இந்த கேள்வி என்னையும் அரித்து கொண்டு இருந்த விஷயம். சிவ வழிபாடு ஆதி
அந்தம் தொட்டே உலகம் முழுவதும் இருந்து வந்து இருக்கிறது என்பது உண்மை.
விஷ்ணுவின் அவதாரங்கள் மானிடர்கள் மத்தியில் மனிதராக நிகழ்ந்த பின்னர் , மக்கள் அவரை மட்டும் வழிபடும் எண்ணம் பரவி இருக்கிறது.
லிங்கத்தை தவிர்த்து இறை வேறு ரூபம் காட்டி இருக்குமோ, அப்படி இருந்தால் அந்த இறை எப்படி இருக்கும் என்று எண்ணம் பரவி இருந்த காலத்தில், இறை ரகு குல ராமனாகவும், கண்ணனாகவும் , பெருமாளாகவும், இந்த பூமியில் மானிடராக இறங்கி இருக்கிறது.
அன்பிற்குரிய ஆண்டவனை அருகாமையில் அதுவும் சக தோழராக கண்ட மக்கள் , அந்த மானிட ரூபத்தை சிலையாக வைத்து கோவில் எடுத்தனர்.
பெருமாளையும், ராமனையும் மூலவராக கண்ட பின்னர் , லிங்கத்தை கோவிலின் வேறு இடத்தில் அவர்கள் வைக்க விரும்ப வில்லை. ஹரியும் சிவனும் ஒன்று என்று ஆன பிறகு , மூலவராக பெருமாள் இருந்தால் என்ன , லிங்கம் இருந்தால் என்ன? ஆனால் மக்களில் ஒரு பிரிவனர் இறையின் மானிட ரூபத்தை வைத்தே கொண்டாட விரும்பினர்.
அதனால் தான் புகழ் பெற்ற எல்லா பெருமாள் கோவில்களிலும், ராமர் கோவில்களிலும் , மூலவர் மனித ரூபத்தில் காட்சி அளிப்பார்கள்.
சிவனின் எல்லா பழமையான கோவில்களில், மூலவர் லிங்கம் தான். ஈசன் மானிட ரூபத்தில் காட்சி அளிக்கும் பழமையான கோவில்கள் வெகு ஆபூர்வம். இன்னும் நன்றாக கோவிலில் கவனித்து பார்த்தால், லிங்கம் தவிர்த்து மற்ற தெய்வங்கள் , மானிட ரூபம் கொண்டவை.
லிங்கம் ஆதி அந்தம் அற்றது என்பதற்கு அது ஒன்றே உதாரணம். கற்பனைக்கும் ,காலத்திற்கும் எட்டாத ஒன்று உள்ளே உறைகிறது என்பது எப்போதும் ஈசனின் கோவில் தொட்டால் என் நெஞ்சில் அறைகிறது. மானிடம் வந்த பிறகும் , போன பிறகும் உலகத்தில் எஞ்சி இருக்க போவது லிங்கம் மட்டுமே. அடுத்த முறை ஈசன் கோவில் போனால் நின்று யோசியுங்கள். மெல்ல புரியும்.
ஈசனுடன் ஒன்றி இருப்பவர் விஷ்ணு. அவர்களை பிரித்தது நம் மக்கள் தான். இது தான் என் அனுமானம்.
நம்பிக்கை கொண்டு எந்த பெயர் சொல்லி அழைத்தாலும், அழைத்தவனின் அன்பு ஆழமானது என்றால் , அந்த அன்பு , அம்பாக பாய்ந்து அழைக்கப்படுவரை கட்டி இழுத்து வருகிறது, அது ஆண்டவனாக இருந்தாலும்.

No comments:
Post a Comment