உயர் சாதி ஆதரவு நிலை எடுக்காதே, என்று பல அறிவுரைகள்." உங்கள் சாதிக்கும் எங்கள் சாதிக்கும் எதிராக அவர்கள் செய்த செயல்கள் அதிகம்" என்று மீண்டும் மீண்டும் என்னை அறிவுறுத்தும் சில நண்பர்கள். நீங்கள் எந்த உயர்சாதியை சொல்கிராய் என்றால் கூச்சமே இல்லாமல் பிராமணர்கள் என்று பேசுகிறார்கள். சிரிப்பாக வருகிறது.
மனசாட்சியை தட்டி சொல்லுங்கள், பிராமணர்களாக நம்மை கட்டி வைத்து அடித்தான், கொன்றான் ? சாதியின் வலி எனக்கும் தெரியும், அதன் பிடியில் சிக்கி எங்கள் ஒரு தலைமுறையின் தலை எழுத்தே திசை மாறி போய் இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் ஒரு உயிரே போய் இருக்கிறது. தாத்தாவின் காலத்தில் நடைபெற்றது அந்த துயர சம்பவம். அந்த கிராமத்தில் பிராமணர்கள் யாரும் இல்லை. அங்கே இருந்த ஆதிக்க சாதிகளான யாரும் தங்கள் வீட்டில் மனுநீதி புத்தகம் வைத்து கொண்டு அதன் படி சாதி பார்க்க வில்லை. அன்று என் தந்தை நாத்திகர் ஆனார்.
(ஹிந்து மதம் மட்டும் இல்லை என்று சொல்லும் நாத்திகர் அல்ல அவர். எந்த மதத்தையும் மறுத்த நாத்திகர். அவர் பத்தாவது படிக்கும் பள்ளி கூட வயதில் முழு நாத்திகர் ஆனார் என்று உறவுகள் சொல்லி அறிந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் பொது தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு என் உடல் நிலை சரி இல்லாத போது தான் , தந்தை இறையிடம் கண்ணிற் பொங்க நின்றதை கண்ணுறேன். மீண்டும் ஆத்திகர் ஆனார். அதற்கு முன் தந்தை இறை முன் நின்றதை நான் பார்த்ததே இல்லை. ஒரு பொழுதும் அவரின் நாத்திக சிந்தனையை என்னிடம் விதைத்து இல்லை, யாரையும் அவரின் கொள்கைக்கு இழுத்ததும் இல்லை. என் அளவில் நான் அறிந்த மிக சிறந்த நாத்திகவாதி)
அன்று அந்த கிராமத்தில் என்ன நடந்து என்பது இன்று வரை எனக்கு சரியாக சொல்ல படவே வில்லை. விவரம் புரியும் விசயத்தில் விசாரித்து அறிந்து கொண்டேன். சாதி வெறுப்பு என்னிடத்தில் வேர் படிந்து விட கூடாது என்பதில் தந்தை கவனமாக இருந்தார். அவர் சொன்ன ஒரே விஷயம், “எல்லா சாதியிலும் நல்லவர்களும் உள்ளனர், கெட்டவர்களும் உள்ளனர், மனிதனின் குணம் அறிந்து பழகு, சாதி பார்த்து பழகாதே”.
கல்லூரி காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் தான் சாதி பற்றி மிக மோசமாக அறிந்து கொண்டேன். கவுண்டர்கள் , தேவர்கள் , நாயக்கர்கள் , பிராமணர்கள் , செட்டியார்கள் , வன்னியர்கள் எல்லாரிடம் கலந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. நல்லவர்கள் பல பேர் இருந்தனர், ஒருத்தரும் சாதி பார்க்க வில்லை. சொந்த மகனை போல் நடத்தினார்கள். ஆனால் சில கசப்பான சம்பங்களும் சில இடத்தில் நடந்தன. முகத்திற்கு நேராக என்ன சாதி (என்ன ஆளுங்க நீங்க என்ற கேள்வி ) கேட்கப்பட்டது , சிறிது நேரத்தில் மிக வெளிப்படையாக வித்தியாசம் காட்டினார்கள். மிகவும் அதிர்ச்சியாக இருந்த விஷயம், பெண்கள் தான், அதுவும் படித்த பெண்கள் தான் அதிக அளவில் சாதி வித்தியாசம் காட்டியவர்கள். இன்னும் கொடுமை மதம் மாறிய ஒரு கிறிஸ்தவர் குடும்பமும் அடக்கம்.
தமிழகத்தில் பல கிராமங்கள் உள்ளன, அங்கே பெரும்பாலும் பிராமணர்கள் இல்லை , பின்பு எப்படி இன்னும் சாதி வேறுபாடு காட்டபடுகிறது என்று யோசியுங்கள். சாதி சலுகை கொடுக்கப்பட்ட பிறகு எத்தனை குடும்பங்கள் மேல் நோக்கி உயர்ந்தன என்பதை பார்த்து இருக்கின்றேன். புகழ்பெற்ற பள்ளியில் படித்த கீழ் சாதி நண்பர் ஒருவர் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிய வில்லை. அவர் தந்தை , தாத்தா எல்லாம் வசதி படைத்தவர்கள். ஆனால் அவர் பிராமணரை பற்றி குறை கூறி கொண்டு இருந்தார். அவர்கள் தான் எல்லா இடத்திலும் முன் நிற்கிறார்கள் என்றார். நீ ஏன் நல்ல மதிப்பெண் எடுக்க முடிய வில்லை என்று முதலில் யோசி. உன் குடும்பம் நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டது அல்லவா, உன் தலைமுறையில் இனி நீ சாதி சலுகை பெறாதே, நீ விட்டு கொடுத்தால் உன் சாதியை சேர்ந்த வேறு ஒருவர் பயன் பெறட்டும் என்று சொன்னேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசவதே இல்லை.
பிராமணரை எதிர்க்க சொன்ன அதே பெரியார் தான், தமிழை காட்டுமிராண்டி என்று சொன்னார். எங்கே தமிழை எதிர்த்து பேசுங்களே பார்போம். ஆனால் செய்ய மாட்டார்கள் . பெரியார் ஏன் அப்படி தமிழை சொன்னார் என்று யோசிக்க வேண்டும் என்று கதை சொல்வார்கள். பெரியாரை அதிகம் தூக்கி பிடிப்பது யார் என்று பாருங்கள், கிறிஸ்தவர்களும் , இஸ்லாமியரும், தி.கவினரும் தான்.
பெரியார் சொன்னது எல்லாம் சரி என்று கண்ணை மூடி கொண்டு நம்பும் பக்தி கூட்டத்தை தான் பெரியார் உருவாக்கி விட்டு போய் இருக்கிறார். அப்படி போலி பகுத்தறிவு கூட்டம் எனக்கு தேவை இல்லை. சாதி பற்றி தெளிவு எனக்கு இருக்கிறது. ஆக தயவு கூர்ந்து உங்களது அறிவுரை எனக்கு தேவை இல்லை.