Tuesday, October 14, 2014

தயவு செய்து இவர் தான் உங்கள் குரு என்று மற்றவரிடம் சொல்லி விடாதிர்கள்.

நேற்று இரவு கோவிலுக்கு சென்று இருந்தேன்!! ஈசனை தரிசனம் செய்து விட்டு சிறிது நேரம் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு இருந்து போது, என்னருகே அமர்ந்து இருந்த நபர் என் வயதை ஒத்த நபர் என்னிடம் மெல்ல பேச்சு கொடுத்தார். இறைவனை பற்றிய உரையாடல் தொடங்கி, சேவையை பற்றி வந்து நின்றது. கோவையை சேர்ந்த ஒரு ஆசிரமத்தின் நிறுவனரை குறிப்பிட்டு ,அவர் தான் தனது குரு என்றும், அவரை பற்றியும், அவரின் அமைப்பை பற்றியும் என்னிடம் ஒரு சொற்பொழிவே நிகழ்த்தினார்.
பொதுவாக, எனக்கு," நாமே இறைவனின் குழந்தை, நாம் அழைத்தால் ஏன் என் இறை என்னை காணாமல் விடு விடுமோ, பிறகு எதற்கு குரு என்ற இடைதரகர் தேவை" என்ற எண்ணம் உண்டு. ஆனால் குருவை பெறுவது தவம் எனவும் எனக்கு சொல்லப்பட்டது. ஆகவே நாகரிகம் கருதி, அமைதியாக இருந்தேன். தான் ஒரு பெரிய இடம் வாங்கி, ஆதரவு அற்ரோற்கும், முதியவர்களுக்கும் தொண்டு செய்ய போவதாக சொன்னார். அகம் மகிழ்ந்து போனேன். இல்லறம் தழுவும் வயதில், என்ன ஒரு இறை தொண்டு என்று உள்ளம் உருகி போனேன். என்னை எண்ணி தலை குனிந்தேன். என்னையும் கோவைக்கு போய் அந்த அமைப்பின் சில ஆன்மிக வகுப்புகளில் பங்கு எடுக்கும் படி சொன்னார்.
எங்களின் உரையாடலை, கேட்டு கொண்டு இருந்தவர்களிடும் , அவர்களது ஆன்மிக வகுப்புகளில் சேருமாறு அழைப்பு விடுத்தார். தான் அதை கற்றதால், மற்றவர்களிடும் தான் மேல் எழும்பி நிற்பது போல அவரின் பேச்சு இருந்தது.
அலைபேசியில் யாரோ அவரை அழைக்க பிரகாரம் விடுத்து வெளியே வந்தோம். அவர் தொலைபேசியில் தன்னை மெல்ல தொலைத்து கொண்டு இருக்க, அவரை தொல்லை செய்யாமல் சற்று தள்ளி நின்றேன்.
சிறிது நேரத்தில், எங்கிருந்தோ வந்த மாயா கண்ணன் போல இரு வாண்டுகள் , அவரை சுற்றி வட்டம் போட்டு, தங்கள் குழுந்தை விளையாட்டை சத்தமிட்டு ஆட, அவரோ நெற்றிக்கண் திறந்த முக்கண்ணன் ஆனார். விழியால் விரட்டி பார்த்தும், வழிக்கு வரவில்லை வாண்டுகள். குழந்தைகளுக்கு என்ன தெரியும், நாம் குறை சொல்ல.அதனால் நான் அவரை நீங்கள் வேறு இடம் சென்று தொலைபேசியில் தொடருங்கள் என்று சைகை செய்தேன். அவரோ வாண்டுகளை விடுத்து, அவர்களை அழைக்க வந்த குடும்பத்தில் மேல் தன் கோவத்தை காட்டினார். பதிலுக்கு பதில் வார்த்தை போர் தொடங்கியது!!
சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதும் , தவறான வார்த்தைகளே தெறித்து விழுந்தன.
ஒரு குழந்தையின் சுட்டித்தனத்தை பொறுத்து கொள்ள மறுத்து, அதுவும் இறைவன் குடி இருக்கும் திரு சந்நிதியில், தன் நிலை மறக்கலாமோ ?
சேவை செய்ய முதல் தேவை பொறுமை. அந்த மிக சாதாரண அடிப்படை விசயத்தை புரிந்து கொள்ளாமல், சேவை செய்ய போவதாக சொல்பவர்களை என்ன சொல்வது.
நாளை சேவை என்று வரும் பொது , பல தவறான வார்த்தைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். அப்பொழுது பொறுமை இல்லை எனில், தங்களை நம்பி அடைக்கலம் தேடி வருவோரின் கதி என்ன என்று யோசிக்க மறந்து போய் விடுகிறார்கள்!!.
குரு இருந்தும், அவர் அருள் வார்த்தைகள் இருந்தும் நீங்கள் , எங்களை போன்று இருந்தால், உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்?
மிக பெரிய அமைப்பை காட்டி தான் அதில் தான் உறுப்பினர் என்றும், எல்லா தியான வகுப்பையும் கரைத்து குடித்ததாகவும், விடு முழுவதும் குருவின் போட்டோவை ஒட்டி பெருமை பட்டாலும், 6 முதல் 7 மணி வரை தியானம் செய்தாக பறைசாற்றி விட்டு, நாள் முழுவதும், சண்டையிட்டும், பொறுமை அற்று திரியும் நபர்களை கண்டு அழுவாத சிரிப்பதா என்று புரிவதில்லை.
அவரை போன்ற நபர்களுக்கு ஒரு வேண்டுகோள்
.தயவு செய்து இவர் தான் உங்கள் குரு என்று மற்றவரிடம் சொல்லி விடாதிர்கள். அதை விட பெரிய அவமானம் உங்கள் குருவுக்கு வேறு ஒன்றும் இல்லை.!!
இதையே அவரிடமும் சொல்லி, விடை பெறாமலே விடை பெற்று வந்தேன்!!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...