Thursday, October 9, 2014

கிறிஸ்தவ நண்பர் உடனான விவாதம்!!

என்னுடைய நீண்ட நாள் பால்ய பருவத்து கிறிஸ்தவ நண்பர் எனது முந்தைய பதிவை கண்டு கோபம் கண்டார். அயல்நாட்டில் இருந்தாலும் அலைபேசியில் அழைத்து என்னை விளாசினார்.
அவரிடம் நான் முன் வைத்த கேள்விகளுக்கு பதில் தராமல் என்னை குற்றவாளி ஆக்கினார்.
• கிறிஸ்தவ மத மாற்றிகளை வீடு வீடாகவும், பொது இடங்களுக்கும் மத மாற்ற அனுப்புவது யார். அது தவறு இல்லையா
• எனது ஹிந்து மக்கள் ஹிந்துவாக இருப்பதில் கிறிஸ்தவத்திற்கு என்ன பிரச்சினை.
• கிறிஸ்தவத்தில் பல பிரிவுகளும், சாதி சார்ந்த தேவாலயங்கள், உண்டா இல்லையா?
• அன்பை போதித்த கிறிஸ்தவம் ஏதனால் சிலுவை போர்களில் ஈடுபட்டது?
• ஹிந்து மதம் கள்ளிப்பால் ஊற்றி குழந்தைகளை கொன்றது என்ற குற்றச்சாட்டை சொன்ன கிறித்தவ மதமாற்றிகள் அயார்லந்தில் உள்ள பல சர்ச்சுகள் தவறான விதத்தில் பிறந்த குழந்தைகளை பணத்திற்காக விற்றதையும், பிரசவத்தின் போது மயக்க மருந்து கொடுக்காமல் பல பெண்களை இறக்க விட்டதையும் இங்கே சொன்னதா?
• இஸ்லாமிற்கு பயந்து கிறிஸ்தவராக ஹிந்துக்கள, மத மாற்றினார்கள் என்ற கதை உண்டு. கிறிஸ்தவராக மாறினால் மட்டும் தான் பாதுகாப்பு தருவதாக சொன்னவர்களை எப்படி அன்பு மதத்தில் சேர்ப்பது?
• கண் அற்ற குருடனுக்கு, கண்ணை அருளும் முன், இறைமகனார் குருடனிடம் எந்த நிபந்தனையும் வைக்க வில்லை. அது இறையன்பு!!.
• மத மாறினால் மட்டும் பாதுகாப்பு என்று நிபந்தனை விதித்தவர்களை, எப்படி மனித குலத்தில் சேர்க்க முடியும்!!
• ஏசுவே மெய்யான கடவுள் என்று சொல்லிவிட்டு, யேசு இறைவனின் மகன் என்று ஏசுவிற்கு மேல் ஒருவர் உண்டு என்று முரண்பட்டிர்கள்!! மேரி மாதாவை கடவுள் என்றும், அந்தோனியாரை கடவுள் என்றும் மதம் மாறிய மக்கள் வழிபட்ட போது உங்கள் ஒரு கடவுள் சித்தாந்தம் சிதலமாகி போனதை பற்றி அறியமால் இருந்திர்களா இல்லையா?
• இயேசு கிறிஸ்து எல்லோரிடமும் அன்பை சொன்னார் என்று சொல்லி கிறிஸ்தவத்தை பரப்ப வெளி நாட்டில் இருந்த வந்த பல பாதிரியார்களின் வீட்டில் , எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட ஒரு கருப்பு நிற அடிமை குடும்பம் இருந்ததா இல்லையா?
• கிறிஸ்தவத்தின் பெயரால் பல கலாச்சாரங்கள் இந்த மண்ணில் இருந்து மறைந்து போனதா இல்லையா?
• தோமையறை, ஒரு ஹிந்து மன்னன் கொன்றான் என்ற குற்றசாட்டை எப்பொழுதும் சுமத்தும் நீங்கள், என்றாவது டச்சு கிறிஸ்தவர்களும் , போர்ச்கிசிய கிறிஸ்தவர்களும் பல ஆயிரம் ஹிந்து மத மக்களை கொன்ற வரலாற்றை யாரிடமும் இதுவரை சொன்னது உண்டா?
• ஏன் நான் ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு இயேசுவின் அன்பை பெற முடியாதா? முடியும், ஆனால் என்னை கிறிஸ்தவராக மாற்றினால் மட்டுமே,ஹிந்து மதத்தின் அடையாளங்களை அழிக்க முடியும். எங்கள் கோவில்கள் கோட்டான் வாழும் இடமாகும். மெல்ல கிறிஸ்தவம் ஹிந்து மதத்தை அழித்து தன்னை நிலை நிறுத்த முடியும். இப்படித்தானே பேகன் மதத்தை அழித்தார்கள்?
• ஹிந்து மதம் ,எல்லா வழிபாடுகளும் , எல்லா மதங்களும், ஏக இறைவனை சென்று அடைகின்றன என்று சொல்கிறது. நீங்கள் உங்கள் குழுந்தைகளுக்கு எங்கள் மதத்தை பற்றிஎன்ன சொல்லி கொடுக்கிறிர்கள் என்று வெளிபடுத்த முடியமா ?.
இயேசு உயரந்தவர். ஆனால் எந்த விதத்திலும் கிறித்தவம் இங்கே உயர்ந்தது இல்லை. எந்த மதமும் இங்கே உயர்ந்தது இல்லை.இங்கே சொல்லப்பட்ட அணைத்து கேள்விகளுக்கும் , அவர் சொன்ன பதில் “தவறுகள் நடந்து இருக்கலாம் ,ஆனால் அதற்கு ஒட்டு மொத்த கிறிஸ்தவத்தை எப்படி பொறுப்பாக்க முடியும்.”
இதை தான் நாங்களும் சொல்கிறோம், ஹிந்து மதத்தில் தவறுகள் இருக்கலாம் அதற்கு மொத்த ஹிந்து மதத்தையும் குறை கூறி நீங்கள் எப்படி மதம் மாத்தலாம் என்று கேட்டேன்.
நான் எங்கே மாற்ற முயன்றேன் என்றார். அப்படி என்றல் நீ ஏன் கோபம் கொள்கிறாய் என்றேன். நான் கிறித்தவ மத மாற்றிகள் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். இயேசு கிறிஸ்துவை பற்றியோ, மொத்த கிறிஸ்தவர்களை பற்றியோ எங்குமே தவறாக குறிப்பிட்டதில்லை.
வெளிநாட்டில் இருந்த நிகழ்வை ஏன் பார்க்கின்றாய் என்றார். நீங்கள் மட்டும் வெளிநாட்டில் இருந்த வந்த மதத்திற்கு கொடி பிடிக்கலாம் , நான் மட்டும் இங்கே இருந்த மதத்திற்கு பண்ண கூடாதா என்று கேட்டேன்.
உடனே ஆரிய-திராவிட விவாத்திற்கு வந்தார். கிறிஸ்தவத்திற்கு 1௦௦௦ ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கடவுளை பற்றி என்ன சொல்கீறீர்கள் என்ற கேட்டதற்கு மௌனம் சாதித்தார்.தன்னை திராவிடர் என்று சொன்னார். அழகான தமிழ் பெயரை கொண்ட அவர் , தனது அடுத்த தலைமுறைக்கு இட்ட பெயர், மேற்கத்திய பெயர். அது அவருடைய உரிமை.
உண்மையில் சொல்ல போனால் , அவர் ஒரு ஹிந்து, சரியான வேலை கிடைக்காமல் இருந்த போது,சென்னையில் அவருடன் பழகிய கிறிஸ்தவ நண்பர் அவருக்கு வேலை வாங்கித் தந்தார், கிறிஸ்தவராக மாற வேண்டும் என்று நிபந்தனை உடன். இன்று வரை அரசாங்கத்திடம் தான் ஒரு ஹிந்து என்று தான் சொல்லி வருகிறார். ஏன் எனில் சலுகைகளை பெற வேண்டும் அல்லவா.
எனது பழைய வேலையில் பிரச்சனைகள் வந்த போது, என்னை அழைத்து வேலைக்கு வாய்ப்பை கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவ அன்பர்.ஆனால் பதிலுக்கு அவர் என்னிடம் எதையும் எதிர்பார்கவில்லை. அதுவே இயேசு சொன்ன அன்பு. அவருடன் எப்பொழுதும் எனக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை.
இங்கே பிரச்சனை,கிறிஸ்தவ மத மாற்றிகள் , அவர்கள் சொல்லும் பொய்கள்.
இங்கே கிறிஸ்தவராக மாறுவதன் முலம் எந்த பலனும் இல்லை. மாறாக, மாறுவதன் முலம் சொந்த தேசத்தின் அடையாளங்களையும் , கலாசாரங்களையும் அழிக்க தான் உதவி செய்ய முடியும்.
நமது ஆன்மாவை களங்கப்படுத்தும் இந்த செயலை செய்யாதீர்கள்!!
எந்த மதத்திற்கு மாறினாலும் எந்த பலனும் கிடையாது!!
நற்பலன்கள் நம் செய்கையில் இருந்தே பெறப்படும்.

1 comment:

  1. பலர் பிளாக்கரை விட்டு பேஸ்புக்கிற்கு மதம் மாறி விட்டார்கள். அதை என்னவென்று சொல்வது

    ReplyDelete

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...