Sunday, August 7, 2016

இறை பின் வரட்டும், நான் முன் போகின்றேன்

இன்று காலையிலே ஒரு நண்பர் எதிர்பட்டார் , என்னிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டார். இன்று ஆடி அம்மாவசை, அந்த பகவான் இந்த இடத்தில் இருந்து அந்த இடத்திற்கு போகிறார் , இன்று மிகவும் விசேஷ நாள். தவறாமல் கோவில் போய் வர வேண்டும். போய் வந்தேன் , இந்த பிரசாதம் என்றார்.
அதாவது ஆலயத்திற்கும், அந்த ஆலயத்தின் இறைவனை கொண்டாடும் சனதான தர்மத்திற்கும் பிரச்சினை என்றால், இவர் வாயே திறக்க மாட்டாராம்.
ஆனால் விஷேச தினம் மட்டும் , குடும்பத்திடன் கோவில் சென்று இறைவனை வணங்கினால் , எல்லா வளங்களையும் இறைவன் இவருக்கு அருள வேண்டும். 

என்ன போலித்தனம். உன் நல் வாழ்கைக்கு வழி சொன்ன தெய்வத்தை மற்றவர் இகழும் போது, உனக்கு வலிக்க வில்லை. இது தவறு என்று சொல்ல கூட உனக்கு நேரம் இல்லை. அந்த ஆலயங்களை மாற்று மதத்தினர் அபகரிக்க முயலும்போது , அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது கூட இல்லை. உன் இஷ்ட தெய்வம் முன் நிற்கும்போது இம்மி அளவும் உனக்கு குற்ற உணர்ச்சி இல்லை.

இது எதுவும் உனக்கு தோன்ற வில்லை அல்லவா. உன்னிடம் இருந்து பிரசாதம் வாங்க என் மனம் ஒப்ப வில்லை. இருந்தாலும் நன்றி , நீ கிளம்பு என்று சொல்லி விட்டேன்.

அவர் கண்களில் கண்ணிற் வந்து விட்டது. அவர் காயப்பட்டு இருப்பார் என்று தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை அவர் போலியான பக்தர். இன்று கோவில்களில் இப்படி போலியான 80% ஆட்களை பார்க்கலாம். இன்று நிறைய பேர் உங்களுக்கு பிரசாதம் நீட்டுவார்கள்.:)

என் தேவைகளுக்கு மட்டும் தான் இறைவன் என்று எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை, இறைக்கும் நான் தேவைப்படுவேன் என்று எண்ணம் வர வேண்டும்.

என்னை இகழ்ந்தால் என் மனம் வேதனைப்படும் , இகழ்ந்தவரை நோக்கி என் தரப்பு வாதங்கள் சொல்லப்படும். என் இதயத்தில் குடி கொண்டு இருக்கும் இறையை இழிவுபடுத்தினாலும் எனக்கும் வலிக்கும்.

வலித்தாலும் வலிக்காது மாதிரி நடிக்க என்னால் முடிய வில்லை. போலிகளால் முடியும்.

இறை வந்து பேசட்டும் என்று என்னால் இருக்க முடிய வில்லை. இறை வந்து பேசும் போது, பேசட்டும்.
எனக்காக இறை இரங்கும் போது, அந்த இறைக்காக, நான் எனக்கு தெரிந்த வழியில் இறங்குகின்றேன். இறை பின் வரட்டும், நான் முன் போகின்றேன்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...