Sunday, August 7, 2016

தோனி ஒரு கிரிக்கெட் கேப்டன் , ரஜினி ஒரு நடிகன்.

உண்மை. கபாலி கபாலி என்று கத்தியவன் பெரும்பாலும் வேறு எந்த விஷயத்திற்கும் வருந்தாதவன். தோனி ஒரு கிரிக்கெட் கேப்டன் , ரஜினி ஒரு நடிகன். அவர் அவர் சார்ந்த துறையில் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். தோனியை என்னவோ இந்திய இராணவத்தின் கேப்டன் போலவும் , ரஜினியை என்னவோ உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் போலவும் கூச்சல் போடுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களில் எத்தனை உயிர் தியாகம் நம் பெருமை மிகு இராணவ வீரர்களால் செய்யப்பட்டது. இந்த கபாலி பதிவை பதிவர்களை பாருங்கள் , அந்த இராணவ வீரர்களுக்கு ஒரு பதிவு கூட பதிந்து இருக்க மாட்டார்கள். என்னது கபாலிக்கு தடையா feeling sad என்று பதிவு போட இவர்களுக்கு நேரம் இருக்கிறது. 

வீட்டிற்குள் இருக்கும் மனைவிக்கும், பிள்ளைக்கும் , பெற்றோருக்கும் முக புத்தகத்தில் வந்து வாழ்த்து சொல்வதும் , அவர்களுக்காக வருத்தப்பட்டு பதிவு போட இவர்களுக்கு நேரம் இருக்கிறது. தவறு இல்லை, ஆனால் நம்மை எல்லாம் பாதுகாக்கும் பாதுகாப்பு படை வீரர்களின் தியாகத்திற்கு வருந்தி ஒரு வருத்தம் சொல்ல நம்மில் பல பேருக்கு நேரம் இல்லை. பல பேருக்கு அதில் உறுத்தலே இல்லை. கேட்டால் அசட்டு தனமாக சிரிக்கிறார்கள்

உலகம் நம்மை பார்த்து சிரிக்கிறது. கூத்தாடிகளை கொண்டாடுவது தவறு இல்லை. அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். மாற்று கருத்து இல்லை. ஒரு வரம்பிற்குள் அந்த வரவேற்பு இருக்க வேண்டும். ஆனால் நடப்பது கோமாளி தனமாகவும் , அசிங்கத்தின் உச்சமாக இருக்கிறது.
இந்த இழிசெயலை செய்பவர்கள் நம் தமிழர்கள் என்பது தான் நமக்கு தலைகுனிவாக இருக்கிறது.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...