குறைந்த பட்சம் சிறு எதிர்ப்பை காட்ட நம்
ஹிந்துக்கள் முயல வில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்த மண்.
யோசித்து பாருங்கள் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் தவறாக சித்தரித்து
வரும் அத்தனை பக்கத்தையும் முக புத்தகம் முடக்குகிறது எப்படி சாத்தியம்,
ஒரு நிமிடம் செலவு செய்து அந்த மக்கள் அந்த முக புத்தகத்தை முடக்க சொல்லி
கோரிக்கை விடுகின்றனர். பாவம் நம் மக்களுக்கு நேரம் இல்லை.நம் மக்கள்
எனக்கு அதை பற்றி கவலை இல்லை என்று உள்ளார்கள். எத்தனை ஆன்மிக மடங்கள் எத்தனை மத தலைவர்கள் யாரும் பேச தயாரக இல்லை.
பேசுபவன் முட்டாள், வேலை வெட்டி இல்லாதவன், மத வெறியன். இப்படி சொல்லி
நம்மை அழைப்பது நம் மக்கள் தான். அதனால் தான் நம் கண்ணை வைத்து நம்மை
குத்துகின்றான். ராமரையும் சீதையும் மட்டம் தட்டி நாடகம் போட்டால்
ஹிந்துக்கள் உக்காந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள். போட்டவன் ஹிந்து.
நடித்தவன் ஹிந்து, கை தட்டியவன் ஹிந்து. இந்த கேவலத்தை எங்கே போய் சொல்வது.
ஹிந்துகளின் கந்த சஷ்டி கவசத்தையும் , சுப்ரபாததையும், மசாலா பாடலாக
மாற்றி எழுதியவன் ஹிந்து, பாடியவன் ஹிந்து, இசை கொடுத்தவன் ஹிந்து, அந்த
பாடலை காசு கொடுத்து வாங்கி கேட்டவன் ஹிந்து.
தெய்வத்திடம் இடம் போய் கெஞ்சி அழுது எல்லா வளங்களையும் பெற்று விட வேண்டும். ஆனால் அதே தெய்வத்தை இழிவுபடுத்தி பேசும்போது கண்டும் காணமல் போதலை விட ஒரு கேவலம் வேறு ஒன்று இருக்க முடியாது. கேட்டால் நேரம் இல்லை என்று கதை பேசுகிறர்கள்.
உங்களுக்கு இந்த கோவிலில் இந்த தெய்வத்தை இந்த நேரத்தில் தரிசனம் செய்தால் , வளம் கிட்டும் என்று யாராவது சொன்னால் , எல்லா வேலைகளையும் விட்டு, முதல் வேலை செய்வார்கள். விமானம் பிடித்து இந்திய வந்தாவது தரிசனம் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு அருள் செய்த தெய்வத்தை இழிவுபடுத்தி ஒரு புத்தகம் வந்து இருக்கிறது என்று சொன்னால் ரொம்ப வருத்தபடுவதை போல் நடிப்பார்கள்.
உன் ஆன்மிக நம்பிக்கை காயப்பட்டால் கூட உன்னால் சொல்ல முடிய வில்லை. கபாலி படத்திற்கு பிரச்சினை என்றவுடன் எவ்வளவு வேகமாக பதிவுகள் வருகின்றன.
கபாலியா உன்னை வாழ்வில் கரை ஏற்றியது. உன் முயற்சியும் ,கடவுளின் கருணையும் என்பது ஏன் உனக்கு உறைக்க வில்லை ?
இறை நம்பிக்கை இதயத்தில் இருந்து வர வேண்டும். இறை எல்லாவற்றையும் தரும் , ஆனால் நம் மக்கள் பெரும்பாலும் செல்வத்திற்காக தான் கோவில் செல்கின்றனர் . அதனால் தான் அந்த தெய்வத்தை இழிவுபடுத்தும் போது அவர்களுக்கு வலிக்க வில்லை.
நமக்கு வலிக்கிறது, அதனால் தான் நாம் முடிந்த வரை எதிர்க்கின்றோம். எந்த கோவில் படி தொட்டாலும் எமக்கு கூச்சம் இல்லை. ஆனால் அடுத்த முறை கோவில் படி தொட்டால் யோசியுங்கள் , அந்த ஆலயத்தின் இறைவன் முன் நிற்க நீங்கள் தகுதியானவர்களா என்று.
----------------------------------------------------------------------------------------------------
Sp Chockalingam

தமிழக அரசுக்கு ஹிந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரை
-------------------------------------------------------------------------------

மற்ற மாநிலங்களிலெல்லாம் அம்மாநிலத்தின்,
கலாச்சாரம், பண்பாடு மற்றும் பெரிய மனிதர்களை கொச்சைப்படுத்தினால்
அவர்கள் மீது அம்மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
உதாரணமாக வீரசைவத்தை தோற்றுவித்த பாசவையாவையும், அவருடைய சகோதரி
அக்கமாவையும் இழிவுபடுத்திய "தர்மகாரனா" புத்தகத்தை கர்நாடக அரசு தடை
செய்தது.
விநாயகப் பெருமானை தவறாக 'துந்தி' என்ற புத்தகத்தில் சித்தரித்ததற்காக அதன் எழுத்தாளர் யோகேஷ் மாஸ்டரை கர்நாடக அரசு கைது செய்து, அவர் மீது குற்றவியல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறது. கர்நாடக நீதிமன்றமும் அந்த புத்தகத்திற்கு தடை விதித்திருக்கிறது.
மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்தியதாக கூறி ஜோசப் லேவெல்ட் எழுதிய புத்தகத்தை குஜராத் அரசாங்கம் தடை செய்தது.
வல்லபாய் பட்டேலை தவறாக சித்தரித்தற்காக குஜராத் மாநிலம் ஜஸ்வந்த் எழுதிய 'ஜின்னா பற்றிய புத்தகத்தை தடை செய்தது.
இஸ்லாமையும், நபிகள் நாயகத்தையும் தவறாக சித்தரித்ததாக கூறி ஆர்.வி. பஷின் எழுதிய "இஸ்லாம் - உலகரங்கில் அரசியல் தாக்குதல்" என்ற புத்தகத்தை மஹாராஷ்டிர அரசாங்கம் தடை செய்தது.
சத்திரபதி சிவாஜியை தவறாக சித்தரித்த ஜேம்ஸ் லெயின் புத்தகத்தை மகாராஷ்டிர மாநிலம் தடைசெய்தது.
மராத்திய மகான்களான துக்ராம், தியானேஸ்வர் ஆகியோரை தவறாக சித்தரித்த ஆனந்த யாதவ் எழுதிய புத்தகங்களுக்கு புனே நீதிமன்றம் தடை விதித்தது.
ஏசு கிருஸ்துவை இழிவுபடுத்துவதாக கூறி நாகலாந்து அரசாங்கம் 'டாவின்சி கோடை' தடை செய்தது.
தஸ்லீமா நஸ் ரீன் எழுதிய ’திவிக்ஹாந்தித்தோ’ நபிகள் நாயகத்தை அவமானபடுத்தியதாக கூறி மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசாங்கம் அந்த புத்தகத்திற்கு தடை விதித்தது. கம்யூனிஸ்டுகளுக்கு கருத்து சுதந்திரமெல்லாம் ஹிந்துக்களை எதிர்த்தால்தான் போல.
பெரியார் எழுதி ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட ‘உண்மையான இராமாயணம்’என்ற புத்தகத்தை உத்திரப்பிரதேச அரசாங்கம் தடை செய்தது.
ஆனால் தமிழகத்தில் ஹிந்து கடவுள்களையும், ஹிந்து நம்பிக்கையையும் இழிவுபடுத்தி ஆண்டுக்கு ஒன்று என்று புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஈன செயல்கள் செய்பவர்கள் மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.
பெருமாள் முருகன் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டபோது, அப்புகாரின் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மாஜிஸ்டிரேட்டிடம் கொடுக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. பெருமாள் முருகன் கேட்டுக்கொண்டதின் பெயரில், அவர் கேட்ட கல்லூரியிலேயே அவருக்கும், அவரது மனைவிக்கும் சென்னையில் பணிமாற்றம் செய்து கொடுத்தது அரசு.
எனவே தமிழக அரசிடன் இம்மாதிரி விவகாரங்களில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் ‘ பிம்பிளிகி பிலாப்பி! மாமா பிஸ்கோத்து’என்ற பதில்தான் வரும்.

No comments:
Post a Comment