Sunday, August 7, 2016

கபாலி படம் நஷ்டம் அடைய வேண்டுமா?

கபாலி படம் நஷ்டம் அடைய வேண்டும் என்று நினைக்க தோன்ற வில்லை. ரஜினிக்காக இல்லை. அதை தொழிலாக கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை அது பாதிக்கும் என்பதால். ஆனால் ரஜினி ஒரு போலி ஆன்மிகவாதி. ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசும் கருணாவை தூக்கி வைத்து கொண்டாடினார். அவருக்கு இல்லாத பணமா புகழா. தன்னை நல்வழிபடுத்தியது தன் ஆன்மிக நம்பிக்கை என்று மேடை தோறும் பெருமை பேசி திரிந்த நபர், தன் ஆன்மிக நம்பிக்கையை, இழிவாக பேசும் நபரை புகழ்ந்து பேசுவது எவ்வாறு? ஒரு முறை கூட ஹிந்து மதத்திற்கு என்று குரல் கொடுத்தது கிடையாது. ஹிந்து மதத்திற்கு என்று பேச வேண்டாம், சரி விட்டு விடலாம்.

தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை சரி விட்டு விடுங்கள் . இவ்வளவு பெரிய ஆன்மிகவாதி , எத்தனை ஹிந்து கோவில்களை புனரமைக்க உதவினார். ரஜினி கிரிவலம் போனார் , கிரிவல பாதையில் விளக்குகள் அமைத்தார். இவர் நினைத்து இருந்தால் எத்தனை கோவில்களை மீட்டு எடுத்து இருக்கலாம்.

தினம் தினம் கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் பல ஏழை பக்தர்கள் அந்த மாதிரி கோவில்களை கண்டால் தங்களால் ஆன பண உதவி செய்ய முயற்சி செய்கின்றனர். நம்மிடம் அதிகளவு பணம் இல்லையே என்று வேதனையுறும் பக்தர்களை நான் சந்தித்து இருக்கின்றேன்.

நாள் முழுதும் பிச்சை எடுத்து வாழும் ஒரு வயதான பிச்சைக்காரர், என் ஈசனுக்கு நெய் தீபம் ஏற்ற வழியில்லை என்று அரற்றி, பிச்சை எடுத்த காசை கொடுத்து , பெரிய நெய் டப்பாவை வாங்கி கொடுத்ததை பார்த்து அரண்டு போய் இருக்கின்றேன். அதிர்ந்து நின்று இருக்கின்றேன்

எல்லாம் அடைந்தாகி விட்டது இவருக்கு. ஆனால் புகழ் என்ற போதை இன்னும் தேவைப்படுகிறது. தான் ஆன்மிகவாதி சொல்லி சொல்லியே மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்.

தான் நம்பிய ஆன்மிகத்திற்கும் இவர் ஒன்றும் செய்ய வில்லை, தன்னை நம்பிய தமிழ் மக்களுக்கும் இவர் ஒன்றும் செய்ய வில்லை.

ரஜினி தமிழ் திரைப்பட துறையில் இருந்து ஒய்வு பெற்றால் அதுவே தமிழ் மக்களுக்கு நற்சேதி

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...