Thursday, October 9, 2014

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 1-முதல் சுற்றின் 3 வது -பகுதி

சென்னை காஞ்சி வேலூர் பாடல் பெற்ற தலங்களின் கடைசி பகுதி.
சத்யநாதர் திருக்கோயிலுக்கு மீண்டும் சென்ற போது, நடை சாத்த பட்டு இருந்தது. ஆனால் மிக சொற்ப அளவில் மக்கள் வெளியில் இருந்தனர். வீடற்றவர்கள், வறுமையில் வாடி , ஈசனை நம்பியும், அவரின் அடியவர்களை நம்பியும் வாழ்க்கை வாழும் மனிதர்கள் அவர்கள். என்னை பார்த்த உடன், ஆலயம் அடைக்கப்பட்டு விட்டது என்று தகவல் தெரிவித்தனர். இல்லை நான் இருந்து காலையில் பார்த்து விட்டு செல்கின்றேன் என்றேன். இன்று இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டேன்.இது ஈசனின் இடம் எல்லாருக்கும் உரிமை உண்டு என்று ஒரு வயதானவர் சொன்னார்.
உண்மையில் சந்தோஷ்மான இரவு. ஈசனை பற்றி நான் கேட்டு இருந்திராத கதைகளை சொன்னார். நடுநிசி தாண்டியும் உற்சாகமாய் பேசி கொண்டு இருந்தனர். நான் ஈசனை நினைத்துக் கொண்டு உறங்கி போனேன். என்ன கனவுகள் வந்து இருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன!!.
அதிகாலை எழுந்ததும், அங்கிருந்து சற்று தொலைவில் இருந்த விடுதிக்கு சென்று . 1 மணி நேரத்திற்கு 150 ருபாய், என்ற கொடுத்து, என்னை சுத்தபடுத்தி கொண்டு, மீண்டும் சத்யநாதர் திருக்கோயில் வந்து காரைநாதரை (ஈசன்) கண்டேன். கல்லும் கரையும் இத்தலத்து ஈசனை கண்டால். பிரிய மனமின்றி ஈசனை பிரிந்தேன்.
திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்-திருமாகறல். ராஜேந்திர சோழனை பற்றி தலபுராணம் சொல்கிறது. இதை தான் நான் சொல்வது, நம் கோவில்கள் அழிந்தால் , நம்முடைய கடந்த காலம் பற்றி எல்லா ஆதாரங்களும் அழிக்கப்படும். அதனால்தான் மாற்று மதத்தினர் நம் கோவில்களை இடிப்பதை ஒரு கொள்கையாக வைத்து இருந்தனர். நிற்க.
இங்கே ஈசன் ஒரு சிறுவனுக்கு பரிந்து, பொன்னிற உடும்பாய் வெளிப்பட்ட தலம். உடம்பின் வால் வடிவ லிங்கம். உடும்பு பிடியாய் ஈசனை பற்றி கொள்ள வேண்டும் என்று மாணிக்கவாசகர் பாடலின் பொருள் நினைவுக்கு வருகிறது. ஆலயம் அமைதியாக உள்ளது. அர்ச்சகர் ,நான், மணியகாரர் , தவிர யாரும் இல்லை, ஆக நின்று நிதானமாக ஈசனை நினைக்கலாம். கிறிஸ்தவத்தின் அறிகுறிகள் மெல்ல தெரிகின்றன கோவிலை சுற்றி.சம்பந்தர் பாடல் பெற்ற தலம் , வேறு சமயத்தாரால் கொள்ளபடும் என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ஆட்சீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம், மேல்மருவத்தூர் தாண்டி உள்ளது. விநாயகரை மறந்து ,திரிபுர சுந்தரர்ரகளை எரிக்க சென்ற, ஈசனின் தேர் அச்சு முறிந்த தலம், பாண்டிய மன்னனுக்கு ஈசன் இரங்கிய தலம். பெரிய கோவில், சிறப்பாக உள்ளது. மிக செகளரியமாக ஈசன் ஆட்சி செலுத்துகின்றான்.குறை ஒன்றும் இல்லை இந்த குற்றம்பொருத்தநாதனக்கு (ஈசன்). மக்கள் மிக அதிக அளவில் குவிகின்றனர். என்னை ஆட்சி செய்யும் ஈசனே, நடத்து உன் அரசாட்சியை என்று அடிபணிந்து விட்டு வெளியேறினேன்.
வேதகிரீஸ்வரர் திருக்கோயில்-திருக்கழுகுன்றம், மலை மேல் மாதேவன் (ஈசன்) மலர்ந்து இருகின்றான். சம்பந்தர், சுந்தரர், பட்டினத்தார், என பல சித்தர்கள வழிபட்டு பலம் பெற்ற தலம், கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் நடைபெறும் தலம். படி ஏறித்தான் பிறைசூடனை பார்க்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து பயணித்ததால் கைகளும் , கால்களும் படிகளில் தடுமாறுகின்றன. ஈசனின் பாடலை அலைபேசியில் தவழ விட, மனம் தெம்பாகிறது. உள்ளதில் ஈசனை நிறுத்த, உடல் தானாக கால்களை ஒரு நிலையில் நிறுத்தி அந்தமில்லானை (ஈசன்) நோக்கி இழுத்து சென்றது.
வழி எங்கும் குரங்கார் ஓய்வடுது கொண்டும், விளையாடி கொண்டும் இருக்க, மனம் குரங்காய் குதிக்கிறது. சின்ன கோவில். ஆனால் மிக தேஜஸ் அக இருக்கிறது. சிதறும் மனம் சித்தனை (ஈசன்) பார்த்ததும் , ஒடுங்கி ஓரமாய் நிற்கிறது. நின்று ஈசனிடம் தவழ்கிறது. தவழ்ந்து அவன் கால்களை பற்றுகிறது. பற்றிய மனதை மெல்ல பிரித்து கொண்டு மெல்ல மலை விட்டு இறங்கி, கீழே உள்ள தாயாரையும் தரிசித்து விட்டு, பைக்கிலே மலை சுற்றி, கிரிவலம் வந்து, வழியில் உள்ள எல்லா ஈசன் கோவில்களையும் தரிசித்து , அடுத்த பாடல் பெற்ற தலம் நோக்கி கிளம்பினேன்.
ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், இந்த தலம் செல்லும்போது, வழி தவறி ஒரு வனத்தின் வழியாக சென்று விட்டேன். ஒரு பத்து கிலோமீடற்கு யாரும் இல்லை, ஒரு தகவல் பலகை தென்பட்டது. தகவல் பலகை என்று அருகில் சென்றால், "சிறுத்தை புலி நடமாட்டம் , யாரும் செல்ல வேண்டாம்" , என்று போட்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து போனேன். ஏன் யாரும் வழியில் தென்படவில்லை என்று புரிந்து கொண்டேன். ஈசன் இருக்க என்ன பயம், என்று நினைத்துக்கொண்டு , தொடர்ந்து சென்று கோவிலை அடைந்தேன்.
கோவில் நடை சாத்தி இருந்தது. அங்கே இருந்த சிலர் ,36 அடி உள்ள தேவி ஆலயம் ஒன்றும், ஒரு மஹா பைரவர் ஆலயம் ஒன்றும் அருகே இருந்த வனத்தில் கட்டியுள்ளனர் , சென்று பார்த்து விட்டு வாருங்கள் என்றார்.
சென்றேன். பார்த்தேன். புதிய ஆலயம் என்றதால் ஒரு ஈர்ப்பும் ஏற்பட வில்லை. அழகிய வனத்தை சிதைத்து வைத்து இருக்கிறார்கள். வருத்தமாய் இருந்தது. ஆனால் நல்ல கூட்டம் இரு கோவில்களிலும். தேவி அதி உயரத்தில் அசரடிக்கிறாள்.
மீண்டும் ஞானபுரீஸ்வரர் கோவில் வந்தேன். சம்பந்தர்க்கு இடையனாக ஈசன் விளையாட்டு காட்டிய தலம். மரகதமேனி கொண்டவன் ஈசன் இங்கே. சிறிய கோவிலே என்றாலும் சீரியமாக இருக்கிறது. ஈசன் மறைந்த குளம் சென்று, சிறிது நேரம் நானும் அமர்ந்து இருந்தேன். சம்பந்தரின் பாடலை படித்து விட்டு, புறப்பட்டேன்.
கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில். திருக்கச்சூர். சிங்கபெருமாள் கோவிலில் இருந்து 1.5 km தூரத்தில் உள்ளது. சிங்க பெருமாள் கோவில் தரிசனம் பெற்று. திருக்கச்சூர் சென்று அடைந்தேன்.
இரண்டு சிவன் கோவில்கள். சற்று மேட்டில் மருந்தீஸ்வரர் கோவில். நிதி உதவி தேவைப்படும் கோவில். அர்ச்சகர் அன்பானவர். பண்பானவர். அழகாய் கோவில் வரலாறு சொல்கிறார். பிணி போக்கும் ஈசன் இவர்.
கச்சபேஸ்வரர் திருக்கோயில், சற்று கீழே உள்ளது. அதிவடிவுடைய கோவில் இது. நிசப்தமாய் நிற்கின்றான் நீலகண்டன். உன்னை பார்ப்பதை தவிர வேறு என்ன வேண்டுகோள் என்று மனம் கேட்கிறது. இப்பிறப்பே, ஈசனின் தரிசனம் காண தான் என்று புரிகிறது. வெளியே வந்து ஊரின் வீதிகளை சுற்றி நடந்து வந்தேன். இறை இவ்வழி , நடந்து போய் இருக்கோம் என்ற எண்ணமே, என்னை நடத்தி கூட்டி கொண்டு போனது. சுந்தரரின் பசி போக்க ,இறை இங்கே அல்லவா நடந்து போனது.
ஈசனுக்கு நன்றி சொல்லிவிட்டு, உன்னை எப்போதும் மறக்காத மனம் மட்டும் தந்து விடு என்று வேண்டிக் கொண்டு, கிளம்பி, திருவான்மியூர் மருந்திஸ்வரரிடம் வந்து, அழைத்துக் கொண்டு போனதற்கு நன்றி சொல்லிவிட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.





3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. படிக்கும் போது இத்தனை நாள் இதை தவறவிட்டு விட்ட வருத்தம் சூழ்ந்து கொண்டது.. என்னவோ நானே சென்று ஈசனை தரிசித்தது போல் ஒரு எண்ணம்... நான் காஞ்சி தான் இருப்பினும் நீங்கள் குறிப்பிட்ட ஆலயங்களுக்கு சென்றதில்லை... காஞ்சிக்கு உள்ளேயே இருக்கும் ஆலயங்களை மட்டுமே தரிசிப்பதோடு சரி.. பெண்பிள்ளையாயிற்றே நம் இஷ்டப்படி செல்லமுடியாதல்லவா? ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம்... பழைய கோயில்களை கேட்பாரற்று விட்டுவிட்டு காட்டை அழித்து கோயில் கட்டுவது பாவமே அன்றி வேறில்லை!!! இது சில புன்னியவான்களுக்கு புரியமாட்டேன் என்கிறது... எது எப்படியோ திருச்சிற்றம்பலம்!!!

    ReplyDelete
  3. ஆண் பேதம் பெண் பேதம் அற்ற ஈசனை தரிசிக்க தடை ஏதும் இல்லையம்மா , அவனருளால் அவன் தாங்கி வணங்கி என்பது உண்மை. பிராத்தனை செய்யுங்கள் , ஈசன் கண்டிப்பாக வாய்ப்பு அளிப்பான்.

    ReplyDelete

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...