Tuesday, October 14, 2014

சன் டிவி!! நடுநிலை செய்திகளை போடுவதாக தம்பட்டம்

சன் டிவி!! நடுநிலை செய்திகளை போடுவதாக தம்பட்டம்! தயா நிதி மாறன் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்? ஒரு நிமிடம் படியுங்கள் இதை. இலங்கையில் நம் தமிழ் இனம் அழிந்த போது, முடிந்த வரை அந்த செய்திகளை தனது டிவியில் காண்பிப்பதை தவிர்த்த சேனல். ஏன் எனில் அப்போதைய அரசாங்கம் திமுக அரசாங்கம். 2009 பாராளுமன்ற தேர்தல் நேரம்!! எங்கே அந்த துயரங்களை காண்பித்தால், திமுகவிற்கு எதிரான மன நிலை மக்களிடும் ஏற்படும், மாறன் தோற்க நேரிடும் என்று எண்ணி, இலங்கையில் நடந்த இன அழிப்பை , நம் தமிழ் மக்கள் முன் எடுத்த சொல்ல பயந்து, மறைத்து, சில வார்த்தைகளில் மூடி, மற்ற செய்திகள் போட்ட சேனல்!!. இலங்கையை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடந்த போது, தனது வணிக வளாகத்தை திறந்து வைத்து இருந்த சேனல் இது.
ஜெயா அரசால் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட போது, அந்த கைது நிகழ்ச்சியையும், ஜெயா அவர்களின் காலணிகளையும் திரும்ப திரும்ப தமிழ் மக்களிடம் காட்டி கருணா மீது கருணையும், ஜெயா மீது வெறுப்பையும் ஏற்படுத்தி அதன் மூலம் திமுகவிற்கு அரசை பெற்று தந்த சேனல். டெல்லி எங்கள் கோபாலபுரத்தில் இருக்கிறது என்று கொக்கரித்த தயா நிதி மாறனுக்கு தெரியாதா," தங்களது டிவியின் மூலம், மக்களை தட்டி எழுப்பி, சிங்களத்துக்கு சாமரம் வீசி மகிழந்த, காங்கிரஸின் அரியாசன கால்களை உடைத்தால், சிங்களன் தனது தமிழ் இனத்தை செய்யும் சித்ரவதைகள் நின்று போகும் என்று"?.
ஒரு வயது முதிர்ந்த தலைவரின் அபய குரல் கேட்டு , குமுறிய தமிழகம் , தனது சொந்த இனம் கொல்லப்படும் காட்சிகள் கண்டு கொதித்தது எழுவதோ?.
கொதித்து எழும் என்று தெரிந்ததால் தான், போர் நடைபெற்ற காலங்களில் எல்லாம் காட்டாத இலங்கையின் கொலைகள காட்சிகளை, இங்கு பாராளுமன்ற தேர்தல் முடிந்து, இலங்கையில் போர் முடிந்து, எம் தமிழனம் முடிந்து போய், எம் மனங்கள் முடங்கி போய் கிடந்த போது. சிறப்பு காணோட்டம் என்று இலங்கையின் கொலைகள காட்சிகளை எங்கள் முன் கடை விரித்தது!!
இறுகிப்போன எங்கள் இதயம் என்ன செய்ய முடியும்?.
தட்டி எழுப்ப வேண்டிய எங்கள் தருணத்தை எங்களிடம் இருந்து தட்டி பறித்தாய்!! உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டிய தருணத்தில் ஊமையாகி நின்றது ஏனோ?. கேபிள் டிவி இணைப்பு வேண்டும் என கேட்பதிற்கு பதிலாக , சன் டிவி இணைப்பு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு, எம் தமிழ் மக்களுடன் இரண்டற கலந்த நின்ற தொலைகாட்சி அல்லவா இவர்கள்?.
இவர்களை தவிர்த்து வேறு எந்த தொலைகாட்சியை பார்த்து கேட்பது?
சிங்களனை தூக்கி பிடித்து கொண்டு இருந்த காங்கிரசும், அதன் கால்களை கட்டி தழுவி தாங்கிய திமுகவும், மட்டும் எம் தமிழ் இன அழிப்புக்கு காரணம் இல்லை. அதை எம் மக்களுக்கு சொல்லாமல் மறைத்த இவர்களும் ஒரு காரணம்.
அறிவுள்ள என் தமிழ் இனமே இவர்களுக்கு மீண்டும் ஒட்டு போடுவது, நம்மை நாமே தொலைத்து விட்டு தேடுவதற்கு சமம்

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...