி அல்ல!!
வாழ்க பாரத தாய்!! வளர்க என் தாய் திருநாடு!!
சுதந்திர தினத்தை போற்றுவோம்!! தாய் நாட்டை காப்போம்!!
No comments:
Post a Comment