Wednesday, August 31, 2016

என்னை வெல்லுதல் எப்போதும் நிகழ போவதில்லை

!வாழ்வில் எது கடினம்!!

கற்பதே கடினம் கடினம் என்று கதற வைத்த கல்வி கூடங்களின் கல்வி என்னால் வென்று எடுக்கப்பட்டது.

கற்பாறை கூட பெயர்த்து விடலாம் , கன்னியரின் காதலை வெல்ல முடியாது கருத்துக்களில் களைத்து கிடந்தாலும், மெல்ல காதல் என்னால் வென்று எடுக்கப்பட்டது.

நண்பர்கள் அற்ற வாழ்க்கை நரம்புகள் அறுந்த வீணை என்று நடுங்கி நடந்த காலத்தில் , நட்பு என்னால் வென்று எடுக்கபட்டது.

சுற்றத்தார் சுற்றி இருக்கும் சூழலே , சுவையானது என்று அறி்யபட்டாலும் , சச்சரவுகள் வந்து என் சட்டையை பிடித்தன , இருந்தாலும் சுற்றம் என்னால் வெல்லபட்டது.

எது எல்லாம் வெல்லவே முடியாது என்று வாழ்க்கையின் ஒவ்வொரு இடத்திலும் சொல்ல பட்டதோ அங்கே எல்லாம் வென்று இருக்கின்றேன் என்னை பொறுத்தவரை.

எல்லாம் “ என்னால் என்னால் “ என்று என்னை நானே ஏமாற்றி கொண்டு திரிந்தேன்.

இறையை பற்றிய இயக்கம் உந்தி தள்ள , இறை முன் போய் நிற்கும் போது மிச்சம் சொச்சம் எதுவும் இன்றி இறை நம்மை வெல்கிறது

இறையை ஒரு போதும் வெல்ல முடியாது என்று புரிந்த போது, இறை நம்மை வென்று இருக்கிறது. இறையை வென்று எடுக்க என்னை நான் வெல்ல வேண்டும். அதற்கான சாத்திய கூறு என் சரித்தரத்தில் சத்தியமாக இல்லை.

கோவிலின் கருவறைக்குள் கால் வைத்த கணமே என் தோல்வி உறுதியாகிறது .உள்ளே உக்காந்து இருப்பது இரக்கமே இல்லாமல் உடனே கொல்கிறது என்னை. உள்ளத்தை மொத்தமாக உறிஞ்சி விட்டு, நம்மை உதறி தள்ளுகிறது. கல்வியும், காதலும், காமமும், நட்பும், சுற்றமும் கண்டதுண்டமாக வெட்டி எறியபடுகிறது.

கருவறை கடந்து வெளிவரும்போது சவமாக தான் வருகின்றோம், ஒவ்வோர் முறையும். முதலில் இருந்து மீண்டும் எல்லாம் தொடங்க வேண்டும் , ஆனால் ஒவ்வோர் முறை இறை முன் போகும் போது, மொத்தமாக இறை முடித்து விடுகிறது. மீண்டும் முதலில் இருந்து

இந்த கால சக்கரத்தில் ஒவ்வொரு முறையும் சுழல வேண்டும். என்னை நான் வென்றால் இது நிற்கும். என்னை வெல்ல என் நினைவுகளை நிலை நிறுத்த வேண்டும். ஒரு இடத்தில் குவிக்க வேண்டும்.

என் ஜந்து புலன்களும் என் கட்டளையை ஏற்பதில்லை. கண்டபடி குதித்து ஓடும் மன குதிரையை கட்டுபடுத்த ஈசனை அழைத்தால் , ஈசன் மனகுதிரையை ஒட்டி கொண்டு போய் விடுகின்றான். மனம் ஒன்று இருந்தால் தானே அதை வெல்ல முடியும். என்னிடம் இல்லாத ஒன்றை எவ்வாறு நான் வெல்வது.

ஆக என்னை வெல்லுதல் எப்போதும் நிகழ போவதில்லை

Saturday, August 27, 2016

இன்று கோகுல கண்ணனின் பிறந்த நாள்

இறை மனிதருள் மானிடராக மலர்ந்த நாள். கண் இருந்தும் குருடராக இருளில் திரிந்த மனித கூட்டத்திற்கு கதிரவனாய் வந்தவன் எங்கள் கண்ணன். வாழ்விற்கும் சாவிற்கும் இடைப்பட்ட போர்க்களத்தில் நின்று ஆடி கொண்டு இருக்கும் ஆத்மாவிற்கு அருளிய பரம ஆத்மா .

எப்போதும் எதிர்மறை எண்ண அம்புகளால் துளைக்கப்பட்டு துன்பப்படும் மனது , இறையை துணைக்கு அழைத்தால் , இறை வந்து நிற்கும், பாதகமாய் யோசிக்க வைக்கும் பாணங்களை பதறடித்து , நம் மனதை பாதுகாக்கும் என்று கருத்தை கருத்தரிக்க வைக்கவே கண்ணன் களம் கண்டான் நம் புண்ணிய பாரதத்தில். 

பேதையாக கலைந்து கிடைக்கும் சிந்தனையில் , கீதையாக கண்ணன் உள் இறங்க, கள்ளுண்ட கள்வனாக கவனம் எல்லாம் கண்ணன் மேலே குவிகிறது. எங்கள் கண்ணன் வரலாறு சொல்லாமல் , பாரதத்தின் வரலாறு சொல்ல படுவதில்லை. கண்ணனை மறுத்து இங்கே வேறு கதைகள் இல்லை.

ஊசலாடும் உள்ளத்திற்கு அவன் சொன்ன உபதேசத்தை தவிர்த்து வேறு வார்த்தை உலகில் இல்லை. எங்கே எல்லாம் துர் சிந்தனையும் , நற் சிந்தனையும் நேர் கோட்டில் நிற்கிறதோ அங்கே கீதை வரும் அதன் உடன் எங்கள் கண்ணன் வருவான் மற்றும் ஒரு களம் காண " கல்கியாக"

கல்கியின் அவதார திரு நாளை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் அனைவருக்கும் கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்


வேளாங்கண்ணி ஆலயமமும் கிறிஸ்தவமும்

ஏசுவே மெய்யான தெய்வம் , அவர் மட்டும் கொண்டாட பட வேண்டியவர், வணங்க பட வேண்டியவர் என்று "நீங்கள் எல்லாம் பாவிகள் , பல தெய்வ வழிபாடு செய்பவர்கள்" என்று ஹிந்துக்களிடம் ஒரு கடவுள் கதை கதைத்த ஒரு கூட்டம், இயேசுவின் அன்னையை வணங்க நடை பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். காவி கூட்டம் என்று ஹிந்துக்களை இழித்த கூட்டம், உலகம் பார்க்க அதே காவி உடையுடன் ஊர்வலம் போய் கொண்டு இருக்கிறார்கள் . இறையின் பிள்ளை இயேசு என்று அறிவித்தார்கள். இயேசு இறக்கும் தருவாயில்" தந்தையே ஏன் என்னை கை விட்டிர்கள் என்றார்" . யார் அந்த தந்தை என்று எவரும் அறிந்தது இல்லை. 

உலகத்தை ரட்சிக்க வந்த பிள்ளை என்று சொல்லப்பட்டவர் , உயிர் விடும் தருவாயில் , தன்னை ஏன் ரட்சிக்க வில்லை என்று தன் தந்தையை கேட்டது ஒரு வகையில் விசித்திரம் தான். கர்த்தர் ஒருவரே மீட்பர் என்றவர்கள் , மீட்பரின் அன்னையையும் துணைக்கு அழைக்கிறார்கள் தாங்கள் மீள்வதற்கு. இறைவனின் அடியவர்களையும் ஹிந்துக்கள் வணங்கிய போது, கேலி பேசிய கிறிஸ்தவம் , மேரியையும், அந்தோனியாரையும் , தோமையரையும் வணங்கி கொண்டு இருக்கிறது . ஒரு கடவுள் சித்தாந்தம் பேசி திரிந்த கிறிஸ்தவம், மெல்ல காலவதி ஆகி கொண்டு இருக்கிறது இந்தியாவில்.

யாராவது உங்களிடம் "கர்த்தரை மட்டும் நம்பு கற்களை நம்பாதே" என்று கதை அளந்தால் மேல் சொன்னவற்றை கேளுங்கள்.

மீட்பர் மீட்கப்பட வேண்டும் போல, இந்திய கிறிஸ்தவத்திடம் இருந்து;

குறிப்பு: இது ஒரு ஹிந்து தலம் என்றே பெருமளவு சொல்லபடுகிறது , போர்த்துகீசியர்கள் தாங்கள் கால் பட்ட இடங்களில் எல்லாம் ஹிந்துக்களை கொன்று , ஹிந்து கோவில்களை அழித்து , கிறிஸ்தவ கோவிலை கட்டினர் என்பது வரலாறு. இந்த வேளாங்கண்ணி ஆலயமும் அவர்களால் எடுத்து கட்டப்பட்டது என்பது வரலாறு. நாப்பது வருடத்திற்கு முன் , கன்னியாகுமரி அம்மனை , கன்னி மேரி அம்மனாக மாற்ற முயற்சி நடந்தது. ஹிந்துக்களால் தடுக்கப்பட்டது. இப்பவே இவர்கள் செய்ய முயலும் போத, 400 ஆண்டுகள் முன், ஹிந்துக்கள் வலிமை குறைந்து இருந்த சமயம் இந்த ஆலயம் கட்டபட்டு இருக்கிறது . கொஞ்சம் யோசித்தால் உண்மை புலனாகும் .

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
http://www.tamilhindu.com/…/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0…/

வரும் கிருஷ்ண ஜெயந்திக்கு எத்தனை பதிவுகள் வரும்?

வரும் கிருஷ்ண ஜெயந்திக்கு எத்தனை பதிவுகள் வரும் பாருங்கள் , " எங்கள் வீட்டு கண்ணன்" என்று தங்கள் குழந்தைகளை அழகுபடுத்தி , புகைப்படம் எடுத்து பதிவு செய்வார்கள். தவறு இல்லை, ஆனால் அதே கண்ணனையும் பெருமாளையும் இழிவுபடுத்தி வரும் பதிவுகளை கண்டும் காணாமல் இருந்தவர்கள் எல்லாம் இதை செய்வார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி என்ற நாளை , இன்று வரை தாங்கி பிடிப்பது ஹிந்து மதம், அந்த ஹிந்து மதத்திற்கும் , ஹிந்து மக்களுக்கும் ஊறு நேரும் போது, ஊமையாக இருந்தவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் தங்கள் குழந்தைகளை கண்ணனாக கொண்டாடுவதை பார்க்கும்போது, கொஞ்சம் உறுத்தலாக தான் இருக்கிறது 

உங்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளை அப்படி கண்ணனாக கொண்டாட , ஹிந்துக்களும் , அதன் அடித்தளமான ஹிந்து மதமும் இருக்க வேண்டும் என்பது பல ஹிந்துக்களுக்கு, குறிப்பாக பல ஹிந்து தாய்க்குலங்களுக்கு புரிவதில்லை என்பதே வேதனையான விஷயம்.

பலுசிஸ்தானை பற்றி ஏன் சில இஸ்லாமிய கூட்டம் கவலைபடுவதில்லை

எங்கோ எதோ தேசத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கு சென்னையில் போராட்டம் நடத்திய சில கூட்டம், காஸ்மீரில் முஸ்லிம்கள் கொல்லபடுகிறார்கள் என்று ஓலமிட்ட பல கூட்டம், இஸ்ரேலால் பாலஸ்தீன மக்கள் கொல்லபடுகிறார்கள் என்று அழுத பல கூட்டம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானி்ல் அதே இஸ்லாமிய மக்கள் கொல்லப்படும் போது அமைதி காக்கிறது , எந்தவொரு போராட்டமும் இல்லை. உங்கள் நட்பு வட்டத்தை நன்றாக கவனித்து பாருங்கள், சிரியாவிற்கு கூட அவர்கள் இடம் இருந்து பதிவு வந்து இருக்கும் , ஆனால் பலுசிஸ்தானை பற்றி எந்த பதிவும் அவர்களிடத்தில் இருந்து வராது. 

காரணம் சுலபம், ஹிந்துக்களின் மீதான வெறுப்பில் பிறந்த பாகிஸ்தான் என்ற தேசத்தின் அடிப்படை, இந்தியாவை அழித்தல். இந்தியாவில் பிறந்து அத்தனை சலுகைகளையும் அனுபவித்த பின்னரும் , சொந்த தேசத்தை கழுத்தறுக்க காத்திருக்கும் கூட்டத்தின் ஒரே நம்பிக்கை, பாகிஸ்தான். ஹிந்துக்கள் நிறைந்த ஹிந்துஸ்தானை, பாகிஸ்தான் வெல்லும். அதன் மூலம் அகண்ட இஸ்லாமிய அரசு நிறுவப்படும். இந்தியா சிதறும் என்று எண்ணியவர்களுக்கு , பாகிஸ்தான் மேலும் உடையும் என்பது பேரிடியாக இருப்பதால் , பலுசிஸ்தானி்ல் இஸ்லாமிய மக்கள் கொல்லபட்டாலும் அமைதி காக்கின்றனர். தேசத்தின் எதிரி பலவீனம் அடைதல் அந்த தேசத்து மக்களுக்கு நற்செய்தி. பாகிஸ்தான் உடைவதை சந்தோசமாக நாம் பாக்க, இந்த கூட்டமோ கனத்த மௌனம். கூட இருந்து குடி கெடுக்கும் கூட்டம் அல்லவா அதை செய்யும்.

ஒரு வரலாற்று உண்மையை இவர்கள் மறந்து போனார்கள், எவ்வளவு பெரிய அகண்ட பேரரசை இவர்கள் கட்டி அமைத்தாலும் , அதை கல்லறைக்கு இவர்களே அனுப்பி வைப்பார்கள். ஏன் எனில் இவர்கள் கதை அப்படிபட்டது.

http://www.dailythanthi.com/…/Pakistan-is-a-factory-of-terr…

Before I Wake (2016) திகில் படம்

Before I Wake (2016) . பெரும்பாலும் திகில் படங்கள் என்றால் முடிந்த வரை தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த படத்தின் கதை அழகாக இருந்தது என்று ஒரு நண்பர் சொன்னதால் பார்க்கலாம் என்று நினைத்தேன். குற்றமற்ற குழந்தையின் கனவுகள் என்னெவென்று அறிந்தவர் யாரும் இல்லை. மனித அறிவிற்கு எட்டாத அந்த ஆண்டவன் ஒருவேளை அறிந்து இருக்கலாம்.
கதை படி, குழந்தை கண் மூடினால் , கனவுகள் உயிர் பெற்று , நிஜமாக நடமாடுகின்றன. ஆனால் குழந்தையை பயப்படுத்தும் கனவுகளின் கதாபாத்திரங்கள் உயிர் பெறுதல் நிகழும்போது , அழகின் அற்புதங்கள் அமானுஷ்யத்தின் அலறலாக சிதறுகிறது.
குழந்தையின் கனவுகள் எப்படி கரு தரிக்கிறது என்பதை இறுதி காட்சி சொல்லும்போது, பெற்றவர்கள் கவனிக்க வேண்டிய படம் என்ற இடத்தில இருந்து பாடமாகிறது.
http://www.imdb.com/title/tt3174376/

Discovery tamil மிக்க நன்றி

உண்மையில் பிரமிக்க வைத்தது இந்த நிகழ்ச்சி. Discovery tamil மிக்க நன்றி, சுதந்திர தினத்தன்றும் நடிகை , நடிகர்களின் பட அனுபவத்தை பற்றி தான் மற்ற தொலைக்காட்சிகள் தீவிரமாக விவாதித்து கொண்டு இருந்த போது, Discovery tamil இந்திய ராணுவ வீரர்களை பற்றி விவரித்து கொண்டு இருந்தது. கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை பார்த்த பல பேர் அரண்டு போய் இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இத்தனை வேதனைகளை சுமக்கும் நம் வீரர்களை பார்க்கும்போது, மனம் கலங்கி போனது. வெறும் பணம், சாகசத்திற்கு மட்டும் என்று இதை கொள்ள முடியாது. இத்தனை கஷ்டங்கள் அடைந்து ராணுவ குழுவில் இடம் பெறுதல் , வீர மரணத்திற்கு தான் இட்டு செல்லும் அறிந்தும் இதை செய்கிறார்கள் எனும்போது தேசத்தின் மீதான காதல் இல்லாமல் இதை செய்ய முடியாது என்றே தோன்றுகிறது. இதை பார்த்த பிறகும், நடிகனுக்காக அழுபவனையும் , விளையாட்டு வீரர்களுக்காக அழுபவனையும், சும்மா தலைவன் தலைவன் அன்று கத்தி கொண்டு உள்ளவர்களை காணும் போது வெறுப்பாக வருகிறது. 

யாருக்காக அழ வேண்டும், யாருக்காக வேதனை பட வேண்டும் என்று தெரியாத ஒரு மக்களுக்காக , ஒரு தேசத்தின் பாதுகாப்பு படைகள் உயிர் விடுகின்றன. அந்த மக்களோ , போர் என்று நிலைமை வந்தால் மட்டும் தான் ,பாதுகாப்பு படைகளை பற்றி கவலை கொள்கின்றன , அதாவது தங்கள் சுய பாதுகாப்பை பற்றிய கவலையால் உந்தப்பட்டு , அப்போது மட்டும் தேசம் பற்றி கவலை வருகிறது. தேசம் காப்பாற்ற பட்டு, தங்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட உடன் , அந்த மக்கள் வருந்துவது , நடிகர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கு தான். ராணவ வீரர்களை பற்றி அவர்களுக்கு ஒரு துளியும் கவனம் இல்லை, அவர்கள் கவனத்திற்கு வந்தாலும் , அதை கவனிக்காத மாதிரி கடந்து விடுகிறார்கள்.
வாழ்க குடிமக்கள்

இந்திய இராணுவச் செய்இந்திய இராணுவச் செய்திகள் யாருக்காவது பாரா கமாண்டோ ஆக விருப்பமா!!!
இந்திய என்ற ஒற்றை சொல்லால் உந்தப்பட்டு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து பாரா கமாண்டோ வீரராக மாற துடித்த நம் வீரர்களை இந்த நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்
இக்காட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில காட்சிகள் மற்றும் பயிற்சிகள் மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

மணிப்பூர் மீண்டும் மலரும்.


16 ஆண்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது:
முதல்வராக போவதாக ஷர்மிளா அறிவிப்பு

நல்ல முடிவு. இவரின் சில இந்திய ராணவ எதிர்ப்பு என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. சில வருந்தக்க நிகழ்வு நடந்தது. ஆனால் தவறுகள் சுட்டி காட்டப்பட்ட பிறகு அது மீண்டும் நடக்காமல் இருக்கமாறு செய்யப்பட்டது. பிரிவனை வாதிகள் இருக்கும் இடத்தில இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகள் இருந்தே தீரும். இருந்தே தீர வேண்டும். அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

இவர் ஒன்றை அறிய வேண்டும், இதே போராட்டத்தை இவர் சீனாவில் செய்து இருந்தால் இவர் என்றே கொல்லப்பட்டு இருப்பார். இந்தியாவின் ஜனநாயகம் இவரை காத்தது. 

அடுத்த பெண் கற்பழிக்கப்பட்டு கொல்லபட்டால் , அந்த செய்திகளை கவனமாக தவிர்த்து விட்டு செல்லும் நம் நவ நாகரீக பெண்கள் இருக்கும் இந்திய தேசத்தில், பெண்களுக்காக இவர் நடத்திய போராட்டம் பிரமிக்கதக்கது. அசாதாரணமானது.

மத்தியில் மோடி அரசு நடக்கும் போது, இவர் ஜனநாயகத்திற்கு திரும்பியது , மோடி அரசின் மீது இவருக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிபடுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

மணிப்பூர் மீண்டும் மலரும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1582430

Sunday, August 7, 2016

அன்னை (?) தெரசா மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார்

நம் சிறுவயதில் எப்படி எல்லாம் இந்த பெண்மணியை நம் இடையே இந்த கிறிஸ்தவ பள்ளி கூடங்கள் நம்மிடம் விற்றன. எதையும் எதிர்பார்க்காமல் செய்வது பெயர் சேவை. அன்னை என்பவள், பிள்ளை நமக்கு பதிலுக்கு என்ன செய்யும் என்று எதிர்பார்ப்பு அற்றவள். தான் காப்பாற்றிய மனிதன் , தன் மதத்தை ஏற்க வேண்டும் என்று கட்டயாபடுத்திய அம்மணி எப்படி அன்னை என்ற பட்டம் பெற முடியும். மத மாற்றம் இல்லை எனில் இந்தியாவில் எனக்கு என்ன வேலை என்று கேட்ட பெண்மணியை தான் நமக்கு அன்னை என்று அறிவித்தார்கள். அதாவது இயேசுவை நீ ஏற்க வில்லையா , உனக்கு நான் சேவை செய்ய முடியாது. சேவையின் லட்சனம் இது தான். அன்னிபெசன்ட் அம்மையாரை பற்றி எந்த கிறிஸ்தவ பள்ளி கூடங்கள் பேசின?

ஏன் எனில் அன்னிபெசன்ட் அம்மையார் , இந்தியாவின் மக்களை தன் மதத்திற்கு மாற்ற வில்லை. இந்தியாவின் சுதந்திர போரடத்தை ஆதரித்தார். பாடுபட்டார். ஆனால் நான் ஆங்கிலயர்களின் அடிமை தனத்தில் இருந்து உங்களை விடுவிக்க உதவுகின்றேன், அதனால் நீங்கள் எல்லாம் என் மதத்திற்கு மாறுங்கள் என்று சொல்ல வில்லை. உண்மையான கிறிஸ்தவர், ஆத்திகத்தில் இருந்து நாத்திகம் வந்து மீண்டும் ஆத்திகரனார். இவரை போல சில பேர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் இவரை பற்றி பேசாமல் தெரசாவை நம்மிடம் ஏன் பேசினார்கள்?


ஒருத்தரின் வேதனையில் தன் ஆன்மிக நமபிக்கையை விற்பவர் பெயர் அன்னையா. அது அரக்க தனம் அல்லவா. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்த பல ஆன்மிக மடங்கள் இருந்தன. நீ என் தெய்வத்தை ஏற்காவிடிலும் , நான் உனக்கு உதவி செய்வேன் என்று உதவி செய்வதே தங்கள் வாழ்க்கை என்று அர்பணித்த மனிதர்கள் கண்ட பூமி இது. யாரும் தங்களை விளம்பரபடுத்தி கொள்ள வில்லை. கிறிஸ்தவம் மட்டும் அதை தெளிவாக செய்யும். இன்றைய ஹைடெக் உலகத்தில் , கிறிஸ்தவத்தின் உண்மையான முகம் என்ன வென்று உலகம் அறிந்த பின்பும், நம் வீட்டு கதவை தட்டி இயேசுவை விளம்பர படுத்தும் , கிறிஸ்தவம் அன்று இருந்த காலத்தில் எப்படி எல்லாம் செய்து இருக்கும்?


அதன் வெளிப்பாடு தான் ஹிந்து ஆன்மிக கண்காட்சியிலும் தெராசவின் படம்.
Sp Chockalingam
7 hrs ·
கிருத்துவ மத கண்காட்சியில் சங்கராச்சாரியார் அனுமதிக்கப்படுவாரா?
------------------------------------------------------------------------------------

சற்று மாற்றி யோசித்து பாருங்கள். கிருத்துவ மத கண்காட்சி நடக்கிறது. அங்கு சங்கராச்சாரியாரின் புகைப்படத்தை எந்த ஹிந்துவாவது வைக்க முடியுமா? இதே தொல்லியல் துறையைச் சேர்ந்த ஹிந்து ஊழியர் ஒருவர், நான் கிருத்தவ கண்காட்சியில் கிருஷ்ணர் படத்தை வைப்பேன், வரும் அனைவருக்கும் பகவத் கீதையை கொடுப்பேன் என்று பேசத்தான் முடியுமா? யார் ஐ.எஸ்.ஐ.எஸ் போல் செயல்படுகிறார்கள் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
ஹிந்து மதத்தின் மேன்மையை பறைசாற்றும் கண்காட்சியில் ஒரு கிருத்தவ மதமாற்று அம்மணியின் புகைப்படம் வருவானேன்.
தெரசாவின் படம் ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் இருப்பதைப் பார்த்து பலர் கண்காட்சி நிர்வாகிகளிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் (உமா ஆனந்தன், பிரபாகரன், ஓமாபுலியார் ஜெயராமன் ஆகியவர்களின் முகநூல் பதிவுகள் இதற்கு சான்று). என்ன காரணத்தினாலோ நிர்வாகம் தெரசாவின் படத்தை நீக்க முன்வரவில்லை. அதற்கு பின்னர்தான் அநியாயத்தை சகிக்க முடியாத ராம ரவிக்குமார் ஜி அந்த படத்தை அகற்றியிருக்கிறார். ரவிகுமார் ஜி செய்தது தவறு என்றால் ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் தெரசாவின் படத்தை அனுமதித்ததும் தவறுதான்.
தெரசாவை, ’குருமூர்த்தியின் பிற நடவடிக்கைக்ளோடு’ நீங்கள்தான் சம்மபந்தப்படுத்திக் கொள்கிறீர்கள். ஹிந்து கண்காட்சியில் தெரசாவின் படத்தை பார்த்து பற்றுள்ள ஹிந்துக்கள் கொதிப்படைவது நியாயம்தானே?
சட்ட ஒழுங்கு கெடும், அரசு அனுமதி மறுக்கப்படும். அதனால் தெரசாவின் படத்தை நீக்குவது கடினம் என்று சொல்வது முட்டாள்தனம். இதே ரகத்தில் நாளை ஏசு கிருத்துவின் படத்தையும், மக்கா, மதினா படத்தையும் அனுமதிப்பீர்களா? ஹிந்துக்கள் ஏன் இப்படி அஞ்சி அஞ்சி சாகவேண்டும்.”அஞ்சி அஞ்சி சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியில்” போலும்.
நீங்கள் செல்லும் ஆலயத்தில் ஒருவன் குப்பையைக் கொட்டுகிறான் என்றால் அதை தடுத்து நிறுத்துவீர்களா? அல்லது கோயிலில் குப்பை கொட்டட்டும், நாம் கோயில் நிர்வாகத்திடம் முறையிடுவோம், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால் ஆலயம் நாறிவிடும். அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் போலும். தவறை சுட்டிக்காட்டுவதால் ஹிந்துக்களின் ஒற்றுமை பாழ்படும் என்று சொல்வது சுத்தப் பிதற்றல்.
ராம ரவிக்குமார் ஜி ஹிந்து கண்காட்சியில் தெரசாவின் படத்தை நீக்கச் சொன்னதும், பசு பாதுகாப்பிற்காக சட்டத்தை கையில் எடுப்பதும் எப்படி ஒன்றாகும்?
ஹிந்து கண்காட்சியில் தெரசாவின் படத்தை அகற்றாமல், அதை அகற்ற சொன்னவரை மன்னிப்பு கேட்க வைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஒரு பிறழ்வு இல்லை. தெரியாமல் நடந்தால்தான் பிறழ்வு. தெரசாவின் படம் கண்காட்சியின் நிர்வாகிகளின் ஆசிர்வாதத்துடன் தான் வைக்கப்பட்டிருக்கிறது என்று பலரது பதிவுகளிலிருந்து தெரிகிறது. குற்றத்தை கண்டிக்காமல், குற்றம் சாட்டியவர்களை ஏளனப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
கல்யாணம், வீடு போன்ற தனி நிகழ்வுகளில் தவறு நடப்பது இயல்பு தான் ஆனால் அஸ்திவாரமே கேள்விக்குறியாகும்போது? ஹிந்து ஆன்மீக கண்காட்சியில் தெரசாவிற்கு என்ன வேலை? எனக்கு கடைசி வரை பதில் கிடைக்கவில்லை

காஸ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து இந்திய பட்டது போதாதா

காஸ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து இந்திய பட்டது போதாதா ? ஆந்திராவிற்கு வேறு கொடுக்க வேண்டாமா. உண்மையில் சிறப்பு அந்தஸ்து அளிக்க பட வேண்டியது வட கிழக்கு மாநிலங்கள். அவர்கள் தான் பொருளாதாரம், வாழ்வாதாரம் எல்லாவற்றிலும் பின் தங்கி உள்ளனர். ஆந்திராவிற்கு கொடுத்தால் , தெலுங்கானா கேட்கும், பின் ஒரிஸ்ஸா , பின் தமிழகம்.
மத்திய அரசிற்கு நிதி எங்கே இருந்து வரும். தேசத்தை பாதுகாக்கும் இராணுவத்திற்கான உயிர் காக்கும் கவசங்கள் வாங்க இராணுவம் நிதிக்காக மத்திய அரசிடம் காத்து கொண்டு இருக்கிறது. ஆந்திராவிற்கு கண்டிப்பாக ஒரு தவணையாக நிதியுதவி அளிக்கலாம். ஆனால் சிறப்பு அந்தஸ்து , மத்திய அரசிற்கு பெருத்த பொருளாதார சுமையை பெற்று தரும். மோடி அரசின் முடிவு சரியானது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததால், ஆந்திராவில், தெலுங்கு…
dinamalar.com

எது எவ்வாறாக இருந்தாலும், தாக்கப்பட்ட விசயம் தவறானது

எது எவ்வாறாக இருந்தாலும், தாக்கப்பட்ட விசயம் தவறானது. காவல் துறையிடம் புகார் கொடுப்பதை விட்டு, சட்டத்தை தன் கையில் எடுத்தது தவறு.
ஆனால், இவர்கள் தலித் என்பதற்காக தாக்கப்பட்டதை போல் , செய்திகள் வெளி வருவது, பிஜேபி யை குறி வைக்க வேண்டும் என்பதாக தோன்றுகிறது.

தலித்துகளுக்கு எதிரானவர்கள் பிஜேபி என்று காட்ட தொலைகாட்சிகள் முயல்கின்றன. ஒரே நோக்கம் எப்படியாவது மோடிக்கு கெட்ட பெயர் கிடைக்க வேண்டும்.
குஜராத்தில் பசு மாட்டின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட…
dinamani.com

இறை பின் வரட்டும், நான் முன் போகின்றேன்

இன்று காலையிலே ஒரு நண்பர் எதிர்பட்டார் , என்னிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டார். இன்று ஆடி அம்மாவசை, அந்த பகவான் இந்த இடத்தில் இருந்து அந்த இடத்திற்கு போகிறார் , இன்று மிகவும் விசேஷ நாள். தவறாமல் கோவில் போய் வர வேண்டும். போய் வந்தேன் , இந்த பிரசாதம் என்றார்.
அதாவது ஆலயத்திற்கும், அந்த ஆலயத்தின் இறைவனை கொண்டாடும் சனதான தர்மத்திற்கும் பிரச்சினை என்றால், இவர் வாயே திறக்க மாட்டாராம்.
ஆனால் விஷேச தினம் மட்டும் , குடும்பத்திடன் கோவில் சென்று இறைவனை வணங்கினால் , எல்லா வளங்களையும் இறைவன் இவருக்கு அருள வேண்டும். 

என்ன போலித்தனம். உன் நல் வாழ்கைக்கு வழி சொன்ன தெய்வத்தை மற்றவர் இகழும் போது, உனக்கு வலிக்க வில்லை. இது தவறு என்று சொல்ல கூட உனக்கு நேரம் இல்லை. அந்த ஆலயங்களை மாற்று மதத்தினர் அபகரிக்க முயலும்போது , அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது கூட இல்லை. உன் இஷ்ட தெய்வம் முன் நிற்கும்போது இம்மி அளவும் உனக்கு குற்ற உணர்ச்சி இல்லை.

இது எதுவும் உனக்கு தோன்ற வில்லை அல்லவா. உன்னிடம் இருந்து பிரசாதம் வாங்க என் மனம் ஒப்ப வில்லை. இருந்தாலும் நன்றி , நீ கிளம்பு என்று சொல்லி விட்டேன்.

அவர் கண்களில் கண்ணிற் வந்து விட்டது. அவர் காயப்பட்டு இருப்பார் என்று தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை அவர் போலியான பக்தர். இன்று கோவில்களில் இப்படி போலியான 80% ஆட்களை பார்க்கலாம். இன்று நிறைய பேர் உங்களுக்கு பிரசாதம் நீட்டுவார்கள்.:)

என் தேவைகளுக்கு மட்டும் தான் இறைவன் என்று எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை, இறைக்கும் நான் தேவைப்படுவேன் என்று எண்ணம் வர வேண்டும்.

என்னை இகழ்ந்தால் என் மனம் வேதனைப்படும் , இகழ்ந்தவரை நோக்கி என் தரப்பு வாதங்கள் சொல்லப்படும். என் இதயத்தில் குடி கொண்டு இருக்கும் இறையை இழிவுபடுத்தினாலும் எனக்கும் வலிக்கும்.

வலித்தாலும் வலிக்காது மாதிரி நடிக்க என்னால் முடிய வில்லை. போலிகளால் முடியும்.

இறை வந்து பேசட்டும் என்று என்னால் இருக்க முடிய வில்லை. இறை வந்து பேசும் போது, பேசட்டும்.
எனக்காக இறை இரங்கும் போது, அந்த இறைக்காக, நான் எனக்கு தெரிந்த வழியில் இறங்குகின்றேன். இறை பின் வரட்டும், நான் முன் போகின்றேன்.

எத்தனை காஷ்மீர் பண்டிட்கள் தீவிரவாதம் நோக்கி போனார்கள்?

இது காஸ்மீரில் பொருந்தும். எத்தனை காஷ்மீர் பண்டிட்கள் தீவிரவாதம் நோக்கி போனார்கள்? ஒருத்தரும் இல்லை. அதற்கு பதில் படிப்பை நோக்கி போனார்கள். எத்தனை காஷ்மீர் முஸ்லிம்கள் தீவிரவாதம் நோக்கி போனார்கள், உலகம் அறியும் எத்தனை பேர் என்று. படித்து இருக்கலாம். அதுவும் சிறுபான்மை மக்களுக்கு என்று கல்விகளில் பல சலுகைகள் , இட ஒதுக்கீடு. ஆனால் இருந்தும் செய்ய வில்லை. இன்று வரை கல்வி அறிவில் இவர்கள் இன்னும் பின் தங்கி தான் வருகிறார்கள்.

ஏன் யாரவது இவர்களை படிக்க கூடாது என்று சொன்னார்களா? இல்லை தடுத்து நிறுத்தினார்களா ?

வெறுப்பே பிரதானம் என்று தன் அடுத்த தலைமுறைக்கு கற்று தருகிறார்கள் , பேடிதனமாக பெண்களையும் , குழந்தைகளையும் முன் நிறுத்தி , இந்திய பாதுகாப்பு படைகளை எதிர்க்கிறார்கள். கல் என்பது குழந்தைகள் கையில் இருந்தாலும் , அது எறியப்படும் போது, எதிராளியை தாக்கும்போது காயபடுத்தும். இந்திய படைகள் என்ன வீட்டில் போயா கொன்றார்கள்.?
தன் குழந்தையையும் , மனைவியையும் வீதியில் கொண்டு வந்து நிறுத்தி சண்டை போடும் முட்டாள்களுக்கு அது புரிய போவதில்லை. அவர்கள் விதியை, வீதியில் விரயம் செய்தது அவர்களே. இந்திய இராணவம் எப்படி பொறுபேற்க முடியும்.

இவர்கள் திருந்த மாட்டார்கள் , வருந்த மாட்டார்கள், இணக்கமாக வாழ இவர்கள் ஒரு போதும் கற்று கொடுக்க போவதில்லை அல்லது கற்று கொள்வதில்லை. தேசம் என்ற தேசிய நீரோட்டத்தில் இவர்கள் கலந்து ஓட போவதில்லை. , மதம் என்ற காட்டாறில் ஓடி கரைய போகிறார்கள.

ஒரு புறம் இவர்களை நினைத்தால் கோபமாகவும் , வருத்தமாகவும் இருக்கிறது. ஏன் இத்தனை வேதனை இந்த சமுகத்திற்கு. சொந்த தேசத்திலே அகதியாகி போகின்றனர், வேறு வேறு தேசம் நோக்கி பெண்டு பிள்ளைகளுடன் உயிருக்கு பயந்து ஓடுகின்றனர். அடைக்கலம் கொடுக்கும் தேசத்தையும் அழிக்க துடிகின்றனர். ஏன் உலகம் முழுவதம் இவர்களை பார்த்து பயப்படுகிறது , தள்ளி போக விரும்புகிறது

ஒரே பதில் அதி தீவிரமான மத பற்று. அதுவே இவர்களை மழுங்கடித்து வைத்து இருக்கிறது

இறையின் இன்னோர் தூதர் மீண்டும் இறங்கினால் தான் இவர்களின் வேதனை குறையும் போல.




-1:09

311 Views
பாலஸ்தீனியர் ஒருவர் தனது மகனை படைகளுக்கு முன் முன்னிறுத்தி முடிந்தால் சுட்டுக்கொல் என்று ராணுவத்தின் உண்ர்ச்சிகளை தூண்டுகின்றான்.
கேவலம்.... சின்னஞ்சிறு குழந்தைகளை முன்னிறுத்தி யுத்தத்தையோ அல்லது எதிர்ப்பையோ தெரிவித்து அதனூடாக ஏற்படும் எதிர்விளைவுகளை படம்பிடித்து பேனா முனையில் பிரச்சாரம் செய்து பரிதாபத்தை சம்பாதிக்கும் இன பிரச்சார யுத்தியாக இருந்து வருகிறது என்பதற்கு இந்த காணோளியே உதாரணம்.
அந்த குழந்தையை ராணுவத்தை நோக்கி கல்லை கொண்டு எரிய சொல்லுகிறான் ஒருவன். ஆனால் அந்த குழந்தைக்கு கல்லை எங்கே எறிய வேண்டும் என்பதை கூட உணரத்தெரியவில்லை என்பதுதான் வேதனை! இப்படிப்பட்ட ஒரு குழந்தையை ராணுவத்தின் முன் காப்பாக நிறுத்துவது எவ்வளவு மூடத்தனமான விடயம்.
இப்படியான பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை அரசே பொறுப்படுத்து வளர்க்கவேண்டும் அல்லது அதற்க்கு ஏற்றது போன்ற மாற்றுவழிகளை கண்டு அவற்றை நடைமுறைப்படுத்தவேண்டும்.
நல்லவேலை... ராணுவம் மனிதத்தன்மையுடன் இருந்ததால் அந்த குழந்தையின் செய்கையை பொருட்படுத்தாமல் அதன் குழந்தைத்தன்மையை ரசித்துகொண்டிருந்தனர்.

அப்ப பாண்டியர்கள் சோழர்கள் எல்லாம் யார்?

அப்ப பாண்டியர்கள் சோழர்கள் எல்லாம் யார். புத்த விகடத்திற்கு இடம் கொடுத்தது சோழர்கள். புத்தர்களை அடித்து துரத்தி இடத்தை பிடுங்கி விட்டு, பின்பு நாலு தலைமுறை கழித்து அந்த இடத்தை புத்தர்களுக்கு சோழர்கள் கொடுக்க வில்லை. தங்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் மேல் உரிமை கொண்ட இடத்தை மாற்று மதத்திவருக்கு இனமாக கொடுத்தார்கள். அது தான் தானம்.
யார் வீட்டு சொத்தை யார் கொடுப்பது ? உண்மையில் சில இஸ்லாமிய அரசர்கள் நிலம் கொடுத்து இருக்கிறார்கள். மறுக்க வில்லை. ஆனால் அவர்களுக்கு முன் இந்தியா முழுவதும் ஹிந்துக்கள் தான் ஆண்டார்கள் என்பது வரலாறு. . எங்களை அடித்து விரட்டி விட்டு எங்கள் இடத்தை பிடுங்கி வைத்து கொண்டு, ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி விட்டு, பின் எங்கள் இடத்தை எங்களுக்கே கொடுப்பது பேர் தானம்? இதை நாங்கள் நம்ப வேண்டும். 

அன்பான சில இஸ்லாமிய மன்னர்கள் வரலாற்றில் வந்து இருக்கிறார்கள். இஸ்லாம் என்றால் அன்பு என்று சொல்லை நிஜமாக மெய்ப்பித்த ஒப்பற்ற சலாவுதீன் போன்ற மன்னர்கள். தான் வென்று எடுத்த ஜெருசெலத்தை , இஸ்லாமிய மயம் ஆக்க வில்லை. யூதர்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கு அவர்கள் வழிபாட்டு உரிமையை தந்தார். ஆனால் இந்தியாவில் அப்படி பட்ட இஸ்லாமிய மன்னர்கள் வந்ததாக தெரிய வில்லை.
இஸ்லாமிற்கு ஆதரவாக பேசினாலே , ஒரு கூட்டம் அப்படி பேசும் மக்களை தங்கள் இஸ்லாத்திற்கு மாற்ற துடிக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆக எச்சரிகையாக இருப்பது உத்தமம்.

ஏன் பெருமாள் கோவிலில் லிங்கம் இல்லை.

இந்த கேள்வி என்னையும் அரித்து கொண்டு இருந்த விஷயம். சிவ வழிபாடு ஆதி அந்தம் தொட்டே உலகம் முழுவதும் இருந்து வந்து இருக்கிறது என்பது உண்மை.

விஷ்ணுவின் அவதாரங்கள் மானிடர்கள் மத்தியில் மனிதராக நிகழ்ந்த பின்னர் , மக்கள் அவரை மட்டும் வழிபடும் எண்ணம் பரவி இருக்கிறது.
லிங்கத்தை தவிர்த்து இறை வேறு ரூபம் காட்டி இருக்குமோ, அப்படி இருந்தால் அந்த இறை எப்படி இருக்கும் என்று எண்ணம் பரவி இருந்த காலத்தில், இறை ரகு குல ராமனாகவும், கண்ணனாகவும் , பெருமாளாகவும், இந்த பூமியில் மானிடராக இறங்கி இருக்கிறது. 

அன்பிற்குரிய ஆண்டவனை அருகாமையில் அதுவும் சக தோழராக கண்ட மக்கள் , அந்த மானிட ரூபத்தை சிலையாக வைத்து கோவில் எடுத்தனர்.
பெருமாளையும், ராமனையும் மூலவராக கண்ட பின்னர் , லிங்கத்தை கோவிலின் வேறு இடத்தில் அவர்கள் வைக்க விரும்ப வில்லை. ஹரியும் சிவனும் ஒன்று என்று ஆன பிறகு , மூலவராக பெருமாள் இருந்தால் என்ன , லிங்கம் இருந்தால் என்ன? ஆனால் மக்களில் ஒரு பிரிவனர் இறையின் மானிட ரூபத்தை வைத்தே கொண்டாட விரும்பினர்.

அதனால் தான் புகழ் பெற்ற எல்லா பெருமாள் கோவில்களிலும், ராமர் கோவில்களிலும் , மூலவர் மனித ரூபத்தில் காட்சி அளிப்பார்கள்.
சிவனின் எல்லா பழமையான கோவில்களில், மூலவர் லிங்கம் தான். ஈசன் மானிட ரூபத்தில் காட்சி அளிக்கும் பழமையான கோவில்கள் வெகு ஆபூர்வம். இன்னும் நன்றாக கோவிலில் கவனித்து பார்த்தால், லிங்கம் தவிர்த்து மற்ற தெய்வங்கள் , மானிட ரூபம் கொண்டவை.

லிங்கம் ஆதி அந்தம் அற்றது என்பதற்கு அது ஒன்றே உதாரணம். கற்பனைக்கும் ,காலத்திற்கும் எட்டாத ஒன்று உள்ளே உறைகிறது என்பது எப்போதும் ஈசனின் கோவில் தொட்டால் என் நெஞ்சில் அறைகிறது. மானிடம் வந்த பிறகும் , போன பிறகும் உலகத்தில் எஞ்சி இருக்க போவது லிங்கம் மட்டுமே. அடுத்த முறை ஈசன் கோவில் போனால் நின்று யோசியுங்கள். மெல்ல புரியும்.

ஈசனுடன் ஒன்றி இருப்பவர் விஷ்ணு. அவர்களை பிரித்தது நம் மக்கள் தான். இது தான் என் அனுமானம்.

நம்பிக்கை கொண்டு எந்த பெயர் சொல்லி அழைத்தாலும், அழைத்தவனின் அன்பு ஆழமானது என்றால் , அந்த அன்பு , அம்பாக பாய்ந்து அழைக்கப்படுவரை கட்டி இழுத்து வருகிறது, அது ஆண்டவனாக இருந்தாலும்.





மோடி மோடி தான்

தேசமே மோடியை நம்பிய போது , வழக்கம் போல் நம் தமிழக மக்கள் அவரை நம்ப மறுத்தனர் . தமிழகத்தை விட தங்களுக்கு நல்ல வாக்கு வங்கி கொண்ட கேரளாவை எதிர்த்து நம் தமிழக மக்களுக்கு இந்த திட்டத்தை உறுதி செய்து உள்ளார். உண்மையில் இந்த தைரியம் பாராட்ட தக்கது. மோடி மோடி தான் , இன்று வரை அவர்தான் சிறந்த பிரதமராக இருக்கிறார்.

ஈடுகாட்டின் மண்ணின் மன்னர் மகாதேவர் அல்லவா

சாவை பற்றிய சங்கடம் , இந்த பகுத்தறிவு சீர்திருத்தவாதிகளை ,எங்கள் சங்கரனின் பக்கம் தள்ளி கொண்டு வருகிறது. ஊருக்கு மட்டும் பகுத்தறிவு உபதேசம் பண்ணி திரியும் பிறப்புகளையும் மறுக்காமல் ஏற்கும், ஈடுகாட்டின் மண்ணின் மன்னர் மகாதேவர் அல்லவா . இறப்பிற்கு பின் போகும் இடத்திற்கு பகுத்தறிவு பாதை வகுக்காது என்ற அறிந்த அரசியல்வாதிகள், அதிகம் தென்படும் இடமாக அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி குடும்பத்தினருடன் பகுத்தறிவு அபிஷேகம் செய்து மதச்சார்பின்மை பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது....

தோனி ஒரு கிரிக்கெட் கேப்டன் , ரஜினி ஒரு நடிகன்.

உண்மை. கபாலி கபாலி என்று கத்தியவன் பெரும்பாலும் வேறு எந்த விஷயத்திற்கும் வருந்தாதவன். தோனி ஒரு கிரிக்கெட் கேப்டன் , ரஜினி ஒரு நடிகன். அவர் அவர் சார்ந்த துறையில் அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். தோனியை என்னவோ இந்திய இராணவத்தின் கேப்டன் போலவும் , ரஜினியை என்னவோ உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் போலவும் கூச்சல் போடுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களில் எத்தனை உயிர் தியாகம் நம் பெருமை மிகு இராணவ வீரர்களால் செய்யப்பட்டது. இந்த கபாலி பதிவை பதிவர்களை பாருங்கள் , அந்த இராணவ வீரர்களுக்கு ஒரு பதிவு கூட பதிந்து இருக்க மாட்டார்கள். என்னது கபாலிக்கு தடையா feeling sad என்று பதிவு போட இவர்களுக்கு நேரம் இருக்கிறது. 

வீட்டிற்குள் இருக்கும் மனைவிக்கும், பிள்ளைக்கும் , பெற்றோருக்கும் முக புத்தகத்தில் வந்து வாழ்த்து சொல்வதும் , அவர்களுக்காக வருத்தப்பட்டு பதிவு போட இவர்களுக்கு நேரம் இருக்கிறது. தவறு இல்லை, ஆனால் நம்மை எல்லாம் பாதுகாக்கும் பாதுகாப்பு படை வீரர்களின் தியாகத்திற்கு வருந்தி ஒரு வருத்தம் சொல்ல நம்மில் பல பேருக்கு நேரம் இல்லை. பல பேருக்கு அதில் உறுத்தலே இல்லை. கேட்டால் அசட்டு தனமாக சிரிக்கிறார்கள்

உலகம் நம்மை பார்த்து சிரிக்கிறது. கூத்தாடிகளை கொண்டாடுவது தவறு இல்லை. அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். மாற்று கருத்து இல்லை. ஒரு வரம்பிற்குள் அந்த வரவேற்பு இருக்க வேண்டும். ஆனால் நடப்பது கோமாளி தனமாகவும் , அசிங்கத்தின் உச்சமாக இருக்கிறது.
இந்த இழிசெயலை செய்பவர்கள் நம் தமிழர்கள் என்பது தான் நமக்கு தலைகுனிவாக இருக்கிறது.

கபாலி படம் நஷ்டம் அடைய வேண்டுமா?

கபாலி படம் நஷ்டம் அடைய வேண்டும் என்று நினைக்க தோன்ற வில்லை. ரஜினிக்காக இல்லை. அதை தொழிலாக கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை அது பாதிக்கும் என்பதால். ஆனால் ரஜினி ஒரு போலி ஆன்மிகவாதி. ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசும் கருணாவை தூக்கி வைத்து கொண்டாடினார். அவருக்கு இல்லாத பணமா புகழா. தன்னை நல்வழிபடுத்தியது தன் ஆன்மிக நம்பிக்கை என்று மேடை தோறும் பெருமை பேசி திரிந்த நபர், தன் ஆன்மிக நம்பிக்கையை, இழிவாக பேசும் நபரை புகழ்ந்து பேசுவது எவ்வாறு? ஒரு முறை கூட ஹிந்து மதத்திற்கு என்று குரல் கொடுத்தது கிடையாது. ஹிந்து மதத்திற்கு என்று பேச வேண்டாம், சரி விட்டு விடலாம்.

தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை சரி விட்டு விடுங்கள் . இவ்வளவு பெரிய ஆன்மிகவாதி , எத்தனை ஹிந்து கோவில்களை புனரமைக்க உதவினார். ரஜினி கிரிவலம் போனார் , கிரிவல பாதையில் விளக்குகள் அமைத்தார். இவர் நினைத்து இருந்தால் எத்தனை கோவில்களை மீட்டு எடுத்து இருக்கலாம்.

தினம் தினம் கஷ்டப்பட்டு சம்பாரிக்கும் பல ஏழை பக்தர்கள் அந்த மாதிரி கோவில்களை கண்டால் தங்களால் ஆன பண உதவி செய்ய முயற்சி செய்கின்றனர். நம்மிடம் அதிகளவு பணம் இல்லையே என்று வேதனையுறும் பக்தர்களை நான் சந்தித்து இருக்கின்றேன்.

நாள் முழுதும் பிச்சை எடுத்து வாழும் ஒரு வயதான பிச்சைக்காரர், என் ஈசனுக்கு நெய் தீபம் ஏற்ற வழியில்லை என்று அரற்றி, பிச்சை எடுத்த காசை கொடுத்து , பெரிய நெய் டப்பாவை வாங்கி கொடுத்ததை பார்த்து அரண்டு போய் இருக்கின்றேன். அதிர்ந்து நின்று இருக்கின்றேன்

எல்லாம் அடைந்தாகி விட்டது இவருக்கு. ஆனால் புகழ் என்ற போதை இன்னும் தேவைப்படுகிறது. தான் ஆன்மிகவாதி சொல்லி சொல்லியே மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்.

தான் நம்பிய ஆன்மிகத்திற்கும் இவர் ஒன்றும் செய்ய வில்லை, தன்னை நம்பிய தமிழ் மக்களுக்கும் இவர் ஒன்றும் செய்ய வில்லை.

ரஜினி தமிழ் திரைப்பட துறையில் இருந்து ஒய்வு பெற்றால் அதுவே தமிழ் மக்களுக்கு நற்சேதி

கலைஞரின் ஹிந்து மத எதிர்ப்புக்கு உத்வேகம் கொடுப்பவர்கள் பெரும்பான்மையான சிறுபான்மை மக்கள்

கலைஞரின் ஹிந்து மத எதிர்ப்புக்கு உத்வேகம் கொடுப்பவர்கள் பெரும்பான்மையான சிறுபான்மை மக்கள் என்பதை மறந்து விட கூடாது. அவர்கள் ரசிக்கிறார்கள் என்பதால் தான் இவர் இதை செய்கிறார். கிறிஸ்தவமும் , இஸ்லாமும் ஹிந்து மக்களை தங்கள் மதத்திற்கு மாற்ற துடிக்கிறது , அவர்களுக்கு தேவை ஹிந்து மதத்தை மறுக்கும் ஒரு தலைவர், கருணா அதை செவ்வனே செய்கிறார். அதனால் அவர் பின் செல்கிறார்கள். சிறுபான்மையரில் சிறு பகுதி இவரை விரும்பா விட்டாலும் , இவரின் ஹிந்து மத எதிர்ப்பு தங்கள் மதத்தை பரப்ப உதவும் என்பதால் வாய் மூடி மௌனியாக உள்ளார்கள். இவர் அதனால் இன்னும் வேகமாக ஹிந்து மத எதிர்ப்பை கையில் எடுக்கிறார்.

தன் வீட்டிற்கு உள்ளயே பகுத்தறிவை விற்க முடியாத கருணா , ஊரிடம் விலை பேசி கொண்டு இருக்கிறார். தலைவன் என்பவன் எல்லா மத மக்களை சமமாக பார்ப்பவன். இவர் தலைவர் என்ற தகுதியை இழந்து பல நாள் ஆகிவிட்டது. ஏதோ புலம்பி கொண்டு இருக்கிறார் , விட்டு தள்ளுங்கள் இவரை.

நான் சொன்னது உண்மை என்பதிற்கு ஆதாரம் H Raja ‪#‎கலைஞருக்கு_ஒரு_பகிரங்கக்_கடிதம்‬! என்ற பதிவிற்கு "கருணாவிற்கு ஆதரவாக அதிகமாக பதிவு செய்து ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பதிவு செய்வது மாற்று மதத்தினர் தான்.

ஹிந்துக்களின் ஆன்ம நம்பிகையை எப்போதும் இழிவுபடுத்தும் ஒருவரை சிறுபான்மை மக்கள் தலைவர் என்கிறார்கள், ஆனால் அதே நேரத்தில் ஹிந்து மக்களையும் நண்பர்கள் என்கிறார்கள். நன்றாக நம்மை ஏமாற்று்கிறார்கள்.
மாற்று மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் எந்த நபரையும் நம் ஹிந்துக்கள் தலைவர் என்று கொண்டாட வில்லை, ஆதரவு அளிக்க வில்லை. ஆனால் சிறுபான்மையரில் பெரும்பான்மையோர் அதை செய்கிறார்கள். ஏன் என்று ஹிந்துக்கள் யோசிக்க வேண்டும். யோசிப்பார்களா ?

ttp://sugashiva.blogspot.com/
H Raja
‪#‎கலைஞருக்கு_ஒரு_பகிரங்கக்_கடிதம்‬!!
வணக்கம், நலம். தங்களுடைய ஆரோக்கியத்திற்கு ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.
கங்கை நீர் இனி தபால் நிலையங்கள் மூலமாகப் பொது ஜனங்களுக்கு விற்கப்படும் என்ற மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பைக் கேலி செய்து "பாஜக ஆட்சி தொடர்ந்தால் இனி விபூதி குங்குமம் கூட விநியோகம் செய்யப்படும்" என ஏளனம் செய்திருக்கிறீர்கள்.
இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் நூறு சதவீதம் ஹிந்து விரோதக் கட்சி என்பதை நிரூபித்து, தங்களின் உண்மை உருவத்தை மீண்டும் வெளிக்காட்டியமைக்கு மகிழ்ச்சி.
தங்கள் பார்வைக்குப் புலப்படாது போன, அல்லது நீங்கள் வேண்டுமென்றே மறைத்துவிட்ட ஒரு விஷயத்தை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசு அறிவித்த கங்கை நீர் விநியோகம் "விற்பனைக்கு" மட்டுமே! "இலவசம்" அல்ல!!
ஆனால் மக்கள் வரிப் பணத்திலே நாலாயிரத்து ஐநூறு மெட்ரிக் டன் அரிசியினை ரம்ஜான் கஞ்சி காய்ச்சுவதற்கென மசூதிகளுக்கு இலவசமாக வழங்கியதே அதிமுக அரசு, அப்பொழுது "அதிமுக ஆட்சி தொடர்ந்தால் இனி அனைத்து மசூதிகளுக்கும் மயிலிறகும், சாம்பிராணியும் இலவசமாகத் தரப்படும்" என்ற உங்களது நையாண்டி அறிக்கை ஏன் வெளிவரவில்லை?
மாநில முதல்வரோ, நீங்களோ என்றேனும் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதற்கு மட்டுமே தபால் துறையைப் பயன்படுத்தி வருகிறீர்கள். மற்றபடி அத்துறையின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது.
நாடு முழுவதிலும் மிகப்பெரிய உட்கட்டமைப்பைக் கொண்ட தபால் துறை முழுத் திறனுடன் செயல்பட வேண்டும் எனில் அது ஒரு பல்நோக்கு மையமாக உருப்பெற வேண்டும். அப்படி ஆவதனால் மட்டுமே பல லக்ஷம் தபால்துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இதை முழுமையாக உணர்ந்த மத்திய மோடி சர்க்கார் பெரும்பான்மை ஹிந்துக்கள் விரும்பும் கங்கா ஜலத்தை, தபால் துறை குறிப்பிட்டத் தொகைக்கு விற்பனை செய்யும் என அறிவித்து உள்ளது.
அது மட்டுமல்ல! அங்கு இதற்கு முன்பே அவ்வப்போது கடிகாரம் முதல் குளிர்சாதனப் பெட்டி வரையில் விற்கப்பட்டு வந்தது உங்களுக்குத் தெரியாததா!
வாரணாசிப் பட்டு வேண்டுமென விரும்பும் வாடிக்கையாளர்களுக்குக் காசியில் இருக்கும் நெசவாளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறதே இதே தபால் துறை.
நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல் திராவிட நாட்டுக்குள்ளேயே சிந்தனையைச் சுருக்கி வைத்தால் அறிவு விசாலப்படாது!
தபால் நிலையங்கள் வழியே கங்கா ஜலம் விற்பனை என்ற அறிவிப்பு ஏன் உங்கள் கண்களை உறுத்துகிறது? ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் கங்கை நீரை விருப்பப்படுவோர் விலைக்கு வாங்கிக் கொள்வதில் ஆட்சேபம் எங்கே இருக்கிறது!
பொது ஜனங்களின் வரிப்பணத்தில் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் தரப்படுகின்றன. நீங்கள் செய்ததற்கும் விளக்கம் இல்லை. பிறர் அதைச் செய்தால் எதிர்த்துப் பேசிட, அறிக்கை வாசித்திட உங்களுக்கு முதுகெலும்பும் இல்லை. நீங்களும் அதற்கு உடந்தை. ஆனால் இன்று மத்திய அரசு நடவடிக்கையை நக்கல் செய்திருக்கிறீர்கள்.
ஹிந்து மக்களின் மத உணர்வைப் புண்படுத்தியதற்காகவும், காசு கொடுத்துக் கூட கங்கை நீரை வாங்கும் வசதி அவர்களுக்கு மறுக்கப்பட வேண்டும் என்று பேசியதற்காகவும் தாங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி...! வணக்கம்...!!

கோவில் படி தொட்டால் யோசியுங்கள் , அந்த ஆலயத்தின் இறைவன் முன் நிற்க நீங்கள் தகுதியானவர்களா என்று.

குறைந்த பட்சம் சிறு எதிர்ப்பை காட்ட நம் ஹிந்துக்கள் முயல வில்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறந்த மண். யோசித்து பாருங்கள் இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் தவறாக சித்தரித்து வரும் அத்தனை பக்கத்தையும் முக புத்தகம் முடக்குகிறது எப்படி சாத்தியம், ஒரு நிமிடம் செலவு செய்து அந்த மக்கள் அந்த முக புத்தகத்தை முடக்க சொல்லி கோரிக்கை விடுகின்றனர். பாவம் நம் மக்களுக்கு நேரம் இல்லை.நம் மக்கள் எனக்கு அதை பற்றி கவலை இல்லை என்று உள்ளார்கள். எத்தனை ஆன்மிக மடங்கள் எத்தனை மத தலைவர்கள் யாரும் பேச தயாரக இல்லை. 

பேசுபவன் முட்டாள், வேலை வெட்டி இல்லாதவன், மத வெறியன். இப்படி சொல்லி நம்மை அழைப்பது நம் மக்கள் தான். அதனால் தான் நம் கண்ணை வைத்து நம்மை குத்துகின்றான். ராமரையும் சீதையும் மட்டம் தட்டி நாடகம் போட்டால் ஹிந்துக்கள் உக்காந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள். போட்டவன் ஹிந்து. நடித்தவன் ஹிந்து, கை தட்டியவன் ஹிந்து. இந்த கேவலத்தை எங்கே போய் சொல்வது. ஹிந்துகளின் கந்த சஷ்டி கவசத்தையும் , சுப்ரபாததையும், மசாலா பாடலாக மாற்றி எழுதியவன் ஹிந்து, பாடியவன் ஹிந்து, இசை கொடுத்தவன் ஹிந்து, அந்த பாடலை காசு கொடுத்து வாங்கி கேட்டவன் ஹிந்து.

தெய்வத்திடம் இடம் போய் கெஞ்சி அழுது எல்லா வளங்களையும் பெற்று விட வேண்டும். ஆனால் அதே தெய்வத்தை இழிவுபடுத்தி பேசும்போது கண்டும் காணமல் போதலை விட ஒரு கேவலம் வேறு ஒன்று இருக்க முடியாது. கேட்டால் நேரம் இல்லை என்று கதை பேசுகிறர்கள்.
உங்களுக்கு இந்த கோவிலில் இந்த தெய்வத்தை இந்த நேரத்தில் தரிசனம் செய்தால் , வளம் கிட்டும் என்று யாராவது சொன்னால் , எல்லா வேலைகளையும் விட்டு, முதல் வேலை செய்வார்கள். விமானம் பிடித்து இந்திய வந்தாவது தரிசனம் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கு அருள் செய்த தெய்வத்தை இழிவுபடுத்தி ஒரு புத்தகம் வந்து இருக்கிறது என்று சொன்னால் ரொம்ப வருத்தபடுவதை போல் நடிப்பார்கள்.

உன் ஆன்மிக நம்பிக்கை காயப்பட்டால் கூட உன்னால் சொல்ல முடிய வில்லை. கபாலி படத்திற்கு பிரச்சினை என்றவுடன் எவ்வளவு வேகமாக பதிவுகள் வருகின்றன.

கபாலியா உன்னை வாழ்வில் கரை ஏற்றியது. உன் முயற்சியும் ,கடவுளின் கருணையும் என்பது ஏன் உனக்கு உறைக்க வில்லை ?
இறை நம்பிக்கை இதயத்தில் இருந்து வர வேண்டும். இறை எல்லாவற்றையும் தரும் , ஆனால் நம் மக்கள் பெரும்பாலும் செல்வத்திற்காக தான் கோவில் செல்கின்றனர் . அதனால் தான் அந்த தெய்வத்தை இழிவுபடுத்தும் போது அவர்களுக்கு வலிக்க வில்லை.

நமக்கு வலிக்கிறது, அதனால் தான் நாம் முடிந்த வரை எதிர்க்கின்றோம். எந்த கோவில் படி தொட்டாலும் எமக்கு கூச்சம் இல்லை. ஆனால் அடுத்த முறை கோவில் படி தொட்டால் யோசியுங்கள் , அந்த ஆலயத்தின் இறைவன் முன் நிற்க நீங்கள் தகுதியானவர்களா என்று.
----------------------------------------------------------------------------------------------------
Sp Chockalingam
தமிழக அரசுக்கு ஹிந்துக்கள் என்றால் கிள்ளுக்கீரை
-------------------------------------------------------------------------------
மற்ற மாநிலங்களிலெல்லாம் அம்மாநிலத்தின், கலாச்சாரம், பண்பாடு மற்றும் பெரிய மனிதர்களை கொச்சைப்படுத்தினால் அவர்கள் மீது அம்மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
உதாரணமாக வீரசைவத்தை தோற்றுவித்த பாசவையாவையும், அவருடைய சகோதரி அக்கமாவையும் இழிவுபடுத்திய "தர்மகாரனா" புத்தகத்தை கர்நாடக அரசு தடை செய்தது.
விநாயகப் பெருமானை தவறாக 'துந்தி' என்ற புத்தகத்தில் சித்தரித்ததற்காக அதன் எழுத்தாளர் யோகேஷ் மாஸ்டரை கர்நாடக அரசு கைது செய்து, அவர் மீது குற்றவியல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறது. கர்நாடக நீதிமன்றமும் அந்த புத்தகத்திற்கு தடை விதித்திருக்கிறது.
மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்தியதாக கூறி ஜோசப் லேவெல்ட் எழுதிய புத்தகத்தை குஜராத் அரசாங்கம் தடை செய்தது.
வல்லபாய் பட்டேலை தவறாக சித்தரித்தற்காக குஜராத் மாநிலம் ஜஸ்வந்த் எழுதிய 'ஜின்னா பற்றிய புத்தகத்தை தடை செய்தது.
இஸ்லாமையும், நபிகள் நாயகத்தையும் தவறாக சித்தரித்ததாக கூறி ஆர்.வி. பஷின் எழுதிய "இஸ்லாம் - உலகரங்கில் அரசியல் தாக்குதல்" என்ற புத்தகத்தை மஹாராஷ்டிர அரசாங்கம் தடை செய்தது.
சத்திரபதி சிவாஜியை தவறாக சித்தரித்த ஜேம்ஸ் லெயின் புத்தகத்தை மகாராஷ்டிர மாநிலம் தடைசெய்தது.
மராத்திய மகான்களான துக்ராம், தியானேஸ்வர் ஆகியோரை தவறாக சித்தரித்த ஆனந்த யாதவ் எழுதிய புத்தகங்களுக்கு புனே நீதிமன்றம் தடை விதித்தது.
ஏசு கிருஸ்துவை இழிவுபடுத்துவதாக கூறி நாகலாந்து அரசாங்கம் 'டாவின்சி கோடை' தடை செய்தது.
தஸ்லீமா நஸ் ரீன் எழுதிய ’திவிக்ஹாந்தித்தோ’ நபிகள் நாயகத்தை அவமானபடுத்தியதாக கூறி மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசாங்கம் அந்த புத்தகத்திற்கு தடை விதித்தது. கம்யூனிஸ்டுகளுக்கு கருத்து சுதந்திரமெல்லாம் ஹிந்துக்களை எதிர்த்தால்தான் போல.
பெரியார் எழுதி ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட ‘உண்மையான இராமாயணம்’என்ற புத்தகத்தை உத்திரப்பிரதேச அரசாங்கம் தடை செய்தது.
ஆனால் தமிழகத்தில் ஹிந்து கடவுள்களையும், ஹிந்து நம்பிக்கையையும் இழிவுபடுத்தி ஆண்டுக்கு ஒன்று என்று புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஈன செயல்கள் செய்பவர்கள் மீது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.
பெருமாள் முருகன் மீது திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டபோது, அப்புகாரின் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெருமாள் முருகனுக்கு எதிராக மாஜிஸ்டிரேட்டிடம் கொடுக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. பெருமாள் முருகன் கேட்டுக்கொண்டதின் பெயரில், அவர் கேட்ட கல்லூரியிலேயே அவருக்கும், அவரது மனைவிக்கும் சென்னையில் பணிமாற்றம் செய்து கொடுத்தது அரசு.
எனவே தமிழக அரசிடன் இம்மாதிரி விவகாரங்களில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்த்தால் ‘ பிம்பிளிகி பிலாப்பி! மாமா பிஸ்கோத்து’என்ற பதில்தான் வரும்.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...